1 week 5 days ago
ரம் இன்னமும் 2020 தேர்தலில் நான் தான் வென்றேன். வாக்குகளை பெட்டிகளை மாற்றி ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார். அதோடு நிற்காமல் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜோர்ஜியா மாநிலத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போய்விட்டனர். இனி இதை ஏதாவது சுத்துமாத்து பண்ணி தான் வென்றதாக அறிவிக்க சொல்லுவாரோ தெரியவில்லை.
1 week 5 days ago
இஸ்லாமிய நேட்டோ அமைந்தாலும்… ஆயுதம் வாங்க… வெள்ளைக்காரன், சீனன், ரஷ்யனைத்தான் நம்பி இருக்க வேண்டும். 🥷 🧌 அவங்கள்… முட்டாள் சோனிகளை வைத்தே, கல்லாப் பெட்டியை நிரப்பி விடுவார்கள். 😂 🤣
1 week 5 days ago
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 Feb, 2026 | 06:28 PM அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும். கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும். அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும். இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உட்பட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைகிறது. கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகி 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரே ஒரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருந்தது. இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும். எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார். https://www.virakesari.lk/article/238900
1 week 5 days ago
தளபதி விஜே காங்கிரசை எதிர்பார்த்திருக்கிறார்.
1 week 5 days ago
கருணாநிதி குடும்பம்…. மனைவி, துணைவி, காதலி, சின்னவீடு… என்று மிகப் பிரமாண்டமானது. 😎 அதில் பங்கு கேட்டால்…. தீம்காவிற்கு கெட்ட கோள்வம் வரும். 😂 காங்கிரஸ்…. இருக்கிறதை வைத்து சுய இன்பம் காண வேண்டியதுதான். 🤣
1 week 5 days ago
“கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு கட்சிகள் வர வேண்டும்” - தவாக தலைவர் வேல்முருகன் கோவை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு போராடி வருகிறோம். தேர்தல் அரசியல் என்பது மக்களுக்காக போராடுவது. அதனை எங்கள் கட்சி செய்யும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ் சமூகத்திற்கு பிரதமர் மோடி அரசு எதுவும் செய்யவில்லை. அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், பழனிசாமி தான் முதல்வர் என மத்திய அமைச்சர் அமித்ஷா இதுவரை அறிவிக்க வில்லை. தமிழ்நாட்டில் பாஜக வர வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி என திமுக, அதிமுக இரண்டும் கூறவில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://www.hindutamil.in/news/tamilnadu/velmurugan-says-parties-should-reach-level-of-coalition-government
1 week 5 days ago
அரசியல் ஒரு சாக்கடை. அதுகும்… ஆசிய நாட்டு அரசியல், கள்வர்களின் கூடாரம். 😡
1 week 5 days ago
க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்; விசேட தேவையுடைய மாணவர்கள், கைதிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:16 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 451 463 பேர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். மேலும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு பிரத்தியே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும், 33 பிரதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைகளுக்காக பாடசாலை ஊடாக 382 249 பரீட்சாத்திகளும், தனிப்பட்ட ரீதியில் 69 214 பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். முப்படை மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்நிலையிலுள்ளன. சகல விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சாத்திகளை கேட்டுக் கொள்கின்றோம். கடந்த ஆண்டுகளை விட இம்முறை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நேர அட்டவணை கடந்த ஆண்டுகளை விட வித்தியாசமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. காலையில் 8.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனவே பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 1 மணித்தியாலத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட எவ்வித இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும். இவை இல்லாதவர்கள் தமது இரு புகைப்படங்களை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்தி அதனை தற்காலிய அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். விசேட தேவையுடைய பரீட்சாத்திகளுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, கைதடி நவீல் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை என்பவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள பரீட்சாத்திகளுக்காக வட்டரொக்க சுனீத வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238843
1 week 5 days ago
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம். சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.
1 week 5 days ago
ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி Feb 17, 2026 - 05:18 PM சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார், இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf
1 week 5 days ago
1 week 5 days ago
கிறுக்கல்கள்
1 week 5 days ago
சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
1 week 5 days ago
போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.
1 week 5 days ago
விளையாட்டு கைவிடப் பட்டு இருக்கு.................இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள்....................
1 week 5 days ago
5ஓவர் விளையாட்டு.....................
1 week 5 days ago
6:15 PM is a cut off time for 5 over match!!
1 week 5 days ago
ஓவர்கள் குறைக்கப் படும் போல தெரியுது.................
1 week 5 days ago
இந்த உலக கோப்பையில் மழையால் இந்த விளையாட்டு முதல் தடவை தடை பட்டு இருக்கு.........................
1 week 5 days ago
மழை தொடர்ந்து பெய்வதால் இன்று விளையாட்டு நடக்க வாய்ப்பு மிக குறைவு..............இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பினம்....................... மழை தொடர்ந்து பெய்வதால் இன்று விளையாட்டு நடக்க வாய்ப்பு மிக குறைவு..............இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பினம்.......................
Checked
Mon, 03/02/2026 - 02:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed