புதிய பதிவுகள்2

நோர்வேயில் குண்டு வெடிப்பு

1 week ago
அந்தக் கடைசிப் பந்தி அருமை. 👍🏽 வல்லரசுகளுக்கு இது… விளங்க கனகாலம் எடுக்கும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு, பால் குடித்த பூனையின் நிலைமைதான்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
அதை பிறகு பார்ப்போம்,...இந்த தீர்ப்பு சரியா?????????? நீதிபதிமார். எந்த சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா??? குறிப்பு,...இதைவிடவும் கள்ளு கெட்டிலில். வழங்கும் தீர்ப்புகள். சிறந்தது 🤣

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅 உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 week ago
காத்தான்குடி மட்டுமில்ல ...முற்றுமுழுதான முசுலிம்கம்களும்...இப்ப ரணிலின் மடியில் ...அவர்தான் இவைக்கு கேட்டதைக்கொடுக்கும் ...பாவா.....காணிபிடிக்கவும் ...கழுத்தறுக்கவும் தடை போடாதவர் ....அறுகம்குடா இப்ப முசுலிம் வீடாயிருக்கும் ...இன்னமும் கூட ...அனுரவிற்கு சாமரம்...வீசினபடிதான் இருக்கினம் ...அனுர என்னவென்றால் ..இப்ப இசுரேலுக்கு பிளேன் விடுகிற ரேஞ்சுக்கு போய்விட்டார் ..முசுலிம் எம்பிமார் அடக்கி வாசிப்பதன் காரணம்..அவையி பொட்டுக்கட்டு வெளியில் வராமல் இருக்க..

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான். அங்கே நாட்டாமை சாத்தப்பன். இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார். அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.

ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு

1 week ago
இந்த ராமாபோசா ....மகிந்த ..மைத்திரி , கோட்டா ,ரணிலுடன் பேச்சிவார்த்தை நடத்தி ...இப்ப அனுரவுடன் கதக்கிறார்....முடிவுதான் பூச்சியம்..

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை. விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார். அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள். ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும். த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார். பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”. நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன். பிதிர்காரியம் செய்வேன். ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன். இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
அப்போ அரசியல் எதிரிகள் யார்? இந்த கொள்கைகளை ஏற்று கொண்ட, ஆனால் இப்போ அந்த கட்சிகளின் தற்போதைய தலைமைகள் இந்த கொள்ககளில் இருந்து விலகி போய்விட்ட கட்சிகள். குறிப்பாக திமுக - தமிழ் நாட்டில் அன்றாட ஆட்சியை நாசம் செய்யும் கட்சி. ஆகவே அது அரசியல் எதிரி. திமுக, அதிமுக தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை. அவற்றின் தற்போதைய ஊழல் தலைமைகளோடு அரசியல் முரண். பாஜக philosophical enemy. திமுக political enemy. முன்னையது strategical enemy (மூலோபாய எதிரி) பின்னையது tactical enemy (தந்திரோபாய எதிரி) இப்போ விளங்கி இருக்கும். உங்களுக்கு புரியும் படி சொல்வதானால்… புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள். டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா. கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான். 1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான். 2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான். பெட்டி மணி சொல்லவே வேணாம். எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும், பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும், இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற. தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக. டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா! இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
இதை விஜை தனது வி சாலை மாநாட்டிலுல் அதற்கு முன்பும், தெளிவாக சொல்லி விட்டாரே. விஜையின் கொள்கை, ஒன்றிய இந்தியாவுள், தேசிய இனங்கள் குறிப்பாக, திராவிட தேசிய இனங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய இனம் - உச்ச பட்ச மாநில சுயாட்சியுடன் வாழ்வதை தொடர்ந்தும் உறுதி செய்தல். இதனால்தான் அவரின் கொள்கை தலைவராக வேலுநாச்சியாரும், அஞ்சலை அம்மாளும் அமைகிறனர். பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுத்தல் இன்னொரு கொள்கை (வர்ணாசிரமம்) - இதனால்தான் அம்பேத்கரும், பெரியாரும் கொள்கை தலைவர்கள். பொதுவாழ்வில் ஊழல் இன்மை. இதனால் காமராஜர் கொள்கை தலைவர். இந்த மூன்றுந்தான் தவெகவின் அடிப்படை கொள்கைகள். இவை பாஜகவுக்கு அதன் கொள்கைக்கு நேரெதினாவை. எனவே பாஜக கொள்கை எதிரி.
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed