1 week 6 days ago
இலங்கை பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையினை (Condition) சாதகமாக்கி சிறப்பாக பந்து வீசினார்கள், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாக எடுத்து சென்றார்கள், அவுஸ்ரேலியா 1-6 ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டார்கள் 7-14 இல் 5 விக்கெட்டினை கொடுத்திருந்தார்கள் ஆனாலும் 1-6 ஓவர்கள் போலவே இலங்கை அணியினை விட அதிக ஓட்டங்களில் இருந்தார்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் போட்டியினை இலகுவாக முடிக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்க முக்கிய காரணம். இலங்கை அணி சுப்பர் 8 போவதற்கு தமது ஆடுகள சாதகம் ஒரு பங்களிப்பாக இருக்கும் ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் போட்டிகள் நடக்கின்றது. இலங்கை அணி சுப்பர் 8 உடன் வீடு திரும்பும் எனவே கருதுகிறேன்.
1 week 6 days ago
இலங்கை கொச் சனத் ஜயசூரியா ஒரு வருடத்துக்கு முதல் சொன்னவர் 2026 உலக கோப்பை வெல்வதே தங்கட லச்சியம் என்று அது நடக்குமா😍🙏.....................
1 week 6 days ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார். சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!
1 week 6 days ago
இவர்கள் கடற்றொழிலாளர்கள் இல்லை கடற்கொள்ளையர்கள். இவர்கள் செய்வது கடற்றொழில் அல்ல கடற்கொள்ளை. ஒர் இந்திய சார்பு பத்திரிகை இந்தியக் கடற்கொள்ளையை கடற்றொழிலாக எழுதுவதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்!
1 week 6 days ago
செய்திட்டாப் போச்சு. கூகிள் சீற்றில் எனக்குப் பரிச்சயம் இருக்கு. தனி மடலில் கதைக்கலாம்.
1 week 6 days ago
இல்லை அவர் ஒரு படித்த பல்கலை பட்டதாரி என நினைக்கிறேன், நிங்கள் கூறும் படிக்காத ஆள் அது நான் தான். 🤣
1 week 6 days ago
படிக்கல படிக்கல என்று சித்தி செய்கிற ஆள் எல்லோ. 🤣
1 week 6 days ago
🤣............. கோவையில் நடந்த ஆட்டம், பாட்டம் பார்த்தீர்களா........... நான் நேற்று இரவு கொஞ்ச நேரம் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்................ அந்த தாக்கம் தான் இந்த 'புகை' கதை.......... இப்படி போய் அங்கு, அந்த ஆளிடம் மாட்டுப்பட்டிருக்கின்றார்களே................🫣. நம்மளையும் மீறி நடப்பதால் ஞான திருஷ்டி என்பது நல்ல பொருத்தம்.................🤣.
1 week 6 days ago
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை Feb 16, 2026 - 08:03 PM யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlp9v1vy000x356ntpv0ztpa
1 week 6 days ago
வேலை விசாவில் வந்து வேலை செய்து வரி கட்டுவோர் நிலை என்ன மாதிரி அண்ணை?
1 week 6 days ago
கிந்தி கற்பவர்களுக்கு பின்னர் றோவில் வேலையும் எடுத்து கொடுப்பார்களோ?
1 week 6 days ago
இரண்டாவது இனிங்ஸில் மைதான ஈரலிப்பால் பந்து வீசுவதும் கடினம் அதே நேரம் இந்த மெதுவான ஆடுகளத்தில் பந்து ஸ்கிடியாகி மட்டைக்கு இலகுவாக வரும் இலகுவாக அடிக்கலாம், அதனால் முதலில் பந்து வீச முடிவு செய்தார்கள். 181 அவுஸ்ரேலிய இலக்கு ஒரு வெற்றிக்கான இலக்கு! இலங்கை வெல்வது கடினம்.
1 week 6 days ago
இலங்கை அணி வெல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
1 week 6 days ago
Live 30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup PrevNext Australia (19.6/20 ov) 181/9 Sri Lanka Sri Lanka chose to field.Stats view Current RR: 9.05 • Last 5 ov (RR): 30/5 (6.00)
1 week 6 days ago
ஒரு கட்டத்தில் 200க்கு மேல் அடிப்பினம் என நினைத்தேன் 181க்கை மடக்கி போட்டினம்.......................
1 week 6 days ago
ஆரம்பவீரர்கள் நல்லா இருப்பதால் ஸ்மித்துக்கு இடம் இல்லை என்பது லொஜிக்கலாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்த மட்டில் ஸ்மித் ஒரு கிரிகெட் அசுரன். வெட்ட வெட்ட புதிய ஆளாய் உருவாகும் வல்லமை உண்டு. போலராக, கடைநிலை பேட்ஸ்மேனாக வந்து, முதல் நிலை டெஸ்ட் பேட்ஸ்மேனாகி, போலிங் போடுவஐதையே விட்டு விட்டார், டெஸ்ட் மட்டுமே ஆடல்கூடியவர் என சொன்ன போது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். இத்தனைக்கும் பார்க்க வெறுப்புவரும் ஆட்டம். அவரின் T20 அண்மைய form ஐ இதன் தொடர்சியாகவே நான் பார்க்கிறேன். சகல எதிர்பார்ப்புக்களையிம் உடைத்து இதிலும் ஒரு கடைசி காட்டு காட்ட அவரால் முடியும் என நான் நம்புகிறேன். ஆனால் மார்ஷ்சுக்கு உண்மையில் காயம் என்றால் தான் அவர் உள்ளே வரமுடியும் என்பதையும் ஏற்கிறேன்.
1 week 6 days ago
"மூன்று கவிதைகள் / 24" 'ஏறு தழுவல்' ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு வீரம் கொண்ட காளை அடக்கி அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்! வியர்வையில் வீரம் ஒளிரும் போது மண்ணின் மணம் மார்பில் உறையும் தாயின் மரபு இரத்தத்தில் பேசும்! கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம் அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்! உயிரை மதித்து காளையை அணைப்பவன் தமிழன்—வீரத்தின் மனித முகம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா கலந்து பேசி முடிவு எடுக்கலாமா? மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம் மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே? நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை இதயம் சொன்னால் அதுவே போதும்! அன்பு நிலைத்தால் நாள் இனிது புரிதல் இருந்தால் தடைகள் இல்லை! கண்கள் சந்தித்து உள்ளங்கள் இணைந்து காதல் மலர்ந்தால் அதுவே திருமணம் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................................................... “ஆடல் காணீரோ” சிந்துவெளி நாகரிகம் கண்ட இவன் குந்து வைத்து மாடி எழுப்பினான்! வெந்த மண்ணில் வடித்த பாவை விந்தை விளைக்கும் ஆடல் காணீரோ! அணங்கின் கைவழி நயனம் செல்க அழகுக் கண்வழி மனமும் போக அவள் மனம்வழி பாவம் சேர அம்மண சிலையின் கூத்து அறிவீரோ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2039 ["மூன்று கவிதைகள் / 24" https://www.facebook.com/groups/978753388866632/posts/33843158675332679/?
1 week 6 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 106 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் பக்கம் 21 இன் படி, பண்டுவாசுதேவனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்; ஒரு மகன், அபயன் [Abhaya] மற்றும் ஒரு மகள், உமதுசீதா [Umatusita]. (இராசவலியத்தின் பண்டுவாசுதேவன் என்பது தீபவம்சத்தின் பண்டுவாசனுக்கும், மகாவம்சத்தின் பாண்டுவாசுதேவனுக்கும் சமம் / Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) இது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முற்றிலும் மாறுபட்டது. அங்கே, பண்டுவாசனுக்கு [அல்லது பண்டுவாசுதேவனுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர், தீபவம்சத்தின் 10 – 2 முதல் 4 வரை, அதேபோல, மகாவம்சத்தின் 9 - 1 வரை பார்க்கவும். பதினொரு குழந்தைகளின் பெயர்களையும் தீபவம்சம் தந்தாலும், மகாவம்சம் மூத்த மகன் மற்றும் மகளின் பெயர்களை மட்டுமே தருகிறது. முன்பு மன்னன் விஜயன், குவேனிக்கு பொய் வாக்குறுதி அளித்தார் (அவர் சத்தியம் செய்து பொய் சொன்னார் பின் அந்த வாக்குறுதியை மீறினார்), இதன் விளைவாக, மன்னன் பண்டுவாசுதேவன் அதன் விளைவுகளை அனுபவித்து, அதனால், பண்டுவாசுதேவன் ஒரு தொந்தரவான கனவு கண்டான். அது அவனை மிகவும் பாதித்தது. அதனால், அவன் மயக்கமடைந்து எழுந்திருக்க முடியாமல் போய், அதன் பின், மீண்டும் எழுந்து வந்ததாக ஒரு நீண்ட கதை உள்ளது. இந்தக் கதை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்படவில்லை. அவன் சுயநினைவுக்கு வந்து பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு இறந்தான். மற்ற இரண்டு நாளாகமங்களின்படி பண்டுவாசுதேவன் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். பண்டுவாசுதேவனின் சகோதரி தனது தாய் மாமன்களில் ஒருவரின் மகனுடன் ஒன்றாக வாழ்ந்து, பண்டுகாபயன் [Pandukabhaya] என்ற மகனைப் பெற்றெடுத்தார். அவன் தனது ஒன்பது தாய் மாமன்களைக் கொன்று முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது மகனுக்கும், அவன் பண்டுகாபயன் என்றே பெயரிடப்பட்டு, அவன் பின் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் ஒரே ஒரு பண்டுகாபயன் மட்டுமே உள்ளான், மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது மகன் கணதிஸ்ஸ (Ganatissa) நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இந்த கணதீசன் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. அவனது மகன் மூத்ததீசன் [Mutatissa] அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் முன்போலவே, மூத்ததீசன் பதிவு செய்யப்படவில்லை. மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்பட்ட மன்னன் மூத்தசிவன் [king Mutasiva] இராசவலியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளார்; ஏனெனில் அந்தப் பெயர் தெளிவான சைவ தமிழ்ப் பெயராக இருப்பதாலோ என்று எண்ணத் தோன்றுகிறது?. விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படியும் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகள் ஆகும், அதே நேரத்தில் விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், இராசவலியாவில் இருநூற்று தொண்ணூற்று இரண்டு ஆண்டுகள் ஆகும்; ஐம்பத்தாறு ஆண்டுகள் வித்தியாசம். இப்படியானவையே, இந்த நாளாகமங்களின் நம்பகத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பக்கம் 22 இல், முற்காலத்தில் தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் இல்லை; ஆனால் ராவணனின் நகரம் அங்கே நின்றது, அவனது துன்மார்க்கத்தால், அவனது கோட்டை, 25 அரண்மனைகள் மற்றும் 400,000 தெருக்கள் அனைத்தும் கடலால் மூழ்கடிக்கப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரி [காப் கொமரின் / cape comorin] அல்லது குமரி முனை கடலால் சூழப்பட்டது என்ற தமிழர்களின் நீண்டகால உணர்வை இராசவலிய வெளிப்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது [Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past]. தூத்துக்குடி [Thoothukudi அல்லது Tuticorin], குமரி முனையில் இருந்து ராமேஸ்வரம் வரை கடற்கரையோரமாக பாதி தூரத்தில் உள்ளது. மூத்ததீஸ்ஸனின் மகன் தேவநம்பியதீசன் [Devenipetissa, son of Mutatissa], மூத்ததீஸ்ஸன் இறந்தபோது ஆட்சியை ஏற்றான். தேவநம்பியதீசன், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவின் மன்னன் [King Asoka of Jambudvipa] அசோகனின் நண்பன் என்று கூறப்படுகிறது. அசோகன், தேவநம்பியதீசன் மற்றும் நிக்ரோதா [Nigrodha] ஆகியோர் முந்தைய பிறவியில் சகோதரர்கள் என்று கூறுகிறது. மனித வரலாற்றில் முந்தைய பிறவி பற்றிய எதுவும் அபத்தமானது. இராசவலியவின் முந்தைய பிறவி பற்றிய கதை மகாவம்சத்தில் உள்ளதை விட சற்று வித்தியாசமானது. மிஹிந்து (Mihindu / இது மகிந்தாவைக் / Mahinda குறிக்கிறது.) இலங்கைக்கு பறந்து வந்தார். போதி மரக் கிளை தானாகவே துண்டிக்கப்பட்டு, தானாகவே பறந்து இலங்கைக்கு வந்தது. மற்ற இரண்டு நாளாகமங்களில் சங்கமித்தா மூலம் கப்பலில் கொண்டுவரப்பட்டது. தேவநம்பியதீசன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியத்தின்படி மிஹிந்து (மகிந்தா) பதினெட்டு வயதில் புத்த குருவாக பதவியளிக்கப் பட்டார். ஆனால் மற்ற இரண்டு நாளாகமங்களின்படி மகிந்தா இருபது வயதில் புத்த குருவாக தீட்சை அளிக்கப்படடார் . அப்பொழுது சங்கமித்தாவுக்கு பதினெட்டு வயது. எனவே அவள் வயது குறைந்தவள் என்று கருதப்பட்டதால் அவளுக்கு பிக்குணியாக தீட்சை அளிப்பது ஒத்திவைக்கப்பட்டது. Part: 106 / APPENDIX – "Summary of Rajavaliya" As per page 21, Panduvasudeva had two children; a son, Abhaya and a daughter, Umatusita. (Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) This is in sharp contrast with the other two chronicles. Panduvasa had ten sons and one daughter, 10 – 2 to 4, of the Dipavamsa and 9 - 1 of the Mahavamsa. The Dipavamsa gives all the names of the eleven children, but the Mahavamsa gives the names of only the eldest son and the daughter. There is a long story about Panduvasudeva passing into unconsciousness and recovery due to the broken promises to Kuveni by Vijaya. This is story is not found in the other two chronicles. He came to consciousness and later died after the rule of thirty-two years. Panduvasudeva ruled for thirty years as per the other two chronicles. Panduvasudeva’s sister lived with a son of one of her maternal uncles and gave birth to a son, named Pandukabhaya. He killed his nine maternal uncles and ruled for thirty years. His son is also named Pandukabhaya and ruled seventy years. There is only one Pandukabhaya in the other two chronicles, and he ruled for seventy years. His son Ganatissa ruled for forty years. This Ganatissa is not recorded in the other two chronicles. His son Mutatissa reigned for sixty years. Mutatissa is also not recorded in the other two chronicles. The king Mutasiva in the other two chronicles is completely erased in the Rajavalia; must be because the name is a clear Tamil name. The length of reigns from Vijaya to the start of the Devanampiya Tissa is two hundred and thirty six years as per both the Dipavamsa and the Mahavamsa, where as the length of reigns from Vijaya to the start of Devenipetissa is two hundred and ninety two years; a difference of fifty six years. This is the trustworthiness of these chronicles. It is stated in the page 22 that there was no sea between Tuttukudi and Lanka, the city of Ravana was with so many streets, palaces and fortress and all were overwhelmed by the sea because of the wickedness of Ravana. It is interesting to note that the Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past. Tuttukudi is about half way from Cape Comorin to Rameswaram along the coast. This aspect is addressed elsewhere. Devenipetissa, son of Mutatissa, reigned when Mutatissa died. Devenipetissa is claimed to be friend of the King Asoka of Jambudvipa. Asoka, Devenipetissa and Nigrodha were brothers in the previous birth. Anything about previous birth in the human history is absurd. The story about their previous birth is somewhat different from that in the Mahavamsa. Mihindu (Mahinda) came to Lanka by flying. Bo tree branch severed on its own and came to Lanka flying, not by Samghamitta by ship as in the other two chronicles. Devenipetissa ruled for forty years. Mihindu (Mahinda) obtained ordination at eighteen years of age as per the Rajavaliya, but Mahinda’s ordination took place when he was twenty years of age as per the other two chronicles. Samghamitta was eighteen years of age and her ordination was postponed as she was considered underage. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 107 தொடரும் / Will follow துளி/DROP: 2040 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106 https://www.facebook.com/groups/978753388866632/posts/33843210578660822/?
1 week 6 days ago
சிமித் பிக்பாஸ் தொடரில் 6 போடிகளில் ஒரு 100 ஓட்டமும் 2 அரை சதமும் அடித்தார். இந்த 6 போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்டகாராவே விளையாடினார்.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லாமல் முன்பு விளையாடிய போட்டிகளில் ஸ்மித் பெரியதாக சாதிக்கவில்லை. சிமித் சிறந்த டெஸ்ட் போட்டியாளர் என்பதில் மாற்று கருத்தில்லை. 50 ஓவர் உலக கிண்ணப் போட்டிகளில் சிமித் விளையாடி இருக்கிறார். ஆனால் t 20 போட்டிகளில் இவர் அவுஸ்திரேலியா அணியில் பெரிதாக விளையாடியதில்லை. ஐபி எல் உட்பட வெளிநாட்டு போட்டிகளில் அண்மை காலங்களில் இவரை ஏலத்திலும் எடுப்பதில்லை. ஆனால் பாகிஸ்தானின் PSL இல் இவர் இம்முறை விளையாடுகிறார். அவுஸ்திரேலியா அணியில் மிச்சல் மார்ஸ், ஹெட் ஆகிய சிறந்த ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். மிச்சல் மார்ஷல் வேகப்பந்துவீச்சாளர் அத்துடன் சென்ற ஐபிஎல்லில் லக்னோ அணியில் அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்கள் பெற்றவர். இம்முறை பிக்பாஸ் தொடரில் சிமித் 3 போட்டிகளில் திறப்பட விளையாடியதால் அவுஸ்திரேலியா ஊடகங்களும், ஒரு சில முன்னாள் வீரர்களும் சிமித் இந்த உலக கோப்பையையில் விளையாட வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இம்முறை பிக்பாஸில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் நியூசிலாந்தின் Finn Alan. அதற்கு அடுத்து அதிக ஓட்டம் பெற்றவர் டேவிட் warner
1 week 6 days ago
கமரூன் க்ரீனை எதுக்குத்தான் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை! ஹெட்டும் மார்ஸும் நல்ல காட்டு காட்டி விட்டாங்கள்! But (10.4/20 overs) 116/3 !! பரதேசி மெண்டிஸ் ஈஸி ஸ்டம்பிங்க்கை விட்டுவிட்டான்!
Checked
Sun, 03/01/2026 - 23:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed