புதிய பதிவுகள்2

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

1 week ago
இனிமேல்… வின்ரர் காலங்களில், நியூயோர்க்கில் நிற்பதை தவிருங்கள் ஈழப்பிரியன். நில்மினியின் இடத்தில்… ஒரு கிழமையாக வெளியே செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டி இறுகி விட்டதாம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3) ENG எதிர் PAK 08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் PAK வசீ PAK புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் ENG வாத்தியார் ENG கறுப்பி PAK வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி ENG கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் PAK ரசோதரன் PAK பிரபா PAK நிலாமதி PAK நந்தன் PAK இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

1 week ago
கவனம் அண்ணா........... இது என்ன அங்கு இப்படி அடித்துக் கொட்டுகின்றது. இங்கு மேற்குப் பக்கம் நல்ல காலநிலை அண்ணா, ஆனால் நீங்கள் அங்கே கிழக்கில் நின்று விட்டீர்கள்............

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
நாளை ந‌ட‌க்கும் போட்டி மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் பாக்கிஸ்தான் அணியில் ப‌ல‌ சுழ‌ல்ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இருக்கின‌ம்................இங்லாந்தை பாக்கிஸ்தான் வெல்ல‌க் கூடும்.......................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
பாக்கிஸ்தான் நாட்டை பூர்விக‌மா கொண்ட‌ சிம்பாவே க‌ப்ட‌ன் 2027 உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாடுவாரா.....................ப‌ல‌ வ‌ருட‌ம் கிழித்து சிம்பாவே அணிய‌ ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற‌வ‌ர்.................. இவ‌ரின் ஓய்வு சிம்பாவே அணிக்கு பின்ன‌டைவாய் இருக்கும்...............................

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

1 week ago
சிங்கள அரசுகள் கொடுக்கிற மாதிரி காட்டி பறிக்கிற மாதிரி பறிப்பதுதான் வேலை ..இது என்ன நமக்குப் புதிசா

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
நாளைக்கு இங்லாந் எதிர் பாக்கிஸ்தான் இர‌ண்டு அணிக‌ளையும் பிடிக்கும் இங்லாந்தை ஒரு ப‌டி கூட‌ பிடிக்கும்............வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு அதிக‌ம்...........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
வார‌ ஞாயிற்றுக் கிழ‌மையுட‌ன் கிரிக்கேட் திருவிழா முடிவ‌டையுது இந்த‌க் கிழ‌மையுட‌ன் ஒரு நாள் இர‌ண்டு போட்டி முடிவ‌டையுது அதுக்கு பிற‌க்கு ஒரு நாளுக்கு ஒரு போட்டி................. பின‌ல் போட்டி இந்தியாவில் ந‌ட‌க்கா விட்டால் ம‌கிழ்ச்சி பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் இந்தியாவில் ந‌ட‌க்காது ஹா ஹா😄............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இந்தியான்ட‌ கையில் கோப்பை போகாது தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் இந்த‌ இர‌ண்டில் ஒரு அணி கோப்பையுட‌ன் நாடு திரும்ப‌க் கூடும்................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இந்த பாரிய வெற்றிக்குப் பின், இந்தியாவின் நிலைமைதான் மோசம். மே.இ தெ.ஆவ வென்றாலே போதும். ஓட்ட விகிதத்தில் இந்தியா கதி அதோ கதிதான். இந்தியா இனித் தோக்காமலே வெளிய போய்விடும்.

மகா சங்க மாநாடு இன்று!

1 week ago
பௌத்த மகா சம்மேளனம் தோல்வி; ஒருசில தேரர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது - அமைச்சர் லால்காந்த Published By: Vishnu 23 Feb, 2026 | 08:41 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என தேர்தல் காலத்தில் முரண்பட்டுக் கொண்டிருந்த சகல தரப்பினரும் இன்று நண்பர்களாக கைகோர்த்துள்ளார்கள். கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது அச்சமடைந்துள்ளவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக கைகோர்த்துள்ளார்கள். அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது. எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது. அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/239403

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இந்தியா வெஸ்சின்டீஸ் கூட‌ தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து இந்தியா வெளிய‌ ஏற்க்க‌ன‌வே தென் ஆபிரிக்காவிட‌ம் ப‌டு தோல்வி புள்ளி ப‌ட்டிய‌லில் வெஸ்சின்டீஸ் அணி ந‌ல்ல‌ நிலையில் நிக்கின‌ம் வெஸ்சின்டீஸ் இந்தியா கூட‌ இதே போல் விளையாடினால் இந்தியா தோப்ப‌து உறுதி......................... இந்தியா அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரியான‌ ஆட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌ வில்லை................பாப்போம் வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுகினமான்னு.............................

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

1 week ago
"சாய் வித் சித்ரா" போலி விவாதம் By ஆர். அபிலாஷ் February 21, 2026 "சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமான நாடகக் காட்சிகள், மேலோட்டமான பக்தி என தன்னை மறு-உருவாக்கம் செய்துகொண்டார். அதுவும் "அறம்" இருக்கிறதே ரொம்ப மட்டமான ஒரு தொகுப்பு. மிகையான மதிப்பீடுகள், போலியான அற விழுமியங்கள், போலியான மனிதச் சித்தரிப்புகளின் அடுக்கு அது. அவரே நல்லுணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கில் எழுதியதாகச் சொல்கிறார். எந்த இலக்கியவாதியும் அப்படிச் செய்ய மாட்டார். அது இலக்கியத்தின் நோக்கம் அல்ல. நல்லுணர்ச்சி என்ன அல்வாவா பொட்டலம் மடித்துக் கொடுக்க? அதுவென்ன பாலுணர்ச்சியா தூண்டுவதற்கு? அது 30,000 பிரதிகள் விற்றதாக பவா சொன்னதில் அதிர்ச்சி இல்லை. அது பல லட்சம், கோடி பிரதிகள் விற்றிருக்க வேண்டும். நம் ஊரில் வாசிக்கவே தெரியாத எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அது போய் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அந்நூல் ரொம்பவே பிடிக்கும். "வெண்முரசு" இன்னொரு கொடுமை. வியாசரின் "மகாபாரதத்தைப்" படித்திருக்கிறேன். அதைப் படித்தவர்களுக்குத் தெரியும் - அதில் பாத்திரங்கள் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். நிறைய பலவீனங்கள், ஈகோ, தன்னலம் ஆகியவற்றால் நடத்தப்படுபவர்களாக இருப்பார்கள். அர்ஜுனன் கூட ஆன்ம பலம் மிக்கவனாக இருந்தாலும் பெரும்பாலும் எளிய உணர்ச்சிகளே அவனைப் பிடித்தாட்டும். இதையெல்லாம் நீங்கள் ஜெயமோகனின் "வெண்முரசு" பாத்திரங்களில் பார்க்க முடியாது. அவர்கள் டிவி தொடர் பாத்திரங்களைப் போல இருப்பார்கள். அவர் டிவி தொடருக்காக எழுத ஆரம்பித்து பின்னர் நாவலாக மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். கார்ட்போர்ட் பாத்திரங்கள், கார்ட்போர்ட் கதை. மகாபாரதம் எனும் மகத்தான காவியத்தைப் படிக்க விரும்பும் ஒரு தலைமுறைக்கு அதன் சாரத்தைத் தொடாமல் வடிவத்தை மட்டுமே எடுத்து சீரியல் வடிவில் அவர் தனதான ஜிகினா மொழியில் எழுதிக் கொடுத்துவிட்டார். அது வெளிவந்தபோது ஒரு பதிப்பாள நண்பர் என்னிடம் சொன்னார், "வாசகர்களை இந்துத்துவப்படுத்த ஜெயமோகன் அதைச் செய்கிறார்" என்றார். ஆனால் அந்தளவுக்குகூட அதற்கு முக்கியத்துவம் இல்லை. ஜெயமோகனுக்கு இது தெரியும் - தன் இலக்கிய வீழ்ச்சியை ஈடுகட்டத்தான் அவர் இலக்கிய அரசியல் செய்கிறார், கூட்டம் கூட்டமாகப் போடுகிறார், பணம் செலவழித்து எழுத்தாளர்களைத் தன் வசம் இழுக்கிறார், விருது ஆசை காட்டுகிறார், சினிமாக்காரர்களை வரவழைத்து அவர்களுடைய அணுக்கம் தரும் அதிகாரத்தைக் காட்டி இன்னும் மிரட்டுகிறார், இப்போது ரீல்ஸும் போடுகிறார். இதுதான் நம் இலக்கியவாதிகள் வந்து சேர்ந்துள்ள இடம். இவர்களை வாசிப்பவர்கள் நிலை பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிப்பவர்களை விடப் பரிதாபம். அவர்களுக்காவது தமக்கு இலக்கியம் தெரியாது என்று தெரியும்; இவர்களுக்குத் தாம் வாசிப்பது இலக்கியம் அல்ல என்று தெரியாது. இந்த லும்பன் இலக்கிய கும்பலுக்கும் அசல் இலக்கிய வாசகர்களுக்கும் தான் இடைவெளி இன்று எழுந்துள்ளது. நாம் பேச வேண்டியது பாவப்பட்ட பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவிடம் அல்ல, போலியான சினிமாத்தனமான இலக்கிய எழுத்தாளர்களிடம்தான். பின்குறிப்பு: இன்றும் மிகத்தீவிரமான சிக்கலான ஆழமான இலக்கியத்தைப் படிப்பதற்கு மிகக் குறைவான வாசகர்களே உள்ளனர். அவ்வளவு பேர் இருப்பதே சாத்தியம் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது சிறந்த நாவல்களை நீங்கள் லட்சக்கணக்கில் கூட விற்க வைக்கலாம். அதற்கு சந்தையும் ஊடகங்களும் உதவக் கூடும். ஆனால் அவற்றை ஆழமாக வாசிக்கும் பயிற்சி அப்போதும் மிகக்குறைவானவர்களிடமே இருக்கும். நல்ல இலக்கியத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அப்படிச் சேரும் நிலை ஏற்பட்டால் நம் உலகம் இப்படி இருக்காது. அது பௌதீகமாகவும் ஆன்மீகரீதியாகவும் முழுமையாக விடுதலை பெற்றிருக்கும். https://www.writerabilash.in/2026/02/blog-post_21.html

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த - ரவிகரன் எம்.பி

1 week ago
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 23 Feb, 2026 | 06:49 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நாடாளுன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல்காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இத்தகையசூழலில் 23.02.2026இன்று கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதயைும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் சுட்டிக்காட்டினார். அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239400

இன்று உலக தாய்மொழி தினம்

1 week ago
சர்வதேச தாய்மொழி தினம்! Feb 21, 2026 - 05:11 PM சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சியொன்று இன்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல் என்னும் தொனிப்பொருளில் இந்த உணவு திருவிழா மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகளைக்கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் ஒழுங்கமைப்பிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருளானந்தம் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். மூத்தோர்களின் நினைவுகளிலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்தும் கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன, மறைக்கப்பட்ட எமது முன்னோர்களின் உருவாக்கங்களான ஊட்டமான உணவுகளின் சுவையினை எமதாக்கிக்கொள்ளும் சுகநலவாழ்விற்கான பயணம் என்னும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதன்போது வேடுவசமூகத்தின் உணவுகள், இஸ்லாமிய மக்களின் உணவுகள், இந்து சமூகத்தின் உணவுகள், பறங்கிய சமூகத்தின் உணவுகள், சிங்கள சமூகத்தின் உணவுகள் என மட்டக்களப்பில் வசிக்கும் அனைத்து இனமக்களினதும் பண்டைய உணவுகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெருமளவான பொதுமக்களும் மாணவர்களும் இந்த கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் உணவினையும் சுவைத்துச்சென்றதை காணமுடிந்தது. https://adaderanatamil.lk/top-picture/cmlw8zn730002356pkkkzkz52
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed