1 week 3 days ago
மொழிபெயர்ப்பு விஜையை தமிழ் நாட்டில் அரசியல் செய்ய வேண்டாம் என சொல்லவும் 🤣. பிகு விஜையும் ஒரு சராசரி அரசியல்வாதியே. தமிழ் நாட்டில் மீன் வள கொள்ளையர் = அப்பாவி மீனவர்கள் என்ற மாபெரும் விம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதை சர்வகட்சி கூட்டத்தில் ஏற்று கொண்டாலே ஒழிய, தனி ஒரு கட்சி இப்படி சொல்வது அரசியல் தற்கொலைக்கு சமனானது. விஜை அரசியல் தற்கொலை செய்யவில்லை, எனவே அவர் எமக்கு ஆதரவாக எழும்பும் சிறு குரல் கூட வேண்டாம் என சொல்லும் நிலையிலா நாம் இருக்கிறோம்?
1 week 3 days ago
எச்1பி விசா: அமெரிக்க அரசின் புதிய விளக்கம் - இந்தியர்கள் அறிய வேண்டியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விசா பற்றிய டிரம்ப்பின் புதிய உத்தரவு அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கட்டுரை தகவல் இஷாத்ரிதா செய்தியாளர், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 20 அன்று, ரோகன் மேத்தா, எட்டு மணி நேரத்தில் 8,000 டாலருக்கும் அதிகமாகச் செலவழித்து, இந்தியாவில் உள்ள நாக்பூரிலிருந்து அமெரிக்காவிற்குப் பறக்க, பல விமானப் பயணங்களை முன்பதிவு செய்து, ரத்து செய்து, மீண்டும் முன்பதிவு செய்தார். விரல்விட்டு எண்ணக்கூடிய சில வழிகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT (Eastern Daylight Time)மணிக்கு முன் வந்து சேர வேண்டும் என்ற காலக்கெடுவை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என போராடினார். மும்பையிலிருந்து ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியவுடன், மேத்தாவுடன் (அவரது வேண்டுகோளின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியின் இஷாத்ரிதா பேசினார். "நான் பல வழிகளை முன்பதிவு செய்தேன், ஏனென்றால் பெரும்பாலான வழிகள் காலக்கெடுவுக்கு மிக அருகில் வந்தன. ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும், நான் காலக்கெடுவைத் தவறவிட்டிருப்பேன்" என்று அவர் கூறுகிறார். ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது குடும்பத்துடன் 11 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தையின் நினைவு தினத்திற்காக நாக்பூருக்கு வந்திருந்தார். அவர், தங்கள் முதலாளிகளால் நிதியுதவி செய்யப்படும் H-1B எனப்படும் பணி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவர். செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதில், புதிய H-1B விசா ஊழியர்களுக்கு ஒரு முதலாளி 100,000 டாலர் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT-லிருந்து நடைமுறைக்கு வரும். H-1B விசா என்பது, அமெரிக்காவில் சிறப்புத் துறைகள் மற்றும் பணிகளில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு பணி விசா திட்டமாகும். கடந்த ஆண்டு, அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் 85,000 H-1B விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்களை இந்தியர்கள் பெற்றனர். இந்த உத்தரவு இந்திய H-1B விசா வைத்திருப்போருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. "என் மனைவியும் மகளும் என்னுடன் வராதது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளது. நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்காக வருந்துகிறேன். இந்த நாட்டிற்காக உழைக்க எனது இளமைக்காலத்தின் முக்கிய பகுதியை நான் கொடுத்தேன். இப்போது நான் விரும்பத்தகாதவனாக உணர்கிறேன்" என்று மேத்தா கூறுகிறார். "என் மகள் தன் முழு வாழ்க்கையையும் அமெரிக்காவில் கழித்துவிட்டாள். நான் எப்படி என் வாழ்க்கையை அங்கிருந்து பிடுங்கி, இந்தியாவில் மீண்டும் புதிதாகத் தொடங்குவேன் என்று எனக்குத் தெரியவில்லை." இந்தியர்கள் பயணங்களை ரத்து செய்து, விடுமுறைத் திட்டங்களை கைவிட்டனர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் புதிய உத்தரவை குடிவரவு வழக்கறிஞர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர் பிபிசி இந்தியாவைச் சேர்ந்த பல H-1B விசா வைத்திருப்போரிடம் பேசியது. அவர்களில் பலர் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். தங்கள் முதலாளிகளால் அங்கீகரிக்கப்படாததால், அவர்களில் யாரும் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. பலர் "கண்காணிப்பு" என்ற காரணத்தைக் குறிப்பிட்டு எங்களுடன் பேச முற்றிலும் மறுத்துவிட்டனர். நாங்கள் பேசிய அனைவரும் இந்த உத்தரவு குறித்துக் கவலை கொண்டவர்களாகத் தோன்றினர். ஆனால், ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் காலக்கெடுவுக்கு முன் திரும்பி வருமாறும் குடிவரவு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்த H-1B விசா வைத்திருந்த இந்தியர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "இப்போது நிலைமை மிகவும் தெளிவாக இல்லை. முதலாளிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், இது எப்படி அமல்படுத்தப்படும் என்பதை நாம் இன்னும் பார்க்க வேண்டும். நான் புரிந்துகொண்டவரை, இந்த உத்தரவு புதிய H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். குடிவரவு வழக்கறிஞர்கள் இன்னும் அதை புரிந்துகொள்ள முயன்று வருகிறார்கள். மேலும், எங்களை திரும்பி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்" என்று கூறினார். அமெரிக்க அரசின் விளக்கம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புதிய விதிகள் புதிதாக வழங்கப்படவுள்ள H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்க அதிபரின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் விளக்கமளித்துள்ளார் புதிய விசா விதிகள் பற்றிய குழப்பத்தை தொடர்ந்து அமெரிக்க அரசு விதிகள் பற்றிய விளக்கத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லேவிட் இது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இது ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணம். ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டணம் அல்ல. இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே H-1B விசா வைத்திருந்து தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் நாட்டுக்குள் மீண்டும் நுழைய 100000 டாலர் கட்டணம் விதிக்கப்படாது. வழக்கமாக அவர்கள் செல்லக் கூடிய அதே அளவில் நாட்டிலிருந்து வெளியேறவும் மீண்டும் நுழையவும் முடியும், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பால் அவர்களுக்கு இருக்கும் இந்த உரிமை பாதிக்கப்படாது. இது புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. இந்த விதி, அடுத்த வரவிருக்கும் லாட்டரி சுழற்சியில் தேர்வாவோருக்கு பொருந்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99ggg2gvrko
1 week 3 days ago
ஆழ்ந்த இரங்கல்கள் ........!
1 week 3 days ago
👇 கிட்டதட்ட 15 வருடமாக சீமான் சொன்ன அதே விடயங்களை சொல்லி, அதனால் விஜைக்கு வாக்கு போடுவேன் என்கிறார் இந்த பெண். ஆனால் சீமான் மீது சாமன்ய மக்களுக்கு இந்த நம்பிக்கை வரவில்லை. இதற்கு சீமானின் குழப்ப, உள்ளடி, அநாகரீக, வெறுப்புவாத (மறைமுக சாதிய) அரசியல் பெரிய காரணி என்றாலும், உள்ளுணர்விலேயே அவர் ஒரு நம்பதகாதவர் என்பதை மக்கள் கண்டு கொண்டார்களோ என நான் எண்ணுகிறேன். https://youtube.com/shorts/0kurU1alclU?si=84CF_4ADbB3LiTRo
1 week 3 days ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04 ஆகஸ்ட் 18 தங்க ரத்தத்தில் வேல்விமானம் திருவிழா. அவன் அவளுக்காக பின் வீதியில் காத்து நின்றான். இதைக் கவனித்த ஆரணியின் தோழி ஒருவள், "அருண், நீங்க கோவிலுக்குள் செல்வதை நிறுத்தி விட்டீர்கள்" என்று கிண்டல் செய்தாள். அருண் சிரித்தபடி தோள்களைக் குலுக்கினான். "இப்போது எனக்கு என் சொந்த இறைவி இருக்கிறாள்." என்றான். உண்மையிலேயே, அவளை ஒரு தெய்வீகப் பெண் போல அவன் வணங்கினான். ஒவ்வொரு மாலையும், அவள் கை அவன் கையைத் தொட்டபோது, அவளுடைய சிரிப்பு அவனுக்காக ஒலித்தபோது, அவன் ஒரு வெற்றியாளரைப் போல உணர்ந்தான். ஆனாலும் ஒவ்வொரு பரிசும் அவனுடைய பணப்பையை வடிகட்டியது, ஒவ்வொரு புன்னகையும் அவன் கொடுத்தவற்றுடன் பிணைந்ததாகத் தோன்றியது. ஆனால் அவள் கச்சிதமாக நடந்து கொண்டதால், அவன் அதை உணரவில்லை. ஆனாலும், அவனை பொறுத்தவரையில், அன்பு மதிப்புக்குரியது. பரிசுகள் சிறிய தியாகங்கள் மட்டுமே. அன்று ஆரணி எனோ இன்னும் வரவில்லை. அவளின் இன்னும் ஒரு தோழி, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, " அருண் நீங்க கொஞ்சம் கவனமாக ஆரணியுடன் பழகுங்கள், இதைவிட நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை" என்ற சொல்லவும் ஆரணி வரவும் சரியாக இருந்தது. அவன் முதல் முதலாக கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். அவன் அன்று ஒன்றும் வாங்கவும் இல்லை, சாப்பிட போகவும் இல்லை. ஆரணி சிணுங்கினாள். அவள் கண்கள் அருகிலுள்ள நகைக் கடையை நோக்கிச் சென்றன. ஆனால் அவன் கண்டும் காணாதவனாக இருந்து விட்டான். தங்க ரத்தத்தில் அலங்கார வேலன் வரும் காட்சியை அவன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவனின் கையை பிடித்து, விரல்களால் அழுத்தியபடி, " என்ன நடந்தது அருண் உனக்கு?, நான் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா?" என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டாள், பின் "வாங்க, எங்கேயாவது சாப்பிட்டுக் கொண்டு தனியாக கதைப்போம்" என்றாள். ஆனால், அவன் பேசாமல் அமைதியாக நின்றான். அப்பொழுது தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன, "வேல்! வேல்!" என்று கோஷமிட்டன. அவன், அவள் கைகளை பிடித்து, நீ என்னவள், நான் கொண்டு வந்த என் பணப்பை குறைந்து கொண்டு போகிறது. இனி நான் கட்டுப்பாடுடன், தேவைக்கு அளவாகத் தான் செலவழிக்க முடியும். அதுதான் என்று இழுத்தான். பின் ரியோவில் போய் இருவரும் ஐஸ்கிரீமும் மரக்கறி ரோலும் சாப்பிட்டனர். ஆனால் முதல் முதலாக எந்த பரிசும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவளின் தோழி சொன்னதின் அர்த்தத்தை ஆரணியிடம் தேடிக் கொண்டு இருந்தான், ஆனால் அவளுக்கு அதைக் காட்டாமல் ! ஆகஸ்ட் 20, சப்பரம் திருவிழா. அவன் வேண்டும் என்றே, அன்று பணப்பை கொண்டுவரவில்லை. அவன் அவளை சோதிக்க விரும்பினான். ஆரணி தன்னை இன்னும் கூடுதலாக அலங்காரப் படுத்திக் கொண்டு வந்தாள். அவளின் அந்த கவர்ச்சி அழகு, அவள் மேல் ஆசையைக் கூடினாலும், அவன் எளிமையாக, ஒரு பக்தன் போல், ஆனால் அவளின் கையை பிடித்தபடி ஆலயத்துக்குள் புகுந்தான். என்றாலும் அவனின் உடலும் உள்ளமும் அவளை ரசித்துக் கொண்டே இருந்தன. 'காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ?' மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய பேச்சும், இனிய மலர்கள் சூடப் பெற்ற அவளின் கூந்தலும்; தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லும்படி; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளின் தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள் என்று கூறும் அளவுக்கு ஆரணி அழகை அள்ளி அள்ளி அருணுக்கு வீசிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் முன் போல் அதை வெளியில் அவளுக்கு காட்டிக் கொள்ள வில்லை. பரிசு மட்டும் அல்ல சாப்பிடக்கூட கூப்பிடவில்லை. ஆக கோவில் தீர்த்தமும் சாதகமும் மட்டுமே அவனும் பருகி, அவளுக்கும் தன் கையால் ஊட்டினான். அதில் ஆசை, காமம் இருக்கவில்லை. அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் ஆரணிக்கு அது எரிச்சலாகவே இருந்தது. அவள் புன்னகை தடுமாறியது. அவள் கொஞ்சம் கடும் கோபத்துடன், " பெண்ணை, காதலியை ரசிக்கத் தெரியாத, அவளை திருப்தி படுத்தாத, அவளுக்கு, இந்த விழாக் காலத்தில் ஒன்றுமே கொடுக்காத நட்பு , அது என்ன நட்பு?" என்று கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு 'நான் இவ்வளவு நாளும் கொடுத்தேனே, ரசித்தேனே, இன்று ஒரு நாள் பொறுக்க முடியாதா? அப்படி எனறால் இது உண்மையான அன்பா ? பாசமா?' என்று கேட்கத் தோன்றியது, ஆனால் கேட்கவில்லை , அதற்கு இனி தேவையும் இல்லை. அவள், அவனின் கையை உதறி விட்டு, அங்கிருந்து அகன்று விட்டாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. தன் யாழ் அனுபவத்தை நினைத்து தனக்குள் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தான். ஆலயமணி அப்போது ஒலித்தது. பக்தர்களின் அரோகரா கோஷம் காதை பிளந்தது. என்றாலும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அங்கு கொஞ்ச நேரம் நின்றான். ஆனால் அவள் வரவில்லை. பார்க்கப் போனால், மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? அருணின் வாழ்க்கையிலே, நல்லூர் ஆலயத்துக்குள் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்து விட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வதீியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவம், சில பேரினது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பி விட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும் போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய தோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிட வில்லையா? ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது! சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிகப் பெரியது. இன்று அருணின் அனுபவமும் அப்படியே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/31411651205150117/?
1 week 3 days ago
எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.
1 week 3 days ago
முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.
1 week 3 days ago
1 week 3 days ago
அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣 பத்தோடு பதின்றோகவேனும் முக்கிய சந்தர்பங்களில் குரல் கொடுத்துள்ளார். போராட்ங்களிலும் கலந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று நேற்றைய நாகை உரையில் நான் அவதானித்த விடயம். ஏனையை பிரச்சனைகளை பற்றி விஜை பேசிய போது எழுந்த மக்களின் சத்தம், ஈழத்தமிழர் பற்றி சொன்ன போது அதே அளவில் வரவில்லை. இதுதான் எப்போதும் தமிழ் நாட்டின் மனநிலை. 2009 இலும் கூட. ஆகவே ஒரு அடையாள ஆதரவை மீறி வேறு எதை எதிர்பார்தாலும் அது எம் மடமையே.
1 week 3 days ago
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை. இப்பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோருகின்ற தரப்புகள்தான் அப்பொழுது ஆட்சியிலிருந்தன. எனவே அவர்களுக்கே இந்தத் தவறில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்களே இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துத் தாமப்படுத்தி, இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் விட்ட தவறை இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் சீரழிவு நிலைக்குள்ளாகி விட்டன. அதிலும் வடக்கு மாகாண சபையின் நிலை இன்னும் மோசம். மாகாணசபை சீரழிந்துள்ளது என்றால், அதனுடைய நிர்வாகம் பாழடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். நிர்வாகம் பாழந்துடைந்துள்ளது என்றால். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுடைய பொறுப்பைச் செய்யவில்லை. அல்லது பொறுப்பைச் செய்யக் கூடிய ஆளுமையுடன் இல்லை என்பதே அர்த்தமாகும். இதற்கு வலுவான ஆதாரமாக, “பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மக்களுக்குச் சரியான முறையில் தங்களுடைய பணிகளைச் செய்யவில்லை.” என்று தொடர்ச்சியாக ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவலை தெரிவித்து வருவதைச் சொல்லலாம். ஆளுநர் சொல்வதில் உண்மையுண்டு. ஒரு தொகுதி உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் உரிய முறையில் தங்களுடைய பணிகளைச் செய்வதில்லை. அதனால் மக்கள் அலைச்சல்களுக்குள்ளாக வேண்டியுள்ளது. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றுப்படாமல் காலதாமதமாகிறது. அதனால் அவர்களுக்குப் பாதிப்பும் சிரமமும் ஏற்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளிலும் இந்த மாதிரி தாமதங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. மருத்துவத்துறை, கல்வித்துறை போன்றவை சீர்குலைவைச் சந்திக்கின்றன. இப்படியே சொல்லிக் கொண்டு – பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். தொடக்கத்தில் ஆளுநர் சொல்வதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஏனென்றால், மாகாணசபை நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளுநர் அவதானித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிலைமை புரிகிறது. குற்றவாளிகளுக்கும் தவறிழைப்போருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை – வாய்ப்பை அளிக்கிறார் என்றே பலரும் கருதினர். அத்துடன், புதிய NPP அரசாங்கமும் ஆட்சியில் இருப்பதால், நிச்சயமாக பெரிய மாற்றங்கள் – முன்னேற்றம் – ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை வேறு விதமாகியது. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக வரவர நிலைமை மோசமாகத் தொடங்கியது. ஆளுநர் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் சொல்கிறாரே தவிர, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதாகக் காணோம் என்ற குரல்கள் எழத் தொடங்கின. ஆளுநர் நல்லவர், நேர்மையானவர். பண்பானவர். ஆனால், நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதில், தவறிழைப்போருக்கான தண்டனைகளை அளிப்பதில் போதிய உற்சாகத்தைக் காட்டவில்லை. ஏனோ தயக்கம் காட்டுகிறார். இதனால் குறைபாடுகள் அதிகரிக்கின்றன. தவறிழைப்போரும் பொறுப்பற்று நடப்போரும் எந்த வகையான அச்சமும் இல்லாமல் அதேவிதமாக நடக்கின்றனர். ஆளுநர் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் சொல்கின்றவர் இல்லை. அவர் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர். தவறுகளை இழைப்போரையும் பொறுப்பற்று நடப்போரையும் நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அது ஏன் செய்யப்படாதிருக்கிறது? என்ற விமர்சனங்களும் கேள்வியும் பரவலாகியுள்ளது. இப்பொழுது வடக்கு மாகாணத்தில் பல புகார்களோடு (முறைப்பாடுகளோடு) ஆளுநர் பணிமனைக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றைப் பார்க்கலாம். 1. ஆளுநரிடம் தெரிவித்தால் – முறையிட்டால் – தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில். 2. ஆளுநரைச் சந்திக்கக் கூடிய நிலை உள்ளதால். 3. ஆளுநரைத் தவிர வேறு யாரிடம் இதை முறையிடலாம் என்ற நிலையில். 4. ஏனைய இடங்களில் அளவுக்கு அதிகமான முறையீனங்களும் பிரச்சினைகளும் பெருகியுள்ளதால், ஆளுநரிடம் முறையிட வேண்டும், தீர்வைக் கோர வேண்டும் என்பதால். 5. ஆளுநரே எந்த நிலையிலும் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நடவடிக்கைக்கு ஆணையிட வேண்டும் என்ற காரணத்தினால். ஆனாலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உறங்கு நிலையிலேயே தள்ளி வைக்கப்படுகின்றன. சில விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதற்குரிய அதிகாரிகளோடு நேரடியாக ஆளுநர் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைக்குப் பணிப்பதும் நடக்கிறது. அப்படிப் பணித்தாலும் காரியங்கள் எதுவும் உரிய முறையில் நடப்பதாக இல்லை. ஏதோ சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லது செயலாக்கம் நடைபெறாமல் அப்படியே கை விடப்படுகிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அண்மையில் பல ஊடகங்களில் வந்து பொதுக் கவனத்தைப் பெற்ற ஒரு விவகாரம், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மகப்பேற்று மற்றும் பெண்கள் நோயியல் தடுப்பு – குணமாக்கல் பிரிவை இயங்க வைப்பதற்கான முயற்சியாகும். இந்த விடயம் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியது. அதனையடுத்து ஆளுநர் குறித்த மருத்துவனைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். ஒரு மாதம் சென்ற பிறகும் எந்த விடயமும் நடக்கவேயில்லை. பதிலாக அந்தப் பிரிவு இயங்காமல் உள்ளதாகக் குறிப்பிட்டு, அங்குள்ள மருத்துவ உபகரணங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றன. இதனையடுத்து நோயாளர் நலன்புரிச்சங்கம் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தச் சூழலில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் வடமாகாண சுகாதார அமைச்சும் ஆளுநர் தலைமையில் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டி குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் ஆராய்ந்தது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நோயாளர் நலன்புரிச் சங்கமும் அழைக்கப்பட்டிருந்தது. கலந்தாராய்வின்போது குறித்த பிரிவை இயக்குவதற்கான தேவைகளின் பட்டியலை மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார். அந்தப் பட்டியலின் அடிப்படையில் அவ்வளவு வளங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, முதற் கட்டமாக மருத்துவப் பிரிவை அங்கே இயக்க வைப்பதாகவும் படிப்படியாக அதற்கான வளங்களை நிறைவு செய்ய முடியும் என்றும் பேசப்பட்டது. அதற்கமைய தீர்மானமும் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 20 நாட்கள் கடந்து விட்டன. நிலைமையில் துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குப் பிறகு யாரிடம் பேசுவது? எதைப் பேசுவது? இப்படித்தான் அதே மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பேருந்து நிலையக் காணியில் தவறான முறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை (கடைகளை) அகற்றுவது தொடர்பாக ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதற்கான கூட்டமும் நடந்தது. ஊடகங்களிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், நிலைமையில் முன்னேற்றத்தைக் காணவேயில்லை. இப்படித்தான் பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள், ஆசிரிய இடமாற்றங்கள், காணிப் பகுதிகளில் தாதமங்கள் என ஏராளம் குறைபாடுகளும் பிரச்சினைகளும் மலிந்துள்ளன. காணிப்பிரச்சினை எனும்போது ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு காணிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு ஆவணத்தை புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது. அந்தக் காணியில் குறித்த நபரும் அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே குடியிருந்து வருகின்றனர். இருந்தாற்போல கொழும்பில் இருக்கும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சிபாரிசுக் கடிதத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேலதிக சிபாரிசையும் பெற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலரையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரையும் சந்தித்துத் தனக்கும் அந்தக் காணியில் பாதியை உரிமை கோரியிருக்கிறார். இவ்வளவுக்கும் குறித்த நபர் ஒருபோதுமே புதுக்குடியிருப்பிலோ முல்லைத்தீவு மாவட்டத்திலோ குடியிருந்ததே இல்லை. ஆனால், குறித்த சிபாரிசுக் கடிதத்துக்காக மாவட்டச் செயலரும் பிரதேச செயலரும் நீண்டகாலமாகவே காணியில் குடியிருப்பவரை அழைத்து, பாதிக் காணியை வழங்குமாறு பணித்துள்ளனர். காணிக்குரியவர் அதனை மறுக்கவே அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மட்டுமல்ல, பாதிக்காணியை வழங்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக கடிதமும் எழுதியுள்ளனர். இதனை ஆட்சேபித்து பாதிக்கப்பட்டவர் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை. ஆனால், பிரதேச செயலகத்திலிருந்து ஏகப்பட் அழுத்தங்கள் அதற்கிடையில் காணி உரித்தாளருக்கு வந்து கொண்டிருக்கின்றன. இப்படி அரச திணைக்களங்கள் தொடக்கம் தனியார் பிரச்சினைகள் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கூட பிரச்சினைகள் பேசப்படுகின்றனவே தவிர, தீர்வுகள், நடவடிக்கைள், முன்னேற்றங்கள் என்பது போதாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலைப் பலரும் கோருகிறார்கள். தேர்தல் வந்தாலும், அதில் வெற்றியீட்டினாலும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையைப் போல இன்னொரு நிர்வாகம் வந்தால் அதனால் என்ன பயன்? அதை விட தேர்தலே வேண்டாம். அதையும் விட ஆளுநரும் வேண்டாம் என்றுதான் சனங்கள் எண்ணுகிறார்கள். அப்படியென்றால் என்னதான் வேணும் என்பதே கேள்வி. https://arangamnews.com/?p=12331
1 week 3 days ago
திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன் திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் ஒளிப்படம் தாங்கிய ஊர்தியை நகர்த்திய பொழுது திருகோணமலையில் அந்த வாகனம் தாக்கப்பட்டது. அந்தச் சம்பவம் தமிழ்த் தேசியக் கட்சிகளை கட்சி கடந்து ஒன்றாக்கியது. ஆனால் அரசாங்கம் நினைவு கூர்தலை தடுக்காது தளர்வாக நடந்து கொள்ளும் போதெல்லாம் குறிப்பாக திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? நினைவுத் தூபியில் யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதல்கள் வெடிக்கின்றன. சில சமயம் இந்த மோதல்கள் ஊடகச் சந்திப்புகள் வரை வருகின்றன. திலீபன் உண்ணாவிரதம் இருந்தது நல்லூர் வளாகத்துக்குள். ஆனால் அது ஒரு கோயில் வளாகம் என்பதனால் அங்கே நினைவுத் தூபியை வைக்க அனுமதிக்கப்படாத காரணத்தால் அது நல்லூர் வளாகத்துக்கு வெளியே இப்போது இருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது திலீபன் உயிர் நீத்த இடம் அல்ல. எனவே திலீபனை நினைவு கூர முற்படுபவர்கள் அந்த இடத்துக்குத்தான் வரவேண்டும் என்று இல்லை. அந்தச் சூழலில் பல காணிகள் உண்டு மண்டபங்கள் உண்டு. அதனால் திலீபனை மெய்யாக விசுவாசமாக நினைவுகூர வேண்டும் என்று கருதும் கட்சியோ செயற்பாட்டாளர்களோ இடத்துக்காக அடிபடத் தேவையில்லை. இங்கு இடம் ஒரு பிரச்சினையே அல்ல. திலீபனை எப்படி நினைவு கூரலாம்? அதன்மூலம் அவருடைய நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம்? அதன் மூலம் அவருடைய தியாகத்தின் ஆன்ம பலத்தை எப்படி நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உந்து சக்தியாக மாற்றலாம்? என்று சிந்திப்பதுதான் இங்கு முக்கியம். திலீபனின் நினைவு நாளில் அவருடைய ஒளிப்படம் ஏந்திய வாகனத்தை வடக்கு கிழக்காக நகர்த்துவது ஒரு நல்ல ஏற்பாடு. நல்லூரில் அவருடைய நினைவுகளை பகிரும் ஒளிப்படக் காட்சியை வைப்பதும் ஒரு நல்ல ஏற்பாடு. குருதிக் கொடையும் நல்லது. இவற்றைவிட புதிதாகவும் யோசிக்கலாம். இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக ரிக்ரொக் தலைமுறையின் கவனத்தை, கொழும்பின் கவனத்தை, உலகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்க படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்ட வடிவங்கள்தான். கடந்த 15ஆம் திகதி திலீபனின் நினைவு நாளுக்கு முன்னதாக கொழும்பில் சிங்களப் படைப்பாளியான சந்தரசி சுதுசிங்க எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. திலீபன் என்று பெயரிடப்பட்ட அந்த நூலில்,இரண்டு அத்தியாயங்கள் திலீபனை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளைக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியப் பரப்புக்கு வெளியே வேறு இனங்களும் திலீபனைக் கொண்டாடுவது திலீபனுக்கு மகிமையே. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு மகிமையே. அமைச்சர் சந்திரசேகரன் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்துவது திலீபனுக்கு மகிமையே. திரைப்படக் கலைஞர் சோமிதரன் முகநூலில் கூறியது போல “அஞ்சலி செலுத்த வந்தவரும் ஓர் அரசியலைச் செய்ய வருகிறார். அவரைத் தடுத்து நிறுத்தியவர்களும் தங்களுக்கான அரசியலைச் செய்கிறார்கள்” என்பதே உண்மை. திலீபன் ஓர் ஆயுதப் போராளி. ஆனால் அவர் உயிர் நீத்தது ஓர் அறவழிப் போராட்டத்தில். அவருடைய வழியை விசுவாசமாகப் பின் தொடர்கிறவர்கள்தான் அவரை அஞ்சலிக்கலாம் என்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவரைப் போல சாகும்வரை உண்ணாமல் இருக்க எத்தனை பேர் தயாராக இருந்திருக்கிறார்கள்? உணவோ நீரோ இன்றி எத்தனை நாள் இருக்கலாம் என்பது உபவாசம் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலிருந்து தப்பினாலும் அதனால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களில் இருந்து தப்ப முடியாது. கடந்த 16 ஆண்டுகளாக குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெற்றோர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். எனினும் அப்போராட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டன. அது சரி. ஏனென்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்தான் திரும்பத்திரும்ப தியாகம் செய்ய வேண்டும் என்றில்லை. கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான் அவர்களுக்காகப் போராட வேண்டும். திலீபனைப்போல உயிர் பிரியும் வரை உண்ணாமலும் துளி நீரும் அருந்தாமலும் போராட எத்தனை பேரால் முடியும்? கடந்த 16 ஆண்டுகளாகத் தாங்கள் செய்ய முடியாத அல்லது தாங்கள் செய்யத் தயாரில்லாத தியாகங்களுக்கு உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாங்கள் செய்யத் தயாராக இல்லாத ஒரு தியாகத்துக்கு உரிமை கோருபவர்களால்தான் உண்மையான தியாகம் கொச்சைப்படுத்தப்படுகிறது. தியாகம் செய்ய வேண்டிய காலங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தியாகத்தைப்பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கட்டுரை யாரையும் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. யாரும் சாகவும் வேண்டாம். செத்தது போதும். ஆனால் செய்யத் தயாராக இல்லாத தியாகங்களுக்கு உரிமை கோரக்கூடாது. மாறாக அந்தத் தியாகங்களின் மகிமையை,நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்கலாம். அதிலாவது உண்மையாக இருக்கலாம். தியாகிகளை அஞ்சலிக்கும்போது விளக்கு கொளுத்துவது மலர்களை வைப்பது போன்றவை வழமையான வழிகள்.வாகன ஊர்தி,ஒளிப்படக் காட்சி,குருதிக் கொடை போன்றன ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை.ஆனால் இவற்றுக்கும் அப்பால் புதிய படைப்புத்திறன் மிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக தியாகியின் நாட்களில் ஊர் ஊராக அவருடைய நினைவுகளைப் பரவலாக்கும் விதத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் கலை பண்பாட்டுச் செயற்பாடுகள் பெரிய பங்காற்ற முடியும்.எனவே புதிய கலை வடிவங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். தியாகிகளின் நாட்களில் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி இசை அஞ்சலிகளை இசை வேள்விகளைச் செய்யலாம். அந்த இசை வேள்விகளுக்குப் பிராந்திய,அனைத்துலகக் கலைஞர்களைக் கொண்டு வரலாம். இது ஒரு வழி. இரண்டாவது வழி, தியாகியின் பெயரால் போட்டிகளை ஒழுங்குபடுத்தலாம். கவிதைப் போட்டி,கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி, நாடகப் போட்டி,விவாதப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள்… மூன்றாவது வழி,தியாகிகளின் நாட்களில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து அந்த தியாகத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆழமாக ஆராயலாம். நாலாவதுவழி, தியாகிகளின் பெயரால் தொண்டு செய்யலாம். ஊர் ஊராக சிரமதானங்களைச் செய்யலாம். ஊர்க் குளத்தை,நீரோடும் வாய்க்கால்களைத் தூர் வாரலாம்.ஊரைத் துப்புரவாக்கலாம். மரம் நடலாம். இப்படித் தியாகியின் பெயரால் பசுமைத் திட்டங்களை முன்னெடுக்கலாம். ஐந்தாவது வழி,தியாகிகளின் பெயரால் இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்தலாம்.மருத்துவத் துறை ஒரு இண்டஸ்ட்ரியாக மாறி ஏழைகளுக்குத் தூரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,இலவச மருத்துவ முகாம்களை தியாகிகளின் பெயரால் ஒழுங்கமைக்கலாம். உதாரணமாக அரச பொது மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில சத்திர சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுகிறது. அவ்வாறான சத்திர சிகிச்சைகளை இலவசமாக தியாகிகளின் பெயரால் செய்யலாம். அதாவது தியாகிகளை நினைவு கூர்வது என்பது தொண்டு செய்வது; தன்னாலியன்ற தியாகத்தைச் செய்வது.இவ்வாறு தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் படைப்புத்திறனோடும் தியாக சிந்தையோடும் சிந்தித்தால் புதிய வழிகள் திறக்கும். அவ்வாறு புதிய கற்பனைகள் தோன்றும்போது நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுவது தடுக்கப்படும்.எங்கே நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுகிறதோ அங்கே நினைவுகூர யாருக்கு உரிமை அதிகம் என்று கேட்டுச் சண்டைகளும் அதிகரிக்கும். https://www.nillanthan.com/7795/
1 week 3 days ago
கொத்த முயன்ற ராஜநாகத்தை பாதுகாப்பாக மீட்கும் காட்சி
1 week 3 days ago
சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் September 21, 2025 11:26 am 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்… அ.நிக்ஸன்- வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்ற கடும் தொனியையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தினார். சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர். சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸ்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது. சுவிஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிஸ்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர். சிங்கள தமிழ் பிரதிநிதிகளின் நியாயமான நீண்ட விளக்கங்களை செவிமடுத்ததாக இக் கட்டுரையாளருக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார். சுவிஸ்லாந்து அரசியல் நிர்வாக முறைமை பற்றிய விளக்கங்களின் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுஸே் பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர். கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர். ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர். இக் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால், அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார். ஆனால், இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர். அதேநேரம், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார். அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது, அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார். அதேநேரம் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார். சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர். ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர். அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார். இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார். அதேவேளை மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார். சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார். 2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளியிப்படுத்தியிருந்தார் எனவும், ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார். இக் கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார். எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது. அதேநேரம் இக் கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://oruvan.com/switzerland-seminar-what-happened/
1 week 3 days ago
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை, கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர் 21 Sep, 2025 | 08:10 AM மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினர் சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை வழங்கி அமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225628
1 week 3 days ago
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்கள், இராணுவத்தின் உத்தரவின் பேரில் காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை ஏற்றிச் சென்ற லொரி ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், சனிக்கிழமை அதிகாலை, காசா நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இது "மருத்துவர்களை நகரத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதற்காக இயக்கப்பட்ட இரத்தக்களரி பயங்கரவாத செய்தி" என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225645
1 week 3 days ago
தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி 21 Sep, 2025 | 04:57 PM நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார். தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் சனிக்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/225675
1 week 3 days ago
யானைக்கு அதிர்ச்சி வைத்தியம்!!
1 week 3 days ago
”தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்” - செல்வம் அடைக்கலநாதன் வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன். எங்களை பொறுத்த வரையில் ஒற்றுமை இன்மையை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம். குறிப்பாக எமது ஒற்றுமை இன்மையினால் தமிழ் மக்கள் விரக்தியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேசிய கட்சிகளின் பிரதித்துவம் உருவாகியது. இது ஒரு செய்தியாகவே நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக எமது செயற்பாடுகள் வெறுமனவே பேச்சளவில் காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் அவ்வாறு ஏற்பட்டால் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும். எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும். எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது. அத்தோடு அதற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் எட்டப்படவில்லை. ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்லுகின்ற அபாய நிலை இருக்கின்றது. எனவே ஒற்றுமையாக மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/தமிழ்-தேசியத்தை-பற்றி-பே/
1 week 3 days ago
கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அவர் காலத்தில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன். கடந்த 2004, ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார், அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசிய பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் பாராளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும். அந்த தேர்தலில் வடகிழக்கு எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களை தெரிவு செய்தனர் அதில் ஒரு நிர்வாக அதிகாரியா இருந்த கனகசபை அண்ணரும் தெரிவானார். அந்த காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும் கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்த காலம்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதனால் மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது 2006, நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்திற்கு மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என கனகசபை, அவர்களுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்த்தியின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார். அந்தப்பயம் காரணமாக 2010, தேர்தலில் வேட்பாளராக சம்மதிக்கவில்லை அதற்க்கு பின்னர் அவர் எந்த தேர்தல்களிலும் ஈடுபடவில்லை அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டு கூறினார். அரசியலுக்கு வருவதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாக சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86, அகவையில் இறையடி சேர்ந்துள்ளார் அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரினை பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/கனகசபை-ஐயாவின்-மறைவு-பேர/
1 week 3 days ago
21 Sep, 2025 | 11:25 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் (ஐ.நா. பொதுச் சபை) மற்றும் ஜப்பானுக்கும் நாளை திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கிறார். இந்த பயணங்கள் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களையும், எதிர்கால கொள்கைகளையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத்தின் கூற்றுப்படி, 22 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயார்க்கிற்குப் புறப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வார். செப்டம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி தனது உரையில், இலங்கை அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி விளக்கவுள்ளார். மேலும், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புகள், இலங்கையின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் விஜயம்: எக்ஸ்போ 2025 மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்று "எக்ஸ்போ 2025" சர்வதேச கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார். எக்ஸ்போ 2025, உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் கலாசாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பலங்களை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாகும். இந்த நிகழ்வில், இலங்கை சார்பில் "இலங்கை தினம்" (Sri Lanka Day) என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம், இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியம், துடிப்பான சுற்றுலாத் துறை, மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. இது இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமையும். பிரதமர் மற்றும் பேரரசருடன் சந்திப்பு ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 28 ஆம் திகதி ஞாயிற்று கிழமை முதல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அவர் பிரதமர் இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோவையும் சந்திக்கவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து கவனம் செலுத்தும். ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பயணத்தின்போது, ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பு, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கலந்துரையாடுவதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/225646
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed