2 weeks 1 day ago
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நேற்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது. 1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது. அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர் https://www.samakalam.com/பருத்தித்துறை-துறைமுகம/
2 weeks 1 day ago
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் adminSeptember 16, 2025 உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாக கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/220402/
2 weeks 1 day ago
சங்கரித்த கூட்டணியும் சூத்து மாத்தின தமிழரசும் உருப்படாது கொல் எனும் சொல் ..
2 weeks 1 day ago
கடந்த சில நாட்களாக ரஸ்யா நேட்டோ நாடுகளைச் சோதிப்பதற்காகச் சீண்டிப் பார்த்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 19 ட்ரோன்களை போலந்து மேல் ஏவியிருந்தது. முதலில் ரஸ்யா இதனை மறுத்து பின்னர் தவறுதலாக ஏவப்பட்டதாகத் தெரிவித்தது. இரண்டு நாட்களின் பின்னர் ரூமேனியா மீது ஏவியுள்ளது. ட்ரோன்களைத் தவறுதாலாக ஏவ முடியாது, அதுவும் இத்தனை ட்ரோன்கள். ரஸ்யாவின் இன்றைய பொருளாதாரம் போரை நிறுத்த அனுமதிக்காது. போரை விரிவு படுத்துவதே தற்போது ரஸ்யாவுக்கான முதன்மையான தெரிவு.
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
நிஜமான சோலார் அடுப்பு ........! 👍
2 weeks 1 day ago
கருணா அவரின் பார்வையை, விளக்கத்தையே சொல்லி இருக்க மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. ஆகவே, அதில் மோடன்கள் என்று கருணாவால் குறிக்கப்பட்டது எவர்? (சிலருக்கு நான் சொல்வது சகிக்க முடியாமல் இருக்கலாம். அனால், அது தானே யதார்த்தம்.)
2 weeks 1 day ago
ஐரோப்பிய நாடுகள், நேட்டோ சேர்ந்து ஐரோப்பாவில் மிகப்பெரிய இராணுவ பயிற்சி , ஒத்திகை செய்யும் போது ருஸ்சிய உட்பட மற்றவர்களுக்கு எந்த எச்சரிகையையும் விடுப்பதில் நோக்க இல்லை என்பதே மேட்ற்கு , நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு. அனால், மேற்கு , நேரட்டோவே ருசியா எல்லை நோக்கி நெருங்க முனைகின்றன. அப்போது, எவர் எச்சரிகை அடைய வேண்டும்? எதை எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும்? (இப்போதைய நிலை மேலும் மோசம் ருசியா போன்ற நாடுகளுக்கு) இந்த செய்தி மேற்கின் பூச்சாண்டி பிரச்சாரம்.
2 weeks 1 day ago
ஆனால், ஒருவரே தலைவர். ஒருவரே உறுப்பினர் உள்ள கட்சிகளும் இலங்கைத்தீவில் உள்ளனவாமே. சனநாயகத்தில் இதெல்லாம் இல்லாதவையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 weeks 1 day ago
புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி. புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. லண்டனே ஸ்தம்பித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் நடுவே ஒரு வேடிக்கை காட்சி கமெராவில் சிக்கியது. ஆம், புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்தியவர்களில் சில பிரித்தானியர்கள், சாலையோர இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்று பஜ்ஜி வாங்கி சாப்பிடும் காட்சியை சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள். அத்துடன், பேரணியில் ஈடுபட்ட சிலர், ஆப்கானிஸ்தான் உணவகம் ஒன்றின் முன் வரிசையில் நிற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாக, அவற்றை பார்வையிட்டவர்கள், பிரித்தானியர்களுக்கு, புலம்பெயர்ந்தோர் வேண்டாமாம், ஆனால், அவர்களுடைய சாப்பாடு மட்டும் வேண்டுமாம், என்னும் ரீதியில் கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள்! Lankasri Newsபுலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்...புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக...
2 weeks 1 day ago
அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
2 weeks 1 day ago
கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......! எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
குமாரசாமி அண்ணை... நமது அரசியல்வாதிகள் எல்லோரும். மக்கள் சேவை செய்ய என்று பாராளுமன்றம் போவதெல்லாம் தமது சந்ததிக்கு சொத்து சேர்க்க மட்டுமே. இப்போ இருக்கும் இந்தத் தற்குறி அரசியல்வாதிகளால்... மக்களுக்கோ, இனத்திற்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதுடன், இருக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்து மேலும் சிக்கலாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இந்த இழுத்தடிப்பு நேரத்தில் எதிரியானவன்... பலமடங்கு முன்னேறி எம்மை விழுங்கி விடுவான். அண்மையில்... ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது. சுத்துமாத்து சுமந்திரன்... ஒன்றும் நடவாதமாதிரி அதைப்பற்றி கதைக்கவே இல்லை. அண்மையில் ரணில் கைது செய்யப் பட்ட போது ... விழுந்தடித்து ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதன் மர்மமும்... அந்த செஞ்சோற்று கடன் அன்றி வேறு இல்லை. பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்க முடியாத சுமந்திரனுக்கு, ஊழல் செய்த ரணிலை கைது செய்தவுடன்.. பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதுகள்... எல்லாம், தமிழருக்கு கிடைத்த சாபக்கேடுகள். சிலர் இதற்கு வழக்கம் போல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கலாம். கோடிக்கணக்கில் கள்ளக் காசு வேண்டுகின்றவன் ஆதாரம் எல்லாம் வைத்துக் கொண்டு இதுகளை செய்வான் என்று நம்புகின்றமை.... அடிப்படை அறிவும் இல்லாத விதண்டாவாதக் காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை பலரும் அறிவார்கள். தீய சக்திகளுக்கு வெள்ளையடிக்க வரும் அவர்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை. 😂
2 weeks 1 day ago
16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை. மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது. கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன. இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/225193
2 weeks 1 day ago
16 Sep, 2025 | 08:55 AM (எம்.மனோசித்ரா) தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். இது தொடர்பான தரவுகளையும் நாம் அவ்வப்போது ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை கடந்த சகல அரசாங்கங்களிடம் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம். இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படையுடன் எமது நட்புறவு தொடர்ந்தும் சுமூகமாகப் பேணப்படுகிறது. இது குறித்த புதிய வழிமுறைகளை நாம் அரசாங்கத்திடம் யோசனைகளாக முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய வடக்கு மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலில் முக்கிய விடயமாகப் பேசப்படும். நாமும் அதில் அவதானமாக இருக்கின்றோம். அத்தோடு எமது கடற்பரப்பின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏனைய சட்ட விரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் நூறு சதவீதம் அவை கட்டுப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். இது தொடர்பில் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகமகே தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களை சரியாக சென்றடைந்திருக்கிறது என்று நம்புகின்றோம். கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை. எமது கடற்படை படகுகளை அணுப்பி நாம் இந்த எல்லையிலிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு காண்பிக்கின்றோம். உள்ளக மீனவர்களும் பெருமளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளை விட எமது மீன் பிடிப்படகுகளின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225191
2 weeks 1 day ago
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447340
2 weeks 1 day ago
16 Sep, 2025 | 11:43 AM அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் எனது வாழ் நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது. நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்த போது என்னை பார்வையிட பல மக்கள் ஒன்று திரண்டனர். அரசியல் பலத்தை விட என்னிடம் மக்கள் பலம் உண்டு. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://web.facebook.com/PresidentRajapaksa https://www.virakesari.lk/article/225216
2 weeks 1 day ago
ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி! ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற போதும் ஐரோப்பிய நாடுகள் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. குறிப்பாக போலந்து, லிதுவேனியா போன்ற நாடுகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு குறித்து கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச நிபுணர்கள், இந்த பயிற்சிகள் சாதாரண இராணுவப் பயிற்சி அல்ல எனவும் தங்கள் சக்தியை வெளிப்படுத்தி, ஐரோப்பாவுக்கும் NATO கூட்டமைப்பிற்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447312
2 weeks 1 day ago
பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்! ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கு போட்டியாக, ‘பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு’ என்ற பெயரில், ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’ என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். யுனைட் தி கிங்டம் பேரணியில், நேரலை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார். அப்போது, ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்’ என, உரையாற்றியிருந்தார். இந்நிலையில், எலோன் மஸ்க்கின் இக் கருத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எலோன் மஸ்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ‘வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும் எனவும் அவரது பேச்சு பொருத்தமற்றது எனவும் அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்’ எனவும் கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447302
Checked
Wed, 10/01/2025 - 19:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed