1 week 6 days ago
மரியாதையை என்பது ஒருவரின் காலில் விழுந்து கொடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுந்து நிற்பது, கையெடுத்து வணக்கம் வைப்பது போன்றவைகளும் மரியாதையின் அடையாளம் தானே. ஒருவரின் காலில் விழும் பொழுது எம்மை நாமே தாழ்த்துகிறோம் என்பது என்னுடைய கருத்து. கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி. காணொளி நான் இணைக்கவில்லை. 😀
1 week 6 days ago
மிகுந்த தாக்கமுள்ள (impactful) ஒரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். உங்கள் நேரத்துக்கும் முயற்சிக்கும் மிகுந்த நன்றி. (ஏனோ எனது கண்ணில் இந்த கட்டுரை முன்பு படவில்லை.)
1 week 6 days ago
வாய்ப்பில்லை ராஜா.
1 week 6 days ago
காலில் விழுதல் என்பது தான் தன்னை அடிமையாக உணர்த்துதலின் முதற்படி. இதன் தாக்கம் தான் அதை வைத்தே பின்னர் நடைபெறும் அனைத்து குளறுபடிகளுபடிகளுக்கும் அத்திவாரமாகிவிடுகிறது.
1 week 6 days ago
அவனை திருந்த சொல் நான்.....?? 😂
1 week 6 days ago
யாழில் கடும் மழை.. இடிந்து விழுந்த சங்கிலியனின் மந்திரிமனை; புனரமைக்க விடாமல் தடுத்த தனிநபர்.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணம்.com
1 week 6 days ago
1 week 6 days ago
நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்! உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது. மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. https://athavannews.com/2025/1447577
1 week 6 days ago
போதை வஸ்து பொருட்களுடன் இரண்டு நாட்களில் ஐந்து பிக்கு கைது. இன்னும்.... எத்தனை பிக்குகள் தலைமறைவாக இருக்கிறதோ... அந்தப் புத்தனுக்குத்தான் வெளிச்சம்.
1 week 6 days ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 week 6 days ago
ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றிய 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதான மூன்று சந்தேக நபர்களும் நேற்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1447589
1 week 6 days ago
தொடருங்கள் காத்திருக்கிறோம்.
1 week 6 days ago
தமிழரை அழிக்காமல் வேறு என்ன செய்வார்? ஆயுளை மிகுதியாக வேண்டிக்கொடுங்கள்.
1 week 6 days ago
ஐயோ! வருங்கால ஜனாதிபதி கனவில் மிதந்தவர்களின் கனவு கலைந்ததே.
1 week 6 days ago
அவருக்கு கொழும்பில் மட்டுமா வீடு உண்டு? பொறுத்திருங்கள். விசாரணை என்றவுடன் பதறியடித்துக்கொண்டு குழப்பங்களை உருவாக்கி, ஆட்சியை பிடித்து, தனது உண்மை கோர முகம் வெளியில் வராதபடி செய்து, தான் செய்த கொலைகளையும் அராஜகங்களையும் சாதனையாக காட்டி, இராணுவத்தினரை முன்னிறுத்தி நாட்டின் தியாகியாக மக்களுக்கு உரையாற்றி, தன்னை காத்துக்கொள்வார். அவருக்கு தெரியும், நாட்டின் சட்டம் நீதியை எவ்வாறு வளைத்து, தன்னை மறைத்தேன், தன் சகாக்களை காத்தேன், வேண்டாதவர்களை பழிவாங்கினேன் என்பது. அது எங்கே தனக்கு எதிராக திரும்பி தன்னை தண்டித்து விடுமென அஞ்சுகிறார். அதற்காகவே திருடர்களை வளர்த்து தன்கூடவே வைத்திருக்கிறார். தமிழரை எதிரிகளாக சிங்கள மக்களிடம் திணிக்கிறார். இவற்றையெல்லாம் கடந்து அனுரா சாதிப்பாரானால், மகிந்த பழைய நிலைமைக்கு திரும்புவார். திருடர் கூட்டம் என இவர்களை சந்திரிகா விழித்தது நூறு வீதம் உண்மை. திருடர் கூட்டம் மட்டுமல்ல பொறுக்கிகள் கூட்டம்.
1 week 6 days ago
So yes — Germany’s refugee acceptance wasn’t just voluntary generosity. It came from a mix of external pressure (Allies, UN, EU) and internal moral-political pressure. ஏற்கனவே செவிவழி என்று எழுதியிருந்தேன். ஆனால் நம்பிக்கையானவர் சொன்னதால் இருக்கலாம் என எண்ணினேன். கிட்லர் செய்த கொடுமைகளால் இப்படியும் நடந்திருக்கலாம் என இப்போதும் உள் உணர்வு சொல்கிறது. ஆம் - ஜெர்மனியின் அகதிகள் ஏற்பு வெறும் தன்னார்வ தாராள மனப்பான்மையால் மட்டும் ஏற்படவில்லை. அது வெளிப்புற அழுத்தம் (நேச நாடுகள், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் உள் தார்மீக-அரசியல் அழுத்தத்தின் கலவையிலிருந்து வந்தது. விளக்கத்திற்கு நன்றி வாத்தியார். எனக்கு இன்னமும் குழப்பம் உள்ளது.
1 week 6 days ago
மாதா, பிதா, குரு, தெய்வம். தெய்வத்தின் கால்களில் விழுகின்றோம். அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் உள்ளன. மாதா, பிதா, குரு, மற்றும் இவர்களுக்கு நிகரானவர்கள் கால்களிலும் விழலாம், ஆசீர்வாதம் பெறலாம். இது ஒரு அவமான செய்முறை அல்ல. சிறுவயதிலேயே பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் பழக்கம் இல்லை என்றால் வளர்ந்தபிறகு விழுவது தன்மான, மற்றும் கெளரவ பிரச்சனை ஆகிடலாம்.
1 week 6 days ago
தனக்கு சவாலானவர்களை நீக்குவார், ஒத்தூதுபவர்களை பதவியில் இருத்துவார், இறுதியில் இவரால் நீக்கப்பட யாரும் இருக்கமாட்டார் கட்சியில், இவரை நீக்கவுவும் யாருமிலர். தானாகவே கோப்பு கட்டுகளோடு நீங்குவார். அப்போ; சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சியை வேரோடு நாசம் செய்தவர் என்றே மக்களுக்கு நினைவு வரும்.
1 week 6 days ago
2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)
1 week 6 days ago
Checked
Wed, 10/01/2025 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed