புதிய பதிவுகள்2

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
அப்படியானால் இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் எந்த தலைவர் நினைவு கூரப்படுகிறார் அல்லது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுகிறார் என்றும் சொல்லலாமே.

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 week ago
ஆடு நனையுதென்று ஓநாய் அழுகுது.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
இப்போது ரம்பை முழு மூச்சாக எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்த்தா இவர்கள் தான் ரம் வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றவர்கள். ஆனாலும் அதிசயமாக எம்மவர்கள் சிலர் இன்மும் ரம்பை ஆதரித்தே பேசுகிறார்கள். நிதர்சனம்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
சீமான் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் யார் யாருக்கு என்ன லாபம்? யாருக்கெல்லாம் நட்டம்? 😎

நோர்வேயில் குண்டு வெடிப்பு

1 week ago
இந்த உலகின் முக்கிய பிரச்சனையான/பழைய பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனையை சர்வதேச முக்கிய நாடுகள் முடித்து வைக்க வேண்டும்.இல்லையேல் அமைதி பூங்கா போன்ற நாடுகளிலும் குண்டுகளை வைத்து சீரழிப்பார்கள். ஆகாயத்திலிருந்து குண்டுகளை போட்டு அடக்க அவர்கள் ஜேர்மனியர்களும் அல்ல ஜப்பானியர்களும் அல்ல.எதுவுமே இல்லாதவர்கள்.எதையும் செய்வார்கள்.

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

1 week ago
பொது ஊடகங்களில் நடுநிலமை இல்லாமல் போகும் போதுதான் அவரவர்கள் தனித்தனியே தனிக்குரலாக உரக்க கூற ஆரம்பித்துள்ளார்கள்.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week ago
விஜையின் கொள்கை என்ன?அரசியல் எதிரிகள் எதற்காக திமுகவைக் குறிப்பிடுகிறார்.(காங்கிரசைக்குறிப்பிடவில்லை).அரசியல் எதிரிக்கும் கொள்கை எதிரிக்கும் உரிய வரை விலக்கணம் என்ன?.திமுகவுடன் கூட்டு வைக்கலாம் என்றால் திமுக அலருடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டு வைத்த தீட்டு அழிந்து விட்டதா? இனியும் கூட்டு வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு வேலைத்தூக்குவதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
🤣............... பலரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் தமது வாழ்க்கைகளை அமைத்தவுடன், அங்கே புதியவர்கள் வந்து சேருவதை விரும்புகின்றார்கள் இல்லை போல............ எந்த ஒரு மக்கள் திரளின் மீதும் அவர்களின் அடையாளத்துடன் ஊடாக சந்தேகங்களை விதைப்பதும், குற்றங்களை சுமத்துவதும் சரியான ஒரு விடயமும் இல்லை என்றும் தோன்றுகின்றது.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 week ago
ஆட்டை வளர்த்தவர்களே பணத்திற்காக விற்று விட்டு போகும் போது..... அறிமுகம் இல்லாதவர்கள் அந்த ஆட்டை வெட்டுவதில் என்ன தவறு? அது கடவுள் பலிக்காக இருந்தாலும் சரி. இறைச்சி கடையில் வெட்டுவதாக இருந்தாலும் சரி. அது இறுதியாக மனிதர்களின் உணவாகத்தான் போகின்றது.😎

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 week ago
தமிழ்மண் பாதுகாக்க போராடிய தலைவனையும் போராளிகளையும் மண்கவ்வ வைப்பதில் சிங்களத்துடன் முனைப்புடன் செயல்பட்ட ஒரு கட்சியின் ஊடகப் பேச்சாளரின் நாடகம் அரங்கேற முயல்கிறது.🤔

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு

1 week ago
24 Sep, 2025 | 05:16 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு ' பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளேன்.அந்த அறிக்கையில் இறுதி பந்தியை வாசிக்கிறேன். '1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டத்தின் 308 ஆம் உறுப்புரை மற்றும் சாட்சி தண்டனைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கோ எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள்.இது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார். கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு | Virakesari.lk

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other - Supreme Court - hindutamil.in

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 week ago
உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர். நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது. மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊

AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகம் பாதிப்படையும் : ஐ.நா.ஆய்வில் தகவல் !

1 week ago
23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் சூழலில், இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நிறுவனங்கள் ஏஐ காரணமாகப் பணிநீக்கம் செய்யவில்லை என்று கூறினாலும், மறைமுகமாக ஏஐ-யின் பயன்பாடு ஒரு முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளைச் செய்யும் வேலைகளை தானியங்கிமயமாக்குவதால், இத்தகைய வேலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225880

நோர்வேயில் குண்டு வெடிப்பு

1 week ago
Published By: Digital Desk 3 24 Sep, 2025 | 02:51 PM நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் தென்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/225948
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed