புதிய பதிவுகள்2

நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!

1 week 1 day ago
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார். கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா. பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர். சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார். கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு. அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர். அம்பலம். நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

1 week 1 day ago
36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? written by admin February 22, 2026 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன. 1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர். “எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. 36 ஆண்டு கால ஏக்கம் - மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? - Global Tamil News

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
அவிசேக் ச‌ர்மாவுக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கொடுத்து இருக்கின‌ம் இன்றைக்காவ‌து ர‌ன்ஸ் அடிக்க‌னும் இல்லையேன் அணியில் இட‌ம் கிடைக்காது ச‌ஞ்சு ச‌ம்சுன்க்கு விளையாடும் வாய்ப்பு கிடைச்சிடும்.............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
நீங்கள் கவனக்குறைவால் இந்த போட்டியில் வெல்வது மேற்கு இந்தியா என தெரிவித்து இருக்கிறீர்கள். இலங்கையா இங்கிலாந்தா என்றால் நீங்கள் நிச்சயம் இங்கிலாந்து அணியைத்தான் தெரிவு செய்திருப்பீர்கள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
இது இல‌ங்கை அணிக்கு அவ‌மான‌ம்................. தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் என்ன‌ நினைப்பில் வ‌ந்து அவுட் ஆகி போனார்க‌ள் தெரிய‌ல‌ ப‌வ‌ர்பிலே ஓவ‌ருக்கை முன்ன‌னி விக்கேட்டுக்க‌ள் போய் விட்ட‌து..............க‌ப்ட‌ன் அணிய‌ வெற்றிக்கு அழைத்து செல்லுவார் என்று பார்த்தால் அவ‌ரும் அவுட்.................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
1995 பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் கோப்பையில் தர்மசேன, சந்தன, வாஸ் இப்படி ஒரு நிலையில் இருந்து அணியை வெல்ல வைத்தார்கள். அதே போல் ஒரு rear guard action கடந்த 15 வருடத்தில் கூட இலங்கை அணி நடத்தி இருந்தது. இந்த அணியில் இப்படியான நெஞ்சுரம் மிக்க வீரர்கள் இல்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர் க‌மில் மிஸ்ஹாரா இந்த‌ உல‌க‌ கோப்பை முழுவ‌தும் ப‌டு சுத‌ப்ப‌ல்.............இவ‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு த‌குந்த‌ வீர‌ர் கிடையாது ஒரு நாள் தொட‌ருக்கு த‌குதியான‌ வீர‌ர்............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 1 day ago
இலங்கை கப்டன் இதுவரை ஒழுங்காக விளையாடவில்லை. .ந்த விளையாட்டில் அவர் கையில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது. இலங்கை படுதோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி

1 week 1 day ago
இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட தொழிலாளியை எந்த நஷ்ட தொகையும் கொடுக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாவின் சட்டம் ஆட்சி செய்கின்ற நாட்டை பெயர் குறிப்பிடாமல் காப்பாற்றி தமிழ் பத்திரிக்கையின் மத நல்லிணக்கம் புல்லு அரிக்குது
Checked
Mon, 03/02/2026 - 17:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed