புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

1 week 6 days ago
ஒரு கருத்து: "காத்தடிக்குது, புயலடிக்குது காரைநகரில ஈ.பி. அடிக்குது"🤣 என்ற சிறுவர் பாடலிற்கு பொருத்தமாக 19/07/86 அன்று யாழ் கடலில் (விதப்பாக எவ்விடத்தில் என்று கூறவில்லை🥱, பெரும்பாலும் காரைநகரென ஊகிக்கின்றேன்) வைத்து சிங்களவரின் இரு சுற்றுக்காவல் படகுகளை அழித்தாகவும் அத்தாக்குதலில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் EPRLFன் சென்னையிலுள்ள அலுவலகத்திலிருந்து பி.பிசிக்கு செய்தி அறிக்கை அனுப்பப்பட்டது, 21/07/1986 அன்று. செய்தி வெளியானதும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் வழமையாக தம்தரப்பிற்கு இழப்புகள் ஏற்படும் போது மக்கள் மீது நடத்தும் தாக்குதல் போன்றவையெதுவும் அப்பரப்பில் 19/07 அன்று சிங்களப்படையால் நடைபெறவில்லை. மேலும் ஈ.பியும் விளக்கமாக தாக்குதல் தொடர்பான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் (18/07 அன்று) இதே போன்றே காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் வந்த சிங்களப் படையினர் மீது தாம் மேற்கொண்ட கணையெக்கி (Mortar) எறிகணைவீச்சில் "ஒரு படகு சேதமானதாகவும், பல கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம்" என்றும் ஊகமான கருத்தில் உதயன் நாளேட்டிற்கு செய்தி அறிக்கையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு பம்பலான தகவல் யாதெனில், இவ்வாறான அடுத்தடுத்த அறிக்கைகள் யாவும் காரைநகர் கடற்படைத்தளத்தின் இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெறுவேயம் (Cannon) பொருத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் அதிநவீன விசைப்படகொன்று அப்போதைய கடற்புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதலில் சிதறியது. இது நடந்தது சூலை 15ம் திகதி விடிசாமம் 3 மணி. தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினர் சுற்றுப்புறமெங்கும் கணையெக்கி கொண்டு எறிகணைவீச்சு மேற்கொண்டனர். புலிகளின் இத்தாக்குதலின் பின்னர் தான் ஈ.பி. அடுத்தடுத்து (சூலை 18 மற்றும் 21இல்) இதுபோன்ற காத்தடித்த செய்திகளை காற்றில் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது போன்ற EPRLF இன் செய்தி அறிக்கைகள் காத்தடிப்பது போன்று உள்ளதால் - நம்ப கடினமாக இருப்பதால் - நான் இணைக்கவில்லை! இருப்பினும் எதிர்கால தலைமுறைகள் பிழையான வரலாற்றை அறியக்கூடாதென்பதால் இதனையும் பதிந்து உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளக்கிச் செல்கிறேன்.

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

1 week 6 days ago
கடற்படை படகு மீது கண்ணிவெடி! தமிழ் ஈழ ராணுவம் தாக்குதல் ஆதாரம்: உதயன் - 24/12/1986 யாழ்ப்பாணம், டிச. 24 காரைநகர் முகாமைச் சேர்ந்த ஆறு கடற்படைச் சிப்பாய்களுடன் வந்த கடற்படைப் படகு ஒன்று தமிழ் ஈழ இராணுவத்தின் பாரிய கண்ணிவெடிக்கு இலக்காகியது. ஊர்காவற்றுறை மேற்கு பருத்தி அடைப்பை நோக்கி வந்த கடற்படைப் படகே இத்தாக்குதலுக்கு இலக்கானது. இதனால் படகு முற்றாகச் சேதம் அடைந்ததாகவும் கடற்படையினர் மரணம் அடைந்தனர் என்றும் தமிழ் ஈழ இராணுவம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரச படையினர் ஷெல், துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தினர். தமது பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் தான் கடற்படையினர் முகாமிற்குத் திரும்பினர் என்று தமிழ் ஈழ இராணுவத்தின் அறிக்கை மேலும் தெரிவித்தது. (உ-எ)

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
உங்களுக்கில்லாமலா செம்பா. வாங்கிறதுதான் வாங்கிறியள் கோல்ட் பிஸ்கெட்டா வாங்குங்கோ😂 இதில சொப்பன சுந்தரி யாருங்கோ😂 ஓமாம்👍

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
அது எப்போவோ முடிவு சேய்யப் பட்ட விடயம். போட்டிகள் தொடங்க முதலே, இலங்கை குழு இரண்டில் Y4 என்ற இடத்தில் இருக்கும் படி பிரிக்கப் பட்டது. எல்லா Y4 இன் போட்டிகள் இலங்கையில். அதே போல், குழு 1ல், இந்தியாவும் X1 என்ற இடத்தில். எல்லா X1 போட்டிகளும் இந்தியாவில். ஒரே வேறுபாடு: பாகிஸ்தானுடனான போட்டிகள் ஒரு அரை இறுதியும் இலங்கையில் நடை பெறும்

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

1 week 6 days ago
கடற்படைப் படகு மீது கடற்கண்ணி தாக்குதல் தமிழ் ஈழ இராணுவம் நடத்தியது ஆதாரம்: உதயன் - 09/12/1986 யாழ்ப்பாணம், டிச. 9 காரைநகர் கடற்படையினர் மீது நேற்று தமிழ் ஈழ இராணுவம் கடற்கண்ணி வெடித்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் கடற்படையினர் ரோந்து சென்ற கடற்படைப் படகு முற்றாக சேதம் அடைந்ததாகவும் சில கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. காரைநகர் கடற்படை முகாமில் இருந்து மூன்று அல்லது நான்கு கூலிப்படையினரோடு ஊறுகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே தமிழீழ இராணுவம் கடற்கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து காரைநகர் முகாமிலிருந்தும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன. இரண்டு ஹெலிகாப்டர்களும் இப்பகுதிக்கு விரைந்து வந்து கடும் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல்களை எதிர்த்து தமிழ் ஈழ இராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவத்தில் பொதுமக்களது வீடுகள் சில சேதமடைந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது. (இ-10)

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

1 week 6 days ago
இத்திரியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுமுன்னர் TEA என்ற ஆங்கில சுருக்கத்தால் அறியப்படும் தமிழ் ஈழ இராணுவம் எனப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத அமைப்பினரால் சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள் மீது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அதனால் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள் தொடர்பிலும் தகவல் சேகரிக்கப்பட்டு பதிவிடப்படும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣. 🤣............. ரஜனி, கமல் எல்லாம் இருக்க 'கரகாட்டக்காரன்' வந்து ஊரெல்லாம் ஓடினது போல.............. படம் முடிய வாழைப்பழக் காமெடி போல காமெடி மட்டும் தான் நினைவில் நிற்கும்.................🤣.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

1 week 6 days ago
"காத்தடிக்குது, புயலடிக்குது, காரைநகரில ஈ .பி . யடிக்குது போற வழியில புலியடிக்குது வாற வழியில டெலோ அடிக்குது கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது!"

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
பிஸ்கெட் செலவு எகிறுமே😂 இலங்கையின் அத்தனை சூப்பர் 8 இம் இலங்கையிலாம். யாழ்கள போட்டியில்… முதல் முறைகாக… திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன… “நாங்களும் வெல்லும்வோம் கிரிகெட் கணிப்பில்” திரைப்படம்… காணத் தவறாதீர்கள்! வாழ்வில் முதல் முறையாக இன்று எனக்கு 3/3. ஈரோமில்லியன் எத்தனையோ மில்லியனாம். ஒரு டிகெட்ட எடுதுள்ளேன். விழுந்தால் பிரைவேட் ஜெட்டில் போய் பைனல் பார்க்கலாம்😂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
என்ன நடக்குது அண்ணா இங்கே.............. நாளைக்கு ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் வென்றால், நான் மெகா மில்லியன், பவர்பால், இப்படி எல்லா லாட்டரி டிக்கெட்டுகளையும் எடுத்துப் பார்க்கலாம் போல...................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
பின் வாங்கில் இருந்த @ரசோதரன் சொல்வளி கேட்டு வாங்கு மாறி இருந்ததால் கூடுதல் புள்ளிகளை எடுத்து முன்னேறுகிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது இதைத் தான்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
சூப்ப‌ர் 8போட்டிக‌ள் சில‌ இல‌ங்கை மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..................நீங்க‌ள் முத‌ல் ப‌திவில் சொன்ன‌து போல் சூப்ப‌ர்8ரில் இல‌ங்கை அணி தான் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்...............விளையாடும் அந்த‌ அன்று நாண‌ய‌ம் வெல்வ‌து வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கும்........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
அவுஸ்ரேலிய அணி ஒரு மோசமான அணியாக உள்ள நிலையில், அவுஸ்ரேலியாவினை வென்றதனை வைத்து அதனை ஒரு Anchoring bias ஆக வைத்து இலங்கை அணி தொடர்பில் பெரியளவிலான எதிர்பார்ப்பு கொள்ளகூடாது, அது பின்னர் இலங்கை இரசிகர்களின் ஏமாற்றத்தில் முடியும், அவுஸ்ரேலிய அணி இந்தியணிக்கோ வேறு எந்த அணிக்கோ சவாலாக இருக்காது, இந்த அவுஸ்ரேலிய அணி வீடு திரும்புவது சகல விதத்திலும் நல்லது.
Checked
Sun, 03/01/2026 - 23:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed