1 week 2 days ago
நானும் தான்,...
1 week 2 days ago
தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............
1 week 2 days ago
இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.
1 week 2 days ago
இது சம்பந்தமான திரியில் அலசி, அண்ணனை கிழித்து காயப்போட்டிருக்கு…நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும். சீமான் விஜையை முன்பே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பது உண்மை. ஆனால் ஸ்டாலின், சீமான் சந்திப்புக்கு பிந்தான் மிக கீழ்தரமாக விமர்சிக்கிறார். #வாங்கின காசுக்கு அதிகமாவே கூவிறாண்டா கொய்யால மொமெண்ட் சீமாம் சபரீசனை சந்தித்தார் என செய்தி போட்டது யுடியூப் ஊடகம் அல்ல. தமிழகத்தின் முண்ணனி நிறுவனமான விகடன். இது பொய்யானால் - சபரீசன், சீமான் இருவருக்கும் அது பெரிய அவதூறு. ஆனால் இரு கள்ளரும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் கள்ள மெளனம் காப்பது - விடயம் உண்மை என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கு. அண்ணி விடயத்தில் பாஜக வக்கீலை பிடித்து உச்ச நீதிமன்றை வளைத்த சீமான் - விகடன் மீது வழக்கு போட முடியாது என்பது நொண்டிசாட்டு.
1 week 2 days ago
மேற்குலகு தங்களுக்குள் ஏதோ ஒரு நாடகம் அல்லது தொடர் நாடகம் நடத்துகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது.
1 week 2 days ago
இது ஒரு சுமையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகின்றது. இந்த மாதிரியான அச்சொட்டான ஞாபகசக்தி இல்லாமல், ஒருவருக்கு இருக்க வேண்டிய சாதாரண ஞாபகசக்தியை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலே சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. சில வருடங்களின் முன், 30 வருடங்களின் பின் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அவன் கடைசியாக ஊரில் இருந்த போது அவனிடம் ஒரு சிறிய கீபோர்ட் இருந்தது. மேற்கு நாடுகளில் எங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கிக் கொடுக்கும் பொம்மை, பிளாஸ்டிக் கீபோர்ட் போன்றது அது. அதில் சில அடிப்படை இசைத் துணுக்குகளை உருவாக்கலாம். அப்பொழுது அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து 'ராஜா................. ராஜாதி ராஜா இந்த ராஜா.......................' பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. நண்பன் அதைப் போன்ற ஒன்றை அவனிடம் இருந்த கீபோர்ட்டில் உருவாக்கி, ஒரு நாள் எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தான். நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான். அவனிடம் அப்படி ஒரு கீபோர்ட் இருக்கவும் இல்லை என்றும் சொன்னான். ஆனால் அந்த ஞாபகம் இன்றும் அப்படியே என்னிடம் இருக்கின்றது. கடல், மிகச் சிறிய திறந்த கடற்கரை, அதையொட்டி பிரதான வீதி, வீதியின் இந்தப் பக்கமாக அவனின் வீடு. முன்பக்கம் தலைவாசலும், சுற்றுச் சுவரும் உள்ளது அவன் வீடு. முற்றம் தாண்டிச் சென்றால், வீட்டின் வலக்கை பக்கம் இருக்கும் சிறிய அறையிலேயே நாங்கள் அன்று இந்தப் பாடலை கேட்டோம். பின்னர் சுனாமியில் அந்த அறை உடைந்து போயிருந்தது.
1 week 2 days ago
விஜியின் வழக்குகளளை ரத்து செய்ய கேட்டு சீமான் தொடுத்த வழக்கில் சீமானுக்கு சாதாகமான தீர்ப்பு வந்துள்ளது. விகடன் அதை சிறு கிசு கிசுவாகப் போட்டுள்ள செய்திக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க இந்தத் தேர்தல் நேரத்தில் சீமான் நேரத்தை வீணடிப்பது அவசிமற்றது. திமுகவை எதிர்த்தால் பாஜகவின் B ரீம் விஜைய எதிர்த்தால் திமுகவின் B ரீம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்ற சீமான். விஜை முதல் மாநாட்டில் திராவிடத்தேசியமும் தமிழ்த்தேசியமும் தனது அரசியல் கொள்கை என்று முரண்பட்ட தெளிவற்ற கொள்கையை வெளியிட்ட அன்று இரவே விஜையின் கருத்தை எதிர்த்து கருத்துத்தெரிவித்துள்ளார். 10 நிமிடப் பேச்சில் மேலோட்டமாக விஜை 30 செக்கனில் பேசிய விடயத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு ஒரு சில நிமிடங்கள் விஜைஜைப் பற்றிப் பேசியதும் அதுவும் எந்த ஊடகங்கள் சீமானை இருட்டடிப்புச்செய்தனவோ அதேதிமுக ஊடகங்கள் பெரிது படுத்துவதும் அதை அணில்குஞ்சுகள் காவித்திரிவதும் நகைப்புக்குரியது
1 week 2 days ago
விஜய் முதல்வராக வருவதை உற்சாகமாகக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களும் தமிழச்சிகளும்.
1 week 2 days ago
இது ஒரு நல்ல விடயம். ஆனால் இஸ்ரேல் இதைக் கடுமையாக எதிர்க்கும்.இன அழிப்புக்கு எதிராகப் போராடும் தேசங்களுக்கு இது முன்மாதிரியாக அமையும்.பிரித்தானியா அங்கீகரித்தாலும் பிரித்தானிய ஊடகங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாக இருப்பதாக அறிக்கையிட்டுள்ளன. அவர்கள் எப்போதும் அப்படித்தான்.அமெரிக்கா விரும்பாத விடயத்தை ஊக்குவிக்க மாட்டார்கள். இதனைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தாம்சார்ந்த நாடுகளிடம் எமது சமஸ்டி தொடர்பிலான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
1 week 2 days ago
ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள். இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........
1 week 2 days ago
22 Sep, 2025 | 04:07 PM (இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார திங்கட்கிழமை (22) இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த வெளிப்படுத்தல்கள் தொடர்பின் உள்ளடங்கள் குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகஷ சமர்ப்பித்துள்ள சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்கள் சந்தேகத்துக்குரியதாக காணப்படுகிறது. தான் சட்டத்தரணியாக பணிபுரிந்து சொத்துக்களை சேகரித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை காட்டிலும் அவரிடம் அதிகளவான சொத்துக்கள் இருக்கும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களிலும் அவரது சொத்துக்கள் இருக்கலாம், ஆகவே இவ்விடயம் குறித்து ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாடளித்துள்ளோம். இரண்டாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம். இவர் வசித்த கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கு 51 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணிகள் முறையான விலைமனுகோரலுடன் மேற்கொள்ளப்பட்டதா, அல்லது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் 51 கோடி ரூபாய் பதுக்கப்பட்டதாக என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இந்த முறைப்பாடு குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இல.260 டொரிங்டன் மாவத்தை கொழும்பு 07 இல் 360 இலட்சம் ரூபாவுக்கு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக அவருக்கு 360 இலட்சம் ரூபாய் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதில் சந்தேகம் உள்ளது. ராஜபக்ஷர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி நாட்டு மக்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியள்ளார்கள். இவர்களின் சொத்து குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பம் முறையற்ற சொத்து சேகரித்த விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை போன்று ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/225755
1 week 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும். கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது. ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா? ஹைப்பர்தைமீசியா என்பது நோயா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர். "புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர். இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது. அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர் இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம். "தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார். மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார். இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார். அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார். "ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார். இதற்கான அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம். காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள். வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும். நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள். அச்சு பிசகாத நினைவாற்றல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ். இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர். இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார். இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார். 51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார். ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார். 2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது. இதற்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் "ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன. நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும். இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார். "சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். "சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது. இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது. இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM). "இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது. வரமா? சாபமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ் ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்? "பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார். "இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார். "நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார். "நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார். "ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு உண்டா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். "இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர். மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார். "இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார். இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார். மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o
1 week 2 days ago
தங்காலையில் லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்! 22 Sep, 2025 | 04:59 PM அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். 245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை (22) இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்போது வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று லொறிகளில் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் மற்றும் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இந்த லொறியின் சாரதி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225781
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 2 days ago
🚨 தங்காலையில் உள்ள வீடு ஒன்றில் ஐஸ் போதைபொருள்? இரு சடலங்கள் மீட்பு. தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Nirujan Selvanayagam
1 week 2 days ago
ஜனாதிபதி ஜப்பானுக்கு செப். 27 உத்தியோகபூர்வ விஜயம் 22 Sep, 2025 | 04:55 PM (நமது நிருபர்) ஜப்பான் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் சனிக்கிழமை (27) ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகாரத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதிக்கும், ஜப்பான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பரஸ்பர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து டோக்கியோவின் முன்னணி ஜப்பான் செயற்றிட்டம் மற்றும் முதலீட்டாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். 2025 மசாகா கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/225778
1 week 2 days ago
என்னடா இது ஒரு பல்லியை பிடித்ததற்கே முதலையைப் பிடித்த மாதிரி ………..!
1 week 2 days ago
🤣................ ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣. 👍.......... சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது. தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.
1 week 2 days ago
மகா விஷ்ணுவின் பல நாமங்களில் ஒன்று நாராயணா என்னும் நாமம் .....அச்சுதா, அனந்தா,கோவிந்தா போன்று....... அது அவதாரமல்ல ....... ஆனால் அந்தப் பெயர்களை பக்தியால் பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவார்கள் . ....... அசலம் என்றால் அசையாமல் இருப்பது பொதுவாக மலையைக் குறிக்கும் ........திருவண்ணாமலை இதன் இன்னொரு பெயர் அருணாசலம் ....... பெற்றோர் அன்பினாலோ அன்றி பக்தியினாலோ பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் இடுகின்றார்கள் என்றால் அந்தப் பிள்ளை மலைபோல் அசையாமல் இருக்குமோ . .....இருக்காது ......அது ஓடும் , ஆடும், பாடும் , படம்போடும் அதுபோல் . ........! 😇
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed