1 week 2 days ago
சுற்றுச்சூழல் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தவேளையில் வெடி வெடிப்பதை முற்றாக தடைசய்ய வேண்டும்.
1 week 2 days ago
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம் 20 Feb, 2026 | 03:53 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உட்பட ஏனையவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கெஹல்பத்தரே பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2024.09.21 ஆம் திகதி முதல் இன்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பெருந்தொகையான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 12 புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தரே பத்மே உட்பட ஏனையவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நேரடியான தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/239168
1 week 2 days ago
1 week 2 days ago
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் , தீர்மானிக்கப்பட்டது. மேலும், தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில், மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும். அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் என்றார். இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள். இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது. https://athavannews.com/2026/1465726
1 week 2 days ago
அரச பரம்பரையிலிருந்து Andrew Mountbatten-Windsor நீக்கம்? பிரித்தானிய அரச பரம்பரையில் இருந்து ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor) நீக்குவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு,எச்சரிக்கையுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவரை அரச பரம்பரையிலிருந்து நீக்கும் தொடர்பான எந்த தீர்மானமும், தற்போது நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை முடிவடைந்த பின்னரே எடுக்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே , ஆண்ட்ரூவை வாரிசு வரிசையிலிருந்து நீக்குவது ‘முற்றிலும் நாடாளுமன்றத்தின் விஷயம்’ எனவும் நாடாளுமன்றத்தின் விருப்பத்திற்கு எதிராக அரண்மனை எந்தவிதத்திலும் செயல்படாது எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் கூறியுள்ளன. மன்னர் சார்ல்ஸ் மூன்றாமவரின் சகோதரரான ஆண்ட்ரூவை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இத்தகைய மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில், அது பிரித்தானியாவைத் தாண்டி காமன்வெல்த்தின் பிற நாடுகளுடனும் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டிய விடயம் என்பதுடன், 82 சதவீத பிரித்தானியர்கள் ஆண்ட்ரூவை வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதை ஆதரிக்கின்றனர். வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே அதற்கு எதிராக உள்ளனர்; மேலும் 12 சதவீதம் பேர் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை எனவும் அறியமுடிகிறது இந்த விவகாரம், பிரித்தானிய அரச குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் அதன் பொது நம்பகத்தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பரவலான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் விசாரணையின் முடிவுகள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட முடிவுகள், இந்த விவகாரத்தின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2026/1465720
1 week 2 days ago
உலக தாய்மொழி தினம் இன்று Feb 21, 2026 - 10:49 AM உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது. பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன. 1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டத்தின் போது பல மாணவர்கள் உயிர்த்தியாகம் செய்ததுடன், பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி, மொழி உரிமைகளுக்காகச் செய்யப்பட்ட அந்த அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதேவேளை, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு சமூகத்தின் தாய்மொழியே அந்தச் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை ஊடகமாகவும் அடையாளப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கை வருமாறு: https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmlvvc9e6000b356psr4em1w7/documents/Tamil.pdf https://adaderanatamil.lk/news/cmlvvc9e6000b356psr4em1w7
1 week 2 days ago
இரண்டு "தெலுங்கர்களும்" சந்தித்த போது... பேச வார்த்தைகள் வரவில்லையே. விஜயகாந்தின் மனிசி பிரேமலதா.... தனக்கும், தன்ரை தம்பி சதீசுக்கும்... பதவி எடுக்கத்தான், உந்த ஆட்டம் எல்லாம் ஆடுது.
1 week 2 days ago
"நம் அனைவருக்கும் வாய்க்கவேண்டும்" அது தான் சரியானது. மிக்க நன்றி பேராசான். அண்ணை, கருப்பு - பெரியாரை பின்பற்றுபவர்கள் / பகுத்தறிவாளர்கள். சிவப்பு - கம்யூனிஸ்ட் / இடதுசாரிகள். நீலம் - தலித் / அம்பேத்கார் வழி நடப்போர்.
1 week 2 days ago
1 week 2 days ago
சிகப்பு மஞ்சள் பச்சை என்று தான் பார்த்திருக்கிறேன். இதென்ன கருப்பு சிகப்பு நீலம்? ஏதாவது கட்சியை சாடுகிறீர்களா?
1 week 2 days ago
பாபரின் பவர்பிளே ஓட்டவிகிதம் 90 க்கும் குறைவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் பயிற்சியாளர் பாபர் பவர் பிளேயில் ஆடமாட்டார் என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார், இந்த நிலையில் பாபர் 12 ஓவருக்கு மேல் அவரது தாக்கம் அதிகமாக அணிக்கு தேவைப்படாது எனும் கருத்துபடவும் கூறியுள்ள நிலையில் 7 - 11 ஓவர் என மட்டுப்படுத்தப்பட்ட ஓவரில் அவரது தாக்கம் எவ்வளவு இருக்கும்? இவ்வாறான நிலையில் பாபரின் பங்குதான் என்ன? பாபரிற்கு மாற்றீடாக ஏன் வேறு ஒருவரை பாகிஸ்தான் களமிறக்கவில்லை? இவ்வாறான நிலை ஒரு துடுப்பாட்டக்காரரின் மனோநிலையினை வெகுவாக பாதிக்கும், அது ஆட்டத்திலும் பிரதிபலிக்கும். நியுசிலாந்து ஆட்டக்காரர் மைக்கல் பிரஸ்வெல் காயம் காரணமாக இந்த உலக தொடரில் விளையாடவில்லை. நியுசிலாந்து அணி 3 போட்டிகளையும் கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கிலேயே விளையாடவுள்ளது, பெரிய மைதானத்தில் விரைவான 2 ஓட்டங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என சப்மன் கூறுகிறார், தகுதி போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் 170 ஓட்டங்களுக்கு மேலாக எதிரணிகபெற்றிருந்தன சிறிய அணிகள் கூட அதனை எட்டுவதற்கு காரணமாக தம்து அணியின் பந்து வீச்சு பலவீனமாகவுள்ளது என குறிப்பிடுகிறார், பேர்குசன் இன்றைய போட்டியில் விளையாடுவது உறுதிசெய்யப்படவில்லை. நியுசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திர கனடாவுடனான போட்டிகள் தவிர்ந்த மற்ற போட்டிகளில் சிரமத்தினை சந்தித்துள்ளார், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர்களில் உஸ்மான் தாரிக் மற்றும் சகல துறை ஆட்டக்காரரான சல்மான் தவிர்த்து மற்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கெதிராக இடது கை ரவீந்திர ஒரு சாதகதன்மை உள்ளது. இந்த பாகிஸ்தான் நியுசிலாந்து போட்டியில் சிரமத்தினை சந்திக்கும் பாபர் மற்றும் ரச்சின் இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்த மெதுவான ஆடுகளத்தில் மணிக்கட்டினால் சுழல் வீசும் ஆதிக்கம் உள்ள நிலையில் சோதியின் வருகை நியுசிலாந்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், ஆனால் லைன் லெந்தில் கட்டுப்பாடில்லாவிட்டால் கேமந்தவின் நல்ல பந்து கொஞ்சம் அளவு கூடிய போதே தூக்கி மேலே அடித்தும், பின்னர் அதனை ஈடு செய்ய அளவினை குறைத்த போது அதனை பின் காலில் சென்று சிம்பாவே வீரர் ராசா ஆறுகள் அடித்தார் அது போல நிகழும். பாகிஸ்தான் வீரர் தாரிக்கினை நியுசிலாந்து இதுவரை எதிர்கொள்ளவில்லை என நினைக்கிறேன், மிக சவாலாக இருக்கும். வழமையாக மெதுவாக வீசும் சான்ட்னர் உலக தொடரில் கொஞ்சம் வேகமாக வீசுகிறார், இந்த போட்டியில் அதில் கவனம் செலுத்தி மீண்டும் மெதுவாக வீச கூடும்.
1 week 2 days ago
வாச்சாத்தி வன்மம் நிறைந்த வரலாறு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்....... அதே மக்கள் தெரிவு செய்த அரசியல் அதே மக்களை அழிக்கும் ஈனச்செயல்களை செய்யும் அரசியல். வாச்சாத்தி, வெண்மணி போன்ற படுகொலை சம்பவங்களை வரலாறு காலா காலத்திற்கும் எடுத்துச்செல்லட்டும்.
1 week 2 days ago
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரண நிகழ்வு இது. விஜயகாந்த் அவர்கள் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அந்த இடத்தில் மண்டி இட்டது அவர் வளர்த்த கட்சி.
1 week 2 days ago
நாட்டிற்கு நலன் தரும் சட்டம். பேச வார்த்தைகள் இல்லாமல் வெறுமனே இனவாத பேச்சுக்களை பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கட்டும்.
1 week 2 days ago
தமிழ்நாட்டு அரசியல் என்பது ஒரு வகை வியாபாரம். பணச்சலவைகள் மிகுந்த இடம். பாலைவனம் போன்ற பூமியில் பூங்காவனம் அமைத்து காட்டுவது போல் ஒரு பிரமையை உருவாக்கி காட்டுவார்கள்.
1 week 2 days ago
முதலமைச்சர் @கந்தப்பு வாழ்த்துக்கள்.
1 week 2 days ago
ஜேவிபி பல இடங்களில் தூசு தட்டுவதாக தெரிகின்றது. தமிழர் பகுதிகளை விட சிங்கள பகுதிகள் அதிகம் என காதுவழி செய்திகள். உண்மை பொய் தெரியவில்லை.
1 week 2 days ago
🤣................... நான் என்ன சொல்ல................ அமெரிக்காவின் நான்கு பெரிய விளையாட்டுகளையும் தினமும் கரைத்துக் குடிக்கின்றேன்............... மற்றயவை எல்லாம் மருந்து போல, எப்பவாவது எட்டிப் பார்ப்பது மட்டுமே....................
1 week 2 days ago
இந்த முறை அதாவது ஈரானிலிலை அமெரிக்க பிள்ளையருக்கு ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,வெனுசுவெலாவில விட்ட சேட்டையள் சரி வராது எண்டு நினைக்கிறன். ஏனெண்டால் ஈரானுக்கு பின் பலம் சீனா எண்டு கேள்விப்பட்டன். அதோட சீனாவும் தன்ர ஆயுத கண்டுபிடிப்புகளை பரிசோதிக்க இடமும் வேணுமெல்லோ.....😂
1 week 2 days ago
திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தப்படும் விடயம் என்னவென்றால், படிக்கல படிக்கல என்று சொல்பவர்களை, நம்ப கூடாது.... நம்பவே கூடாது.
Checked
Mon, 03/02/2026 - 14:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed