புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
சிமித் விளையாடுவ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து மூன்று வ‌கை கிரிக்கேட்டிலும் விளையாட‌க் கூடிய‌ திற‌மை சிமித்திட‌ம் இருக்கு...................................

வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!

1 week 6 days ago
நேற்று இக் காணொளி பார்த்தேன் ...... எமது திருத்தலங்கள் மற்றும் வளங்கள் நிறைய சிதிலமடைந்து போய் இருக்கு .........ஆயினும் மக்கள் பல இடர்களுக்கு மத்தியிலும் அங்கு சென்று சிறப்பாக வழிபாடு செய்திருக்கின்றார்கள் ...........எமது சந்ததி இந்தமாதிரி இடங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . .......! படம் எடுத்தவருக்கு நன்றி . ......நன்றாக இருக்கு ........! 🙏

"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி

1 week 6 days ago
"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி 15 February 2026 இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்வாறான அநீதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மன்னார், அடம்பன் பகுதியில் இன்று (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண்கள் முன்வந்து தீவிரமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் அழைப்பு விடுத்தார். வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பாரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது. https://hirunews.lk/tm/446680/racism-and-discrimination-will-no-longer-be-tolerated-prime-minister-takes-action-in-adampan

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
ஓம் க‌ப்ந்துப்பு அண்ணா அவுஸ் மீத‌ம் உள்ள‌ மூன்று விளையாட்டையும் வென்றால் வாய்ப்பு அதிக‌ம் அவுஸ்சின் ப‌ந்து வீச்சுத் தான் சரி இல்லை ம‌ற்ற‌ம் ப‌டி ஒக்கே.............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
இல‌ங்கை வீர‌ர்க‌ள் அவுஸ்ரேலியாவிட‌ம் ச‌ர‌ன் அடைய‌ போகின‌ம்........................அவுஸ்ரேலியா அணி ப‌ந்து வீச்சை ச‌ரி செய்தால் மீத‌ம் உள்ள‌ மூன்று விளையாட்டையும் வெல்லாம்.......................

வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!

1 week 6 days ago
வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்! வடக்கு வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது நேற்று மதியம் 2.00 மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பொலிஸார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlop6dhc0004356ny5ebog49

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
இதுதான் சாம்பியன் அணிக்கும் சாதாரண அணிகளுக்குள்ள வித்தியாசம், அவுஸ்ரேலியா மோசமான அணியாக இருந்தாலும் அவர்கள் இக்கட்டான நிலையிலிருந்து திரும்பி வருவார்கள். இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா பெரியளவில் திரும்புவார்கள், மறுவளமாக என்னதான் இலங்கை அணி திறமை இருந்தாலும் சரியான நேரத்தில் சொதப்புவார்கள். சிம்பாவே இலங்கை போட்டிகள் இன்றைய அவுஸ்ரேலிய இலங்கை போட்டிகள் போல சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!

1 week 6 days ago
“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்! ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம். இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465053
Checked
Sun, 03/01/2026 - 23:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed