புதிய பதிவுகள்2

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

6 days 15 hours ago
நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்! அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில், 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், நியூயோர்க் உட்பட வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் வீசிவருகிறது. இதை கணித்த அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான ‘ப்ளிசார்டு’ எச்சரிக்கையை, ஒன்பது ஆண்டுக்குப் பின் விடுத்தது. பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. இதையடுத்து நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் நியூயோர்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார். கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகர பள்ளிகள் முழுதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (Boston, Connecticut, Delaware, Maryland, Virginia) பாஸ்டன், கனெக்டிகட், டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது, வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லா த அளவு தாக்கிய பனிப்புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1466091

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 15 hours ago
உந்த‌ மைதான‌ம் ஒவ்வொரு விளையாட்டில் ஒவ்வொரு மாதிரி இருக்கு போன‌ கிழ‌மை அவுஸ்ரேலியா 181 அடிச்சு அதை இல‌ங்கை இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ வென்று இருக்கின‌ம் இங்லாந் அடிச்ச‌ 145ர‌ன்ஸ்ச‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளால் வெல்ல‌ முடிய‌ வில்லை உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் இங்லாந்துக்கும் இல‌ங்கைக்கும் 20ஓவ‌ர் தொட‌ர் இதே மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌து இங்லாந் அணி 130க்கு குறைவான‌ ர‌ன்ஸ் தான் அடிச்சு இருந்த‌வை................இந்த‌ ம‌ச்சை கூட‌ இல‌ங்கை அணியால் வெல்ல‌ முடிய‌ வில்லை..................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 16 hours ago
இந்தியா அவுஸ்ரேலியா சென்று மூன்று மாத‌த்துக்கு முத‌ல் விளையாடின‌ போது 20ஓவ‌ர் விளையாட்டில் இர‌ண்டு விளையாட்டில் குல்டிப்பை விளையாட‌ விட‌ அவ‌ர் ர‌ன்ஸ்ச‌ விட்டுக் கொடுக்க‌ மூன்றாவ‌து விளையாட்டில் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைச்ச‌து சுந்த‌ர் 3ஓவ‌ர் போட்டு மூன்று விக்கேட் எடுத்த‌தோடு நிக்காம‌ அதிர‌டியா விளையாடி குற‌ந்த‌ ப‌ந்தில் கூடின‌ ர‌ன்ஸ் அடிச்சு அணிக்கு வெற்றிய‌ தேடி கொடுத்தார்................. வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ப‌ந்து வீச்சில் இன்னும் கூடுத‌ல் நுனுக்க‌ங்க‌ளை க‌ற்க்க‌னும்................ குல்டிப்புக்கு ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது.......................

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

6 days 16 hours ago
எப்படியென்றாலும் எல்லோரும் பாதுகாப்புடன் கவனமாய் இருக்கவும் . ......! டொலர் போனாலும் பரவாயில்ல உங்கட பவுண்ட்டை மனசில் நிறுத்தி வெளியில் இறங்கவும் ........!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

6 days 16 hours ago
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்! சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சனம் இன்றையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார் அவர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டிருந்தார் பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களல வழங்கி அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2026/1465971

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. -சஜித் பிரேமதாச.-

6 days 16 hours ago
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. -சஜித் பிரேமதாச.- இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் மறைந்து வருகின்றன. வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதித்து, விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தி, அவர்களை தாக்கி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எல்லா மதங்கள், எல்லா மதத் தலைவர்களுக்கும் சமூகத்தில் தகுந்த மரியாதையை வழங்க வேண்டும். பொதுமக்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதை நிறைவேற்றுவது குடிமக்களாகவும் அரசாங்கமாகவும் கடமை என்றும், மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் தகுந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும், இது தேசியக் கொள்கையாக இருந்ததால் ரணசிங்க பிரேமதாச அவர்கள் புத்த சாசன அமைச்சையும், சக மதங்களுக்கான இராஜாங்க அமைச்சுக்களையும் உருவாக்கினார். அனைத்து மதங்களையும் பாதுகாப்பது நாட்டின் பொறுப்பாக இருந்தாலும், இன்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் தேரர்களை கேடுகெட்டவன், என்று அழைக்கின்றனர். முகநூல் மூலம் மகா சங்கரத்னத்திற்கும் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களையும் அவமதித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வாறு அவமதிப்பவர்களின் நம்பிக்கை மதமற்றதாக இருக்கவேண்டும் என்பதாகும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் விரும்பும் எந்த மதத்தையும் நம்பி பின்பற்றும் உரிமை காணப்படுகின்றன. மதமற்றவராக இருப்பதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக பிறர் மீது திணிக்கக்கூடாது. இந்த அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரம் வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேற்கு குப்பியாவத்தை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 700 பேருக்கு பாடசாலை பைகள் வழங்கி வைக்கும் முகமாக ருக்‌ஷான் பெரேரா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மகா சங்கரத்னத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறும், அனைத்து மதத் தலைவர்களையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இழிவான சேறு பூசும் கீழ் தர நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இவற்றை நிறுத்தி விட்டு நாடு முகம் கொடுத்து வரும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள். இன்று நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றன. இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, அரசாங்கத்தின் பொறுப்பாளர்களின் கூற்றுப்படி அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்று கூறினாலும், மக்கள் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இது தான் உண்மை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், கண்ணுக்குத் தெரிகிற உண்மைகளை அறிந்தும் அரசாங்கம் இவ்வாறே நடந்து கொள்வது அரசாங்கத்தின் அகம்பாவத்தையும் இயலாமையையும் எதுவும் செய்ய முடியாத தன்மையையுமே காட்டுகின்றன. ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஆரம்பித்த 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆடை தொழிற்சாலைகள் கூட இன்று மூடப்படும் நிலை உருவாகியிருக்கின்றன. MAS Holding நிறுவனத்தில் தற்சமயம் 96,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 26,000 பேர் தொழில்களை இழக்க இருக்கின்றனர். பணியாளர் எண்ணிக்கையை 70,000 ஆக குறைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும், மக்களின் ஜீவனோபாயதைப் பாதிக்கும் இத்தகைய விடயங்களில் அரசாங்கம் கூடிய அவதானத்துடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த ஆடை தொழிற்சாலைகளை நிறுவியதால் உலகப் புகழ்பெற்ற ஆடை நாமங்கள் நமது நாட்டிலும் தைக்கப்பட்டாலும், இன்று இந்தத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவாகியிருப்பது வருத்தமளிக்கும் விடயமாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. தற்போதைய அரசாங்கத்தால் அமெரிக்க வரிகளை குறைக்க முடியாமல் போனமையே இதற்கு காரணமாகும். இந்த பேச்சுவார்த்தைகளை சரியாக நடத்த அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது. இன்று ஆட்சியில் இருப்பது தொழிற்சாலைகளை திறந்தவர்கள் அல்ல மாறாக தொழிற்சாலைகளை மூடி, அதற்கு தீயிட்டு தொழிலாளர்களை வீதிக்கு இறக்கியவர்களே ஆட்சிக் கதிரைகளில் இருக்கின்றனர். இவர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த எந்த புரிதலும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில் இன மத மோதல்கள் பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆட்சி செய்யும் கொள்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றன. இப்போதாவது இந்த பிற்போக்குவாதங்களை நிறுத்தி விட்டு, மக்களின் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1466065

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

6 days 16 hours ago
அமெரிக்காவில் கொந்தளிக்கும் கடும் பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்! அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களைத் தாக்கியுள்ள சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 8,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டும், தாமதமடைந்தும் உள்ளதால் வான் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகளில் சுமார் 19 சதவீதமானவை இரத்துச் செய்யப்பட்டன. ஜொ் புளூ நிறுவனம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, தனது 80 சதவீத சேவைகளை இரத்துச் செய்தது. யுனைடெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத விமான சேவைகளை நிறுத்தின. அத்துடன் நாளை வரை சுமார் 1,600 விமானங்கள் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு சற்றுத் தணிந்துள்ள நிலையில், இன்று காலை முதல் நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே , லா கார்டியா மற்றும் போஸ்டன் ஆகிய விமான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை மீள ஆரம்பிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இன்றைய தினம் விமான இரத்துக்கள் 7 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 2.5 அடி (76 செ.மீ) உயரத்திற்குப் பனி கொட்டியுள்ளதால், பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வாகனங்களை வீதிகளில் செலுத்துவதற்குப் பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அத்துடன், நியூயோர்க் மற்றும் போஸ்டன் இடையிலான ‘அம்ட்ராக்’ புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை சீரடைந்த பின்னரே முழுமையான இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1466034

PSTB சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா?

6 days 17 hours ago
PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா? Veeragathy Thanabalasingham on February 23, 2026 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் (Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன. முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் வரைவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான துஷ்பிரயோகங்களும் இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள் கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற முக்கியமான குற்றச்சாட்டாகும். நீதியமைச்சின் இணையத்தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும் ஏற்பாடுகளைப் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய வரைவு தொடர்பில் தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து போதுமானளவு மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே கதி தற்போதைய முயற்சிக்கும் நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது. பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம். தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும் வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்தத் தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும். முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கித் தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள் ‘ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு அந்தச் சட்டமூலம் கொடுத்த வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம். ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன. இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல. நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான 2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (Naked Terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle) இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார். இது இவ்வாறிருக்க, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம். இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள் கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும். இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12596

“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…!

6 days 17 hours ago
“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…! February 24, 2026 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள் அழிக்கப்படவுள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரமும் இருப்பிடமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். ”அரசினால் மேற்கொள்ளப்படும் காற்றாலைத் திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இத்திட்டம் எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையிலும், குடியிருப்புகள் இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ளப்படுவதையுமே நாம் விரும்புகிறோம். இந்த நிலம் எமது பூர்வீக நிலம், எமது வாழ்வியலும் பொருளாதாரமும் இந்த மண்ணோடு பிணைந்துள்ளது. எனவே, இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ பெறுவதற்கு நாம் தயாரில்லை” என மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணி தொடர்பில் எழுந்துள்ள ஆட்சேபனைகள் குறித்து, பூநகரி பிரதேச செயலகத்தில் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது ஆட்சேபனைகளை நேரடி வாக்குமூலங்களாக வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: ”அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் இத்திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களை இடம்பெயரச் செய்தோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தோ இத்திட்டம் முன்னெடுக்கப்படக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், கள யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களைத் தவிர்த்து மாற்று இடங்களில் இத்திட்டத்தை முன்னெடுப்பதே, முறையாகும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் கள விஜயத்தின் போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திரு. சிவகுமார் சிறீரஞ்சன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.ilakku.org/poonagari-wind-power-generation-project-mp-siridaran-urges-to-protect-peoples-homes/

இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு

6 days 17 hours ago
இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு 24 Feb, 2026 | 10:53 AM இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர். மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில் தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை தூண்டி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை நீண்ட காலத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி பல மாதங்கள் வரை நீடித்த பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் புலேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கான முதற்கட்டச் சோதனைகளுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துள்ளார். நிதி உதவி மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரக்கூடும். "இது மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இலையுதிர்காலத்தில் ஒருமுறை இந்த நேசல் ஸ்ப்ரேயை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் , கொரோனா மற்றும் பொதுவான சளி போன்ற பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு பெற முடியும்," என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239434

மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்

6 days 17 hours ago
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல் லக்ஸ்மன் குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர் கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம் வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தாம் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையை கவனதில் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினார். ஆனால் அத்தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உயர்ந்து வந்த ஆதரவு சற்று சரிந்திருந்தது. அந்தச் சரிவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்குக் காரணமாகும். அதன் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமலேயே நிழல் மாகாண சபையை தற்போதைய அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான முன் தயாரிப்பொன்று வெளியில் விடப்பட்டு அபிப்பிராயங்கள் திரட்டப்படுகின்றன. அரசியலமைப்பை புதிதாக உறுவாக்கவிருக்கிறோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இதிலிருந்து வெளியில் சொல்லப்படுவதனைத் தவிரவும் வேறு ஒரு செயற்பாடு உள்ளே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. எதிர்ப்புகள் காணப்பட்டாலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வரைபை வெளியிட்டதற்கு அரசாங்கத்துக்கு நற்சான்றுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள், முக்கியஸ்தர்கள் புதிய அரசியலமைப்பினுடைய விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கையில் ஏன் இவ்வாறானதொன்றை உருவாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது ஒருபக்கமிருக்க ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். பிரபாகரன் சரணடைய முயற்சி எடுக்கப்பட்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கருத்தொன்றை கிளப்பிவிட்டிருக்கிறார். அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச பதில் கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். பீல்ட் மார்சல் ஏன் இந்த நேரத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பது தெரியாவிட்டாலும் இனவாதச் சிந்தனை, தென்பகுதி அரசியலில் ஒரு குழப்பமும் ஏற்பட இவருடைய கருத்து வழிகோலும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையில்தான் மாகாண சபை தேர்தல் தொடர்பிலான அரசின் நிலைப்பாடும் அதனை இழுத்தடிப்பதற்கு அரசு முயல்வதும் வெளிப்பட்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள ஒரு கட்சி ஒருவாரத்திலேயே அதற்கான சட்டச்சிக்கலைச் சீர் செய்யமுடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்திருக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறொன்றுமில்லை. இந்த குழுவை அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தது. எனினும், நீண்ட தாமதிப்புக்குப் பின்னரே குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதானது சிறிய வட்டத்துக்குள் நடந்து முடிய வேண்டியதற்காக மேலும் பெரிய வட்டம் ஒன்றை உருவாக்கி மேலும் சிக்கலாக்கும் நடைமுறையே. மாகாண சபை முறைமையைப் பொறுத்தவரையில் முன்பிருந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் தங்களுக்குச் சாதகமான முறைமைகளை உருவாக்கி தமது ஆதிக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கே முனைந்திருக்கின்றன. அதே அடிப்படைச் சிந்தனையினையே இந்த தேசிய மக்கள்சக்தி அரசாங்கமும் கைக் கொள்கிறது எனலாம். தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாக பல தசாப்தங்களாக போராடி வருகின்ற தமிழர்கள் பயன் பெற்றதனைவிடவும் ஏனைய மாகாணங்கள் பெற்றுக் கொண்டதே அதிகமாகும். 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுனர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன. அத்துடன் அங்குள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு ரீதியாக பொறுப்பளிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுனர்களையும் உடனடியாக நியமித்தார். அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் காணப்படவில்லைஎன்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். 2006இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கதல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவானது. பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். பழைய முறையிலானால் உடனடியாக நடத்திவிடலாம். ஆனால் புதிய முறைறயிலாக இருந்தால் எல்லை நிர்ணயத் தீர்மானத்துக்கு முடிவு வந்தாகவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினரே முடிவைச்சொல்லியாக வேண்டும். முடிவுக்கு வரமுடியாமல் ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறையில் நடத்துமா, புதிய முறைமையில நடத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சியிலிருப்பவர்களை எதிர்த்து பழகிப்போன எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து ஆளும் கட்சியாக வந்த மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் காணப்படும் தாமதம் மேலும் அவர்களின் ஆதரவுக்கு சரிவைத் தேடிக் கொடுக்காததாக இருக்கவேண்டும். எது எவ்வாறானாலும், பழைய முறையிலா பழைய முறையலா என தீர்மானிக்கும் குழு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுச் சரிவையும் கவனத்திலெடுத்து தீர்மானத்திற்கு வரட்டும். தொடர்ந்தும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் உரைநிகழ்த்தும் அரசியல் தரப்பினருடைய தொடர் முயற்சிக்கு வெற்றி கிட்டட்டும். இந்தியாவின் தொடர் மௌனமுயற்சிக்கும் பலன் கிடைக்கட்டும் என்று காத்திருப்போம். எதற்கும் மீண்டும் ஒரு காலங்கடத்தல் நடைபெறாதிருக்கட்டும் என்று நம்பிக்கைகொள்வோம். எவ்வாறானாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணயப் போராட்டத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையேனும் முழுமையாக நடைமுறைக்குவரும் காலம் உருவாதற்கான காலம் கனியட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தல்-மீண்டும்-ஒரு-காலங்கடத்தல்/91-372899

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

6 days 20 hours ago
ஏனிந்த பொல்லாப்பு .. தம்பர் போலிஸைக் கொண்டு பொது சனத்தை போட்டுத்தள்ள இயற்கையும் தன்பங்குக்கு வேலை குடுக்க ...!!! இங்க அவுஸ்ரேலியாவிற்கு வாங்கோ நல்ல இருபது முப்பத்தில வெச்சிருக்கிறம் வெப்பநிலை !!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 20 hours ago
நாணய சுழற்சியில் வென்றால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதே சிறப்பானது, மைதான ஈரலிப்பினால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அத்துடன் பந்து வீசும் அணிக்கு சிரமமாகவும் இருக்கும். 170 இனை பாகிஸ்தான் அடிக்காது என்பதாலேயே பாகிஸ்தானுக்கு இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும், பாகிஸ்தான் ஒரு வேகப்பன்ட்கு வீச்சாளருடன் வருவார்கள் அதனால் பவர் பிளேயில் சுழல் பந்து வீச்சாளர்கள் 2 -3 ஓவர்கள் போட வேண்டிய நிலையில் இங்கிலாந்து 1-6 ஓவர்களில் 55 ஓட்ட்டங்களை எடுக்க இலகுவாக இருக்கும். ஆனால் இலங்கையுடனான போட்டியில் இங்கிலான்ட்கு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை சுழல் மூலம் (இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வலது கை இணை) ஓட்டத்தினை 37 இற்குள் மட்டுப்படுத்தியதாக நினைவுள்ளது. இரண்டு அணியுமே நல்ல பன்ட்கு வீச்சு, இங்கிலாது பாகிஸ்தானை விட துடுப்பாட்டத்தில் சிறப்பானது ஆகவேதான் இங்கிலாந்திற்கு வாய்ப்பு அதிகம், நானும் பாகிஸ்தானையே தெரிவு செய்துள்ளேன், நான் தெரிவு செய்தததிற்காக வெல்லுவார்கள் என விரும்பலாம் ஆனால் நடைமுறை வேறாகவல்லவா இருக்கிறது. இடது கை சுழல் அக்சரை வெளியே உக்கார வைத்துவிட்டு சுந்தரை கொண்டு வந்தவர்கள், வருணிற்கு பதிலாக அதே இடது கை குல்தீப்பினை இறக்குவார்களா? குல்தீப்பினை விட இந்த ரி20 இல் வருணையே தெரிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 21 hours ago
அரை இறுதிக்குப் பாகிஸ்தான் தெரிவாகா விட்டால் அல்லது இந்தியாவுடன் அரை இறுதி வராவிட்டால், இலங்கையின் அரை இறுதி இலங்கையிலேயே நடைபெறும். நேர அட்டவணை அதற்கேற்ப மாற்றப் படும்.
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed