புதிய பதிவுகள்2

தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி

1 week 3 days ago
'10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,PremallathaDmdk/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது" தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், 'கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்' என தி.மு.க கூறுகிறது. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா? மூன்று நாட்களில் மாறிய காட்சிகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதே நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார். அவருடன் பிரேமலதா பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம் என ஊடகங்களில் பேசப்பட்டது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் சூப்பர்-8ல் கவலை தரும் 3 விஷயங்கள் எவை? வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்? டி20 உலகக் கோப்பை: சாம்பியன் அணிகளை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே - சூப்பர் 8 சுற்று எப்படி நடைபெறும்? மலேசியா வாசுதேவன் பாடிய 'மயங்க வைக்கும்' 10 பாடல்கள் End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,PremallathaDmdk/X ஆனால், அடுத்த மூன்று நாட்களில் தி.மு.க கூட்டணியை தே.மு.தி.க தலைமை தேர்வு செய்துள்ளது. இப்படியொரு முடிவு எடுத்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, "கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து அனைவரின் கருத்தையும் கேட்டோம். இந்தமுறை தி.மு.க கூட்டணியை அவர்கள் விரும்பினர்" எனக் கூறினார். "தொண்டர்களின் முடிவையே என்னுடைய முடிவாக ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம்" என்கிறார் பிரேமலதா. கருணாநிதி - விஜயகாந்த் நட்பு அப்போது, கருணாநிதிக்கும் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்து பிரேமலதா விவரித்தார். "இருவரும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தனர். எங்கள் திருமணத்தைக் கருணாநிதி தான் நடத்தி வைத்தார்" எனக் கூறினார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க உடன் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பெரிதும் ஆர்வம் கட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" எனப் பேசினார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா, "எத்தனையோ முறை பேசப்பட்டாலும் கூட்டணி என வரும்போது நிறைவேறாமல் இருந்தது. பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் இது விழுந்துள்ளது" என்கிறார். அ.தி.மு.க கூட்டணியை தவிர்த்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்தமுறை ஒட்டுமொத்த கட்சியின் விருப்பமாக தி.மு.க கூட்டணி இருந்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X 'ராஜ்யசபாதான் இலக்கு' "மார்ச் 16-ஆம் தேதியன்று நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் கிடைக்க உள்ளன. அதில், ஓரிடத்தை தே.மு.தி.கவுக்கு கொடுப்பதற்கான வாக்குறுதியை வழங்கியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன். அ.தி.மு.க கூட்டணியில் நீண்டகாலமாக மாநிலங்களவை இடத்தை தே.மு.தி.க கேட்டு வருவதையும் அவர் பிபிசி தமிழிடம் மேற்கோள் காட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, மாநிலங்களவை இடம் தொடர்பாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது பிரேமலதா தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X ஆனால், "அவ்வாறு எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை" என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார். மேலும் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு மாநிலங்களவை இடங்களை அ.தி.மு.க தலைமை ஒதுக்கியது. இதனை எதிர்பார்க்காத பிரேமலதா, கடந்த ஆண்டு மே மாதம் செய்தியாளர் சந்திப்பில், "தி.மு.க கூறியபடி கமலுக்கு மாநிலங்களவை இடம் கொடுத்துள்ளனர். அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். அப்போது தான் மக்கள் அவர்களை நம்புவார்கள்" என அவர் கூறினார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "மாநிலங்களவை இடத்தைக் கொடுக்க அ.தி.மு.க மறுத்துவிட்டது. இந்தமுறை சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றை இலக்கத்தில் கொடுத்தாலும் தே.மு.தி.க பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு மாநிலங்களவை இடம் முக்கியமானதாக உள்ளது" என்கிறார். இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மாநிலங்களவை இடத்தை வைத்தே தே.மு.தி.க இந்த முடிவை எடுத்துள்ளது. அ.தி.மு.கவில் ஜெயக்குமார் உள்பட பல்வேறு மூத்த நிர்வாகிகள் மாநிலங்களவை இடத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்" என்கிறார். ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் கூட்டணி முடிவாகியுள்ளதே? என செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் கேட்டபோது,'' ஒரு கட்சிக்கு என்ன தேவை உள்ளதோ அதையெல்லாம் பேசுவோம். கூட்டணிக்கு தலைமையில் உள்ள ஸ்டாலின் அறிவித்தால்தான் சரியாக இருக்கும்.'' என்றார். 'இப்படியொரு நகர்வை எதிர்பார்க்கவில்லை' பட மூலாதாரம்,Shyam Shanmugaam/Facebook படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "தி.மு.க வசம் நான்கு மாநிலங்களவை இடங்கள் உள்ளதால் அவர்களால் ஓரிடத்தைக் கொடுக்க முடியும். அ.தி.மு.க நிர்வாகிகளைத் தாண்டி வேறு கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை கொடுத்தால் கட்சிக்குள் பிரச்னை ஏற்படும்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஷ்யாம், "சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி தே.மு.தி.க நகரலாம் என எதிர்பார்த்த சூழலில் இப்படியொரு நகர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கிறார். படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க எடுத்த முடிவு சரியானதா? "தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வரும் தே.மு.தி.கவுக்கு இந்தக் கூட்டணி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தனது கூட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலைப்படுத்திப் பேசி வந்தார். "விஜயுடன் கூட்டணி சேருவதற்கும் தே.மு.தி.க தயாராக இல்லை என்பதையே பிரேமலதாவின் முடிவு காட்டுகிறது" எனக் கூறுகிறார் ஷ்யாம். "விஜயகாந்த்தின் ஒரு மகன் (விஜய பிரபாகரன்) விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இன்னொரு மகன் (சண்முக பாண்டியன்) சினிமாவில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இன்னொரு திரை நட்சத்திரம் பின்னால் அவர்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு என்ன பாதிப்பு? "தற்போது கூட்டணியில் தே.மு.தி.க வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். "தே.மு.தி.கவை ஒரு காரணமாக தி.மு.க முன்வைக்கக் கூடும். அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் குறையலாம்" என அவர் தெரிவித்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. "இந்த முறை 25 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க கொடுப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "சுமார் 170 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடுவது என தி.மு.க முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் வரலாம்" எனவும் அவர் தெரிவித்தார். 'உரிய முடிவை முதலமைச்சர் எடுப்பார்' ஆனால், இந்தக் கூற்றை மறுத்துப் பேசுகிறார் தி.மு.க தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன். தேமுதிக வருகையை "காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கலாம் என்ற ரீதியில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை." எனக் கூறுகிறார். "இதுபோன்ற அனுமானங்களை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "அனைவரின் சுயமரியாதையும் அங்கீகாரத்தையும் காக்கும் வகையில் முதலமைச்சர் முடிவை எடுப்பார்" என்கிறார். பட மூலாதாரம்,X/AIADMKOfficial படக்குறிப்பு,தேமுதிக முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தது "எங்களுக்கான இடங்கள் குறையாது" தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்ததை வரவேற்கிறோம். இந்தநேரத்தில் தே.மு.தி.க இணைவதன் மூலம் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறையும் எனக் கூறுவது தேவையற்ற அனுமானம் எனக் கூறும் கோபண்ணா, "அவர்கள் வருவதன் மூலம் எங்களுக்கான இடங்கள் குறையாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் சரியான புரிதல் உள்ளது. அவை பேசி தீர்க்கப்படும்" எனத் தெரிவித்தார் கூட்டணிகளை மாற்றுவதால் பாதிப்பா? "கூட்டணிகளை மாற்றுவது குறித்து தே.மு.தி.க கவலைப்படுவதில்லை. விஜயகாந்த் சந்தித்த கடைசி தேர்தலிலும் அக்கட்சி சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்கிறார் மாலன். "விஜயகாந்த் மறைந்த பிறகு தே.மு.தி.கவுக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க இல்லாதது பாதிப்பாக பார்க்கப்படலாம்" எனக் கூறுகிறார் ஷ்யாம். "இதனால் ஏற்படும் நஷ்டம் குறித்து கட்சிகள் ஆலோசிக்கும். அதற்கான மாற்று வழிகளை அவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3ewv27z9x9o

ஓட்டிசம் விழிப்புணர்வு: இலங்கையில் உலகின் மிக நீளமான உணர்வுசார் சுவர் ‘சென்சரி’ சுவர்நிர்மாணம்

1 week 3 days ago
ஓட்டிசம் விழிப்புணர்வு: இலங்கையில் உலகின் மிக நீளமான உணர்வுசார் சுவர் ‘சென்சரி’ சுவர்நிர்மாணம் Published By: Vishnu 20 Feb, 2026 | 03:31 AM நாட்டில் ஓட்டிசம் எனப்படும் மதியிறுக்க நிலை குறித்த விழிப்புணர்வை அடிமட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் நோக்கில், ‘மரக் 2026’ எனும் பாரிய தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி கண்டியில் உலகின் மிக நீளமான 'உணர்வுசார் சுவர்' ( சென்சரி வோல்) எனும் கட்டமைப்பை நிறுவி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை( 18 ) கொழும்பு நைன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத் திட்டம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைத் தொட்ர்பில் ‘ட்ரீஹவுஸ் சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரும், ஓட்டிசம் தொடர்பான சர்வதேச நிபுணருமான வைத்தியர் அந்தோனி ஜேம்ஸ் தெரிவிக்கையில், சர்வதேச தரவுகளின்படி , இன்று 31 குழந்தைகளில் ஒருவருக்கு ஓட்டிசம் பாதிப்பு உள்ளது. இது நாட்டில் ஒரு 'அமைதியான நெருக்கடியாக நிலவிவருகிறது. இலங்கையில் உள்ள 23 மில்லியன் மக்களில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஓட்டிசம் என்றால் என்ன என்பதை உண்மையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது இலக்கு. ஓட்டிசம் பாதிப்புடையவர்கள் உலகை உணரும் விதம் சாதாரண மக்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களது மூளை புலன் தகவல்களைச் செயலாக்கும் விதம் வேறானது. இதனைப் பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலேயே இந்த 'உணர்வுசார் சுவர்' உருவாக்கப்படுகிறது. தொட்டுணரக்கூடிய மற்றும் ஒளி, சத்தம் போன்ற பல்வேறு புலன்களைத் தூண்டக்கூடிய பாகங்கள் இச்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இலங்கையின் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு, பல்வேறு பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புடன் இச்சுவர் வடிவமைக்கப்படவுள்ளது. செர்பிய மொழியில் இருந்து பெறப்பட்ட 'மரக்' என்ற சொல்லுக்கு, சிறு சிறு விடயங்களில் ஆழ்ந்த அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கண்டறிதல் என்று பொருள். ஓட்டிசம் கொண்ட ஒவ்வொரு தனிநபரும் தனித்துவமானவர்கள் என்பதையே இப்பெயர் குறிக்கின்றது என்றார். 2022 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய டொக்டர் அந்தோனி ஜேம்ஸ், இலங்கையில் 'பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு எனும் சான்று அடிப்படையிலான சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் இச்சிகிச்சைக்காக இலங்கையை நாடி வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். https://www.virakesari.lk/article/239102

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி

1 week 3 days ago
அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடங்கிபோகும்வரை அவர்களும் அடக்கியாள்வார்கள். அரசியல்வாதிகள் தயவில் பிக்குகளும், பிக்குகள் தயவில் அரசியல்வாதிகளும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஞானசார தேரரை அடைத்ததுபோல் அடைத்து, எதற்கும் அடிபணியாமல் சட்டம் தனது கடமையை செய்தால்; இவர்கள் தங்கள் போலிக்காவியை களைந்துவிட்டு சென்றுவிடுவார்கள். இனவாத அரசியல்வாதிகளை சிறைக்குள் தள்ளினால் இவர்கள் வீதிக்கு இறங்குவார்கள், இவர்களையும் பிடித்து போட்டுவிட்டால் தானே அடங்கிவிடுவார்கள். எப்போ இனவாதம் அழிகிறதோ அன்று பௌத்தமதமும் துகிலுரிக்கப்படும்.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

1 week 3 days ago
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு Feb 20, 2026 - 08:42 AM கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார். அத்துடன் கச்சத்தீவுக்கான படகுச் சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். இதேவேளை கச்சத்தீவுக்கு குழுவாக / தனியாக படகில் வரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களை தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு படகு மூலம் பயணிப்போர் 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னர் கச்சத்தீவை அடையும் வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlubb9lg0006356pqe03s6bu

லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை.

1 week 3 days ago
லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை. இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன். லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம். ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை. யாராவது லக்சபான போயுள்ளீர்களா? அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா? இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள். நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன். இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை. TAMILTVSERIAL - Tamil Serials & ShowsKhiladi Jodies 15-02-2026 Zee Tamil tv Show - TamilTvSeri...Khiladi Jodies show,Zee Tamil tv showshttps://www.tamildhool.tech/zee-tamil/zee-tamil-show/killadi-jodis/killadi-jodis-15-02-2026-zee-tamil-show/ யாராவது இந்த நிழகழ்ச்சியை பார்க்க விரும்பினால் மேலுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.(இங்கே பார்க்கக் கூடியவாறு உள்ளது.)

வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்

1 week 3 days ago
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம் - சுப.சோமசுந்தரம் கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ? இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள். அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ? உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. https://youtu.be/ZgkPtjotOJ4?si=1XAcFsMVDYhBO6VF

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நான் Darren Sammy யினை உதாரணம் காட்டியதன் நோக்கம் இருவரையும் குறைந்து காட்டுவது நோக்கமில்லை. Saamy பல போட்டிகளில் மற்றைய பந்து வீச்சாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவார். இடையில் ஒன்று, இரண்டு ஓவர்கள் விசுவார் அல்லது போட்டியில் பந்து வீசமாட்டார்.துட்டுப்பாட்டத்திலும் 6, 7 , 8 வது இடத்தில் களம் இறங்குபவர் என்பதால் அவருக்கு துடுபாட்டம் ஆட பெரும்பாலும் சந்தர்ப்பம் கிடைக்காது. இறுதி ஓவர்களில் கிடைக்கிற கொஞ்ச பந்துகளில் விசுக்கி 4, 6 ஒட்டங்கள் எடுப்பார். இதனால் விரைவில் ஆட்டமிழப்பார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் அவர் பெரியதாக சாதிக்க மாட்டார்

றோசா முள்ளா? மலரா??

1 week 3 days ago
வைத்தியசாலையில் தங்கி இருக்கும் அழவுக்கு ரோசா குத்தி விட்டதா...? காலையில் யாழில் புதியவர் ஒருவரை இன்ரவியூ எடுத்து கொண்டு இருந்தாரே..🤭.சரி பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறியண்ண.👋

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

1 week 3 days ago
இவர் பல பெண்களோடு பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக விசரணைகள் நடந்தன, தாயார் கூட இவரை பல நிகழ்வுகளில் தவிர்த்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அரச குடும்பம் என்கிறபடியால் அடக்கி வாசிக்கிறார்கள்!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
If Pakistan qualify for the semi-finals, they will play in the first semi-final in Colombo on March 4. If Pakistan do not qualify, that semi-final will be played in Kolkata. The second semi-final will be played on March 5 at the Wankhede Stadium in Mumbai. If India qualify, they will play in the second semi-final. ESPN.comPakistan complete Super Eight line-up for T20 World Cup 2026In the Super Eight stage, India, Zimbabwe, West Indies and South Africa will be in Group 1, and England, New Zealand, Pakistan and Sri Lanka in Group 2 | ESPN.com.auhttps://www.espn.com.au/cricket/story/_/id/47963949/t20-world-cup-2026-pakistan-complete-super-eight-line-up

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அவர் பாகிஸ்தான் அரை இறுதிக்கு போனதை சரியாகதான் சொல்லியிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு போகாமல் இந்தியா அரை இறுதிக்கு போனால் (சூப்பர் குழுவில் முதலாவதாக அல்லது இரண்டாவதாக வந்தால் ) இரண்டாவது போட்டியில்தான் விளையாடும். முதலாவது போட்டியில் விளையாடமாட்டினம். கிருபன் அவர்கள் முதலாவது போட்டி சூப்பர் குழு 1 முதலிடம் எதிர் சூப்பர் குழு 2 இரண்டாமிடம் என்று சொல்லியிருக்கிறார். இந்தியா சூப்பர் குழு ஒன்றில் முதலிடம் பெற்றும் பாகிஸ்தான் அரை இறுதி போட்டியில் தெரிவாகாத காரணத்தாலும் இரண்டாவது அரை இறுதிப் போட்டிக்கு விளையாட போகினம்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இலங்கை அணித்தலைவர் சகல துறை ஆட்டக்காரர். ஆறு அல்லது ஏழாம் இடத்தில் களம் இறங்குவார். ஐந்தாவது அல்லது நான்காவதாக பந்து வீசுவார். சிறப்பாக களத்தடுப்பு அமைப்பார். தனது வேலையைச் செவ்வனே செய்கிறார். வேற என்னத்தச் சொல்ல.
Checked
Mon, 03/02/2026 - 11:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed