புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இல‌ங்கை க‌ப்ட‌னை அணியில் இருந்து நீக்க‌னும்..............இங்லாந் தொட‌ரில் சுத‌ப்ப‌ல் உல‌க‌ கோப்பை தொட‌ரில் சுத‌ப்ப‌ல்............. இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் வெய்யிலை காண‌ வில்லை சில‌து அத‌னால் பிச்சில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு இருக்குமோ தெரியாது இல‌ங்கை அணியில் இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் டுனித் வில்ல‌ஹ‌ல‌ ந‌ல்லா சுழ‌ட்டி போட‌க் கூடிய‌வ‌ர் இன்று அவ‌ரால் ஒரு விக்கேட் தான் எடுக்க‌ முடிந்து....................... பெடிய‌ன் க‌ட‌சி நேர‌ம் வ‌ந்து ம‌ட்டையால் அடிச்சு 178ர‌ன்ஸ்ச‌ உய‌ர்த்தி விட்ட‌து...................

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி

1 week 3 days ago
எங்கு போய் எதை கதைக்கிறார்கள்,இவர்கள் யார்? இவர்களை நியமித்தது யார்? முன்னைய ஜனாதிபதிகள் செய்த தவறுகளை இவர்களிடம் போய் ஏன் தெரிவிக்கவில்லை? இவர்கள் மகா நாயக்கர்களா அரசாங்கத்தை கட்டுப்படுத்துபவர்களா, மத போதனை செய்பவர்களா அரசியல் செய்பவர்களா? இவர்கள் அரசியல் செய்வதென்றால் விகாரைகளை இழுத்து மூடுங்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நேபால் ம‌ற்றும் க‌ன‌டா ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் வென்று இருந்தால் புள்ளி ப‌ட்டிய‌லில் நான் முன்நிலையில் தொட‌ர்ந்து நின்று இருப்பேன்...................நேபால் இத்தாலியிட‌ம் ப‌டு தோல்வி க‌ன‌டா ஐக்கிய அமீரகம் அணிய‌ வெல்ல‌ வேண்டிய‌ மைச்சை க‌ட‌சி 4ஓவ‌ரில் சுத‌ப்பின‌தால் தோல்வி............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
ப‌ழைய‌ நினைவுக‌ள்..............அந்த‌ கோயில் நிக‌ழ்ச்சி என‌க்கு மிக‌வும் பிடிக்கும்....................எங்க‌ட‌ ஊர் கோயில்லை போன‌ வ‌ருட‌ம் இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌து அண்ணா🙏....................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம். 'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள். இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள். யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
சிம்பாவே கோப்பை வெல்ல‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு முன்னைய‌ ச‌ம்பிய‌ன் அணி இர‌ண்டுக்கும் ந‌ல்ல‌ சாத்து சாத்தி விட்டின‌ம் ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் ஹா ஹா ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி😍😍😍😍😍😍😍..............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நாளையான் விளையாட்டு முடிந்த‌ பின் தான் சூப்ப‌ர்8 போட்டி விறுவிறுப்பாக‌ இருக்கும் ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டிக‌ளில் சின்ன‌ அணிக‌ளில் சிம்பாவே ம‌ற்றும் அமெரிக்கா அணி தான் ந‌ல்லா விளையாடின‌வை.................ம‌ற்ற‌ அணிக‌ளின் விளையாட்டு எதிர் பார்த்த‌ மாதிரி விளையாட‌ வில்லை சின்ன‌ அணிக‌ள் தானே சில‌ கால‌ம் எடுக்கும் பெரிய‌ அணிக‌ளுக்கு தொல்லை கொடுக்க‌.................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம் என்னைய குண்டைதூக்கிப் போடுறியள் ... நாளைக்கே என் பதவி இறக்கநாளை வைத்திடலாமா....கிருபன் ஜீ இவ்வளவு நாளும் முதல்வராக வைத்திருந்ததிற்கு நன்றி

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இல‌ங்கை க‌ப்ட‌னை உண்மையில் அணியில் இருந்து நீக்க‌னும்..............அவ‌ர் விளையாடின‌ 4விளையாட்டில் பெரிசா சாதிக்க‌ வில்லை சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌தெஷ‌னா இவ‌ர் இல‌ங்கை அணிக்கு விளையாட‌ வ‌ந்த‌ போது ந‌ல்லா ப‌ந்து போட்டார் இப்போது இவ‌ரின் ப‌ந்து சுழ‌ல் ப‌ந்து ச‌ரி இல்லை அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார் விக்கேட் பெரிதா எடுப்ப‌தில்லை....................இவ‌ருக்கு சிறு ஓய்வு கொடுத்தால் ப‌ழைய‌ ப‌டி ந‌ல்லா விளையாடுவார்............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசியிருந்தனர், இலங்கை அணி புத்திசாதுரியமாக இறுதி ஓவர்களை சுழல் பந்து வீச்சிற்கு பயன்படுத்தினார்கள், அது ஒரு துணிச்சலான சிறப்பான முடிவாக கருதுகிறேன். இலங்கை அணி கடினமான புதிய பந்தில் நல்ல சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தார்கள் 1-6 ஓவர்கள் விக்கெட் இழப்பில்லாமல் 60 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தார்கள் (55 ஓட்டம் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என கருதியிருந்தேன்). சிம்பாவே 1-6 ஓவர்களுக்கு 55 ஓட்டங்களை விக்கட் இழப்பின்றி எடுத்திருந்தது. இலங்கை அணியில் துடுப்பாட்ட மத்திய வரிசை ஆடுகளத்தின் போக்கினை பந்து மாற்றத்திற்கேற்ப உள்வாங்க சிரமப்பட்டாலும் சிறப்பாக செயற்பட்டார்கள், இந்த போட்டியில் தோல்வியினடிப்படையில் இலங்கை அணியினை பார்க்கவில்லை மாறாக அதன் ஏதுவான நிலைக்கு சிறப்பாகவே செயற்பட்டதாக கருதுகிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அமெரிக்கா அணிக்கு சூப்ப‌ர்8க்கு போகும் வாய்ப்பு கிடைச்சு இருந்தால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அமெரிக்கா வீர‌ர் தான் அதிக‌ விக்கேட் எடுத்து இருப்பார் ஏராள‌ன் அண்ணா இவ‌ரின் ப‌ந்து வீச்சு பாராட்ட‌ த‌க்க‌து 4விளையாட்டில் விளையாடி 13விக்கேட்😍..........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நாளை வெள்ளி 20 பெப் பிரித்தானிய நேரப்படி ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெல்லுவதை பல்லேகலவில் மழை வந்து தடுக்குமா?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!

றோசா முள்ளா? மலரா??

1 week 3 days ago
றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏
Checked
Mon, 03/02/2026 - 11:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed