1 week 6 days ago
ஐயோ கந்தையா அண்ணை சொன்னது கோசான் வீட்டை. அங்கே ஏது திரள்நிதி🤣
1 week 6 days ago
யாழ் களம் ஏன் இன்னும் கருத்துக் களமாக இருக்கிறது? அக்கினிகுஞ்சு, தமிழ்வின், ஆதவன் போல அர்த்தமேயில்லாத செய்திகளின் உறைந்த தளமாக இல்லாமல் கருத்துக் களமாக இருக்கிறது? பிரதான காரணம், யாரும் பொய்களை, போலிகளை, திரிப்புகளை இணைத்து விட்டு சவாலுக்குட்படாமல் போய் விட முடியாது. சமூக ஸ்திரத்தன்மையை அவாவுவோர் இந்த சவாலுக்குட்படுத்தலை ஆரோக்கியமான விடயமாகவே பார்ப்பர். அப்படி எதிர்பார்ப்பில்லாதோருக்கு குடைச்சல் ஏற்படுவது தவிர்க்க இயலாதது!
1 week 6 days ago
தானே நாட்டாமை என்றால் யாழுக்கு வாறதே குற்றம் கண்டு பிடித்து நாட்டாமை காட்ட என்ற நீங்கள்....???
1 week 6 days ago
இதே மாதிரி பிக்குமார் போதைவஸ்து விற்றால் கட்டாயம் வாங்கவேணும் என்ற சட்டம் இலங்கை அரசு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...
1 week 6 days ago
நம் மரபுரிமைகளைக் காப்போம். Oorukaai
1 week 6 days ago
மறைந்த நடிகர் ரோபோ சங்கர், கடந்த 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரான்பற்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் நகைச்சுவை செய்து பலரை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தார். Kadoo Kapu
1 week 6 days ago
ஆழ்ந்த இரங்கல்கள். மஞ்சள் காமாலை நோயிலிருந்து சுகமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். நேற்று படப்பிடிப்பு ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் நீர்ச்சத்து குறைவே (dehydration?) மயக்கத்திற்கான காரணம் என்றார்கள்.
1 week 6 days ago
Published By: Vishnu 18 Sep, 2025 | 06:55 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (17) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயர்ஸ்தானிகருக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது பரந்தளவிலானதும் பன்முக அடிப்படையிலானதுமான இலங்கை - இந்திய உறவுகள் மற்றும் நாட்டின் அபிவிருத்தி பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225457
1 week 6 days ago
குளியல் அறை, படுக்கை அறை என்று எந்த இடத்தில் இருந்தும் படம் எடுத்துப் போட தயாராக உள்ள இன்றைய இணைய உலகில், எடப்பாடியார் என்ன ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.............🫣. என்னதான் கடுமையாக அமித்ஷா பேசியிருந்தாலும், வீட்டுக்குப் போன பின் எடப்பாடியார் முகத்தை மூடிக் கொண்டு அழுதிருக்கலாம்.............. இன்று தமிழர்களும், தமிழ்நாடும் ஒன்றாக நின்று எதிர்ப்பை காட்ட வேண்டிய ஒரே கட்சி பாஜகவே. இந்த நேரத்தில் அவர்களுடன் கூட்டணி வைப்பது மட்டும் இல்லாமல், கட்சியையும், சுயமரியாதையையும் அவர்களிடம் இழந்து கொண்டிருக்கும் எடப்பாடியார் விரைவில் எல்லோராலும் கைவிடப்படலாம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைய, விஜய்காந்த்தின் உடலும் உணர்வும் தளர, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பாட்டிருக்கின்றது என்றனர். ஆனால் அப்படி ஒரு வெற்றிடம் உண்டாக விடாமல், திமுகவும் அதிமுகவும் தங்களை மீண்டும் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் இன்று திமுகவும், அவர்களுக்கு போட்டியாக ஒரு வெற்றிடமுமே உள்ளது. என்ன தான் வெற்றிடம் ஒன்று இருந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற நிலையிலேயே சில தலைவர்களின் காலம் முடியும் போல.
1 week 6 days ago
அஞ்சலிகள்
1 week 6 days ago
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
1 week 6 days ago
18 Sep, 2025 | 03:14 PM மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது. இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் கூறுகையில், ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகாண தொழிற்சாலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும். எனவே, குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கான அனு ஆவணங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்கான ஆவணங்கள் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி, வியாபார அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/225419
1 week 6 days ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 ஆகஸ்ட் 15 கார்த்திகைத் உற்சவம், ஆகஸ்ட் 17 கைலாச வாகனம் என அடுத்து அடுத்து வந்த பெரு விழாக்களில் சனநெருக்கம் கூடியதால், அவர்கள் ஒரு ஒதுக்குப்புறமாக தங்கள் தனிமையை தேடிக்கொண்டனர். கைலாச வாகன ஊர்வலத்தின் போது, அருண், இரவு உணவுக்கு, தான் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்தான். அவள் எந்தவித தயக்கமும் இன்று புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். எனவே அவர்கள், கொஞ்சம் நல்லூரில் இருந்து தள்ளி அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அப்ப நேரம் மாலை ஆறு அரை தான். எனவே அங்கே உள்ள நீச்சல் தடாகத்தில் ஒன்று, ஒன்றரை மணிநேரம் பொழுது போக்க முடிவு செய்தான். அவளும் சம்மதிக்க, அங்கேயே மிகவும் கவர்ச்சியான அழகான ஒரு துண்டு பெண்கள் நீச்சல் உடை [one piece ladies swimming dress] வாங்க விரும்பினான். ஆனால் அவள் இரண்டு துண்டு பெண்கள் நீச்சல் உடை [two piece ladies swimming dress] தனக்கு விருப்பம் என்றும் அது தனக்கு வசதியானது என்றும் கூற, அதையே வாங்கினான். அவள் அவன் கரங்களை தன் கரங்களுடன் கோர்த்து, நெருக்கமாக நின்று உங்கள் அறையில் போய் உடை மாற்றுவோமா என்றாள். ஆனால் அது, தனிப்பட்ட அறையில், இப்போதைக்கு வேண்டாம், இங்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக உடை மாற்றும் இடம், நீச்சல் தடாகத்துடன் இருக்கிறது, அங்கே நாம் மாற்றலாம் என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை, அமைதியாக ஒத்துக் கொண்டாள். என்றாலும் அவள் வாய் 'கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. காதலிக்கு காதலன் ஆடை. அதற்கு ஏன் தனித்தனி அறை? சமணர்களில் ஒரு பிரிவினர் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம் என்பார்கள். உங்களுக்கு உங்களில் முதல் நம்பிக்கை வேண்டும்' ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அவன் உள்ளம், அதைக் கேட்டு, அவன் மேல் உள்ள, அவளின் நம்பிக்கையை பாராட்டினாலும், அவன் எனோ தன் முடிவை மாற்றவில்லை. தன் கரங்களை வின்னெங்கும் விரித்து அணைத்தபடி ஆதவன் ஒருபுறம் மறைய.... மறுபுறம் வான் கடலில் மும்முரமாக நீச்சல் பழக வேகமாக வந்துகொண்டிருந்தது நிலவு.... அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக் கிடந்த நட்சத்திரங்கள் பூமிக் காதலனை காதலோடு பார்க்க.....வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் அழகான பொன் அந்தி மாலைப் பொழுது.... அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண்சிமிட்ட.... எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த கட்டிடங்களை தனக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அந்த ஹோட்டலின் நீச்சல் தடகத்துக்கு, அழகான கண்ணைக் கவரும் பகட்டான இறுக்கமான இரண்டு துண்டு நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும் பகுதியை வெளிக் காட்டிய வண்ணம், ஒய்யாரமாக அன்ன நடையில் ஆரணி வந்தாள். அருண் ஏற்கனவே உடை மாற்றி அங்கே நீச்சல் உடையில் [swim suit] இருப்பதைக் கண்ட ஆரணி, அலைகளுக்குள் எழுந்த சந்திர ஒளியைப் பார்த்தது போல் திகைத்து, நீரின் பளிங்குச் சாயலில் ஒளிர்ந்த அவனது உடல்வாகு [உடற்கட்டு], அவளது இதயத்தில் இனிய அலைகளை எழுப்பி, அவளுக்குள் சொல்லமுடியாத ஈர்ப்பைத் தூண்டின. அதேநேரம், ஆரணியின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதில் பதித்துக் கொண்டு, விளக்குகள் அலை அலையாக பாய்ந்து, நீச்சல் தடாக தண்ணீரில், அது நட்சத்திரங்களைப் போல பிரதிபலிப்பதை ரசித்துக் கொண்டு இருந்த அவன், தன் கால்களை நீரில் நனைத்தபடி, ' உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கனும்' என்றான். நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பல பொருத்தமான ஆடைகளால், தமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள் என்பதே உண்மை. அவர்களின் உண்மை அழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் பார்க்கும் பொழுது தான் தெரியும்! ஆரணியோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் உண்மையில் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது. ஆரணி தன் வண்ணமயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வசீகரமான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அதில் அருண் விதிவிலக்கல்ல. அவள் அந்த உடலுடன் ஒட்டிய இரண்டு துண்டு உடையில், பெண்மையின் அழகை முழுமையாக அள்ளி வீசிக் கொண்டு, அவன் அருகில் வந்து, அவன் மேல் சாய்ந்தபடி, விளையாட்டுத்தனமாக தன் கைகளால் நீரை அள்ளி அவன் முகத்தில் தெளித்தபடி, 'நாம் ஸ்விம் [swim] பண்ணலாமா' என்று கேட்டாள். யூனிவர்சிட்டியில் [university] இருந்த காலத்தில் ஸ்விம் [swim] பண்ணியது, இன்று தான் அதன்பின் நீந்தப் போகிறேன் என்றான் அருண், பின், அவள் கைகளை பிடித்தபடி. அவள் ஷாவெரில் [shower] ஏற்கனவே உடலை நனைத்துக் கொண்டு வந்ததால், அவளின் நனைந்த தோற்றத்தை பார்த்த அருண், 'உன் ஸ்ட்ரக்சர் [structure] செம்மையாக இருக்கு .. நல்லா மெயின்டெய்ன் [maintain] பண்ணுறாய்' என்றான். 'உங்களை பார்த்தாலே தெரியுது உங்கள் நீச்சலை .. ஆனா பிராக்டிஸ் [practice] பண்ண மீண்டும் எல்லாம் சரிவரும்' என்றவள், அவன் எதிர்பாராத அந்தக் கணத்தில் அவனை நீரில் தள்ளி விட்டு விட்டு. தானும் குதித்தாள். அப்பொழுது மாலைச் சூரியன் நீச்சல் தடாகத்தில் சிவந்த பொற்கதிர்களைப் பரப்பியிருந்தது. நீருக்குள் அவள் இறங்கிய அந்த நொடியில், பவளமெனத் திகழ்ந்த அவளது சருமம், நீரின் பளிங்குச் சாயலில் மேலும் ஒளிர்ந்தது. அவள் நீந்தத் தொடங்கியவுடன், நீர் அலைகள் அவளது உருவத்தை அணைத்துப் போற்றுவது போல தோன்றியது. ஒவ்வொரு அசைவும் ஒரு இசை, ஒவ்வொரு சிரிப்பும் ஒரு கவிதை. அருகில் நீருக்குள் இருந்த அருணின் கண்கள் தன்னிச்சையாக அவளின் மீது ஈர்க்கப்பட்டன. அவன் நீந்துவதையே கொஞ்சம் மறந்துவிட்டான். “அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல… அழகு, நாணம், இளமை—எல்லாமும் ஒரே வடிவில் கலந்தவள்,” என்று அவன் உள்ளம் தனக்குள் பேசிக் கொண்டது. அவள் நீரிலிருந்து மேலெழும்பும் போது, துளிகள் கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர, அவன் இதயம் அந்த நொடியிலேயே அவளிடம் சிறையானது. அவள் சிரித்தாள்; அந்த சிரிப்பில் ஒரு மலர்ந்த ரோஜாவின் மணமும், ஒரு புதிதாக எழும் காதலின் திகைப்பும் இருந்தது. அருகில் பார்த்துக் கொண்டிருந்த அவனின் மனம் தன்னிச்சையாக அவள் மேல், மேலும் ஈர்க்கப்பட்டது. சிறிது தைரியமாய்ப் பின் பேசத் தொடங்கினான்: “உன்னைப் பார்த்தால் நீருக்கே பொறாமை வருகிறதே… உன்னைச் சுற்றி சுற்றி ஆடி ஆடி விளையாடுகிறது.” என்றான். அவள் சிரித்தாள். தண்ணீரின் துளிகள் அவளது கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர்ந்தன. அவள் சிறிது நாணத்துடன் தண்ணீருக்குள் தன் கைகளை, முகத்தை புதைத்தாள். “நீ நீரிலிருந்து மேலெழும் ஒவ்வொரு தருணமும், என் மனதில் ஒரு அழகு சிற்பம் உருவாகிறது." என்றான். “சிற்பமா? நான் ஒரு சாதாரணப் பெண் தான்…” என்ற சொன்ன அவள், யாரும் அங்கு இல்லாத அந்த வேளையில், திடீரென அவனைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து, மெல்லச் சிரித்தாள். அவளது அந்த சிரிப்போடு சேர்ந்து, அவனது உள்ளங்களிலும் புதிதாய் மலர்ந்த அவனின் காதல், மேலும் மேலும் வேரூன்றிக் கொண்டது. நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்த ஆரணி, கண்ணாடி முன் பக்கவாட்டில் நின்றவாறு தன் முன் அழகையும் பின் அழகையும் ஒரு முறை பார்த்தாள். பின் துவாலை [towel] ஒன்றால் தன்னை போர்த்திக் கொண்டு, உடை மாற்ற புறப்பட்டாள். மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப் பூ ஆடை-அது போர்த்து, கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி, நடந்தாய்; வாழி, ஆரணி ! வண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக் கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக் கொண்டு நடந்தாய், வாழ்க ஆரணி என்று அவன் மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தது. அருண் அங்கிருந்த சாய்வு நாற்காலியில், இன்னும் ஈரத்துடனே, திடகாத்திரமான மேனியுடன், துவாலை ஒன்றாலும் போர்க்காமல், சாய்ந்து இருந்தபடி, ' நான் உன்னை ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைத்தேன்' என்று கிண்டலாகக் கூறினான். 'க்கும்' என பொய்க் கோபத்துடன் முகத்தைக் சுளித்துக் கொண்டாள் ஆரணி. என்றாலும் அவனின் மூங்கில் போன்ற தோள்கள், பரந்த மார்பு, நீண்ட கைகள், முறுக்கேறிய வல்லமை கொன்ட தசைகள். நேர் கொண்ட கூரிய விழிகள். அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், உறுதியைக் காட்டும் உடலமைப்பு கொண்ட கம்பீரமான தோற்றம் அவளை சற்று வியக்க வைத்தது. அவனை கீழிருந்து மேல்வரை திரும்பவும் பார்த்த ஆரணி, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி, ' ரொம்ப சூட இருக்கிங்க போல' என்று சிரித்தபடி, அவனின் தோளை மெல்ல தட்டி விட்டு போனாள். சந்தோசத்தில் அவன் கண்களை விரித்து 'ஓகே ஓகே' என்று கூறியபடி அவளின் பின் தானும் உடை மாற்ற தொடர்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31368158149499423/?
1 week 6 days ago
யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் 18 Sep, 2025 | 12:23 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தவிசாளர் சபையில் தெரிவிக்கையில், போலிகள் மலிந்துவிட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாற்று அடையாளம். அவ்வாறானவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இந்த உயரிய பணியினை மேற்கொள்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ். பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச்சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். இதன்போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜாவின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடம் என சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/225401
1 week 6 days ago
எல்லோருக்கும் நன்றிகள்
1 week 6 days ago
18 Sep, 2025 | 11:47 AM மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நடத்தப்பட்டது. இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 45க்கும் அதிகமானவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/225393
1 week 6 days ago
புலர் அறக்கட்டளையின் வருடாந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 18/09/2025 எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த வருடத்தில்(2024) இருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை நடத்துகின்றோம். 10/10/2025 எமது புலர் அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு நிறைவுநாளில் செய்ய இருந்த நிகழ்வை மழைக்கு முன்பே வழங்கினால் மரக்கன்றுகள் வேரூன்றி வளர உதவியாக இருக்கும் என்ற மரக்கன்று உற்பத்தியாளரான நியூ லங்கா பாம் உரிமையாளர் திரு செல்வராஜா ஐயாவினுடைய ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் வழங்கி இருந்தோம். இன்று வரை எமக்கு தொடர்ச்சியாக உதவி வரும் 134 நன்கொடையாளர்கள் மற்றும் தனியாக(மலசல கூடம் கட்டியது 2024, வீட்டுத்திட்டம் பூரணப்படுத்தல் 2025) பல உதவிகளைச் செய்த நன்கொடையாளர்கள் அத்துடன் CHULIPURAM GREENLAND FOUNDATION, சைவ அறப்பணி நிதியம், I3 SOFTWARE SOLUTIONS (pvt) ltd Colombo, பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள், வட்டுக்கோட்டை அரிமாக்கழகம், CHULIPURAM BOOLOGADEVI TRUST தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இவர்களின் தொடரும் ஆதரவினால் எமது புலர் அறக்கட்டளையானது சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்கள் சிரம் தாழ்த்தி எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இயற்கைப் பண்ணையாளர் திரு சிவசுப்ரமணியம் ரவிசங்கர் அண்ணாவும் அவருடைய பாரியார் திருமதி ரவிசங்கர் இருவரும் எமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருக்கிறார்கள். 24000 ரூபா பெறுமதியான 60 தேசிக்கன்றுகளை வழங்கி உதவியுள்ளார்கள். இருவருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இலவசமாக கடந்த வருடமும்(50 தென்னங்கன்றுகள்) இந்த வருடமும் தென்னங்கன்றுகளை(60 கன்றுகள்) பெற்று தந்த எமது நிர்வாகியும் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள். அத்துடன் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பத்தினர் மற்றும் செயலாளர் திரு மோகனறூபன், திரு இராமலிங்கம், திரு சிறீதரன் ஆகியோருக்கு எமது நன்றிகள். ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
1 week 6 days ago
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்! நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2025/1447695
1 week 6 days ago
'தியாக தீபம்' திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் 18 Sep, 2025 | 11:25 AM "தியாக தீபம்" திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18)அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225388
1 week 6 days ago
அவருடைய வீட்டில் வருடத்தில் 365 நாளும் திரள்நிதி மழை தான் 🤣
Checked
Wed, 10/01/2025 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed