புதிய பதிவுகள்2

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

1 week ago
அர்ச்சனா அவர்களின் யூரியூப் தளத்தில் பல விடயங்களை பார்க்க முடிகின்றது. அவர் கூறுபவை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவா என்பதற்கு அப்பால் அவரது சொந்த கருத்துக்களை அவரது வாயாலேயே கேட்கும்போது அவர் சம்மந்தப்பட்ட விடயங்களில் தெளிவு ஏற்படலாம்.

ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு

1 week ago
24 Sep, 2025 | 05:24 PM ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது. இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225980

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 week ago
24 Sep, 2025 | 05:09 PM தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன. தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை. இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார். மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225975

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை. "ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!

சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி

1 week ago
24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி, 'புஜியான்' கப்பல் முழுமையாகத் தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம், பல வகையான விமானங்களை இந்த கப்பலுடன் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு கடற்படை அணியை உருவாக்க முடியும். சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது சீன கடற்படையை, கடலோரப் பாதுகாப்பிலிருந்து ஆழ்கடல் பாதுகாப்பு நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய படியாகும். செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்,J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும். ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது. மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கினார். 'புஜியான்' கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான 'லியாவோனிங்' மற்றும் 'ஷாண்டோங்' ஆகியவற்றுக்கு மாறாக, 'புஜியான்' கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளைத் தொடங்கியதில் இருந்து, 'புஜியான்' கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/225921

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 week ago
பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கையின் ஆசிய கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவியது 24 Sep, 2025 | 05:59 AM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இந்த முடிவை அடுத்து ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி களம் இறங்கியது. காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டது. இலங்கையைப் போன்றே பாகிஸ்தானுக்கும் இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக இருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8) ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சிலும் குசல் ஜனித் பெரேரா (15) ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். (43 - 3 விக்.) மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க (20), தசுன் ஷானக்க (0) ஆகிய இருவரும் ஹுசெய்ன் தலாத்தின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. (80 - 6 விக்.) இந் நிலையில் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. ஷிப்ஸதா பர்ஹான் (24), பக்கார் ஸமான் (17) ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. சய்ம் அயூப் (2), அணித் தலைவர் சல்மான் அகா (5), மொஹம்மத் ஹரிஸ் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஆனால், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க ?? ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். மொஹம்மத் நவாஸ் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 38 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். துஷ்மன்த சமீர வீசிய 18ஆவது ஓவரில் மொஹம்மத் நவாஸ் 3 சிக்ஸ்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/225906

ஒரே இரவில் நாடற்றவராக அறிவிக்கப்பட்ட தமிழர்; பிறந்தது இந்தியாவில் தான், ஆனால் குடியுரிமை இல்லை

1 week ago
படக்குறிப்பு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். பகிசன் தமிழ்நாட்டிலேயே பிறந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தொடர்ந்து வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் இருவரும் இந்தியர் அல்ல (இலங்கை நாட்டவர்) என்பதால் அவர் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார், எனவே அவர் 'நாடற்றவர்' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பகிசன், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, 1987-ம் ஆண்டுக்கு ஜூலை 1ம் தேதி அல்லது அதன் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் 'சட்டவிரோத குடியேறிகளாக' இருக்கக் கூடாது. இந்தியாவில் அகதிகள் குறித்த தேசிய அளவிலான தெளிவான சட்டமும் கொள்கையும் இல்லாததால், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் 'சட்டவிரோத குடியேறிகளாகவே' கருதப்படுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வரையறுக்கிறது. "நான் எப்போதுமே என்னை இந்திய குடிமகனாகவே நினைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் யாரும் என்னை இந்திய குடிமகன் இல்லை என்று எங்கும் கூறியதில்லை. என்னிடம் உள்ள ஆவணங்களை முறையாகவே பெற்றுள்ளேன். என் பெற்றோர் இலங்கை நாட்டவர் என்பதை எங்கும் மறைத்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் காவல் நிலையத்துக்குச் சென்று நாங்கள் கையெழுத்திட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலும் எங்கள் அடையாளத்தை மறைத்து எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முதல் முறையாக நான் 'நாடற்றவன்' , இந்தியன் அல்ல என்று என்னிடம் கூறிய போது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது தெரிந்தவுடன், உடனே சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.பகிசன் கூறினார். 1991-ம் ஆண்டு இந்தியா வந்த பகிசனின் குடும்பம் பகிசனின் குடும்பத்தினர் 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவரது தாய் பகிசனை கர்ப்பத்தில் கொண்டிருந்தார். ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளாக தங்களை பதிவு செய்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமுக்கு மாற்றப்பட்டனர். "1991 மே மாதத்துக்குப் பிறகான காலத்தில் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் இருந்தால், சில முகாம்கள் மூடப்பட்டன. அப்போது நாங்கள் இருந்த முகாமும் மூடப்பட்டதால், 1992-ம் ஆண்டில் அங்கிருந்து பொது சமூகத்தில் வாழ அனுப்பப்பட்டோம். எனினும் தலைமை குடியேற்ற அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தோம். சென்னையில் முதலில் சிறிய காலம் வளசரவாக்கத்தில் இருந்தோம். பிறகு ராமாபுரத்துக்கு வந்த நாங்கள் அங்கேயே தான் இருந்து வருகிறோம்" என்கிறார் பகிசன். பகிசன் 2024-ம் ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றுள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இலங்கையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. "என் மனைவியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நான் இலங்கை சென்றுள்ளேன். அதற்கு முன் சென்றதில்லை." என்று அவர் கூறுகிறார். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது உட்பட்ட காரணங்களுக்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். முதல் முறை மறுக்கப்பட்ட அவரது ஜாமீன் மனு, இரண்டாவது முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாக அரசு தரப்பில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தன்னை முகாமில் அடைத்தால் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள முடியாது, தான் பணிக்கு செல்ல முடியாது என்று பகிசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். பகிசன் தற்போது தனது இந்திய ஆவணங்களை அதிகாரிகளிடம் சரண் செய்துள்ளார். இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும், இந்தியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவது சாத்தியமில்லை. 1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்ட பிறகு, அதாவது 1987-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பகிசன் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் 'naturalization' (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார். " Naturalization அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்து இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் சட்டம் கூறும் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமை சட்டத்தின் படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. அரசின் கருணையை நம்பியே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது" என்று இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சந்தேஷ் சரவணன் கூறினார். குடியுரிமைக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உட்பட 58,357 இலங்கைத் தமிழர்கள் (19,300 குடும்பங்கள்) தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பு முகாம் உட்பட 105 முகாம்களில் இருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்த 13,400 குடும்பங்களில் 33,479 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்று வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் தரவுகள் (2023) தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2023-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கான நீண்ட கால தீர்வுகள் குறித்து பேசிய அந்த குழுவின் அறிக்கை, பகிசனைப் போன்று 1987-க்கு பிறகு, பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவராக இருக்கும் குடும்பங்களில் இந்தியாவில் பிறந்த 22,058 பேர் இருப்பதாக கூறுகிறது. இவர்களை தவிர மேலும் 848 பேர், இலங்கைத் தமிழர் பெற்றோர்களுக்கு 1987-ம் ஆண்டு பிறகு பிறந்து, ஆனால் பிறந்த இடம் குறிப்பிடாமலும் உள்ளனர். இவை தமிழ்நாட்டில் 104 முகாம்களில் உள்ள 57,391 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் பெறப்பட்டன. "இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நேரடி ஈடுபாட்டுடன் நடைபெற்றது. எனவே அவர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வகைப்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவி லெனின், பிபிசி தமிழிடம் பேசும் போது, " இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதில் ஆவணங்கள் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களாக இருப்பார்கள். அவர்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்காது. இந்த ஆவணங்களைப் பெற்று தருவதில் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இந்திய குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடிய 13 பேருக்கு அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 56 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதலில் இவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார். திருச்சி முகாமில் இருந்த கே.நளினி இந்திய குடிமகளாக 2022-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் இந்திய குடியுரிமை பெற்ற முதல் நபர் அவர் ஆனார். அவர் 1986-ம் ஆண்டு இந்தியாவில் மண்டபம் முகாமில் பிறந்திருந்தார். 1950-க்கும் 1987-க்கும் இடையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர் என்று இந்திய குடியுரிமைச் சட்டம் கூறுவதால், அவரது குடியுரிமையை அங்கீகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தது. நளினி போன்று 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்த 148 பேர் முகாம்களில் இருப்பதாக இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. படக்குறிப்பு, வழக்கறிஞர் ரோமியா ராய் நளினி உட்பட பல இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை வழக்குகளை கையாண்டு வரும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், "இந்தியாவில் அகதிகளுக்கான தனிச் சட்டம் இல்லாதது பாகுபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. 'அகதிகள்' யார் என்ற தெளிவான வரையறை கிடையாது. திபெத்திய அகதிகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் வசதிகள், வெளிநாடு செல்லும் அனுமதி ஆகியவை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. இலங்கை தமிழர்களின் நிலையை விட ரோஹிங்க்யா மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய குடியுரிமை வழங்குவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று. ஒரு துறையில் சிறந்து விளங்கும், வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கூட அரசு நினைத்தால் குடியுரிமை வழங்க முடியும். எனவே அரசு நினைத்தால் எந்த நிபந்தனைகளையும் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg976gl5zeo

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
36 லட்சம் வாக்குகள் மற்றும் அனைத்து கட்சிகளிலும் இருக்கும் பல லட்ச தாயக அபிமானிகளின் ( மதிமுக, விசிக, திமுக, அதிமுக உட்பட) வாக்குகளை நான் தலைவர் சார்ந்த வாக்குகளாகத்தான் பார்க்கிறேன். ஒரு பேச்சுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமா என்று ஒரு சர்வசன வாக்கெடுப்பு தமிழகத்தில் நடாத்தினால் இவர்கள் அனைவரும் ஆம் என்று தான் வாக்களிப்பார்கள்.

பிரித்தானியாவில் இராணுவத்தை விட அதிகளவில் பார்க்கிங் வார்டன்கள்: அதிகரித்த லாபம்..என்ன காரணம்?

1 week ago
பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 2.3 பில்லியன் நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள். நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித்தானியாவின் இராணுவத்தை பாதித்த போதிலும், கவுன்சில்கள் தங்கள் பார்க்கிங் வார்டன்களின் படைகளில் இருந்து பெரும் லாபத்தை ஈட்டுவது தெரிகிறது. சாரதிகளிடமிருந்து வரும் வருவாய் நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 961 பவுண்டு மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கவுன்சில்கள் கட்டணங்களை உயர்த்துவதனால் பார்க்கிங் அனுமதிகள், டிக்கெட்டுகள் மற்றும் அபராதங்களுக்கான சாரதிகளிடமிருந்து வரும் வருவாய், இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களை தெரிவிப்பதுதான் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்கள் தெருக்களில் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் 1.4 பில்லியன் பவுண்டுகளையும், கவுன்சில் நடத்தும் கார் பார்க்கிங் மூலம் 876 மில்லியன் பவுண்டுகளையும் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது. https://tamilwin.com/uk

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 week ago
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்! ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448426

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 week ago
அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448416

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

1 week ago
எந்த நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று தெரியுமா? ஏற்கனவே இப்படியானவர்கள் விசா அவசியமில்லாத தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று "ஜோதியில்" கலந்து விட்ட உதாரணங்கள் இருக்கின்றன. வவுனியாவில் பிரபல தெரு றௌடியாக இருந்த ஒரு இளவல் தற்போது பிரான்ஸ் லாசப்பலில் தெருவில் நிற்கிறார் என அறிந்தேன்!

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
"வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

1 week ago
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும். டைம் அவுட்டின் படி, இந்த இடங்கள் அவற்றின் பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. Tamilmirror Online || ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

கீரைப்பிடி 200 ரூபா

1 week ago
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் கீரைப்பிடி 200 ரூபா மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. கீரைப்பிடி 200 ரூபா

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 week ago
Published By: Vishnu 24 Sep, 2025 | 07:06 AM இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது. ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும். அதற்கமைய புதன்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் மறுநாள் காலை (25) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும். இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார். இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை | Virakesari.lk

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல்

1 week ago
24 Sep, 2025 | 03:14 PM (செ.சுபதர்ஷனி) கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது. இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது. நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார். இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து தெரிவிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உலக அளவில் 2.3 மில்லியன் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் மரணங்களும் சம்பவித்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடாந்தம் மார்பகப்புற்றுநோய் காரணமாக 8000 மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆகையால் அனைவரும் நோய் அவதானம் மற்றும் நோய் நிலையின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக அனைத்து பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படக் கூடிய அவதானம் உள்ளது. எனினும் சில சமயங்களில் ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம். இது பாரதூரமான விடயமாகும். புற்றுநோய் கலங்கள் ஆண்களின் மார்பு பகுதியை நேரடியாக தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். 12 வயதுக்கு முதல் பூப்பெய்தியவர்கள், பிள்ளை பெறாத தாய்மார், உடல் பருமனானவர்கள், புகைத்தல் மற்றும் மது அருந்துவோர் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்றார். நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல் | Virakesari.lk

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்......

1 week ago
24 Sep, 2025 | 03:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை 69 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மேம்படுத்தியுள்ளது. இஞ்சின் கிடைக்காத காரணத்தினால் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த இரண்டு விமானங்கள் இப்போது சேவைக்கு திரும்பியுள்ளன. மூன்றாவது விமானம் அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு திரும்பவுள்ளத. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டில் தனது வலையமைப்பை சீரமைத்தல், டிஜிட்டல் விற்பனை தளங்களை சீரமைத்தல், வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தலில் அதிக கவனம் செலுத்தியது. 2025/26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வருவாய் 10 சதவீதமாக அதிகரித்தது மற்றும் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்வடைந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் சௌகரியத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுது. இந்த முயற்சிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் விமான நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடன் மறுசீரமைப்பு, உலகளாவிய நிலைத்தன்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் எதிர்கால பயணிகளுக்கான தடையற்ற அனுபவங்களை வழங்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் கவனம் செலுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்...... | Virakesari.lk

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை!

1 week ago
24 Sep, 2025 | 05:04 PM கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர். 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். அத்துடன் ஓகஸ்ற் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை! | Virakesari.lk
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed