1 week 3 days ago
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது. கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmft987bi00k8o29n5d59slsa
1 week 3 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 21 செப்டெம்பர் 2025, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன. இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். "தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு." என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். மேலும் "மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்." என்கிறார் அவர் "அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன். "தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன். எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார். "ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு." என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். "காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்." என்கிறார் அவர். மேலும் "கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்" என எச்சரிக்கிறார் அவர். ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன. இதுகுறித்து பேசுகையில், "தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது." எனக் கூறுகிறார். "பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்." எனக் கூறும் அவர், "ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு." என்றார். "ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன். தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். "தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c701xr3wllxo
1 week 3 days ago
ஆசியக் கிண்ண ரி20 – சூப்பர் 4 சுற்றின் தொடக்கப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 11:58 PM ஆசிய கிண்ண கிரிக்கெட் ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் முதலில் பந்துவீச தேர்வு செய்தார், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. தாசுன் ஷனகா 37 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் எடுத்தார், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பாதும் நிஸ்ஸங்கா 22 ஓட்டங்களும் எடுத்தார். அதன்படி, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில்தான் 06 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கைத் துரத்த முடிந்தது. சைஃப் ஹசன் 66 ஓட்டங்களும், லிண்டன் தாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர், முதல் கட்டத்திலேயே பங்களாதேஷ் அணி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ட்ரோஹிட் ஹீத்ரோவும் 58 ஓட்டங்கள் எடுத்தார். அதன்படி, பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் தனது வெற்றி இலக்கை எட்டியது. https://www.virakesari.lk/article/225616
1 week 3 days ago
ஆம், இப்படி நேட்டோவும் செய்வது, ஆனல் அடு ருசியா வான் பறப்பு கட்டுப்பாட்டுக்கு அண்மையில் இருப்பதால், எந்த மேற்கு ஊடகங்களும் ருசியா அறிவிப்பதை சொல்வது இல்லை. மேட்ற்கு, நேட்டோ, us எல்லாமே தங்களுக்கு வரும் போது தான் ஆபத்து என்று அங்கலாய்ப்பது. இதுவரையில் மேட்ற்கு, நேட்டோ, us இதை செய்து வந்தது அனால் மற்றவர்கள் பார்த்து கொண் இருந்தார்கள், இப்போது மற்றவர்களின் இருப்பு பாதுகாப்புக்கு மேட்ற்கு, நேட்டோ, us சவால் விடுவதை பார்த்து கொன்டு இருக்க மாட்றவர்கள் தயார் இல்லை. அண்மையில், அமெரிக்க ராஜாங்க அமைச்சரை அருகில் வைத்து கொன்டு, இஸ்ரேல் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது, எந்தவொரு மேற்கு ஊடகத்திலும் வரவில்லை. பின்லாந்து வளைகுடாவில் சர்வதேச வான் பரப்பு இருக்கிறது என்றே நினைக்கிறன். இந்த பால்டிக் நடுகல் ருசியா மீது வெறுப்பு கொண்டவை - அது eu வெளியுறவு கொள்கையை வழிநடத்துகிறது. அனால் நேட்டோ, மேற்கு மற்றவவர்களுக்கு போதிப்பது, ஒருவரை இன்னொருவர் வெறுக்க கூடாது என்று. அனால், இஸ்ரேல், பலஸ்தீனியரை வெறுப்பது, பால்டிக் நடுகல் ருசியா மீது வெறுப்பு மேட்ற்கு, நேட்டோ, us எல்லாவற்றுக்கும் இனிமையான அனுபவம்.
1 week 3 days ago
கண்ணோடு கண் நோக்கின் வாய்ச்சொல் என்ன பயனும் இல ........! 😂
1 week 3 days ago
நாங்கள்… தமன்னாவை பார்க்க, பனை மரத்தில் ஏறினோம். அவர்கள்… விஜயை பார்க்க, வேப்பமரத்தில் ஏறுகின்றார்கள். 😂
1 week 3 days ago
Cricket For India · eotSnorpds20g83c0l65ht41agahg3h01ffluluu2al06271imf98g l8u19 · Cricket Queens 🏏"
1 week 3 days ago
1 week 3 days ago
ஜெ - தமிழ் நாட்டு முதல்வர்களிலேயே “அதிசயம்” என்றால் அது ஜெ தான். அண்ணாவிற்கு பின் நாவலரை தள்ளிவிட்டு கருணாநிதி வந்ததை விட, எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் முதல்வரானதை விட… அவர் சாகும் போது, எம் ஜி ஆரால் கட்டம் கட்டப்பட்டு அரசியல் அநாதையாக கிடந்த ஜெ கட்சியை கைப்பற்றி எதிர் கட்சி தலைவி ஆனதும், 91 இல் முதல்வரானதும் பெரியதொரு அதிசயம் (miracle). ஏன் ஜானகி ஒதுங்கி போனார்? ஜெயின் மக்கள் ஆதரவு. அரசியலில் மிக சொற்ப அனுபவமே இருந்த ஜெ யை வெல்ல வைத்த ஒரே சக்தி அவருக்கு தானாக கூடிய மக்கள் கூட்டமும் அது வாக்காக மாறியதும் மட்டுமே. “கருணாநிதி ஒரு தீய சக்தி”, “ஊழல் குடும்ப ஆட்சி”, “சொன்னர்களே செய்தார்களா”, “நான் கேட்கிறேன் நீங்கள் செய்வீர்களா” - விஜையின் வியூகம் பல இடங்களில் எம்ஜிஆரை விட ஜெயை பின்பற்றுவதாகவே எனக்கு படுகிறது. எம்ஜிஆரை விட ஜெ யுடந்தான் விஜையின் அரசியல் வரவை ஒப்பிடுவது பொருத்தமானது என்பது என் பார்வை. அவருக்கு கூட்டம் வாக்காக மாறியது. இவருக்கு?
1 week 3 days ago
போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளுக்கு இனி வேலை இருக்காது போலத் தெரிகிறது. இவ்வளவு நாளும் என்ன வேலை பார்த்தார்கள் என்று கேட்டுத் தொலைக்க வேண்டாம். சுமன், கஜன், சிறி, வைத்தியர் எல்லாரும்தான். ஒரு பிரயோஜனமும் இல்லையே? அநுர செய்கிற விடயங்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், எதிர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. கட்சியில் இருந்து விலக்குகிறவர்கள் விலக்கி, நீக்குபவர்கள் நீக்கி, மீதியாய் இருப்பவர்கள் தாமும் எப்போது கடையை மூடுகிறோம் என்று ஒரு முடிவிற்கு வருவதற்குள், அநுர மீண்டும் ஒருமுறை வென்றிருப்பார். சீமான், அவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பேசுவதைக் கேட்கலாம். அதற்கப்பால் எதுவுமில்லை என்னைப்பொறுத்தவரை. தமிழ்நாட்டு மக்களுக்கு அவரை ஆட்சியில் ஏற்ற இதுவரை மனம் வரவில்லை. அது அவர்களுக்குத்தான் தெரியும். எமது பிரச்சினையில்லை.
1 week 3 days ago
வாக்காள பெருமக்கள் மரங்களில் ஏறி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
1 week 3 days ago
நீங்கள் தமிழ் நாட்டவர் போலவே ஆகிவிட்ட ஒருவர் கட்டாயம் இந்த வித்தியாசம் உணர்திருப்பீர்கள். பொதுவாக, ஒருவன்-ஒருத்தி கான்செப்டுக்கு ஈழத்தமிழர் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழக தமிழர் கொடுப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு. அடிதட்டு, மத்திய, மேல் தட்டு என ஆண்கள் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் இருப்பது அங்கே அப்படி ஒன்றும் அரிதான செயல் அல்ல (ஈழ, புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிடும் போது). ஆனால் அதே இடத்தில் ஒரு பெண் கண்ணை கசக்கினால், சம்பந்தபட்ட ஆணுக்கு அன்று ஆரம்பிக்கும் ஏழரை. அது செபஸ்டியன் சைமனாக இருந்தால் என்னா மாதம்பட்டி ரங்கராஜாக இருந்தால் என்ன. திரிஷா அல்லது சங்கீதா பொதுவெளியில் வந்து புகார் சொல்லாதவரை விஜை ஓக்கே. நான் அறிந்த மட்டில் அப்படி இருவரும் விஜை மீதான வெறுப்பில் இல்லை என்பதே. ஆனால் இதை எப்படியாவது கிண்டி விட ஒரு below the belt அடிக்கு திமுக தயாராவதாக பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
1 week 3 days ago
இது ரஷ்யாவின் வழமையான ரோந்து/பயிற்சி நடவடிக்கை என சொல்கிறார்கள்.நேட்டோ எனும் எனும் போர்வையில் ரஷ்ய எல்லை நாடுகளில் படைகளை குவித்து பயிற்சிகளை மேற்கொள்ளும் போது புட்டின் அவர்களை என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறார்களா?
1 week 3 days ago
ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டுவதுண்டு.இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழ்த் தரப்பை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கலாம். நீங்கள் முதலில் ஐக்கியப்படுங்கள் அதன் பின் உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்ற ஒரு தொனி அங்கே உண்டு. ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்ல, எல்லாச் சமூகங்களிலும் பல்வேறு அபிப்பிராயங்கள், பல்வேறு அடுக்குகள் இருக்க முடியும்.ஜனநாயக வழிமூலம் தலைமைகள் தெரிவு செய்யப்படும் ஒரு சமூகத்தில் ஆகப்பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியை அழைத்துப் பேசுகிறார்கள்.ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் வலிமையான இயக்கத்தை அழைத்துப் பேசுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு பிரதிநிதித்துவமாக இருந்தது.ஆனால் அது படிப்படியாக உடைந்து போய் இப்பொழுது தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் பெரிய கட்சியாக இருக்கின்றது. உள்ளதில் பெரிய மக்கள் அணையை பெற்ற கட்சியோடுதான் வெளிநாடுகள் பேசும். ஆனால் அதற்காக அந்தக் கட்சி மட்டும்தான் அந்த மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது என்று பொருள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பிடம் ஒற்றுமை இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் வெளிச் சமூகமானது, பொறுப்புக்கூறலில் தனக்குள்ள பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கு அதை ஒரு சாட்டாக முன்வைக்கின்றதா? என்பதையும் ஆழமாக பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் பெரிய ஆணையைப் பெற்ற தனிக் கட்சி எது?தமிழ்ப் பகுதிகளில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி பெற்ற அதே அளவு ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி அதாவது அரசாங்கமும் பெற்றிருக்கிறது. அதாவது தமிழ்மக்களின் ஆணை எனக்கும் உண்டு என்று அரசாங்கம் சொல்லக்கூடிய ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.அதை ஒரு பெருமைக்குரிய அடைவாக அரசாங்கம் ஜெனிவாவில் வைத்து கூறுகிறது;புதுடில்லியில் வைத்து கூறுகிறது;ஏனைய உலக தலைநகரங்களில் வைத்துக் கூறுகிறது.இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத ஒரு தோற்றப்பாடு. எனவே இப்பொழுது தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக, நல்லிணக்கம் தொடர்பாக, பொறுப்புக்கூறல் தொடர்பாக,இறுதித் தீர்வு தொடர்பாக நாங்களும் பேசுவோம்; எங்களுக்கும் உரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்லும். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிறீதரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் பிமல் ரட்நாயக்க என்ன சொன்னார் என்பது அந்தத் துணிச்சலில் இருந்துதான் வருகிறது. தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளின் விகிதத்தை வைத்துக் கணக்குக் காட்டலாம். ஆனால் வெளித் தோற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியானது தமிழரசு கட்சிக்கு நிகரான ஆசனங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் உட் கணக்குகள் அரசியல் விமர்சகர்களுக்கு உரியவை. ஆனால் சாதாரண மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் வெளியே காட்டப்படுவது இத்தனை ஆசனங்கள் என்பதுதான்.இந்தக் கணக்கை மாற்றுவதற்குத்தான் கஜேந்திரகுமார் ஒர் ஐக்கிய முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கட்சிகளே பொறுப்பு.தமிழ்த் தேசிய கட்சிகள் விட்ட பிழைகளின் விளைவு அது.யார் என்றே தெரியாத வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை அதனால்தான் அதே தவறு இப்பொழுதும் தொடர்கிறது.முன்னைய ஐநா கூட்டத் தொடர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பின்னரான ஐநா கூட்டத் தொடர்களில் தமிழ்த் தரப்பின் நிலைமை பலவீனமாக இருக்கிறது என்பதனை தமிழ்க் கட்சிகள் நன்கு அறியும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகைக்குப் பின் அவர் கூறிய கருத்துக்களிலிருந்தும் அதை உணரக்கூடியதாக இருந்தது. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெற்ற வெற்றிகளுக்குப் பின் ஐநாவை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் குறிப்பாக தமிழரசுக் கட்சியிடம் ஒன்றிணைந்த வியூகம் எதுவும் இல்லை.அதாவது தோல்விகளிலிருந்து அவர்கள்,குறிப்பாக தமிழரசு கட்சி,கற்றுக் கொள்ளவேயில்லை.விளைவாக இம்முறை ஐநாவுக்கு தமிழ்த் தேசியப் பேரவை ஒரு கடிதம் அனுப்பியது.தமிழரசுக் கட்சி ஒரு கடிதம் அனுப்பியது. போதாக்குறைக்கு சிவில் சமூகங்களும் இரண்டாகப் பிரிந்து நின்று கடிதம் அனுப்பின.கட்சிகளுக்கு இருந்த நோய் சிவில் சமூகங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. இவை தவிர புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஐநாவுக்கு கடிதங்களை அனுப்பின.ஆனால் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இணைந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஒரே கடிதத்தை அனுப்ப முடியவில்லை.அதாவது ஜெனிவாவில் அரசாங்கம் தனக்கும் தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறுகின்ற ஒர் அனைத்துலகச் சூழலில்,தாயகத்தில் தமிழ்க் கட்சிகள் தொடர்ந்து தங்களுக்கிடையே பிடுங்குப்படுகின்றன; சிவில் சமூகங்களும் பிடுங்குப்படுகின்றன. தமிழ் ஊடகங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், தமிழ் சமூக வலைத்தளங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், செம்மணி என்ற உணர்ச்சிப் புள்ளிக்கூடாக ஐநாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஐநாவோ அல்லது இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய சமூகமோ நிகழும் ஐநா கூட்டத் தொடரை செம்மணிக்கூடாகப் பார்க்கவில்லை. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளில் செம்மணியைப் பற்றிய சில வாசகங்கள் உண்டு. அவ்வளவுதான். அதற்குமப்பால் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றுதான் ஐநா சிந்திப்பதாகத் தெரிகிறது.நிகழும் ஐநா கூட்டத்தொடர் அதைத்தான் உணர்த்துகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட உத்தேச தீர்மான வரைபு-இது இறுதியானது அல்லவெனினும் -அதைத்தான் உணர்த்துகின்றது. நிகழும் ஐநா கூட்டத்தொடரில் இந்தியா வழமை போல 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறது.ஏறக்குறைய ஐநாவின் நிலைப்பாடும் அதுதான் என்று ஊகிக்கத்தக்க விதத்தில்தான் ஐநாவின் உத்தேச தீர்மான வரைபு காணப்படுகிறது.இந்தியாவையும் ஐநாவையும் கவர்வதற்காகவும்,ஐநாவிற்குரிய வீட்டு வேலைகளைச் செய்வதன்மூலம் தனது நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காவும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வரும் ஆண்டில் நடத்தக்கூடும். அப்படி ஒரு நிலைமையை முன்னுணர்ந்து தமிழ்க் கட்சிகள் ஏதாவது தயாரிப்புடன் காணப்படுகின்றனவா? இப்போதுள்ள ஒப்பிட்டளவில் பெரிய கூட்டு ஆகிய தமிழ்த் தேசியப் பேரவை ஈடாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டுக்குள் காணப்படும் மற்றொரு கூட்டு ஆகிய டிரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ஈபி.ஆர்.எல்.எப் 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்குகளைத் தமிழ்ப் பகுதிகளில் நடத்தி வருகிறது.இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈபி.ஆர்.எல்.எப்இற்கும் இடையிலான முரண்பாடுகளை ஆழமாக்கக்கூடியது. அது அதன்விளைவாக டிரிஎன்னேக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான முரண்பாடுகளையும் ஆழமாக்கக்கூடியது. தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியானது டி.ரி.என்.ஏயை நெருங்குவதாகவும் தெரிகிறது.வவுனியாவில் நடந்த 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் சுமந்திரன் கலந்து கொண்டார். சுமந்திரனைத் தனிமைப்படுத்த அல்லது தமிழரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தத்தான் தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டு உருவாக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சி கருதுகின்றது. எனவே அதற்கு எதிர் வியூகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு சுமந்திரன் டி.ரி.என்.ஏயை நெருங்கிவரும் வாய்ப்புகள் அதிகமுண்டு. எதிர்கால தேர்தல்களில் யாரோடு நின்றால் கூடுதலான வெற்றிகளைப் பெறலாம் என்று டிரிஎன்னே-வழமைபோல-சிந்திக்குமாக இருந்தால் அனேகமாக தமிழ்த் தேசியப் பேரவை உடையக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம். தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கிய பொழுது கஜேந்திரக்குமார் ஒரு வசனம் சொன்னார்.இந்தக் கூட்டு உடையுமானால் அதைத் தமிழ் மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று. அதில் அரைவாசி உண்மை உண்டு.முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த மக்களுக்கு இதுபோன்ற கூட்டுக்கள் உடைவது பெரிய இழப்பில்லை. ஆனாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தக்கூடிய உடைவுகள்,சிதறல்கள் போன்றன ஒப்பீட்டளவில் இழப்புகள்தான். அதை நிகழும் ஐநா கூட்டத்தொடரில் உணரக்கூடியதாக உள்ளதல்லவா? https://athavannews.com/2025/1447938
1 week 3 days ago
எப்போதும் சொல்லி கொண்டிருக்க நான் “சுமந்திரன் லவ்வர்ஸ்” நோயால் பீடிக்கப்படவில்லை 🤣
1 week 3 days ago
பருவகால அரசியல்வாதிகள் மக்கள் வாக்குகளை கவர்வதற்கு பல கதைகளை அடித்து விடுவார்கள், அதைக்கண்டு நாம் உச்சம் கொள்ளக்கூடாது. இவ்வளவு காலமும் நடிகர் விஜய் அவர்கள் ஆழ் உறைநிலையிலா இருந்தார்?
1 week 3 days ago
வாழ்த்துக்கள் விஜய் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க.. அதேவேளை அண்ணண் தம்பி சண்டையைவிட்டு நாம்தமிழர் வெளியவரணும்.. ஏற்கனவே சீமானின் பஸ் வெற்றிபாதையைவிட்டு விலகி ரொம்பதூரம் போய்விட்டது.. இது பத்தாதுன்னு காரணமே இல்லாம விஜை திட்டி பள்ளத்தை நோக்கி போயக்கொண்டிருக்கு.. விஜய் react பண்ணாத வரைக்கும், நீங்க என்ன கூச்சலிட்டும் ஒரு பயனும் இல்ல…விஜய் மீது நீங்கள் வைக்கும் எந்த தரக்குறைவான விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிக்க போவதில்லை… இது உங்களுக்கு தான் மென்மேலும் மன உளைச்சலை கொடுக்க போகிறது…எவ்வளவு சீக்கிரமா மீள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மீண்டு விடுங்கள் நாம் தமிழர் உறவுகள்...
1 week 3 days ago
1 week 3 days ago
யானைக்கும் மனிதரின் போர் வியூகங்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறது . .........அறிவில்லாத மனிதர்கள் அதன் வழியில் குறுக்கிட்டு அவலப்படுகின்றனர் . ........! 😀
1 week 3 days ago
5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும். என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர். ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன். சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள். என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள். சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது. சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது. கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள். அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது. இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது. அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்? சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன். 'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............' 'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?' 'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.' 'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. (தொடரும்......................)
Checked
Thu, 10/02/2025 - 01:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed