புதிய பதிவுகள்2

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்

1 week 2 days ago
22 Sep, 2025 | 04:43 PM திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/225771

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்பச் சென்ற நபர்களால் பதற்றம்

1 week 2 days ago
22 Sep, 2025 | 04:33 PM வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர். https://www.virakesari.lk/article/225766

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 week 2 days ago
22 Sep, 2025 | 02:14 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225744

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 week 2 days ago
சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 11:01 AM மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 9மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, இரண்டு டி-56 மேகசின்கள், 115 சுற்றுகள் டி-56 வெடிமருந்துகள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பத் மனம்பேரியை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு செப்டெம்பர் 17ஆம் திகதியன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயனங்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து வைத்ததாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மித்தெனியவில் அண்மையில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பத் மனம்பேரியிடம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225721

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் - உதய கம்மன்பில

1 week 2 days ago
முதலில்.... உங்களைப் போன்ற இனவாதிகளை அடக்கி வைத்தமையும், மக்களின் பணத்தில் அரச மாளிகையில் இருந்து கொண்டு சொகுசு அனுபவித்த ஜனாதிபதிகளை அந்த இடத்தை விட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தமையும், மகிந்தவின் ஆதரவாளர்களால் நடத்தப் படும் ஐஸ் போதை வியாபாரத்தையும், மாஃபியா கும்பல்களையும், நாடு விட்டு தப்பி ஓடி... இந்தோனிசியா, அரபு நாடுகளில் பதுங்கி இருக்கும் பாதாள உலக கோஷ்டிகளையும் அடியோடு அழித்துக் கொண்டு இருப்பதே சாதனைதான்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு

1 week 2 days ago
இலங்கை ஜனாதிபதியாக ஓராண்டை நிறைவு செய்த அநுர; தமிழர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களை பின்தள்ளி, புதிய ஆட்சியொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றுடன் ( செப்டெம்பர் 21) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய நிலையில், புதிய கட்சியாக முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியுள்ளது. ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை இல்லாதொழித்து, நாட்டின் பின்னடைவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவு இந்த ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த கட்டுரையாகும். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கியமை பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ''வளமான நாடு - அழகான வாழ்க்கை'' என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள், இந்த அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சிக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியாக காணப்பட்ட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ வீடுகள், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில், இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஊழல், மோசடி புகார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஊழல், மோசடி, வீண்விரயங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரணில் அதிபராக இருந்த போது தனது அமெரிக்காவிற்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, அங்கிருந்து லண்டன் நோக்கி பயணித்தார். தனது மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டமையின் ஊடாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தியிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்களாக மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜித்த சேனாரத்ன, ஷஷிந்திர ராஜபக்ஸ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தவிர, ஊழல், மோசடி, வீண்விரயம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. போதைப்பொருளை ஒழித்தல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், மறைத்து வைக்கப்பட்டு போதைப்பொருட்கள் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் தலைமறைவாகி, இலங்கைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்த நிழலுலக தலைவர்கள் என கருதப்படும் பிரதான சந்தேகநபர்கள் அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனூடாக நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயண பொருட்கள் மீட்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் இலங்கை ஜனாதிபதிகள் வசம் காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக முன்வைத்திருந்தது. எனினும், அந்த உறுதிமொழியை இதுவரை நிறைவேற்ற தவறியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அடையாளம் காணுதல் இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது. எனினும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக விசாரணைகள் முடிவடையாத நிலையில், அந்த உறுதிமொழியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குதல் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கையானது, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவித்திருந்த போதிலும், கடந்த ஒரு வருட காலத்தில் அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. பிரதான உறுதிமொழிகள் உள்ளடங்கலாக மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர்களின் காணி விடுவிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியிருந்தது. எனினும், அந்த உறுதிமொழியும் இதுவரை முழுமை பெறாதுள்ளது. சில பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், முழுமையாக காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, இன்று வரை எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், அவர்களின் விடுதலைக்கான தொடர்ந்தும் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பிலான இறுதி முடிவு இன்று வரை எட்டப்படாதுள்ளமையை காண முடிகின்றது. பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மலையக தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், லயின் அறைகளில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு நிரந்தர வீடொன்றை கட்டிக்கொள்வதற்கான காணிகள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இவ்வாறு தேர்தல் மேடைகளிலும், கொள்கை பிரகடனத்திலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முழுமையாக ஒரு வருட காலத்திற்கு நிறைவேற்றப்படவில்லை. எனினும், தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? வடகிழக்கு மாகாணங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கும் வகையில் தற்போதைய ஆளும் கட்சியாக இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன்படி, வடகிழக்கு மாகாணம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைத்திருக்கின்றதா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெருமளவான நம்பிக்கை வைத்து, வரலாற்றில் என்றுமே இல்லாதளவு வாக்குகளை கடந்த முறை வழங்கியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளுக்கு அதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த அங்கீகாரம் இல்லாது செய்து, தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வங்கியை அந்த மாகாணங்களில் பெற்றிருந்தது. பட மூலாதாரம், PARAMESWARAN WIKNESHWARAN படக்குறிப்பு, மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வாக்குகள், இன்று தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? இந்த விடயம் தொடர்பில் மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''பொதுவாக இலங்கை மக்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது சிங்களமாக இருக்கலாம், தமிழர்களாக இருக்கலாம். இவர்களிடம் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஊழல், மோசடிகளை இல்லாது செய்வோம். போதைப்பொருட்களை இல்லாது செய்வோம்." இந்த மாதிரியான சில பொதுவான கோரிக்கைகள் வெளிவந்தன. இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் ஓரளவு முன்னோக்கி செல்வதாக தெரிகின்றது. ஆனால், தமிழர்களின் கோரிக்கை என்று பார்த்தால், ஈழத் தமிழர் பிரச்னையாக இருக்கலாம். அரசியல்தீர்வு விடயமாக இருக்கலாம். கடந்த கால குற்றச்சாட்டுக்கள் மீதான தீர்வாக இருக்கலாம். இந்த மாதிரியாக விடயங்களில் இந்த அரசாங்கம் ஒரு அடியேனும் முன்நோக்கி வைத்ததாக தெரியவில்லை." என்றார். வெளிப்படையாக தெரியவில்லை. அரசியல் தீர்வு, போர் குற்றச்சாட்டுக்கள், காணாமல் போனோர் விடயங்கள், வடக்கு கிழக்கு பொருளாதாரம், மலையக தமிழ் மக்களின் சம்பள பிரச்னையாக இருக்கலாம். இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் நழுவி செல்லும் போக்கை கடைபிடித்து செல்வது தெட்ட தெளிவாகவே தெரிகின்றது. கடந்த அரசாங்கங்கள் செய்த அதேவேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் தொடர்வதாக கூட இருக்கலாம். அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவிப்புக்களின் தமிழர்களின் பிரச்னைக்கான தீர்வு இல்லை என்பதே உண்மை.'' என மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். எதிர்கட்சிகள் ஒன்றிணைவு பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு அடுத்த நொடியே, பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்டு, தற்போது பிரதான எதிர்கட்சியாக விளங்குகின்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஏனைய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் வழங்க முன்வைத்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் விடுதலை மற்றும் அரசாங்கத்திற்கு செயற்பாடுகளுக்கு எதிராகவே தாம் ஒன்றிணைந்ததாக கூறிய பிரதான எதிர்கட்சிகள், இன்று ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் என்றும் இல்லாதவாறு இம்முறை பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் ஒன்று கூடியிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் அமர்ந்து, அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் பதில் - பிமல் ரத்நாயக்க என்ன கூறுகின்றார்? பட மூலாதாரம், FB/BIMAL RATHNAYAKE படக்குறிப்பு, தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியுள்ள போதிலும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டமையினால் தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். எனினும், உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே தாம் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ''இந்த நாட்டு மக்கள் 76 வருடங்கள் சென்ற பாதையை ஒரு புறம் வைத்து விட்டு, புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி புதிய பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அநுர சகோதரர் ஜனாதிபதியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. உண்மையில் நாம் வேலை செய்ய ஆரம்பித்தது மே மாதம் 6ம் தேதிக்கு பின்னர். மே 6ம் தேதியே எமது உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவாகினார்கள். அதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சில வேலைகளை எமக்கு செய்ய இடமளிக்கவில்லை. தேர்தல் நடாத்தப்படும் காலப் பகுதியில் எம்மால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது. மே 6ம் தேதிக்கு பின்னரே நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்.'' என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydn4lp32eo

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

1 week 2 days ago
🚨தங்காலை வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லொறியில் 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், ஒரு T-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Nirujan Selvanayagam

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

1 week 2 days ago
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:01 AM லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது. அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த "தாக்குதலின் விளைவாக, சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர்" என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225705

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் - உதய கம்மன்பில

1 week 2 days ago
22 Sep, 2025 | 05:30 PM (இராஜதுரை ஹஷான்) சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னரான சட்டத்தில் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே பகிரங்கப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் நாங்கள் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறித்த விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு வெளிப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் தலைமையிலான அரசாங்கத்தின் தலைவர்கள் அறியவில்லை. இந்த சட்டத்தின் ஊடாக தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் அறிந்திருக்கவில்லை. 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 மார்ச் மாதம் வரையிலான காலத்தை வரையறுத்து சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை. சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல் அல்லது விடயங்களை மறைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவரின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்கப்படாத சொத்து அவருக்கு உரிமையானதாக இருந்தால் அதனை அரசுடமையாக்க முடியும்.உண்மை தகவல்களை மறைத்தால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது ஒரு வருடகால சிறைதண்டனை விதிக்கப்படும். சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஒருவருட கால ஆட்சியில் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225783

புரட்டாதி மாத சிரிப்புகள்.

1 week 2 days ago
புரட்டாதி மாதம்.... இன்று (22.09.2025) நவராத்திரி ஆரம்பம், புரட்டாதி மாதம் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரிப்பது என்று விரதம் இருக்க வேண்டிய நாட்கள் அதிகம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சோதனையான மாதம் என்பதால்... இணையத்தில் அதனைப் பற்றிய நகைச்சுவை பதிவுகள் அதிகமாக உள்ளது. அவற்றில் சில ....

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 2 days ago
நீங்கள் சொல்லுவதையே தானும் நானும் நினைத்திருந்தேன். நாராயணர் என்பவர் ஒரு அவதாரம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பத்து அவதாரங்கள் என்று வரிசைப்படுத்தப்படுபவை: 1. மச்ச அவதாரம் 2. கூர்ம அவதாரம் 3. வராக அவதாரம் 4. நரசிம்ம அவதாரம் 5. வாமன அவதாரம் 6. பரசுராமர் அவதாரம் 7. ராமர் அவதாரம் 8. கிருஷ்ணர் அவதாரம் 9. பலராமர் அவதாரம். சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை ஒன்பதாவது அவதாரமாகக் கருதுவதும் உண்டு 10. கல்கி அவதாரம். புராணங்களின் படி, 10 வது அவதாரம் மட்டுமே மிச்சமுள்ளது. கலியுகத்தை முடித்து வைப்பதற்க்கான அவதாரம் இது. பிரகலாதன் - இரணிய மன்னனின் கதையில் வரும் நரசிம்ம அவதாரமே நாராயணரின் தொடர்புடையது போல. இவை எல்லாமே புராண காலத்தவை, புத்தர் மட்டுமே ஒரு விதிவிலக்கு, அவரை ஒரு அவதாரமாகக் கருதுவது கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இல்லை. சுவாமி நாராயணன் என்று குஜராத்தி மக்களால் வழிபடப்படுபவர் பிரிட்டிஷ் கால இந்தியாவில், 1781 - 1830 ஆண்டுகளில், வாழ்ந்த ஒரு துறவி. 200 வருடங்களுக்கு முன் மனிதராக வாழ்ந்த ஒருவர். இவர் ஒரு புராண அவதாரம் இல்லை என்றும், பெயர்க் குழப்பமே இங்குள்ளது என்றும் நினைக்கின்றேன்...............

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 week 2 days ago
தமிழ்நாட்டு மக்கள் மிக இலேசாக கடந்து போய்க் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. இதையே எங்கள் நாட்டில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கியம் மிக்க ஒருவரோ செய்து விட்டு, இவ்வளவு இலேசாக இருந்து விடமுடியாது. தமிழ்நாட்டில் பல தலைவர்களின் கதைகளில் பலர் வந்து போயிருக்கின்றார்கள். ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் அல்லது கொள்ளை அடித்தார் என்பது இன்னும் ஒரு இலேசாகக் கடக்கப்படும் நிகழ்வு. இதை ஒரு பரபரப்பான செய்தியாகப் பார்ப்பார்களே அன்றி, அதற்கான விளைவுகள் மக்களால் ஆற்றப்படுவதில்லை. அங்கே ஊழலும், லஞ்சமும் சாதாரண ஒருவரின் வாழ்க்கையிலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமாகவே கலந்திருப்பதால், இவை ஒரு குற்ற உணர்வை தொடர்ந்தும் எவர் மனதிலும் உண்டாக்குவதில்லை. சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் போன்ற நிகழ்வுகள் கூட மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் அழகிரியின் எல்லை மீறிய கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் கொலைகள், பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு போன்றன ஒருவரை அங்கே அரசியல் அநாதை ஆக்கக்கூடியன. சாதி, இனம், மொழி, மதம் என்று கோடுகளால் பிரித்து, வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அங்கே இடம் இருந்தாலும், அவர்களுக்கான ஆதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25

1 week 2 days ago
அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25 அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் இலக்கியக் கூட்டமான, 21 9 25 ஞாயிற்றுக்கிழமை அளவில்மாலை 5 மணி சென்னை அண்ணாநகர் லியோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கியப் பேருரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் ரூபா எம்..ஏ., எம்.பில்., பி.எச்டி., அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட, அதை அடுத்து மதிப்பிற்குரிய பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்பு ஆற்றினார்கள். பின்னர் பேராசிரியர் முனைவர் மா. இளங்கோவன் (க்ஷ தலைவர்) அவர்கள் மிகச் சிறப்பாகத் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் பேரவையின் இணைச் செயலாளரும், இந்துக் கல்லூரியின் பேராசிரியருமான,பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுர சூடாமணி அவர்கள், பெருங்கதை காப்பியம் தொடர் சொற்பொழிவின் தொடக்க உரையாக றற்யமிகச் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றினார்கள். பேராசிரியர் முனைவர் ம.இளங்கோவன் சிற்றுரை ஆற்றிய பிறகு, ஆவடி வேல்டெக் கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன் அவர்கள் இணையத் தமிழ் என்பது பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அவர் உரையாற்றும் பொழுது, ”உலகளாவிய நிலையில், தமிழ் வளர்ச்சிநிலை பெற்றுள்ளதை தமிழ் ஆர்வலர்கள் இன்னும் வளர்க்க முயலவேண்டும்” என்றார். இணையத்தமிழ் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான இச்சொற்பொழிவில் பல துறைகளின் மேம்பாடுகள் விளக்கப்பட்டன. பிறகு, பேராசிரியர் முனைவர் ரூபா அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள்.பின்னர் பேரவையின் ப் யங்தொண்டர் திலகம் திரு சுதாகர் அவர்கள் தனக்கே உரித்தான முறையில் பெருங்கதையின்பெருமையைப் பற்றியும், இணையத் தமிழ்ப் பற்றியும் பேசிய பிறகு, நன்றி உரையாற்றினார்கள். இத்துடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. கூட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

4.3 அளவில் பூமி அதிர்வு.

1 week 2 days ago
திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthquake struck in Berkeley on the Hayward Fault early Monday morning and shook most of the Bay Area. Video shows items knocked off of shelves at several East Bay stஅதிகாலை 3 அணிக்கு பலத்த சத்தம்.பேரப்பிள்ளைகள் தான் கட்டிலால் விழுந்து விட்டார்களோ என்று அறையைவிட்டு ஓடிவந்த போது மகளும் வெளியே வந்து அது பூமி அதிர்வு போய் படுங்கோ என்றார். கலிபோர்ணியாவில் அடிக்கடி வருவதென்றாலும் இந்தத் தடவை கொஞ்சம் பலமாகவே இருந்தது. இப்போது தான் எழும்பி எங்கே வந்திருக்கிறது என ஆராய்ந்தால் எமக்கு அடுத்த நகரமான பேர்கிளே என்ற இடத்தில் அதிர்ந்துள்ளது.

சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது!

1 week 2 days ago
சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்தர்கள் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448106

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!

1 week 2 days ago
நரி, ஓநாய் ஐரோப்பிய மேற்கு மற்றும் அதன் சார்ந்த கூட்டங்கள், இஸ்ரேல் இடம் அடிப்பதை நிறுத்துமாறு கேட்டபோது இஸ்ரேல் நிறுத்தி இருந்தால், பலஸ்தீனியரை சிறுக சிறுக அழிப்பது என்ற உள்ளே வைத்திருக்கும் திட்டத்தில் இருந்து இப்படி வாய்ச்சொல்லால் விலத்தியத்தை செய்து இருக்க மாட்டாது. இரானி சரியாக இவர்கலின் பல்தெனிய அங்கீகரிப்பு அலங்கார கோலாகலத்தை முன்னறிவுப்பு வந்த போது சரியாக அடையாளம் கண்டு இருந்தது. இரான் சொல்லியது அரசுக்கு உள்ள எல்லாவற்றையும் அழிக்க இஸ்ரேல் க்கு நேரடியாக களத்தில் நின்று அழித்துவிட்டு , சோடினையாக அங்கீகரிப்பது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 week 2 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B பகுதி: 27 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மூன்று கேள்விகள்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்? பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராணக் கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது. இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்ப்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 C தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31425152117133359/?
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed