1 week 4 days ago
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்! 18 Feb, 2026 | 10:32 AM யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும் ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் "பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார். தீராத கடன் சுமை சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் "இன்னும் வட்டி மீதமுள்ளது" எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். சமூகத்தின் குரல் மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். "என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?" என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா? பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை முன்னெடுக்க முடியும். https://www.virakesari.lk/article/238933
1 week 4 days ago
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இன்னும் சாதிப்போம் என்ற செய்தியுடன் ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து விடைபெற்றது நேபாளம் Published By: Vishnu 18 Feb, 2026 | 03:52 AM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் 7 விக்கெட்களால் நேபாளம் அமோக வெற்றியீட்டியது. 2014இல் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் 2 போட்டிகளில் வெற்றியீட்டிய நேபாளம், ரி20 உலகக் கிண்ண பிரதான முதல் சுற்றில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், நேபாளம் தலைகீழ் வெற்றியை ஈட்டி எதிர்காலத்தில் இதனைவிட சாதிப்போம் என்ற செய்தியை கொடுத்துவிட்டு விடைபெற்றது. நேபாள வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கை சுற்றிவந்து ரசிகர்களுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்து விடைபெற்றனர். சோம்பால் காமியின் துல்லியமான பந்துவீச்சு, திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜ் மன்சே (27), மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 60 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற மைக்கல் ஜோன்ஸ் 2ஆவது விக்கெட்டில் ப்றெண்டன் மெக்முலெனுடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மைக்கல் ஜோன்ஸ் 45 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ப்றெண்டன் மெக்முலென் 25 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். இந்த மூவரை விட அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (10), மார்க் வொட் (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர். பந்துவவீச்சில் சோம்பால் காமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. குஷால் புர்த்தெல் 43 ஓட்டங்களையும் ஆசிப் ஷெய்க் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் 55 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிரந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், மூன்று விக்கெட்கள் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் நேபாளத்தின் ஓட்ட வேகம் குறைந்தது. அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 16 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அனுபவசாலியான திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ, குய்சான் ஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறதிசெய்தனர். திப்பேந்த்ரா சிய் ஆய்ரீ 23 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் குய்சான் ஜா ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்கள் உட்பட 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ. https://www.virakesari.lk/article/238913
1 week 4 days ago
அத தெரண கருத்துப்படங்கள்.
1 week 4 days ago
தென்னாப்பிரிக்கா போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டியில் 4 வீரர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். இதனால் Nortje இன்று விளையாடுகிறார். UAE 38- 1 ( 4.4 ஓவரில்) பாகிஸ்தான் போட்டியிலும் இடையில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள்
1 week 5 days ago
அது எல்லாத்தையும் விட அநுரகுமார திசாநாயக்க அரசுக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்டாயம் செய்வார்கள்.
1 week 5 days ago
பதவிக்காக சசிகலா காலில் தவழ்ந்து தவழ்ந்து விழுந்த இந்திய பழனிசாமி இன்று சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கின்றார். முன்பு காலில் விழாத யாழ்பணத்தவர்கள் இன்று காலில் விழுகின்றனர் 😭
1 week 5 days ago
நீங்க வேற அரை இறுதிக்கு இந்தியாவுடன் தென்னாபிரிக்கா செல்லும் என்று விடை எழுத முதலில் நினைத்து போட்டு கடைசி நிமிடத்தில் அவுஸ்திரேலியா செல்லும் என்று பிழையாக எழுதிவிட்டேன் 😪 இறுதி போட்டிக்கும் இந்தியாவுடன் அவுஸ்திரேலியா செல்லும் என்று எழுதிவிட்டேன் 😀
1 week 5 days ago
என்ன ஒரே ஆறுதல் என்றால், ஒருவரும் ஸிம்பாப்வேவைத் தெரிவு செய்யவில்லை. எல்லோரும் அவுஸ்ரேலியாவைத் தெரிவு செய்திருக்கிறார்கள். அப்ப, எல்லாருக்கும்தான் புள்ளி இழப்பு.
1 week 5 days ago
அதுதானே. அப்ப என்ன. பூசையைப் போட வேண்டியதுதான். நமீபியா ஒரு போட்டி என்றாலும் வெல்லும் என்றே நான் நினைத்திருந்தேன். இதுதான் அந்தப் போட்டியோ. கந்தப்பு ஒரு மார்க்கமாத்தான் நிற்கிறார்.😁
1 week 5 days ago
அடுத்த சுற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று விடை அளித்த போட்டிகளை மழை குழப்பவேண்டும் என்று கும்பிடுங்கோ 😄
1 week 5 days ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 week 5 days ago
நாங்கள் படிக்கும் காலத்தில் சிமார்ட் டிவி,கொம்பூட்டர்,வைட் போர்ட்,குளிர்சாதனபெட்டி,ஏசி,வான் போன்ற்வை இருக்கவில்லை, வகுப்பறைக்கு அரைசுவர்தான் அவசரத்திற்கு பாய்ந்து ஓடலாம் ஆனால் இன்று சும்மா அந்தமாதிரி அரசாங்கம் செய்து கொடுத்திருக்கல்லோ 😂
1 week 5 days ago
தம்பி முறைப்பாட்டாளர்...நீங்கள் உவங்கன்ட போய் முறைப்பாடு செய்வதை விட உந்த புலம் பெயர் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கல்லோ அவையளிட்ட ஒரு விண்ணப்ப கடிதம் போடுங்கோ போட்டி போட்டு கொண்டு செய்து தருவாங்கள் ...அவுஸ்ரேலியா பழைய மாணவ சங்கம் செய்ய முதல் கனடா பழைய மாணவ சங்கம் செய்ய முன் வருவான்... சில சமயம் சங்கங்களில் அங்கத்துவராக இல்லாத ஆட்கள், நாற்பது ஐம்பது வருசத்திற்கு பிறகு விசிட் பண்ணியிருப்பினம் அவையளிட்ட கேளுங்கோ உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...பாடசாலை அதிபருக்கும் கொண்டாட்டம் அதே சமயம் அரசாங்கத்துக்கும் பெயர் கிடைக்கும்...
1 week 5 days ago
1 week 5 days ago
இன்று வட பகுதி பாடசாலைகளில் இது ஒர் நடமுறையாக பின்பற்றப்படுகிறது ...ஒரு காலத்தில் நாங்கள் பள்ளி செல்லும் காலங்களில் இப்படியான நடமுறை இல்லை ஆனால் ஆசிரியருகளுக்கு மரியாதை செலுத்தினோம் அதே மரியாதையை இன்றும் செலுத்துகின்றோம் ...ஆனால் இன்று இந்து மாணவர்கள் அதிகமாக இந்த காலில் விழும் கலாச்சாரத்தின் உள் வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்...
1 week 5 days ago
என்னது ரஷ்யாவிற்கு நிலவெறியா? ஓ மை காட்.....😧 அப்படியானால் சூரிய அஷ்தமனம் இல்லாத உங்கள் பட்டத்து ரோயல் இராச்சியத்தின் நடவடிக்கைகளை என்ன என்பீர்கள்? பிரான்ஸ் எனும் நாட்டில் கூட ஆபிரிக்கா இல்லையென்றால் வீட்டில் விளக்கு எரியாது என்று கூட சொல்கிறார்கள்.பிரான்ஸ் நாட்டின் ஆபிரிக்க சூறையாடல்களை பொது வெளியில் விவாதிக்க தொடங்கி விட்டார்கள். நிலமை கவலைக்கிடம் போல் உள்ளது. அதை விட உங்களிடம் ஒரு கேள்வி? மேலைத்தேயத்திற்கு படையெடுத்து வருபவர்கள்....இங்கே வந்து செயற்படும் செயல்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? உதாரணத்திற்கு... பாலியல் வன்முறைகள்... கத்தி குத்துகள்... பொது மக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை ஏற்றி கொலைகள் செய்தல்.. வேலைகளுக்கு செல்லாமல் அரச பணத்தில் வாழுதல்... இன்னும் பல... உலகில் இருக்கும் ஒவ்வொரு இன மக்களும் தம் தேசியத்துடனும் சுய மரியாதையுடனும் தாம் பிறந்த மண்ணில் யாருக்கும் பங்கமில்லாமல் வாழ வேண்டும். இது தான் என் ஆசை. நாம் எமது மண்ணுக்காக எப்படி போராடுகின்றோமோ..... அதே போல் அவர்களும்....
1 week 5 days ago
இந்த டீல் நல்லாயிருக்குதே................... நமீபியாவிற்காக நான் கும்பிடுகின்றேன்............... ஆப்கானிஸ்தான் போகாத சூப்பர் எட்டுக்கு பாகிஸ்தான் எப்படி போகலாம்.............🤣.
1 week 5 days ago
ஒரு நாட்டில் என்னென்ன பிரச்சனை இருக்கின்றது என்பதை நேரில் பார்த்து அறியும் அளவிற்கா இன்றைய ஐ தொழில்நுட்பம் கொண்ட உலகு இயங்குகின்றது? இன்றைய அரசியல்வாதிகள் மேலைத்தேய ஜாம்பவான்களை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சனைகளை விளக்கும் அளவிற்கு தற்போதைய உலகம் குருட்டு உலகம் இல்லை. அவர்களுக்கு தமிழர் பிரச்சனை நன்கு தெரியும். இருந்தாலும் அவர்கள் போடும் நாடகங்களுக்கு எம்மவர்கள் தாளம் போடுகின்றார்கள். அவ்வளவுதான்.
1 week 5 days ago
நீங்கள்தான் முழித்திருந்து ஜக்கம்மாவை கும்பிட்டுகொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானை இறுதி வரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். நமீபியாவிடம் பாகிஸ்தான் தோற்று விட்டால் சூப்பர் 8 க்கு பாகிஸ்தானுக்கு பதிலாக அமெரிக்கா தெரிவாகிவிடும். பல புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.
1 week 5 days ago
எனக்கு தெரிந்தவரையில் அந்த அளவுக்கு தில் இருக்கின்ற ஆள் @vasee மட்டும் தான்............. இந்த தடவை நான் கொஞ்சமாக வசீயை இமிடேட் செய்வோம் என்று நினைத்தேன்............. முதலுக்கு நட்டமில்லை என்ற அளவில் முடியும் போல...............🤣.
Checked
Mon, 03/02/2026 - 02:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed