1 week ago
சிறியர் நீங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். சுமந்திரனும் வேண்டாம், அர்ச்சுனாவும் வேண்டாம் கேக் வெட்ட குடும்பமே போதும். அவர்களை நீங்கள் அழைத்தாலும் தூதுவர் கதவை போய் தட்டுவார், ஒருவழியாய் வந்துசேர்ந்தாலும் கேக் வெட்ட முதல் வீட்டை இரண்டாக்கி கேக் சாப்பிடாமலே விருந்தினரை விரட்டிவிடுவார்.
1 week 1 day ago
பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
1 week 1 day ago
எனக்கு பிடிச்ச வீரர் தான் ரிங்குசிங்............அவரின் விளையாட்டும் சரி இல்லை பெடியன் இந்த உலக கோப்பையில் சாதிக்க வில்லை குல்டிப் பந்து போட்டாலும் அடி தான்.............சுந்தருக்கு இரண்டு ஓவர் தான் போட விட்டவர் கப்டன்.............மீதம் இருக்கும் இரண்டு ஓவரை எதனால் குடுக்க வில்லை என்று எனக்கு தெரியல..........................
1 week 1 day ago
போட்டி அப்பிடி இப்பிடிப் போகேக்க, என்ன ஏது என்று பார்ப்பது எனது வழமை. 😁
1 week 1 day ago
அவர்கள் கிரிக்கேட் விளையாடின காலத்தில் நான் கிரிக்கேட் பார்க்க வில்லை..............இந்தியா கப்டன் அசாருதின் அவர் விளையாடின போது பார்த்து இருக்கிறேன்...............முதல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்த்தது 1996களில் அப்ப அரவிந்த டி சில்வாவின் விளையாட்டு எனக்கு பிடிக்கும்.................
1 week 1 day ago
அவர்கள் துடுப்பாட்ட அணியை மாற்றமாட்டார்கள். பந்து வீச்சில் மாற்றம் வரும். சுந்தருக்கு இதுதான் கடைசிப் போட்டி என்று நினைக்கிறேன். குல்தீப் இல்லா குறை இன்று புரிந்திருக்கும்.
1 week 1 day ago
நான் மகனை கிரிகெட் பயிற்சிக்கு கூட்டி போயிருந்ததால் கிரிக் இன்போ வில் தான் ஸ்கோர் பார்த்தேன். அப்படி இருந்தும் நல்ல விறு விறுப்பாய் இருந்தது (இந்தியா, இலங்கை தோத்தபடியால்).
1 week 1 day ago
நீங்கள் அழைத்த பயனாளர்….தொடர்பு எல்லைக்கு அப்பால்….23ம் இடத்தில் இருக்கிறார். நாளைக்கும் அங்கதான் இருப்பார். போட்டிகள் முடிந்ததும் மீண்டும் அழைப்பை எடுக்கவும்😂 எனக்கு எல்லாமே சுகம்😂
1 week 1 day ago
எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும். ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?. ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?
1 week 1 day ago
இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்டக்காரர்கள், ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், வலது கை மார்க்ரமின் பந்து வீச்சு இடது கை துடுப்பாட்டக்காரருக்கு உள்ளே இருந்து வெளியே போகும் (இ டமிருந்து வலமாக மட்டையின் வெளிப்புறம்). இலங்கை இங்கிலாந்து போட்டியில் வளமையாக தொடக்க ஒவர் போடும் வலது கை சமீரவிற்கும் தீக்சணவிற்கும் பதிலாக இ டது கை மது சங்க இடது கை வெல்லாலெகே பந்து வீசினார்கள், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர் அதே போல இசான் கிசனும் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர், இசானுக்கு மாற்றீடாகவே சாம்சனை இற்க்குவார்கள், அபிசேக்கிற்கு மாற்றீடாக இறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இசான் கிசன் நன்றாக விளையாடுகிறார் என நினைக்கிறேன்.
1 week 1 day ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி,..என்றும் நலமுடன்,வளமுடன் வாழ்க
1 week 1 day ago
இப்படியானாவர்கள் இருக்க கூடும். இவர் சொல்லியது அனைத்தும் உண்மையா, அல்லது கட்டுக்கதையா என்பதை தாண்டி. புலிகள் இருந்தவர், fbi க்கு வேலை செய்தது ண்மை தானே. அவர் விலத்தி. பின் 2002 இல் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, தலைவர், பொட்டுவை சந்திக்கும் வரை சென்றது அதில் தானே அவர் பிரபாகன், பொட்டு போன்றோருடன் நடத்திய (அது முக்யமாக ஆயுதங்களை பெறுவது). fbi நேரடியாக கேட்டது, அவர் வந்த செல்லிட பேசியை புலிகள் சந்திப்பில் வைத்து இருக்க அனுமதித்தால். அவரின் பெயர் பரிதி என்ற நினைவு அனால், இவருக்கு இவளவு செய்த்தும் (அவை உண்மை என்றால்), அரசுகள் எப்படி செயற்படும் என்பது தெரியாமல் போயே, கனடா பாராளுமன்ற பாதுகாப்பு துயரை சிரேட்ட பதவி கிடைக்காமல் ஏமாற்றியதாக வெறுத்துபோய் இருக்கிறார். இன்னோர் அதிகார பீடத்தில் (புலிகள், சிங்களாம் ) இருந்து விட்டு, அதுவும் அந்த அந்த ((புலிகள்) அதிகார பீடங்களுக்கு துரோகம் இழைத்து விட்டு. வேறு அதிகார பீத்துக்கு தாவியவர்களை, ஒருபோதும், அதுவும் தேசிய பாதுகாப்பில் முக்கிய, அல்லது உணர்திறன் பதவிகள் கொடுக்கபடாது. கனடா தனது தேவைக்கு வைத்திருக்குக வேண்டிய நிலையில் அவரை பணிக்கு அமர்த்திவிட்டு, கழட்டிவிட்டது சாதாரணமாக அரசுகள் / அதிகார பீடங்கள் செய்வது. இது தெரியாமல், அவர் இதில் கதை விட்டும் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.
1 week 1 day ago
என்றென்றும் இன்பமுடன் இனிதாக வாழ்கவே ! குறைத்து வயதைச் சொல்லுவர் குவலயத்தில் இது வழக்கம், குறைத்து வயதைச் சொன்னபோதும் அதைக் குறித்துச் சொன்ன உண்மையாளர். வாழ்க தமிழ் சிறி, வளரட்டும் உண்மை நெறி.
1 week 1 day ago
ஒப்பிலாமணி இயக்கத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஒருவர். நான் நினைக்கின்றேன் 1995 இல் இயக்கத்தால் தேடப்பட்டார். இவரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு யாழ்ப்பாணத்து தமிழ் பத்திரிகைகளின் முகப்பில் இவரின் புகைப்படத்துடன் அறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஒன்று இரண்டு கிழமைகளாக ஒப்பிலாமணியை தேடி மிக கடுமையான தேடுதல் வேட்டையை இயக்கம் மேற்கொண்டது. கொக்குவில் பகுதியில் இவர் கிட்டத்தட்ட பிடிபடும் அளவிற்கு வந்தபோது இயக்கம் மீது கிரனேற் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிட்டார். ஒப்பிலாமணி புலனாய்வு பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவர் என்பதே அப்போது நான் அறிந்த செய்தி. இவர் இயக்கத்திற்கு தெரியாமல் இலங்கை கடற்படையுடன் தொடர்பு எடுத்ததாக கூறப்பட்டது. இயக்கத்துடன் ஏன் எப்படி முரண்பட்டார் எனும் விடயம் தெரியவில்லை. ஆனால், கடைசியில் ஆனானப்பட்ட இயக்கத்திற்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஒப்பிலாமணி தப்பிவிட்டார். அதன் பின்னர் சில கிழமைகளில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தவுடன் ஒன்றாக கொழும்பில் நிற்கும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியது. இராணுவம் வலிகாமம் வடக்கு பகுதியில் முன்னேறுவதற்கு கடும் சிரமப்பட்டது. அது தெல்லிப்பளையில் நீண்டகாலம் நிலை எடுத்து நின்றது. ஆனால், பல தோல்வி முயற்சிகளின் பின்னர் 1995இல் மிக விரைவாக சுன்னாகம் பகுதிக்கு இராணுவம் முன்னேறியது. ஒப்பிலாமணியின் காட்டிக்கொடுப்பே இராணுவம் இலகுவாக முன்னேறியதற்கு காரணம் என அப்போது ஊரவர்களினால் பேசப்பட்டது. பிற்காலத்தில் ஒப்பிலாமணிக்கு இராணுவ வீரர்கள் அடங்கிய படை கொடுக்கப்பட்டதாகவும், இராணுவம் யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய பின்னர் தன்னுடன் இயக்கத்தில் பணியாற்றிய போராளிகளின் வீடுகளுக்கு இராணுவ வாகனத்தில் சென்று அவர்கள் பற்றி விசாரித்து சென்றதாகவும் கூறப்பட்டது. இராணுவ உடையில் உலாவிய ஒப்பிலாமணிக்கு இலங்கை அரசினால் அப்போது என்ன பதவி கொடுக்கபப்ட்டது என தெரியவில்லை. தனக்கு அறிமுகமான இயக்கத்து புலனாய்வு போராளிகள் சிலரை இலங்கை புலனாய்வு பிரிவினால் சுட்டு கொல்லப்படாமல் தப்புவதற்கு ஒப்பிலாமணி உதவி செய்துள்ளார் எனவும் அறிந்துள்ளேன். எப்போது எப்படி கனடாவுக்கு வந்தார் என தெரியவில்லை. இயக்கத்துடன் முரண்பட்டு விலகி சில வருடங்களின் பின் இவர் கதை அடங்கிவிட்டது. ஒப்பிலாமணி இயக்கத்தில் 1990களின் ஆரம்பத்தில் இணைந்து இருக்கலாம். வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார் என்பது நம்பக்கூடியது இல்லை. தனியாக அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் இயக்கத்தில் இணைந்து பின்னர் சிறுது காலத்தில் மனம்மாறி விலகமுடியாமல் பிரச்சனைப்பட்டாரோ தெரியாது. ஆனால், பதுங்கு குழி வெட்டுவதற்கு, மண் மூட்டைகள் கட்டுவதற்கு இயக்கம் தெருவில் ஆட்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேலை வாங்கியது என்பது உண்மை.
1 week 1 day ago
சின்ன அணிகளை பெரிய அணிகள் வெல்லும் என கணிப்பது சுகம் சூப்பர்8 போட்டிகள் கணிப்பது சிரமம்...........................
1 week 1 day ago
நமக்குத் தான் புள்ளி இல்லையே என்ன கோதாரிக்கு இதை நாங்கள் பார்க்கனும் லொள்😄😛......................
1 week 1 day ago
இவன் சரியான வெடிமுத்து. தன்னை இயக்கம் வந்து கட்டாயமாக பிடித்துக்கொண்டு போய் களமுனையில் பதுங்ககழி வெட்ட விட்டதாகவும், பின்னர் தான் ஏதோ உளவாளியாக கண்டறியப்பட்டதால் தன்னை கொல்லாமல் ஆமிக்குள்ள போய் இருபக்க முகவராக (double agent) வேலை செய்யுமாறு அனுப்பியதாகவும், தான் அங்கு ஆமியிடம் சரணடைந்து/பிடிபட்டு யாழ்ப்பாணத்திற்குள் சிறிலங்கா இராணுவம் நுழையும் வழிகளை காட்டியதாகவும் அதனால் தான் இராணுவம் யாழை வென்றதாகவும் கதை கூறியுள்ளான். தனது இந்த நடவடிக்கை காரணமாக தன்னை புலிகள் தேடியதாகவும் அதனால் சிங்கப்படை தன்னை கனடாவிற்கு தமது முகவராக அனுப்பியதாகவும் தான் அங்கு வந்து கனேடிய புலனாய்வுத்துறையோடு சேர்ந்து வேலை பார்த்து குடிவரவில் பணியாற்றிய புலிகளின் முகவர் ஒருவரை பிடித்துக் கொடுத்ததாகவும் வெடித்துள்ளான். பின்னாளில் தன்னை க. பு. பாவித்ததாக்வும் இறுதிபோரில் தன்னால் ஆன உதவிகளை சிங்கப் படையிற்கு தான் செய்ததாகவும், பயங்கரவாதத்தை அழிக்க, கொக்கரித்துள்ளான். மட்டுமின்றி தான் நடாத்திய புலிகள் தொடர்பான Presentation ஐயும் வெளியிட்டு பீற்றியுள்ளான். பின்னாளில், 2009, கனடா வந்த கப்பல்களில் இருந்தோர் புலிகள் இல்லையென்று சொல்லி தான் நீதிமன்றில் தெரிவித்து அவர்கள் அத்தனை பேரையும் காப்பாற்றியதாக்வும் இதனால் ரொகான் குணரத்ன (அடுத்த கோமாளி) இவன் மேல் கடுப்பில் இருந்ததாகவும் மேலும் பீற்றியுள்ளான். ************************************* இவன்ர பங்கர் வெட்டின கதையே இவன் ஒரு பொய்யன் என்பதை எடுத்துக்காட்டுது. இருப்பினும் புலிகளுக்கு எதிராக செயற்படுவதில் என்ன இன்பம் இவன் போன்றோருக்கு உள்ளதோ தெரியவில்லை!
1 week 1 day ago
சிம்பாவே பெரிய அணிகளை வென்று இருக்கு நாளை வெஸ்சின்டிஸ் அணியுடன் வெல்லுமா........................
1 week 1 day ago
வணக்கம் வாத்தியார் . ........! பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு நீ பேசு நீ பேசு மயங்குறேன் பெண் : உன் பார்வையால தள்ளாடும் மூச்சு நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன் ஆண் : ஏடி என்ன எங்கடி அடிச்ச ஏடி எட்டி கெடக்குறேன் ஏடி என்ன எங்கடி தொலச்ச ஏடி நானும் முழிக்குறேன் பெண் : ஏடி உன்ன பார்த்ததனால சோலி இப்போ முடிஞ்சிதே ஏடி தன்ன மறந்ததால ஜோடி சேர்ந்து திரியுதே ஆண் : ஓ நிமிடம் நழுவி தொலையுதே நிலவு மடியில் தவழுதே பெண் : மழையில் மலர்கள் பொழியுதே பிழையும் சரியில் முடியுதே ஆண் : பக்கம் வந்து பழகடி காணும் எல்லாம் அழகடி பெண் : கண்ணால் எனை சிலை வடி கல்லில் பூக்கும் மலர்க்கொடி ஆண் : ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு நீ பேச நான் கேட்க மயங்குறேன் பெண் : உன் பார்வையால தள்ளாடும் மூச்சு நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன் ......! --- ஏதேதோ பேச்சு ---
1 week 1 day ago
பெண்ணின் பெருமையே பெருமை . ........ படம் : மனைவி , நடிப்பு விஜயகுமாரி & ராமாபிரபா ........அருமையான பாடல் ........ பார்த்தால் புல்லரிக்கும் , கேட்டால் மெய் சிலிர்க்கும் . .......! 😍
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed