புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
இல‌ங்கை ப‌டுதோல்வி அடைய‌ போகின‌ம் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை நினைப்பு ஏதோ உல‌கில் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கிறோம் ஹா ஹா......................ம‌திஷ‌னாவை விட‌ த‌மிழ் பெடிய‌ன் ந‌ல்லா சுழ‌ல் ப‌ந்து போடும் அந்த‌ த‌மிழ் பெடிய‌னை அணியில் சேர்ப்ப‌தில்லை........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
ஏதோ உள்வீட்டு சதி. வழமையா ஏனைய நாடுகள் கேப்டனை முதலில் தேர்வு செய்து அதன் பின் செலெக்டர்ஸ்+கேப்டன் அணியை தேர்வு செய்வார்கள். ஆனால் அவுஸ் இருக்கும் 15 சிறந்த வீரர்களை தேர்ந்து விட்டு அதில் கேப்டனை தேர்வார்கள் என்று சொல்லப்படும். அதே போல் வயசு, succession planning என்றெல்லாம் அதிகம் அலட்டி கொள்வதில்லை. அண்மைய ஆஷஸ் டீம் அனைவரும் 30+. அப்படி இருந்தும் உள்ளூர் T20 யில் விளாசிய ஸ்மித்துக்கு இடம் மறுக்கபடுகிறது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
கொஞ்சம் விட்டிருந்தா யாழ்களத்தில் அத்தனை பேருக்கும் இத்தாலி பாஸ்டா தீத்தி இருக்கும்😂 Australia's Marsh out with 'testicular bleeding' - https://www.bbc.co.uk/sport/cricket/articles/c4gjlgpgny0o மர்மதேசத்தில் பிரச்சனை என்றார்களே😂 என்ன நடந்தாலும் உங்களுக்கு housing ladder இல் ஏற வாய்ப்பில்லை😂

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!

1 week 6 days ago
இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி! இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும் விமானக் கட்டணம், உதவித்தொகை, விடுதி தங்குமிடம் மற்றும் வருடாந்திர புத்தக மானியம் வழங்கப்படும். 19-45 வயதுக்குட்பட்ட (01.04.2026 நிலவரப்படி) மற்றும் தொடக்க/இடைநிலை மட்டத்தில் இந்தி படித்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.hcicolombo.gov.in/section/news/ இல் கிடைக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (இந்திய கலாச்சார மையம்), 16/2, கிரிகோரிஸ் சாலை, கொழும்பு 07 இல் மார்ச் 9, 2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://athavannews.com/2026/1465131

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

1 week 6 days ago
அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465140

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
குக் தானாகவே விலகினார். ஆனால் உலக கோப்பை வென்ற மோர்கன் “ஒருநாள் காலை எழும்பினேன், என்னால் விளையாட முடியாது என மனம் சொல்லியது” என சொல்லி ஓய்வை அறிவித்தது நினைவிருக்கலாம் 😂. அப்படி சொன்னது மனம் அல்ல. செலக்டர்ஸ். அவருக்கு நெதர்லாந்தோடு கடைசி மேட்ச் கொடுத்தார்கள் என நினைக்க்கிறேன். இப்படி ஒரு நிலை வரக்கூடாது என குக், குரல் நல்லா இருக்கும் போதே கச்சேரியை முடித்து கொண்டார்😂. குக் அதன்பின் உள்ளூரில் விளையாடவில்லை. தன் விவசாயத்தை பார்க்க போய்விட்டார் என நினைக்கிறேன். பிபிசி வர்ணனையும். இங்கிலாந்து தட்டு தடுமாறி சூப்பர் 8 க்கு போகிறது😂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
முன்னாள் இங்லாந் க‌ப்ட‌ன் கொக் அவ‌ர் த‌னிச்ச‌யா முடிவெடுக்கும் நிலை இருந்த‌து அவ‌ர் விளையாடின‌ போது.......................இப்போது உள்ளூர் கில‌ப்பில் விளையாடுகிறார் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த‌ பின்..........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
சாம் கரனுக்கு அடி விழுவதால், ஆச்சர், ஓவடன், ரசீட் மிகுதி ஓவர்களை போடக்கூடும். ஆனால் அதிவேக பந்து - ரன் அடிப்பதையும் இலகுவாக்கும். இரெண்டு புதிய பேட்ஸ்மென் களத்தில். அதே உத்வேகத்தில் அடிக்க கஸ்டம் இனி சாம் கரனை நம்பி கொடுத்து அவர் விகெட்டையும் எடுத்து விட்டார்

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

1 week 6 days ago
சுமந்தரனிடம் பல கேள்வி, 1. கட்சியின் தலைவர் தேர்வில் தோற்ற பின் புதிய தலைவரின் செயற்பாட்டுக்கு ஏன் வழக்கு போட்டு தடுத்தீர்கள் ? 2. நீங்க நல்லாட்சி காலத்தில் இறுதி யுத்த காலம் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பேற்று வழிநடாத்திய மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தமை ஏன் ? 3. முப்படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்க நீங்கள் சம்மந்தன் ஐயா காலத்தில் அந்த குழுவில் பங்கு பற்றி ஆதரவளித்தது ஏன் ? 4. எத்தனை தடவை அரசுக்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் நழுவி வெளி நடப்பு செய்தீர்கள், முதுகெலும்பு இருந்தால் எதிர்த்து வாக்களித்திருக்கலாம் ஏன் ? 5. பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக ஏன் உங்களால் வாக்களிக்க முடியவில்லை ? 6. இலங்கை சுதந்திர தினத்தை தமிழர் தேசம் கரிநாளாக பிரகடனம் செய்து போராடிய போது அரசுக்கு ஆதரவாக உங்களின் மனைவியோடு ஆதரவாக ஏன் போனீர்கள் ? 7. இறுதி யுத்த வெற்றி விழா இராணுவம் கொண்டாடிய போது பொப்பி மலர் அணிந்து பாராளுமன்றம் சென்று அரசுக்கு இராணுவத்திற்கு ஆதரவளித்தது ஏன் ? 8. இன்று வரை இராணுவத்தின் ஆதரவோடு அவர்களின் பாதுகாப்பை பெற்று திரிவது ஏன் ? 9. கட்சியில் நீங்களும், சம்மந்தன் ஐயாவும் தான் சிங்க கொடியை ஏற்று நடப்பவர்கள் என்று சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஏன் ? 10. எமது விடுதலைப் போராட்டத்தையும் தலைமையையும் கடுமையாக பொதுவெளியில் விமர்சித்து அறிக்கை விட்டது ஏன் ? 11. எமது மக்கள் கொத்து கொத்தாக இனவழிப்பு செய்த போது இனப்படுகொலைக்கான சாட்சியம் போதாது, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என காலத்தை இழுத்தடித்து போர்குற்ற விசாரணை நீத்து போக அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது எங்ஙனம் ? 12. கடந்த ஐனாதிபதித் தேர்தலில் தமிழினத்திற்கு எந்த விமோசனமும் தரமுடியாத சஜித் பிரேமதாசவிடம் கோடி பணம் பெற்று ஆதரவளித்தது ஏன் ? எத்தனை கோடி பணம் பெற்று யார் யாருக்கு பஙாகிடப்பட்டது என்ற விளக்கத்தை சொல்ல முடியுமா ? 13. JVP கட்சி யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின நிகழ் அனுர குமார திசநாயக்காவோடு சிவப்பு சேட் அணிந்து முன் வரிசையில் கலந்து கொண்டது ஏன் ? 14. இராணுவ மயமாக்கலுக்கு எதிராக மக்கள் போராட்டகளத்தில் பங்கெடுக்காமல் போராடிய மக்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் நாடகம் என ஏளனம் செய்தது ஏன் ? 15. கடந்த காலங்களில் ரணிலோடு சேர்ந்து அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அந்த அரசியல் அமைச்சராக இருந்த விஜயகலா அக்காவோடு விமானப்படையில் கூதூகலமாக பயணித்து இராணுவ அதிகாரிகளோடு உறவாடி ஆதரவளித்து சுகபோகம் அனுபவித்தது எப்படி மீள நினைப்பதில்லையா ? 16. இன்று உங்களுடைய காழ்ப்புணர்சிக்காக கெளரவ சிறீதரன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டினை விட பன் மடங்கு நீங்களும் உங்கள் தரப்பும் 200% இந்த இனத்திற்கு எதிராகவே செய்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும், இந்த விஷயங்களுக்காக ஒரு நீதி விசாரணையை ஏன் உங்களால் செய்ய முடியாதுள்ளது ? கூட்ட அறிக்கைகளை உங்களால் வெளிப்படுத்தலாமே ? படங்கள் காட்டி கதை சொல்வதை விட, அவருடன் போட்டி போடும் தரப்பை விடுத்து... நீதி விசாரணை குழுவை அல்லது கட்சியின் பொது சபையை கூட்டி இந்த பிணக்குகள் ஏன் தீர்க்கப்படாமல் நீடித்து செல்கின்றீர்கள் ? Vaishu Pusparaj

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
இங்லாந் அணிக்கு எப்ப‌ நியுசிலாந் வீர‌ர் கொச்சாய் வ‌ந்தாரோ அப்ப‌வே டெஸ்ட் போட்டியில் இங்லாந் ம‌ண் க‌வ்வ‌ தொட‌ங்கிட்டு டெஸ்ட் போட்டிக்கு நிதான‌ம் தேவை டெஸ்ட் போட்டிய‌ அதிர‌டியா விளையாடினால் தோல்வி தான் மிஞ்சும்.......................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
Live 29th Match, Group C (D/N), Eden Gardens, February 16, 2026, ICC Men's T20 World Cup PrevNext England 202/7 Italy (11/20 ov, T:203) 93/3 Italy need 110 runs in 54 balls.Stats view Current RR: 8.45 • Required RR: 12.22 இந்த மட்சை தோற்றால் பட்லர் மட்டுமில்லை கோச், செலெக்டர்ஸ் எல்லாரும் வீட்டை போவினம்!
Checked
Sun, 03/01/2026 - 23:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed