புதிய பதிவுகள்2

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 week 5 days ago
ஆனால் பன்னீர், சசி, டிடிவி, எவரையும், அமித் ஷா சொன்னாலும் சேர்பதில்லை என்பதில் எடப்பாடி வென்றுள்ளதாகவே தெரிகிறது. அதேபோல் செங்கோட்டையனும் (தன்னை) மன்னிப்போம், மறப்போம் என அடங்கி விட்டார். அதேபோல் அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியது, டிடிவி மூலம் அண்ணாமலை ஆட ஆரம்பித்த கேமை BL சந்தோஸ் மூலம் தட்டி வைத்துள்ளது என முதல் சுற்றில் எடப்படி ஏறு முகம்தான் காட்டுகிறார். 2 ம் சுற்று - தேர்தலில் அதிமுக சீட்டுகள் எண்ணிக்கை 3ம் சுற்று - தேர்தலின் பின், பாஜக அதிமுகவை “அப்படியே சாப்பிடுவோம்” என சாப்பிடாமல் (வென்றாலும் தோற்றாலும்) எப்படி தடுப்பது. அடுத்த இரு சுற்றுக்களும் மிக கடினமானவை. பார்க்கலாம் உங்கள் பனையூரார் பற்றிய பார்வையில் மாற்றம் ஏதும் வந்துள்ளதா? வேர்க் புரொம் ஹோம், வீக் எண்ட் அரசியல்வாதி இனி புதிய டிரெண்ட்டோ? நாம் தான் பழைய முறையில் பிந்தங்கி விட்டோமோ என நினைக்கவும் வைக்கிறார் பனையூர் கிழார்.

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 week 5 days ago
எடப்பாடி அமித் ஷா வீட்டுக்கு அதிமுக தலைகளோடு போயுள்ளார் என நியூஸ் பிரேகிங் ஆன பின்னேதான் அவர் வெளியே வந்தார். போனவர் வரத்தானே வேண்டும். ஆகவே மூடி மறைக்க வாய்பில்லை. எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 5 days ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு பெண் : அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே பெண் : பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ… பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பெண் : ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே.......! --- ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ---

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 5 days ago
நான் முன்பு காரைநகர் nrtb யில் வேலை செய்தபோது (அப்போது பஸ் டிப்போ ஜெற்றி முனையில் இருந்தது)பக்கத்து ஊர்காவற்துறை கடற்கரையில் ஒரு பெரிய ஓங்கில் மீன் இறந்து கரையொதுங்கி இருந்தது ......... அதை நிறையபேர் வந்து பார்த்தார்கள் ......பின் அதை கடற்கரையில் பெரிய குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள் ........!

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 5 days ago
நல்லதொரு, அர்த்தமுள்ள படம் வில்லவன்.........❤️. சில வீடுகளில் நாங்கள் கொடுக்கும் வேப்பம் பூவின் பெறுமதியை விட அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். பல அயலவர்கள் எங்கள் மேல் மிகவும் பிரியமாகவே இருந்தார்கள். எல்லாவற்றையும் முடிந்த வரை உள்ள உள்ளபடியே வெளிப்படுத்திய அது வேறு ஒரு உலகம். பிடித்தமான எழுத்துகளும், கதைகளும் எங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும் போல. புயலிலே ஒரு தோணியிலிருந்து வெளியே வருவதற்கு சில நாட்கள் எடுத்தன.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 week 5 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 27 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வருவதற்காக கஜபா மன்னன் ஒரே ஒரு இராட்சதனுடன் சோழ நாட்டிற்குச் சென்றாரா?' தீபவம்சம் கஜபாகுவின் ஆட்சியை 22 – 13 முதல் 14 வரையிலான இரண்டு வசனங்களில் விவரிக்கிறது. மகாவம்சம் அவரது ஆட்சியை சுமார் 35 – 115 முதல் 122 வரையிலான எட்டு வசனங்களில் விவரிக்கிறது. இருப்பினும், இராசவலிய கஜபாகுவைப் பற்றிய நம்பமுடியாத கதையைக் கூறுகிறது. பைபிள் கதை ஒன்று, பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர் என்றும், ஒரு முறை, அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, உடனே வானை நோக்கி இறைஞ்சினார். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள் என்கிறார். இராசவலிய கதை, பைபிள் கதையின் நகலாகத் தோன்றுகிறது. தமிழ் நாடுகள் அன்றைய காலத்தில் வலிமைமிக்க சேர மன்னனின் கீழ் இருந்தன, பன்னிரண்டாயிரம் கைதிகளுடன் கூடுதலாக பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்து வர கஜபாகு ஒரு பூதத்துடன் சோழ நாட்டிற்குச் சென்றான் என்று இராசவலிய கதை கூறுவது முற்றிலும் விசித்திரமாக உள்ளது. அதுமட்டும் அல்ல, அந்த பூதத்துடன் சோழநாட்டிற்கு நடந்து போவதற்கு கடல் பிரிந்து, பைபிள் கதை போல், வழி கொடுத்தது. இந்த புனைகதை தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அரசுகளுக்கும் இலங்கையில் உள்ள அரசுக்கும் இடையே நிலவிய நல்லுறவை தவறாக சித்தரிக்கும் துறவியின் முயற்சியாக இருக்கலாம்.? இதற்கு நேர்மாறாக தமிழ் ஆதாரங்களில் கஜபாகு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரம் 151 - 163: "பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்" என்று அவரை 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்' என்று பெருமையுடன் கூறுகிறது. கஜபாகு மன்னன் பத்தினி தேவியின் கொலுசுகளையும், நான்கு தேவாலய முத்திரைகளையும், வலகம்பாவின் (மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் வட்டகாமினி) காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைக் கிண்ணத்தையும் [இது புத்த மதத்தில் ஒரு புனித நினைவுச்சின்னம்] மீட்டு தன்னுடன் கொண்டு வந்ததாக இராசவலிய வெற்றியுடன் கூறுகிறது. என்றாலும் கஜபாகுகாமினியின் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில், (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3) கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்குத் தான் இவன் வந்திருந்தான். பிற்காலத்து நூலாகிய இராசவலிய, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழ நாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டு வந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.? Part: 27 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is King Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners?' The Dipavamsa describes his [king Gajabahu] rule in two verses 22 – 13 to 14. The Mahavamsa describes his [king Gajabahu] rule in about eight verses 35 – 115 to 122. However, the Rajavaliya spins an unbelievable story about him. The story is a part copy of the Biblical story of the Saint Moses bringing back the Israelites out of Egypt through the Red Sea. Tamil countries were under the powerful Chera king at that time, and the Rajavaliya’s narration that Gajaba went to the Chola country with one giant to bring back twelve thousand prisoners along with additional twelve thousand is a flight of fancy of the author of the Rajavaliya. The sea parted and gave way to him to walk to the Chola country with that giant. This fiction is perhaps the monkish effort to misrepresent the cordial relationship that prevailed between Tamil kingdoms in South India and the kingdom in Lanka. This may not reflect the better cordial relationship that existed at the time of Gajaba between the Tamil kingdoms in South India and Lanka. The Rajavaliya triumphantly states that the king Gajaba brought with him the jewelled anklets of the goddess Pattini and the insignia of the four devala, and the bowl-relic, which had been carried off during the time of Valagamba (Vattagamni in the other two chronicles). There is an indirect admission that Pattini cult came to Lanka during the time of Gajabahukagamani, confirming the statement in the Tamil Epic Sillappathikaram. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 27 A https://www.facebook.com/groups/978753388866632/posts/31383474037967834/?

அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் - பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி

1 week 5 days ago
அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் Published By: Vishnu 19 Sep, 2025 | 07:20 PM இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் வெள்ளிக்கிழமை (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில், மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், தொழில்சார் சுகாதார ஆலோசனை, மனநல ஆலோசனை, பல் வைத்திய சேவைகள், நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான பரிசோதனைகள், நடமாடும் கண் மருத்துவ பரிசோதனை, பிசியோதெரபி மருத்துவமனைகள் மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டன. உயிர்நீத்த போர் வீரர்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் பிரச்சினைகளையும் ஆராய ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், காயமடைந்த போர் வீரர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குகண்ணாடிகள் மற்றும் தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் இதற்கு இணையாக பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு சேவைகள் ஆணையம் மற்றும் இராணுவ பணிப்பகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளால் போர்வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிலம், வீட்டுவசதி, சம்பளம் மற்றும் ஏனைய நிர்வாக பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. https://www.virakesari.lk/article/225547

2026ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தில் அரச செலவீனம் 21,611கோடி ரூபாவால் அதிகரிப்பு

1 week 5 days ago
Published By: Vishnu 19 Sep, 2025 | 06:47 PM (இராஜதுரை ஹஷான்) 2026நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடியே 6,46,8000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடியே 8,018,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடியே 8,450,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு 61,744கோடியே 50இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவீனமுமாக மொத்தம் 1,11,715 கோடியே 9,980,000இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 299,29,80,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக 11.377,980,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 8,385,000,000 ரூபா அதிகமாகும். பிரதமரின் விடயதானங்களுக்குரிய செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,170,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 9,75,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 1,95,000,000 ரூபா குறைவானதாகும் . அதேவேளை 2025ஆம் ஆண்டு , சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உள்ளிட்ட இன்னும் சில அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விடவும் 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு ,செலவுத்திட்ட முன்மொழிவு எதிர்வரும் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் வருமாறு; புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000,000ரூபாவும், பௌத்த அலுவல்கள் திணைக்களம் 1,350,000,000ரூபாவும், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,04,000,000ரூபாவும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் 1,78,000,000 ரூபாவும், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,85,000,000ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 6,34,782,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டு இந்த அமைச்சுக்கு 7,14,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 7,9,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு 4,55,000,000,000ரூபாவும், நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சுக்கு 5,8,500,000,000 ரூபாவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 5,54,999,998,000 ரூபாவும், வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,3,000,000,000 ரூபாவும், வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 2,700,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 4,46,000,000,000 ரூபாவும், கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2,21, 300,000,000ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 23,100,000,000ரூபாவும், நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 1,03,500,000,000ரூபாவும், கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 3,8,600,000,000ரூபாவும், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 3,01,000,000,000ரூபாவும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 5,96,000,000,000ரூபாவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 18,000,000,000ரூபாவும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கு 11,500,000,000 ரூபாவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 10,600,000,000 ரூபாவும், சுற்றாடல் அமைச்சுக்கு 18,300,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 16,400,000,000ரூபாவும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 16,000,000,000 ரூபாவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு 193,000,000,000ரூபாவும், தொழில் அமைச்சுக்கு 6,400,000,000ரூபாவும், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 13,500,000,000ரூபாவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 6,000,000,000 ரூபாவும் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு, செலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படுவதுடன் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்குத் டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு,செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். https://www.virakesari.lk/article/225546

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 5 days ago
🤣.................. அந்த ஓங்கில் மீன்களின் கூட்டமே உண்மையானவையா அல்லது அங்கே அந்தப் பகுதி கடலுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் செயற்கையானவையா என்ற சந்தேகம் தான் மிக மெல்லியதாக வந்தது............😜. கனடாவில் நான் இது வரை எந்த நூலகத்திற்கும் போகவில்லை. அங்கே போய்ப் பார்க்கவும் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த தடவை முயன்று பார்ப்போம். புலம் பெயர்ந்தவுடன் தாயகத்துடன் இருக்கும் ஒட்டுறவு காலத்தில் மெதுமெதுவாக கரைந்து போய் விடுகின்றது போல. பின்னர் வாழ்வு முடியும் காலத்தில் மீண்டும் தோன்றும் போலவும்.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 5 days ago
பயணக் கதையை தொய்வில்லாமல் இடையிடையே நகைச்சுவையும் கலந்து பொறுமையாக தடடெழுதி சுவைபட தந்த ரசோதரனுக்கு பாராட்டுக்கள். உங்கள் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருத்தி. எழுத்துப்பிழை யற்ற நல்ல ஒருஆசானிடம் தமிழ்கற்ற மாணவன் போல நிறைய புத்தகங்கள்தேடி வாசிப்பீர்கள் போல , உங்களைப்போல பலர் இங்கு தேவை .

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

1 week 5 days ago
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது 19 Sep, 2025 | 05:36 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக இன்றைய தினம் வருகை தந்திருந்தது. இதன்போது பொது மக்கள் அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/225540 Thileepan Song

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதய, இரைப்பை மற்றும் குடல், கல்லீரல் சிகிச்சைப் பிரிவுகள் திறப்பு

1 week 5 days ago
19 Sep, 2025 | 02:57 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் சிகிச்சை பிரிவு ஆகியன பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலையின் வினைத்திறன் பெரிதும் மேம்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெ குஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின் கட்டட திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட இரைப்பை குடல் பிரிவு மற்றும் கல்லீரல் பிரிவு திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை காலை (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இருதய சிகிச்சை பிரிவு கட்டிடம் 05 தளங்களைக் கொண்டுள்ளது. 4,328 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் தரை தளத்தில் வைத்தியசாலைகள், எக்ஸ்-ரே அலகுகள் மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள் உள்ளன, அதே நேரத்தில் முதல் மாடியில் ஒரு கேத் லேப் மற்றும் ஒரு கரோனரி கேர் யூனிட் (CCU) உள்ளன. இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (SICU) உள்ளன, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 80 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன. கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனை சேவைகளை மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) வழங்கி வருகிறது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திறப்பு விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர், இந்த வைத்தியசாலைகிழக்கு மாகாணத்தில் மூன்றாம் நிலை சுகாதாரப் பராமரிப்பின் முதுகெலும்பாக நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, முற்றுமுழுதான கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகைதரும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் ஒரு முன்னணி வைத்தியசாலையாக வளர்ந்துள்ளது. 2005/2006 ஆம் ஆண்டுகளில் இந்த வைத்தியசாலையில் மருத்துவராகப் பணியாற்றும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தாம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகும். இருதயவியல் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிறப்பு சுகாதாரப் பராமரிப்பில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைக்கும் சிறப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய இரைப்பை குடல் மற்றும் ஹெபடோபிலியரி பிரிவும் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் நிறைவடைவது அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும் என்றும், இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வசதிகளை விரிவுபடுத்துதல், மனிதவளத்தை வலுப்படுத்துதல் மற்றும் நவீன உபகரணங்களை மேம்படுத்துதல் ஆகியவை எதிர்காலத்தில் தொடரும் என்றும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆறு மாடி மருத்துவ வளாகம் நிறைவடையும் என்றும், விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவினை நிறுவ நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்க வைத்தியசாலையின் திறன் பெரிதும் மேம்படுத்தப்படும். மேலும் அரசாங்கம் பாதியில் நின்ற திட்டங்களை திட்டமிட்ட முறையில் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டன, இது 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஜூலை மாதம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாணத்தின் ஒரே போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு வைத்தியசாலையின் ஆய்வில் பங்கேற்றபோது, கடந்த காலங்களில் ஆய்வு செய்த வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு வைத்தியசாலைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட வைத்தியசாலை என்று கூறினார். கடந்த காலங்களில் அத்தியாவசிய கட்டிட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கவும், வைத்தியசாலையின் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகளை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரட்ணசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே. முரளீதரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன், சுகாதார அமைச்சின் சார்பாக பொறியியலாளர் கே.எம்.சி. குருப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நிபுணர் டாக்டர் கே. கணேசலிங்கமி கலாரஞ்சனி, துணைப் பணிப்பாளர் டாக்டர் மைதிலி பார்த்தெலோட், மற்றும் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225504

யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

1 week 5 days ago
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி, இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfqpheu000j3o29nkhre3ue2

கச்சதீவை உடைமையாக்குவது அல்ல, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை

1 week 5 days ago
18 Sep, 2025 | 09:13 AM பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/225381

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

1 week 5 days ago
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqq6u4k00ipqplpe5uqk1qk

க.பொ.த சாதாரண தர 2025 (2026) மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

1 week 5 days ago
சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqr2aeg00irqplp0d9e8grw
Checked
Thu, 10/02/2025 - 01:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed