புதிய பதிவுகள்2

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

1 week 4 days ago
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்

1 week 4 days ago
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம் 19 Feb, 2026 | 12:34 PM (எம்.நியூட்டன்) எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (19) ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் https://www.virakesari.lk/article/239038

லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள்

1 week 4 days ago
லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் இச்சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர். கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன. இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். https://hirunews.lk/tm/447444/violent-gangs-targeting-girls-in-london-inhumane-incidents-unfolding

இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்

1 week 4 days ago
இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம் 19 February 2026 இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன. நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். https://hirunews.lk/tm/447403/special-project-to-protect-1000-unrecognized-archaeological-sites-in-sri-lanka

பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!

1 week 4 days ago
பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது. மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlt1xr7z000r356n5kj7ulbh

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இங்கிலாந்து இலங்கை அணியுடன் மோதிய இருதரப்பு ரி 20 மூன்று போட்டிகளிலும் வென்றிருந்தது, அந்த 3 போட்டிகளும் பல்லேகலவிலேயே நடந்திருந்தது, இலங்கை இங்கிலாந்து சுப்பர் 8 போட்டியும் அதே பல்லேகலவிலவிலேயே நடைபெறவுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் சமீரா, ரசீட், பத்திரன தலா 5 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர், மென்டிஸ், பான்டன், பட்லர் அதிக ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இங்கும் எனது இந்திய நண்பர்கள் ஒவ்வொருவரும் பெரிய கிளப்புகளில் விளையாடுவதாக கூறுவார்கள், அவர்கள் கூறும் அணிகளின் பெயர் பிக்பாஸில் விளையாடும் அணியின் பெயரில்; இருக்கும் ஆச்சரியமாக இருக்கும் (அப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது). எமது வீட்டிற்கு ஒரு 500 மீட்டர் தொலைவில் ஒரு பயிற்சி மைதானம் உள்ளது, அந்த வழியாக செல்லும் போது பெரும்பாலும் இந்திய ஆண்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களையும் ஒழுங்கு செய்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 4 days ago
இந்தத் திட்டத்தை… வாய்ப் பேச்சுடன் காலம் கடத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் வேறு அரசாங்கங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில்… தமிழர் பகுதியில் இதனை தொடர்ந்து கட்டி முடிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இலங்கையுடனான ரி 20 போட்டித்தொடரில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், உலக கிண்ண குழுநிலை போட்டியில் இங்கிலாந்து மிகவும் கஸ்ரப்பட்டார்கள் மறுவளமாக இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டது, சுப்பர் 8 இல் இலங்கை வெல்வதற்கு வாய்ப்புள்ளதா?

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

1 week 4 days ago
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்: 'போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி.' செனிகா பிப்ரவரி 17 எழுதியவர் புகழ்பெற்ற பிரஷ்ய ஜெனரலும் இராணுவக் கோட்பாட்டாளருமான கார்ல் வான் கிளாஸ்விட்ஸ், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி" என்று ஒருமுறை பிரபலமாகக் கூறினார். இந்த சக்திவாய்ந்த மேற்கோள், போர் என்பது அரசியலிலிருந்து ஒரு தனி நிறுவனம் அல்ல, மாறாக அதன் நீட்டிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியது, இது இராஜதந்திர மற்றும் அமைதியான நடவடிக்கைகள் விரும்பிய விளைவுகளை அடையத் தவறும் போது பயன்படுத்தப்படுகிறது. நேரடியான விளக்கத்தில், கிளாஸ்விட்ஸ் போர் மற்றும் அரசியலின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்துகிறார், இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவை எடுத்துக்காட்டுகிறார். போர், அதன் அழிவுகரமான தன்மை இருந்தபோதிலும், இறுதியில் நாடுகள் தங்கள் அரசியல் நோக்கங்களைத் தொடர பயன்படுத்தும் ஒரு கருவி என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதால் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், இந்த மேற்கோளை ஆழமாக ஆராய்வது, மோதலின் தன்மை குறித்து புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத தத்துவக் கருத்துகளின் ஒரு பகுதியைத் திறக்கிறது. வரலாறு முழுவதும் தத்துவஞானிகளால் ஆராயப்பட்ட மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய கருத்து அத்தகைய ஒரு கருத்தாகும். இந்த சூழலில், போரை அரசியலின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் உள்ள முரண்பட்ட தூண்டுதல்களின் வெளிப்பாடாகவும் காணலாம். அதிகாரம், ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, இரக்கம், பச்சாதாபம் மற்றும் ஒத்துழைப்புக்கான திறன் ஆகிய அனைத்தும் போருக்கு வழிவகுக்கும் முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்கின்றன. மனித இயல்பின் கண்ணாடி மூலம் போரை பார்ப்பதன் மூலம், நமது நடத்தையில் உள்ளார்ந்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை, தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய தத்துவக் கருத்துடன் கிளாஸ்விட்ஸின் மேற்கோளை ஒப்பிட்டு வேறுபடுத்துவது போரின் தன்மை பற்றிய ஒரு அடுக்கு புரிதலை வெளிப்படுத்துகிறது. கிளாஸ்விட்ச் மோதலின் மூலோபாய மற்றும் அரசியல் பரிமாணங்களில் கவனம் செலுத்துகையில், தத்துவக் கண்ணோட்டம் விவாதத்திற்கு மிகவும் நுணுக்கமான மற்றும் உள்நோக்கக் கூறுகளைச் சேர்க்கிறது. மோதல்களைத் தூண்டுவதில் மனித இயல்பின் பங்கை ஒப்புக்கொள்வதன் மூலம், போர் என்பது அரசியலின் ஒரு கருவி மட்டுமல்ல, தனிநபர்களாகவும் சமூகங்களாகவும் நமது ஆழ்ந்த ஆசைகள் மற்றும் அச்சங்களின் பிரதிபலிப்பாகும் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த சுருக்கமான பார்வை, போரின் தார்மீக, நெறிமுறை மற்றும் இருத்தலியல் தாக்கங்களைக் கருத்தில் கொள்ள நம்மை அழைக்கிறது, போர்க்களத்திலும் அரசியல் அரங்கிலும் நமது செயல்களுக்கு அடித்தளமாக இருக்கும் அடிப்படை நோக்கங்கள் மற்றும் மதிப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது. முடிவில், கார்ல் வான் கிளாஸ்விட்ஸின் மேற்கோள், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி", போருக்கும் அரசியலுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. இருப்பினும், மனித இயல்பின் இரட்டைத்தன்மையின் லென்ஸ் மூலம் பார்க்கும்போது, இந்த மேற்கோள் ஆழமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, மோதல் பற்றிய நமது புரிதலை வடிவமைக்கும் சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ள நம்மை சவால் செய்கிறது. போரின் தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் போரின் ஆழமான தாக்கத்தைப் பற்றி சிந்திக்க உதவும் ஒரு வளமான மற்றும் நுணுக்கமான முன்னோக்கைப் பெறுகிறோம். கிளாஸ்விட்ஸின் வார்த்தைகள் இன்றும் நம்முடன் எதிரொலிக்கின்றன,போர் மற்றும் மனித இயல்பின் நீடித்த உண்மைகளையும் நீடித்த மர்மங்களையும் இடைநிறுத்தி சிந்திக்கத் தூண்டுகிறது. The Socratic MethodKarl Von Clausewitz: 'War is the continuation of politics...War is the continuation of politics by other means. Karl Von Clausewitz, a renowned Prussian general and military theorist, once famously stated, "War is the continuation of politics by other means

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

1 week 4 days ago
இந்தியனுக்கு சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்தக் கூடிய.. பொறுப்பான குணம் அறவே இல்லை. எல்லாவற்றிலும் ஊழல், களவு, ஏமாற்று வேலைகளை செய்வது… அவர்களின் இரத்தத்தில் ஊறிப் போனது. இந்தக் குணங்கள் நிச்சயமாக அரசியல்வாதிகளிடம் இருந்து தொற்றி இருக்க வேண்டும். அது மாறி நல்ல குணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது அறவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில்… வீரர்கள் தங்குவதற்கான வீடுகளில்… தண்ணீர் இணைப்புகள் சரியாக கொடுக்கப் படவில்லை, கட்டிலில் பழைய மெத்தைகளை போட்டு இருந்தார்கள் என்று பல முறைப்பாடுகள். போதாக் குறைக்கு அந்த வீடுகளில் பாம்புகளின் நடமாட்டமும் இருந்ததாம். இந்தியனுக்கு…. சினிமாவையும், கிரிக்கெட்டையும் தவிர உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது… அதற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
இலங்கையில் நடந்த இங்கிலாந்து இலங்கை இடையேயான ரி20 போட்டித்தொடரில் 3:0 என இலங்கை அணியினை வென்றுள்ளது இந்த இங்கிலாந்து அணி, ஆனால் உலக கிண்ண தகுதிப்போட்டியில் அதன் குழுவில் மிகவும் சிரமப்பட்டது, இலங்கை அணி இருந்த குழுவில் உள்ள அணிகளை வென்றதனை வைத்து இலங்கை அணி பலமானது என கருதமுடியாது, இந்த சுப்பர் 8 இல நியுசிலாந்து அணிதான் கொஞ்சம் இலங்கை அணிக்கு குறைவான சவாலான அணி. நியுசிலாந்து சுழலும் சுழலுக்கான துடுப்பாட்டமும் குறைவானது என கருதுகிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
அப்படியெல்லாம் கேட்கக்கூடாது! அவர் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்றுதான் கேட்கவேண்டும். இவரைவிட Fakhar Zaman நல்ல அதிரடி ஆட்டக்காரர்!!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
ஒவ்வொருவருக்கும் மூன்றே மூன்று போட்டிகள். இலங்கை சிறப்பாக விளையாடும். துடுப்பாட்டம் ஆகட்டும் பந்து வீச்சு ஆகட்டும், ஒன்றாக திரண்டு வருது. இலங்கைக்கு முதற் போட்டி பாக்கிஸ்தானுடன்.

மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

1 week 4 days ago
காத்தான்குடி முதல் கல்லடி வரை வெள்ளக்காடு Feb 19, 2026 - 11:17 AM கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன், இன்று (19) காலை முதல் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாக 'அத தெரண' செய்தியாளர்கள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக காத்தான்குடி, பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளாந்த நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண மக்கள் வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல சிறுவர் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. https://adaderanatamil.lk/news/cmlt0n9v8000q356nldabywht

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

1 week 4 days ago
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது. இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன. இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன. நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/239013

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

1 week 4 days ago
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் டெல்லி உச்சிமாநாடு! Feb 19, 2026 - 09:07 AM செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகைப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு பலமான சக்தியாக மாறி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மனித குலத்தின் நன்மைக்காக AI-ஐப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact Summit 2026' புதுடெல்லியில் நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மாநாடு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. "People, Planet, Progress" – கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் “People, Planet, Progress” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, AI மூலம் பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. விசேடமாக வளரும் நாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தின் அணுகலை விரிவுபடுத்துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெறுகின்றன. இம்மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜென்சன் ஹுவாங் போன்ற தலைவர்கள் பிரதான உரைகளை நிகழ்த்தினர். மேலும் அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள் எனப் பெருமளவானோரும் இதில் இணைந்துள்ளனர். மாநாட்டுக்கு இணையாக AI Expo, Hackathon போட்டிகள், ஆராய்ச்சி மாநாடு மற்றும் கொள்கை உரையாடல் தொடர்களும் நடைபெற்று வருவதுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் பங்கேற்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'AI Impact Summit 2026' இல் கலந்துகொள்வதற்காக நேற்று (18) புதுடெல்லியைச் சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று (19) மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது பல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இணைந்துள்ளனர். உலகளாவிய கொள்கைகள் மற்றும் பொறுப்புகள் AI இன் தாக்கம் எல்லையற்றது என்பதால், அதனைப் பொறுப்புடனும் நியாயமாகவும் பயன்படுத்துவது குறித்த சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், G20 AI கொள்கைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) போன்ற செயற்திட்டங்கள், AI இற்கான பொறுப்பான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்த அனைத்து முயற்சிகளும் AI என்பது ஒரு நாட்டுக்கு மாத்திரம் சொந்தமான தொழில்நுட்பம் அல்ல, மாறாக முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. AI – ஒரு வாய்ப்பா? ஆபத்தா? AI மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிதிச் சேவைகள் மற்றும் அரச நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு "விரைவான முன்னேற்றத்தை" அடைவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. பன்மொழி மற்றும் பல்லூடக திறன்கள் ஊடாக, இதற்கு முன்னர் அணுகலைப் பெறாத மக்கள் கூட்டங்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்த முடியும். எனினும், அந்த வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தரவுச் சார்புநிலை, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் சக்தி நுகர்வு போன்ற ஆபத்துகளும் உள்ளன. எனவே AI தொடர்பான பதில் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் அளவிடக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நோக்கி நகர்வது அத்தியாவசியமானதாகும். 'AI Impact Summit 2026' அந்த உரையாடலை உலகளாவிய மட்டத்திற்குக் கொண்டு சென்று, செயற்கை நுண்ணறிவு ஊடாக எதிர்கால உலகைக் கட்டியெழுப்பும் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தளமாக முன்னோக்கி வருகிறது. https://adaderanatamil.lk/news/cmlswpp2r000m356n0ga6ovvg

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 4 days ago
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:46 AM மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் எனவும், இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை தொடர்பாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பான பல்வேறு கருத்தாடல்களை பகிர்ந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொண்டார். இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ் கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த சாலக்கா என். சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் ரி. அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/239012
Checked
Mon, 03/02/2026 - 08:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed