1 week 6 days ago
“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்! Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST] அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம். நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான். https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்… இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார். சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது. #பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்
1 week 6 days ago
எந்த இரு தடவை? 2010 இல் தேசியப்பட்டியல், 2015,20 இல் வெற்றி. 2024 இல் தோல்வி. இதுதான் சுமனின் தேர்தல் வரலாறு. மீண்டும் சொல்கிறேன் சுமன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடும். ஆனால் அரசியல்வாதிகள் மக்காலால் தேர்ந்தெடுக்கபடுவதும் இல்லாமல் போவதும் சகஜம். தந்தை செல்வா கூட காங்கேசந்துறையில் தோற்றார் அல்லவா? அரசியலை விட்டே போனாரா? நீங்கள் சொல்லும் மேற்கில் கூட பல உதாரணக்கள் உள்ளன, உங்கள் பாசத்துக்குரிய டிரம்ப் உட்பட. ஆகவே சுமனுக்கு வந்தால் தக்காளி சோஸ், சீமானுக்கு வந்தால் ரத்தம் என்பது இரெட்டை நிலைப்பாடே. அதைத்தான் அம்பலப்படுத்தினேன்.
1 week 6 days ago
அது இன்று இரவு வந்து நம்ம பதிலை பார்த்து விட்டு ரெம்ப்பர் ஆகிற ஆட்களை பொறுத்து இடம் மாறு படும் இவருக்கெல்லாம் கோவிலில் தேவாலயத்தில் மசூதியில் கொடுத்து அவற்றை அசிங்கபடுத்த கூடாது என்று நினைக்கிறேன் .
1 week 6 days ago
அன்னதானம்.... தேவாலயத்திலா, கோவிலிலா, மசூதியிலா அல்லது புத்த விகாரையிலா கொடுக்க நேர்த்தி வைத்துள்ளீர்கள். 😂
1 week 6 days ago
பெருமாள், வெறுமனே tamilwin.com என குறிப்பிடாது, செய்தி வெளியான பக்கத்தின் இணைப்பைக் குறிப்பிடுங்கள்.
1 week 6 days ago
இந்தப் பாடலுக்கு நடனமாடுபவர்கள், எம்.என்.நம்பியாரும், புஸ்பலதாவும். கட்டிலில் படுத்திருந்து எழுந்து ஓடுபவர்தான் ராஜசுலோசனா. ராஜசுலோசனா நல்ல நடிகை மட்டுமல்ல சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர். திருமால் பெருமை படத்தில், “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…” பாடலுக்கு பத்மினியுடன் சேர்ந்து அழகாக ஆடியிருப்பார். குலேபகாவலியில் வரும், “ பாசமும் நேசமும் இரத்த..” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. நல்லவன் வால்வான் படத்தில் “குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குது..” பாடலில் எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கிணற்றடியில் போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது
1 week 6 days ago
யேர்மனியின் இன்றைய பொருளாதாரம் வலுவானதுதான். உற்பத்தியும் ஏற்றுமதியும் உறுதியாகத்தான் இருக்கின்றன. யேர்மனியின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்மையாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றது. முக்கிய உற்பத்தித்துறைகள் என்று பார்த்தால், இயந்திரங்கள், வாகனங்கள் (மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎன்டபிள்யூ, பொல்க்ஸ்வாகன்), இரசாயனப் பொருட்கள், அத்துடன் மின்னணு சாதனங்கள் என பல துறைகள் இருக்கின்றன. இப்பொழுதும் யேர்மனிய உற்பத்திப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு இருக்கின்றது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, சுத்தமான ஆற்றல் கூடிய பசுமைத் தொழில்நுட்பங்களிலும் யேர்மனி இப்பொழுது முக்கிய முதலீடுகளை செய்து கொண்டிருக்கிறது. யேர்மனியின் இப்பொழுது இருக்கும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் சில முக்கிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலை இன்னும் இருப்பதாகவே கருதுகிறேன். யேர்மனியில் மட்டுமல்ல உலகமெங்குமே மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துத்தான் இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், பென்சனுக்கு வழங்கப்படும் தொகை பெரிதாகிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் பென்சன் வயதை உயர்த்தும் திட்டங்கள் இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் யேர்மனிக்கு வந்த பொழுது பென்சன் வயது 60. ஆனாலும், வேண்டுமானால் 58 வயதில் பென்சன் எடுக்க அப்பொழுது வழி இருந்தது.ஆனால் எனக்கு பென்சன் எடுக்க அனுமதிக்கப்பட்ட பொழுது எனது வயது 66 வருடங்களும் 8 மாதங்களும் இருந்தது. இப்பொழுது பென்சன் எடுப்பதாயின் வயதெல்லை 67 வருடங்கள் அல்லது 45 வருடங்கள் கண்டிப்பாக வேலை செய்திருக்க வேண்டும். யேர்மனி உலகில் முன்னணி கார் உற்பத்தி நாடாக இருந்தாலும், அண்மையில் எலக்ட்ரிக் வாகன மாற்றம் மற்றும் சீனாவின் போட்டி காரணமாக பாரம்பரிய கார் நிறுவனங்கள் உற்பத்தி வீழ்ச்சியை சந்திக்கின்றன என்பது உண்மைதான். வேலைவாய்ப்பு இல்லாமல் மூன்று மில்லியனுக்கு மேலாக மக்கள் இருந்தாலும், இது பெரும்பாலும் வேலைக்கான குறைந்த தகுதியுடையோர் மற்றும் குடியுரிமை பெற்ற வெளிநாட்டில் இருந்து வந்து குடியிருப்பவர்களிடையே அதிகமாகக்காணப்படுகிறது. உயர் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு இன்றும் ஆட்கள் தேவை அதிகமாகவே இருக்கின்றது. யேர்மனியில் மிகப் பெரிய சவாலாக இருப்பது இதுவே, மருத்துவம், தொழில்நுட்பம், ஹோட்டல்/சமையல், கட்டிட வேலை போன்ற துறைகளிலும் ஆட்கள் குறைவாக உள்ளனர். இதனை சரி செய்ய, வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை வரவழைக்கும் புதிய குடியேற்றக் கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்திய ரஸ்யாவின் நடவடிக்கைகள், யேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.பெருமளவு தொகையை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்க வேண்டிய தேவை யேர்மனி ஏற்படிருக்கின்றது. அதாவது, நாட்டின் உள்நாட்டுத் தேவைகளுக்கும் மேலான ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய தேவை. அத்தோடு, உக்ரைன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அளிக்கப்படும் பெரும் தொகை, உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிக்கான செலவுகள் என பெரும் தொகையை யேர்மனி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களூடாக யேர்மனி, மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆகவேதான் அகதிகளுக்கு புகழிடம் தந்து பாதுகாக்கிறது. அகதிகளுக்கு உதவுவது என்பது அவர்களின் பெரும்பாலான மனதையும், உண்மை உணர்ந்த அவர்களின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. யேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் (1951) ஜெனிவா உடன்படிக்கைகளில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.இந்த உடன்படிக்கை என்பது அகதிகளை அவதிப்படுத்துவதைத் தடுப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பு, வாழும் இடத்தை வழங்குவது, அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் வாழ்வாதாரத்தைக் கவனித்துக் கொள்வது போன்றவற்றுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச சட்டமாகும். யேர்மனி, சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.இன்று கோவில்களைக் கட்டுவது, வீதிகளை இடை மறித்து கடவுளை தேரில் வைத்து இழுப்பதுமான செயற்பாடுகள், தெருவெல்லாம் தேங்காய் உடைத்து காவடி எடுத்து ஆடுவது, டோர்ட்மன்ட் போன்ற நகரங்களில் தெருவிழாக்கள் செய்வதும் நான் மேற் குறிப்பிட்ட நல்லிணக்கமும், சுதந்திரம், சமத்துவமும்தான் காரணம். பொதுவாக, அரசியல் தஞ்சம் என்பதை தள்ளி வைத்து இட்டு மனிதாபிமான செயற்பாடுகளாலேயே எங்களில் பலருக்கு யேர்மனியில் வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சில வருடங்களாக வெளிநாட்டவர்களால் ஏற்படும் வன்முறைகளால்தான் AFD போன்ற வலதுசாரிகள் கட்சி வளர்ந்து வருகிறதே தவிர, பொருளாதார வீழ்ச்சி அதன் வளர்ச்சிக்குக் காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாம் உலகக் போரின் பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா நாடுகள் தங்கள் படைகளை நிறுத்தி அழுத்தம் கொடுத்த பொழுதும், யேர்மனி பொருளாதார வளர்ச்சியில் உச்சம் கண்ட நாடு மட்டுமல்ல, உள்கட்டமைப்பையும் திறமையாக அமைத்திருந்தது. இன்று யேர்மனி காணும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சீர் செய்யப்படும். நம்பிக்கையிருக்கிறது. YouTube இன் மூலம் சம்பாதிக்கலாம் என்று அவனவன் சொல்வதெல்லாம் தாங்கள் பணம் பார்ப்பதற்கேயன்றி வேறொன்றுமில்லை. ‘தமிழ் பொக்கிசம் சொல்லும் தகவல்களை இந்தியர்கள்கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இப்பொழுது நான்கு இந்தியத் தமிழர்கள் புதிதாக வீடு வாங்கிக் குடியேறியிருக்கிறார்கள்’
1 week 6 days ago
உலகில் இருந்து சுமத்திரனுக்கு நிரந்தர ஓய்வு என்றால் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் கொடுப்பதாய் வேண்டுதல் உள்ளது .😀
1 week 6 days ago
பயணத்தில் வந்த இரண்டு கதைகளுமே சிறப்பு. நீங்கள் மண் குவியல் பற்றிக் குறிப்பிட்ட பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது, வல்லிபுரக் கோவில் மண் குவியல்தான். அன்று ஏழு பெரிய மண்குவியல்களைத் தாண்டித்தான் கோவிலில் இருந்து கடற்கரைக்கு (கடல் தீர்த்தம்) போக முடியும். இப்பொழுது அங்கே அவை இருக்காது. கள்ள மணல் அள்ளி மணல் மலையையே அழித்திருப்பார்கள். இப்பொழுது இங்கே என்ன நடக்கப் போகிறதோ?
1 week 6 days ago
இந்தப் பிக்குமார்... இனி இல்லை என்ற காவாலி, கழிசடைகள். முன்னைய அரசாங்கங்களிலும் இவர்கள் போதை வஸ்து பாவிக்கின்ற ஆட்கள்தான். ஆனால்... அவர்களை கைது செய்யாமல் சீராட்டி வைத்துக் கொண்டு இருந்தவர்கள். இப்போ... இவர்களை பாதுகாக்க எவரும் இல்லை. போதை வஸ்து பாவித்த பழக்கம், அவர்களை மீள விடுகுதில்லை. அதனால் கையும் களவுமாக அம்பிட்டு, கைது செய்யப்படுகின்றார்கள்.
1 week 6 days ago
தேரர்கள் என்றால் ...குருக்கள் ... விட்டால் குற்றமில்லை என்றமாதிரி ...உடனை பிணை...இதுக்கிள்ளை மண்மீட்பரான அரசாம் .. ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! இப்ப அரசாங்கம் பிக்குமாருக்கு....காசு கொடுக்கிறதில்லையோ...அல்லது எல்லாரையும் சொந்தமாக தொழில் செய்ய விட்டிட்டினமோ
1 week 6 days ago
எல்லாம் ரெடியாத்தான் இருக்கு.. கண்டு பிடிச்சிட்டியள்.... சத்தியமாச் சொல்லுறன் ...இந்தக் கதையில் எங்கை சொருகிறது என்பது தெரியவில்லை..மண்கும்பியை தேடிப்பாப்பம் ரசோசார்...கதை நல்லாத்தான் ..போகுது ...வாழ்த்துக்கள்.. தொடருங்கள்
1 week 6 days ago
சுமந்திரனுக்கு... தமிழ்மக்கள் ஏற்கெனவே வேண்டாம் போ... என்று, ஓய்வு கொடுத்துத் தானே.... இருக்கின்றார்கள். 😂 இனி என்ன, ஓய்வாக இருக்கும்.
1 week 6 days ago
அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் Dr Rajitha SenaratneNamal RajapaksaRanil WickremesingheVijitha HerathWedding 2 hours ago தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், பிரபல அரசியல்வாதிகள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பொதுவான நிகழ்வு ஒன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசும்பொருளாக மாறியுள்ளது. பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு பெரடைஸ் இன் பொல்கொட ஹோட்டலில் நடைபெற்றது. ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள் இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத், பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜெயசூரியா, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மகர், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆஷு மாரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒன்றுகூடலின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அரசியல் நிலைமை அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது. சமகால அநுர அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் போது பல்வேறு ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும், அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சருடன் மிகவும் சுமூகமான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தமை குறித்து பலரின் அவதானமும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்ப பார்க்கப் போனால்....உந்த கைது பிணையெல்லாம் ....கல்லுக்குத்தி விளையாட்டுப் போலதான்..கிடக்கு
1 week 6 days ago
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள். அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும். அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும்.அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும்.யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள குடியமர்த்தினோம். தேசிய ஒருமைப்பாடு சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி.எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும். அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே நோக்கமாகும். அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும். அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல. ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல. அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும். உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
1 week 6 days ago
செம்மணி மனிதபுதைக்குழி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மண்டைதீவு மனிதபுதைக்குழி விவகாரமும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. 1990களில் மண்டைதீவு பகுதியில் மிகப்பெரிய பேரவலம் அரங்கேறியுள்ளது. 50ற்கும் மேற்பட்பட்டோர் புதைக்கபட்ட மண்டைதீவு செம்பாட்டு தோட்டம் கிழக்கு தெருவில் அமைந்திருக்ககூடிய ஒரு கிணற்றின் ஊடாகத்தான் பல செய்திகள் வெளிவர காத்திருக்கின்றன. யாழ்.தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவானது 1990களின் பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் இருண்ட சாட்சியமாக மாறியுள்ளது. போர்ச்சூழல் காரணமாக மண்டைதீவு விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் அடிக்கடி கைமாறியுள்ளது. மண்டைதீவு பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோக கதைகளில் ஒன்றாக உள்ளது. https://tamilwin.com/a
1 week 6 days ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார். அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த முகநூல் பதிவில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது. நிரந்தர அரசியல் ஓய்வு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை. தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச, பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும். ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது. அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் - என குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/
1 week 6 days ago
மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்டு, பிரதிநிதிகளை தம் சார்பாக தெரிந்தெடுத்து, தமது பிரச்சனைகளை பாராளுமன்றம் எடுத்துச்சென்று தீர்த்து வைப்பதும், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. கட்சி மக்களுக்காவன்றி கட்சிக்காக மக்களல்ல. அப்படியிருக்கும் போது, ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு கணிசமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களின் விருப்பும் அதுவாகத்தான் இருந்தது. மக்களின் விருப்புக்கு, ஆதரவாக செயற்பட்ட உறுப்பினரை, கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி ஒருவர் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்படுபவராக இருந்தால், அவரை மக்கள் தங்கள் பிரதிநிதியாக, கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து, கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், அதுதான் நடந்தது. ஆனால் அதை குறித்த நபர், ஏற்றுக்கொள்ள மறுத்து, தன்னிச்சையாக, கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக கட்சியையும், அதன் பதவிகளையும் கையகப்படுத்தும் போது, மக்கள் அந்தக்கட்சியை நிராகரிக்க வேண்டிய கட்டாயம், தேவை ஏற்படுகிறது. இந்த எதேச்சாதிகார உறுப்பினரின் நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்படும், பழிவாங்கப்படும் உறுப்பினர்களை எங்கிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்பவர்கள், மக்களின் விருப்பு வெறுப்புக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் சேவை தொடரும். கட்சி முக்கியமல்ல, மக்களுக்கான சேவையே முக்கியம். உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றுவது. பின், சவால் விடுவது குற்றம் சுமத்துவது இந்த பிடாரியின் வழக்கம். தமிழரசுக்கட்சி மக்களுக்கான கட்சி. சுமந்திரனின் வீட்டுச்சொத்தல்ல. தமிழரசுக்கட்சியை சுமந்திரன் இறுக்கப்பிடித்தால், மக்கள் வேறொரு கட்சியை உருவாக்க வேண்டிய தேவையை இவரே உருவாக்குகிறார். தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் பாப்போம் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியில் நின்றே வென்று காட்டட்டும், பாப்போம் மக்கள் நாம்! இது மக்கள் அவருக்கு வைக்கும் சவால்!
1 week 6 days ago
தொடருங்கள் . .........! உஸ் ஒரு ரகசியம் . ....... அல்வாயனின் கத்தியெல்லாம் 23ம் புலிக்கேசியில் மனோபாலா செய்து குடுத்த கத்திகள் .......! 😀
1 week 6 days ago
கவலை வேண்டாம் சாத்தான் கீரிமலையில்தான் ஒருவரின் இறுதிப் பூசை நிகழ்ச்சி நடைபெறும்.
Checked
Wed, 10/01/2025 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed