புதிய பதிவுகள்2

திருமணசேவை

1 week 1 day ago
புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் ஒரு முஸ்லிம் நண்பனை அண்மையில் சந்தித்தபோது பலதும்பத்தும்கதைக்கையில் தனது மகளுக்கு மணம்முடிந்து விட்டதை கூறினான். குறுகிய காலத்தில் நாட்டுக்குக் கூடவராமல் இது எப்படி சாத்தியம் என்றபோது கூறினான் மாகாணம் சார்ந்த ஒரு இணையத்தளம் தங்களிடம் இருப்பதாகவும் அதில் பல்வேறு தலைப்புகளில் கருத்துப்பரிமாற்றங்கள் நடப்பதாகவும்( நமது யாழ் இணையம் போல்) ஒரு தலைப்பு திருமணசேவை எனவும் கூறினான். தங்களது சமூகத்தில் வரன், வதுவை உள்ளவர்கள் சாதாரணமாக தெரியப்படுத்துவதாகவும் தேவையானவர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தனிப்பட விடயத்தை முன்னெடுப்பதாகவும் கூறினார். நாமும் நமது களத்தில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு வரன், வதுவை இருந்தால் அதைத்தெரியப்படுத்தும் சேவை ஒன்றைச்செய்வது நன்மையான விடயம் அல்லவா ? உதாரணம் கனடாவில் மொன்றியல் நகரிலே வைத்தியராக இருக்கும் மகளுக்கு அவரது பெற்றோர் வரன் தேடுகிறார்கள்.மேலதிக தகவல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள். உறவுகள் என்ன நினைக்கிறீர்கள் ? நல்லதை நினைப்போம், நல்லதைச் செய்வோம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
இல‌ங்கை வீர‌ர்க‌ளை வென்ற‌வ‌ங்க‌ள் இந்திய‌ வீர‌ர்க‌ள் இர‌ண்டு விக்கேட் அடுத்த‌டுத்து போய் விட்ட‌து இந்தியா க‌ரை சேருமா.........................

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

1 week 1 day ago
பிறந்த வாழ்த்துக்கள் சிறியண்ணா.அடிக்காடி மருத்துவமனை பக்கம் போகாமல் நலமோடு வாழ வேண்டுகிறேன்.🖐அடுத்த தேர்தலில் செலவிடுவற்காக காசு சேர்க்க லண்டன் வரவிருக்கிறாராம் அர்ச்சுணா.கூப்பிடுங்கோ ...😀

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
தென்னாபிரிக்காவின் அணுகுமுறை வியப்பாய் இருக்கு. மார்க்ரம் முதல் பந்துப் பரிமாற்றத்தைப் போட்டு விக்கட் எடுத்து விட்டார்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
முந்தி என‌க்கும் இல‌ங்கைக்கும் ஆகும் மார்கேட்டில் கீரை விக்கிற‌வ‌ங்க‌ள் எப்ப‌ கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்தாங்க‌ளோ அதோட‌ உவ‌ங்க‌ளை நான் ந‌ம்புவ‌தில்லை சூப்ப‌ர்8ரில் இவை தான் க‌ட‌சி இட‌ம் வ‌ருவின‌ம் என‌ க‌ணித்தேன் அது ந‌ட‌க்கும் போல் தெரியுது குரு ஹா ஹா😄😛.........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
சுந்தர் பிச்சை வந்திருக்கிறார். நாணயச் சுழற்சியின் போது மைதானம் வந்தார். இப்போது ரவி சாஸ்திரியுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறார்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
இலங்கை இன்று எனக்கு இரண்டு கன்னங்களிலும் அடித்து இருக்கின்றது................ இன்னும் ஒரு மூன்று ரன்கள் சேர்த்து அடித்து தோற்று இருந்தால் ஒரு கன்னமாவது தப்பியிருக்கும்............🤣. இலங்கைக்கும் நமக்கும் அவ்வளவாக ஆவதில்லை..................😜.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
பும்ராவும் அர்ஸ்டீப்பும் 200 அடிக்க முடியாமல் பண்ணி விட்டினம். இந்தியாவுக்கு ஒரு கடினமான பரீட்சை. என்ன செய்யப் போகிறார்கள். ரபடாவையும் ந்கிடியையும் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்

1 week 1 day ago
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் 22 Feb, 2026 | 04:28 PM மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு காட்டு யானைகளில் அட்டகாசத்தாலும் நடமாட்டத்தாலும், வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் | Virakesari.lk
Checked
Mon, 03/02/2026 - 17:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed