1 week 6 days ago
இப்படிக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிளேட்டை அப்படியெ எ மாத்திப் போட்டு "சிங்கள தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் காணியைப் பிடிக்குது, சிங்களப் பகுதிகளில் இப்படி செய்வார்களா?" என்று ஒரு "பொங்கல்" வைத்திருப்பீர்களே?
1 week 6 days ago
சுயமரியாதை இயக்கக் கட்டுரையில் "மூத்திரச் சந்தைக்" கொண்டு வந்தவரைக் கேட்க மாட்டீர்களா😂? உண்மை. யாழ்ப்பாணம் மட்டுமல்ல, முறுகண்டியும் கூட அப்படித்தான் என அறிந்தேன். ஆனால், ஐரோப்பாவில் இருப்போருக்கு ஒரு ஐரோப்பிய நாட்டைச் சுட்டிக் காட்டுவது பொருத்தம் என்பதால் பிரான்ஸ் உதாரணமாகியது!
2 weeks ago
இந்த உலகில் ஜேர்மனி ஒரு முக்கிய தொழிற்சாலை நாடு. அது மட்டுமல்லாமல் சமதர்மத்துடன் கூடிய ஒரு முதலாளித்துவ நாடு.இந்த தொழிற்சாலை நாட்டிற்கு எரிசக்தி மிக மிக முக்கியம்.அதற்கு நிலக்கரி மூலம் அந்த சக்தியை தங்குதடையின்றி பெற்றுக்கொண்டார்கள்.அதனுடன் அணுமின்சக்தியும் ஒருங்கிணைய யார் தயவுமின்றி உயர உயர வளர்ந்தார்கள்.made in Germany என்பதற்கு இலக்கணம் வகுத்தார்கள்.இவர்களது தொழில்நுட்பங்களும் இயந்திரவியலும் உலகையே பிரமிக்க வைத்தது. எட்டாத உச்சத்திற்கு சென்றார்கள்.உலக யுத்த அழிவிலிருந்து மீண்டு முன்னேறி ஒரு நிம்மதி பெரு மூச்சு விட ஆரம்பிக்கும் போது புதிதாக முளைத்தது ஒரு புதிய கட்சி. அதுதான் பசுமைக்கட்சி கட்சி.அவர்களது முக்கிய கொள்கை சுற்றம் சுற்றாடல் பசுமையான உலகம். அவர்கள் முதலில் வைத்த ஆப்பு நிலக்கரி சுரங்களுக்கும் அணுமின் நிலையங்களுக்கும் தான்....அங்கே தான் ஜேர்மனியின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சறுக்க ஆரம்பித்தது.அந்த நிலையில் கைகொடுத்தது ரஷ்ய எரிசக்தி. ஒருவிதத்தில் இருந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார்கள்.
2 weeks ago
சுய மரியாதை இயக்கம் .....திராவிடர் கழகம் ....தமிழ் நாடு .... இந்தியா .... பிரான்ஸ் .............. இங்கே ஒரு சொல்நீக்கப்பட்டுள்ளது........ இந்தியா ......தமிழ்நாடு .....திராவிடர் கழகம் .........சுயமரியாதை இயக்கம் நீக்கப்பட்ட சொல்லக் கண்டுபிடித்தால் பதில் கிடைக்கலாம்😂
2 weeks ago
மாலை 5மணிக்கு கட்சி கூட்டம் என்றால் அதிகாலை 5மணிக்கே பஸ்சில் ஏற்றிவிடுவார்களாம். காலக்கடன் மதியக்கடன் மாலைக்கடன்களுக்கு மக்கள் எங்கே செல்வார்கள்? 🤣 அந்த மண்ணில் தானே பிறந்து தவழ்ந்து நடந்து நடமாடி புலம் பெயர்ந்தீர்கள்? என்ன? வசதி வந்தவுடன் மண்ணின் நிலமைகளையும் பழையதையும் மறந்து விட்டீர்களா?உங்களைப்போன்றவர்களினால் தான் அங்குள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்களை திட்டியும் நக்கலும் அடிக்கின்றார்கள்.
2 weeks ago
இந்த கட்டுரைக்கும் பிரான்ஸுக்கும் என்ன சம்பந்தம்??? 🙃
2 weeks ago
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் தங்களது நாட்டிற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள் அதி முதலாவது சட்டம் எந்த ஒரு மனிதனது தனிமனித உரிமையையும் எந்தக்காரணத்திற்காகவும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது. இன. மத. நிற. தோற்றம். மற்றும் அடையாளங்கள் காரணமாக யாரையும் தனிமைப்படுத்தல் ஆகாது அத்துடன் தாங்கள் போர்க்காலங்களில் எப்படியெல்லாம் தஞ்சம் தேடி அலைந்தோமோ அதே போல வேறு யாரும் தஞ்சம் தடி அலையக் கூடாது..... அப்படித் தஞ்சம் தேடி வரும் மக்களுக்கு ஜெர்மனி தன்னாலான சகல உதவிகளையும் அளிக்கவேண்டும் என அகதிகள் சார்பாக ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் தான் பழைய அகதிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது இப்போது அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்துள்ளன
2 weeks ago
சுமந்திரன் ஒரு பெரும் கட்சியில் இணைந்து அதுவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பேரால் போட்டியிட்டு இரு தடவை தோல்வியடைந்தவர். அந்த கட்சிக்கு இன்றும் ஒரு பெரிய மரியாதை இலங்கை அளவில் இருக்கின்றது. சர்வதேச அளவில் இலங்கை இனப்பிரச்சனை என்றால் எல்லோரும் அணுகுவது அக்கட்சி தலைமையில் இருப்பவர்களை மட்டுமே.அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கட்சி முக்கியஸ்தர் தோல்வியடைகின்றார் என்றால் அவர் மீதுள்ள நம்பிக்கை இல்லையென்ற அர்த்தத்தை தவிர வேறொன்றுமில்லை. மற்றவர்கள் பார்வையில் சுமந்திரன் ஒரு தடவை மட்டும் தோல்வியுற்றதாக தெரியலாம். எனது பார்வையில் இரு தடவைகள்.சுமந்திரனின் முதலாவது தோல்வியில் சசிகலா ரவிராஜ் பலிக்கடாவாக்கப்பட்டார்.இரண்டாவது தோல்விக்கு காரணம் மக்கள் இன்னும் நன்றாக தங்களை சுதாகரித்து கொண்டனர். 😂 பெண் சாபமும்/பாவமும் சும்மா விடாது கோஷான் 🤣 மீண்டும் சொல்கிறேன். எனக்கு இரட்டை நிலைப்பாடு எங்கும் எதிலும் இருந்ததில்லை.ஏனென்றால் இந்த உலகில் அரசியல் கொள்கையும் நீதி நியாயங்களும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாதவை. ஒரு இடத்தில் மரண தண்டனை சரியாக தெரியும். இன்னொரு இடத்தில் மரணதண்டனை பிழையாக தெரியும். இதே போல் தான் அரசியல் கொள்கைகளும் என நான் நினைக்கின்றேன். கவனிக்க👉 சீமான் வளர்ந்து வரும் கட்சியை சேர்ந்தவர். அவர் வளர இன்னும் இடமுண்டு. அவரது கொள்கைகளை அடிமட்ட/பாமர மக்கள் புரிந்து கொள்ள கால அவகாசங்கள் நிறைய தேவை.தமிழ்நாட்டு அரசியல் என்பது சினிமா ஆதிக்கம் உள்ள அரசியல்.இரண்டரை மணி நேர சினிமாவில் முதல்வர் ஆவது போல் கனவு இருப்பவர்களுக்கு அது சாத்தியமாகலாம்.ஆனால் சீமான் கட்சி கொள்கை அப்படியல்ல என நினைக்கின்றேன்.எத்தனை தடவைகள் கட்டுப்பணம் இழந்தாலும் ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக வரும் என நான் நினைக்கின்றேன்.
2 weeks ago
ஏன் யாழ்பாணம் பெரிய திறமா? யாழ்பாண தனியார் பஸ் நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன் சென்றேன். கழிவறை மட்டுமல்ல அதை ஒட்டி இருந்த மக்கள் பஸ்ஸிற்கு காத்திருக்கும் இடத்திலேயே நிற்க முடியாத வயித்தைக் குமட்டும் நாற்றம்.
2 weeks ago
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள். செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை. கொழும்பில் வாங்கிய முதல் வீடு ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார். அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார். அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர். அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
2 weeks ago
ADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை! ADHD வகைகள் 1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும். 2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள். 3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை எப்படிக் கண்டறிவது? • கவனம் இல்லாமை • நிலையில்லாத மனது • அதிகப்படியான உடல் இயக்கம் • உடல் சோர்வு மற்றும் படப்படப்பு போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும். எந்த வயதில் இது வெளிப்படும்? பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும். ADD - ADHD ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்: ~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது ~ மறதி ~ நேர மேலாண்மை இல்லாமை ~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது ~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும். ADHD-ஐ சரி செய்ய முடியுமா? இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும். ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா? முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும். அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது. இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா? இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்? நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்." விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக! ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan
2 weeks ago
இதுவே ஒரு சிங்கள அரசன் சம்பந்தப் பட்ட தொல்லியல் பகுதியாக இருந்திருந்தால்... சிங்கள அரசு அந்தத் தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்குமா? மாறாக அவரை அதி உச்ச சட்டத்தை பாவித்து அந்த கட்டிடத்தை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். தமிழ் அரசன் சம்பந்தப் பட்ட கட்டிடம் என்றபடியால்... சிங்கள அரசு எமக்கு "அம்புலிமாமா" கதை எல்லாம் சொல்லிக் கொண்டு உள்ளது. அதை நம்பவும் நம்மில் பலர் இருக்கின்றார்கள். அந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தையும், நிலைமையையும் கருதி அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள். இவர்களை காலம் மன்னிக்காது.
2 weeks ago
2 weeks ago
2 weeks ago
2 weeks ago
கல்யாண வீடு பாவங்கள்
2 weeks ago
2 weeks ago
2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 26 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?' வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும். சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்பது நம்பகமானதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பொற்கைப் பாண்டிய மன்னனைப் [Golden Handed Pandya] பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் (குறிப்பு: மதுரை காண்டம் - கட்டுரை காதை) உள்ளது. இவனுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கை பொருத்தப்பட்டது. என்றாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. “கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான் பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல மன்றலே வாரி மணிவா சலையசைக்கத் தென்றலே ஏன் வந்தாய் செப்பு?” [கம்பர்] ஒருமுறை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் மனைவியுடன் படுத்திருந்தார். இருவரும் உறங்கும் நேரம் வந்ததும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்ட கம்பர் படுக்கையில் இருந்து எழுந்து கதவைத் திறந்தார். அப்பொழுது தென்றல்தான் கதவைத் தட்டியது என்பதை உணர்ந்தார். உடனடியாக 'காற்றுடன் பேசுவது' போல இந்த பாட்டை பாடி,'கொற்கை பாண்டியன் குலசேகரப் பெருமான், ஊரார் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரே தவறுக்காக பொன் கை பாண்டியனாக மாறிய கதை உனக்குத் தெரியுமா?' என்று காற்றிடம் கேட்டார். அவன் மகன் கஜபாகுக்க காமினி [Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கஜபாகுக்க காமினி என்பது இராசவலியில் உள்ள முதலாம் கஜபாகு [Gajabahu I] என்றும், மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் சொல்லப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக, இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறுகிறது. முன்பு குறிப்பிட்டது போல் வசபா ஒரு தமிழனாக இருக்கலாம்? எனவே கஜபாகுக்க காமினியும் தமிழனாக இருக்கலாம்? சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன் ஆகும். பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய மன்னர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததன் அடிப்படையில், இந்த இதிகாசத்தின் காலம் முதன் முதலில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. பின்னர் கஜபாகுவின் காலத்தின் அடிப்படையில், கி.பி. 171 முதல் 193 வரை, அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இலங்கையில் அண்மைக் காலம் வரை நிலவிய பத்தினி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. Part: 26 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did a Chola king capture 12,000 Sri Lankans?' Vasabha’s son Vankanasikatissa ruled after him for three years. There is s story about Vasabha’s uncle and uncle’s daughter in the Mahavamsa. Vankanasikatissa is the Vannesinambapa in the Rajavaliya. The Rajavaliya says that a king of Soli country came with an army and took twelve thousand people to his country. There is a tale in the Rajavaliya about this king, which is very similar to a story in the Ramayana and similar to another story about the Golden Hand Kulasekara Pandiyan in Tamil. However, the other two chronicles did not say anything in this regard. The period from the 3rd century A. D. (201 A. D.) to the 6th century A. D. (501 A. D.) is considered a dark period in the history Tamil Nadu as there is no detail available about this period. It is not trustworthy to believe that there was a Chola king with the capacity to invade Lanka just prior to this period. His son Gajabahukagamani ruled for twenty-two years. Gajabahukagamani is the Gajaba in the Rajavaliya and ruled for twenty-four years, instead of twenty-two in the other two chronicles. As indicated earlier, Vasabha could be a Tamil. Therefore, Gajabahukagamani could also be a Tamil. He is the Gajabahu who went to Tamil Nadu to participate in the Indravill(zz)a on the invitation of the very famous Chera king Cheran Senguttuvan. There was no enmity between the Tamil kings in Tamil Nadu and the Lanka kings. He, the king Gajabahu, brought the Pattini cult to Ceylon, which prevailed in Lanka until very recently. The Dipavamsa and the Mahavamsa have nothing much to say about the king Gajabahukagamani. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 27 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 26 https://www.facebook.com/groups/978753388866632/posts/31353268157655089/?
2 weeks ago
மந்திரிமனையை பாதுகாக்க முடியாமைக்கு தனி நபரே காரணம் என தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு புதன், 17 செப்டம்பர் 2025 03:48 AM யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மந்திரி மனையை பாதுகாக்கவும் , அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அவை எதனையும் செய்ய முடியவில்லை. மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனிநபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாதாகவே மந்திரி மனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மந்திரி மனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் , வடமாகாண ஆளுநர்கள் , மாவட்ட செயலர்கள் , தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் , அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. மந்திரி மனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் , உலக வங்கி என பல்வேறு பட்ட தரப்பினரும், நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 இலட்ச ரூபாயை வழங்கியும் இருந்தார். அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் , காணி உரிமையாளரின் சம்மதம் இல்லாதமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் , அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார். இவ்வாறான நிலையில் மந்திரி மனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால் , அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் , எமது தற்துணிவின் அடிப்படையில் , இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம். அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்களே தவிர , விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்து இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி , இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது. தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரி மனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் , இது வரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடாத்தி வந்தது. அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தினை தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில், மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார் https://jaffnazone.com/news/50592
Checked
Wed, 10/01/2025 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed