புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
ஏன் ப‌ல‌ வ‌ருட‌த்தை முன்னோக்கி போவான் 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு கிரிக்கேட் அசுர‌ வ‌ள‌ர்ச்சி................ ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ அத்த‌னை நாடுக‌ளும் கிரிக்கேட் விளையாடுகின‌ம்............... டென்மார்க் அணி கிரிக்கேட் உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் 20வ‌ருட‌ம் எடுக்க‌லாம்.............. ஜ‌ரோப்பா கிரிக்கேட் தொட‌ர் ஒன்று வைச்சா ந‌ல்லா இருக்கும் ஆனால் அதுக்கும் கால‌ம் எடுக்கும் முந்தி தொட‌ர்ந்து அதே அணிக‌ள் தான் கிரிக்கேட் விளையாடின‌வை இப்ப‌ ப‌ல‌ சின்ன‌ அணிக‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்துட்டு வ‌ருகின‌ம் கால‌க் கொடுமை என்ன‌ என்றால் ஓமான் நாட்டில் காசை கொட்டி ப‌ல‌ கிரிக்கேட் தொட‌ர் ந‌ட‌த்தினாலும் ஓமான் அணி இதுவ‌ரை கிரிக்கேட்டில் சாதிக்க‌ வில்லை.......................ஓமான் ப‌ண‌க்காற‌ நாடு அந்த‌ நாடு கிரிக்கேட் விளையாட்டை அங்கிக‌றித்து விட்ட‌து...................நாட்டுக்கு பெருமை சேர்ப்ப‌து இனி விளையாட்டு வீர‌ர்க‌ளின் கையில்............... அப்கானிஸ்தானின் வ‌ள‌ர்ச்சி ப‌ல‌ பெரிய‌ நாடுக‌ளை ந‌டுங்க‌ வைக்கும்........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
நான் அதற்கும் மேலே போய் கப்பைத் தூக்கி அதன் மெல் போடுவார்கள் என்று கணித்திருந்தேன். எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இப்பொழுது உலகம் சுருங்கி விட்டது. உதைபந்தாட்டத்திலும் கிரிக்கட்டிலும் குறிப்பிட்ட சில அணிகள் கோலோச்சிய காலம் போய் சிறிய அணிகள் பலத்த சவாலாக இருக்கின்றன. ஒர காலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகளைக் கொடுத்தால்தான் யார் உண்மையான திறைமைசாலிகள் என்பது தெரியவரும்.உதைபந்தாட்டம் ஒரளவுக்குப் பரவாயில்லை ஆனால் கிரிக்கட் இவ்வளவு காலமும் குறிப்பிட்ட அணிகள் மட்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டிருந்தன.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இத்தாலி எதிர் வெஸ்சின்டீஸ் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்................ இல‌ங்கை வீரர்க‌ள் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரா விளையாடின மாதிரி நாளைக்கு சிம்பாவேக்கு எதிரா விளையாடினால் வெற்றி இல‌ங்கைக்கு அப்கானிஸ்தான் எதிர் கன‌டா விளையாட்டும் விறுவிறுப்பாய் இருக்கும்..........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி கோஷான் சே இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே வசீ இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இந்த போட்டி தவிர்த்து இதுவரை நடந்த போட்டிகளில் கடைசியாக வருவதால், இந்த போட்டியில் எனது தெரிவினை முதலில் செய்துவிட்டு அதற்கு எதிர்மைறையான தெரிவினை பதியலாம் என முதலில் நினைத்தேன் ஆனால் எனது சோம்பல் தனம் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் நீங்கள் எனக்கு நேர்மாறாக கலந்து கொள்ளும் போடியிலெல்லாம் மேலேயே வருகிறீர்கள் அதன் சூட்சும்தான் விளங்கவில்லை, இந்த போடிகளுக்கான விடைகளையும் ஏற்கனவே கசியவிட்டார்களோ?🤣(சும்மா நகைசுவைக்கு கூறியது)

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!

அன்பு ௐ

1 week 4 days ago
௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 week 4 days ago
prsSodteonfacu5 7i59tà947iHg09aea4185t:lc19 0rth1g680t001,ml · மெட்ராஸ்கார‌ர்களை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்? கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக. பொருள்: க‌ஸ்மால‌ம், ஒயுங்கா ப‌டி, ப‌ட்ச‌து ப‌ட்சாமாறி ந‌ட்ந்துக்க‌டா, பேமானி. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. பொருள்: டேய், வூட்டுக்கு வந்த‌ விருந்தாளி கைல ந‌ல்லா‌ மூஞ்சி குட்து பேசுடா, இல்ல‌ன்னா ப‌ய‌ அனிச்ச‌ம் பூவ‌ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா . இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. பொருள்: சோமாறி, கொய்யாப் ப‌ய‌த்த‌ கைல‌ வ‌ச்சிக்கினு எவ‌னாவ‌து கொய்யாக்காவ‌ துண்ணுவானாடா? ந‌ல்ல‌ வார்த்தையா நாலு பேசுவியா, அத‌ வுட்டுப்புட்டு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையா பேசிக்கினு கீற‌? காது கொய்யின்னுதுடா, கொய்யால‌. புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் பொருள்: ப‌ன்னாட‌, ஒர்த்த‌ன‌ப் ப‌த்திப் பின்னால‌ போட்டுக் குட்து பொய‌க்க‌ற‌தெல்லாம் ஒரு பொய‌ப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவ‌லாம்டா, ச‌னிய‌ம் புட்ச்ச‌வ‌னே.. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். பொருள்: எவ‌ன் வேணா சும்மா உதார் உட‌லாம் ம‌ச்சி, ..சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப‌ தெரியும் மேட்ட‌ரு, நெஞ்சில‌ கீற‌ ம‌ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க‌......!

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

1 week 4 days ago
இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

1 week 4 days ago
உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இப்பேச்சுக்கள் தோல்வியடையும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் புட்டினுடன் நேரடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டி நேரலாம் என்றே மக்ரோன் கூறியிருக்கிறார். மக்ரோன் இப்படிக் கூறுவதன் காரணம் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் நியாயமானது என்பதற்காகவோ அல்லது அது போரில் வெற்றிபெற்று வருகிறது என்பதற்காகவோ அல்ல. மாறாக நீண்டு செல்லும் இந்த ஆக்கிரமிப்புப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவுகள், உக்ரேனின் தற்காப்பு யுத்தத்திற்காக தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்டுவரும் ஆயுத உதவிகளால் இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம், முடிவின்றித் தொடரும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் எத்தனை வருடங்களுக்கு நீளப்போகிறது எனும் கரிசணை, ஐரோப்பாவின் எல்லைகளை இப்போர் அண்மிக்கும் தறுவாயில் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கான அச்சுருத்தல், ஐரோப்பாவினுள்ளும் இப்போர் விரிவடையும் பட்சத்தில் ஏற்படப்போகும் சிக்கல்கள், அசெளகரியமான சந்தர்ப்பத்தில் தவிர்க்கமுடியாதவாறு நேட்டோவும் இப்போரினுள் இழுத்துவிழப்படலாம் எனும் அச்சம், அணுவாயுதப் பாவனை நோக்கித் தள்ளப்படுதல் அல்லது அதற்கான நகர்வுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதல் எனும் ஆபத்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய நீண்டகால இஸ்த்திரத்தன்மையின்மை, அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள், பணவீக்கத்தினால் ஏற்படப்போகும் அழுத்தம், விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம், சரித்திரத்தில் நீண்டகாலப் போர்கள் பேச்சுக்கள் ஊடாகவே முடிவிற்கோ அல்லது பனிப்பொர் எனும் நிலைமைக்கோ கொண்டுவரப்பட்டிருக்கின்றன எனும் பாடம் ஆகிய எல்லாமுமே சேர்ந்துதான் சில ஐரோப்பிய நாடுகளை ரஸ்ஸியாவுடன் பேசி இப்போரினை முடிவிற்கோ அல்லது குளிர் நிலைக்கோ கொண்டுவரலாம் எனும் நிலைப்பாட்டினை எடுக்க வைத்துள்ளன. . பிரான்ஸும், எஸ்ட்டோனியாவும் புட்டினுடன் பேசலாம் என்று சிந்திக்கும் அதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவையும், பின்லாந்து போன்ற நாடுகளும் பேச்சுக்களை எதிர்க்கின்றன. புட்டினுடனான பேச்சுக்கள் உக்ரேனினை பலவீனப்படுத்தும் என்பதும், ஆக்கிரமிப்பிற்கான பரிசாகவே பேச்சுக்கள் பார்க்கப்பட்டுவிடும் என்பதும் இந்நாடுகளுக்கு இருக்கும் இயல்பான கரிசணை. அதனாலேயே உக்ரேனின் விருப்பின்றி பேச்சுக்கள் நடப்பதை எதிர்க்கும் இந்நாடுகள், உக்ரேனின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் பேச்சுக்கள் அமைவது அவசியம் என்று கூறுகின்றன. இவை இப்படியிருக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக புட்டின் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரில் கிரிமியா தீபகற்பம் அடங்கலாக உக்ரேன் எனும் இறையாண்மையுள்ள நாட்டின் 15 இலிருந்து 20 வீதத்தைத்தான் ரஸ்ஸியா கைப்பற்றியிருக்கிறது. ஆனால் உக்ரேனின் பிரதான நகரங்கள் இன்னமும் உக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதுடன், ரஸ்ஸியாவின் பெரும் எடுப்பிலான ஆக்கிரமிப்பைச் சமாளித்துக்கொண்டே ரஸ்ஸியாவின் உட்பகுதியிலும் ஊடுருவி கடுமையான சேதத்தினை உக்ரேன் ஏற்படுத்தியிருக்கிறது. போரில் வெற்றி அடைந்திருக்கிறது என்று கூறுமளவிற்கு ரஸ்ஸியா எதனையும் சாதிக்கவில்லை. ரஸ்ஸியாவுக்குச் சார்பான பத்தியாளர்களைத் தவிர்த்து, நடுநிலையான ஆய்வாளர்களைக் கேட்டால், ரஸ்ஸியா போரில் இதுவரை வெற்றியடையவில்லை என்றே கூறுகிறார்கள். நேற்று வெளிவந்த நான்கரை வருட ஆக்கிரமிப்புப் போரில் ஏற்பட்ட ரஸ்ஸிய இழப்புக்கள் என்று பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்கிற்குச் சார்பானது என்று பலர் இங்கே குறைகாணலாம் என்ப‌தனால் அதனை இணைப்பதைத் தவிர்க்கிறேன். புட்டின் ரசிகர் மன்றம் கருதுவதுபோல் ரஸ்ஸியாவின் போர் வெற்றியினாலேயே ஐரோப்பா அதனுடன் பேச எத்தனிக்கிறது என்பது கனவு மட்டுமே.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 week 4 days ago
dtSpsrnoeo012la0vfg3i9mer0iah2972tr :360,lg73éf1uu hmmai3ulf · “நீ எந்த கிளாஸ் படிக்கறே?” என்றார் அந்த மனிதர் சிறுவனிடம். “செக்கண்ட் ஸ்டாண்டர்ட். நீங்க?” “நான் படிச்சி முடிச்சிட்டேன்” “எந்த கிளாஸ் வரைக்கும் படிச்சீங்க?” “பி. ஹெச். டி” “அது செக்கண்ட் ஸ்டாண்டார்டை விட ஜாஸ்தியா?” அந்த மனிதர் சிரித்தார். “ஏய்.. அப்படியெல்லாம் கேக்கக் கூடாது” என்று அதட்டினார் பையனின் அப்பா. “இட்ஸ் ஓக்கே. ஈஸி” என்றார் அந்த மனிதர். சென்னையிலிருந்து மதுரை போகிற அந்த பஸ் ஏதோ ஒரு ஹோட்டல் வாசலில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. மணி ராத்திரி இரண்டு. அந்நேரத்திலும் மசால் தோசை, பரோட்டா, சப்பாத்தி என்று ஐட்டங்கள் இருந்தது மாத்திரம் இல்லை, சாப்பிடவும் பயணிகள் இருந்தார்கள். “நீங்க எதுல டாக்டரேட்?” என்றார் சிறுவனின் அப்பா. “ஆட்டமோபைல் எஞ்சிநியரிங்” என்றார் அந்த மனிதர். “ஆட்டமோபைல் எஞ்சிநீரிங்ன்னா என்ன?” என்றான் சிறுவன். “ம்ம்.. அதெல்லாம் உனக்குப் புரியாது” மறுபடி அதட்டினார் அப்பா. “நோ.. நோ.. நோ.. இதான் நாம பண்ற மிஸ்டேக். நெவர் டிஸ்கரேஜ் சில்ரன் வென் தே ஆஸ்க் கொஸ்ஸன்ஸ்” என்றார் பி. எச். டி. தொடர்ந்து, “நாம வந்தோமே பஸ்ஸு, அதுவும் ஒரு ஆட்டமோபைல். அது எப்படி வேலை செய்யுது தெரியுமா?” என்றார் சிறுவனிடம். “ம்ம்ஹூம்” “அதையெல்லாம் படிக்கிறதுதான் நான் படிச்ச கிளாஸ்” “எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லுங்க?” இப்போது அந்தச் சிறுவனை மடியில் அமர்த்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள், டூ ஸ்ட்ரோக், ஃபோர் ஸ்ட்ரோக், ஸ்பார்க் இக்னிஷன், கம்ப்ரஷன் இக்னிஷன், ஸ்பீட், டார்க் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். பையனும் கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியில், “உங்களுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியுமா?” என்று கேட்டான். “ம்ம்ம்” என்றார் சிரிப்புடன். எல்லாரும் சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறினார்கள். டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார், அது ஸ்டார்ட் ஆகவில்லை. டிரைவரும் கண்டக்டரும் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். “விழுப்புரம் டெப்போலேருந்து ஆள் வரணும்ன்னா மூணு அவர் ஆயிரும்” “இப்ப என்ன பண்றது?” “லோக்கல் மெக்கானிக் யாரையாவது கூப்பிடு” “மணி ராத்திரி ரெண்டே கால்” “பின்னே வெய்ட்டுதான் பண்ணணும்” இப்போது சிறுவன் கண்டக்டரிடம் போய், “இந்த அங்கிளுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியும்” என்று சிபாரிசு செய்தான். கண்டக்டர் ஆச்சரியமாய், “சார் நீங்க மெக்கானிக்கா?” என்று கேட்க அவர், “ஐ ஆம் டாக்டர் ஆஃப் ஆட்டமோபைல் எஞ்சிநியரிங்” என்றார். “ஓ.. டாக்டரா.... சாரி சார்” சிறுவனுக்கு ஏமாற்றம். “அங்க்கிள் பஸ் ஏன் ஸ்டார்ட் ஆகல்லைன்னு சொல்லுங்க” என்றான். “சும்மா இரு விக்கி” அதட்டினார் அப்பா. அதற்குள் டிரைவர் ஆட்டோ மெக்கானிக் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அழுக்குப் பையன் ஒருத்தனை அழைத்து வந்து விட்டார். பஸ்ஸின் மூஞ்சியில் இருந்த ஜன்னலைக் கழட்டி வைத்துவிட்டு, “ஸ்டார்ட் பண்ணுங்கண்ணே” என்றான் அந்த அழுக்கு. சின்ன வால்வு மாதிரி இருந்த எதையோ சொடக்கு சொடக்கு சொடக்கு என்று பம்ப் அடித்தான். ம்ம்.. ம்ம்.. ம்ம்.... என்று உறுமி சட்டென்று ஸ்டார்ட் ஆயிற்று. டிரைவரண்ணே இனிமே எங்கியும் வண்டியை ஆஃப் பண்ணாதீங்க” என்றான். டிரைவர் கொடுத்த ஐம்பது ரூபாயை சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான். சிறுவனுக்கு ஆச்சரியம். அந்த அழுக்குப் பையனிடம் போய், “நீயும் பி. எச். டி படிச்சிருக்கியா?” என்றான். “அப்படீன்னா?” என்றான் அழுக்கு புரியாமல். “உனக்கு ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள் எல்லாம் தெரியுமா?” “எனக்கு பெடல் பண்ற சைக்கிள் மட்டும்தான் தெரியும்” “ஸ்பீடுக்கும் டார்க்குக்கும் இருக்கிற ரிலேஷன்?” “எனக்கு ரிலேஷன்ஸ் யாருமில்லை” “பஸ் பத்தி காலேஜ்ல படிச்சியா?” “நா பள்ளிக்கூடமே போனதில்லை கண்ணா” சிறுவன் கொஞ்ச நேரம் யோசித்தான். பிறகு சிரித்துக் கொண்டே ‘புரியுது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டான். பி. எச். டி க்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. “என்ன புரிஞ்சது?” என்று அவனிடம் கேட்டார். “படிச்சவங்களுக்கு நிறைய சம்பளம் வருது. ஆனா அவங்களுக்கு தெரியாத விஷயங்கள் படிக்காதவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா சம்பளம் இல்லை. சம்பளம் படிப்புக்குத்தான். தெரிஞ்சதுக்கோ, தெரியாததுக்கோ இல்லை...!!! படித்துப் பகிர்ந்தது.......!

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

1 week 4 days ago
எம்பி இல்லை ஆனால் லமிக்கு அருகில் சுமன் நிக்கிறார். செயல்(படா) தலைவர் ஓரமாய்😂. பார் சிறி போன கூட்டத்தில் மிக்ஸர் இல்லையா..:: அநியாயம்
Checked
Mon, 03/02/2026 - 05:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed