1 week 4 days ago
Battinews.com - Sri Lanka Tamil Newsகாதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையி...காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !
1 week 4 days ago
1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து, பிரச்சினையை எப்படியாவது தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் என்ன செய்தார்…? ஒரு விசிலையும் சில ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார். ஒருவரோடு ஓருவர் பின்னால் இருந்து பிடித்தவாறு ரயில் விளையாட்டு விளையாடுமாறு ஊழியர்களிடம் கூறினார். ஒருவர் விசில் அடித்து "டூட்.. டூட்.." என்று சொல்ல, அவருக்குப் பின்னால் ரயில் பெட்டிகளைப் போன்று ஒருவரையொருவர் பிடித்தவாறு வீதியில் சென்றனர். மருத்துவர் கமல் என்ன கணித்தாரோ அது நடந்தது. ஆம். தப்பியோடிய ஒவ்வொரு பைத்தியமும் அந்த ரயிலில் ஏறியது. அவர்களை சுற்றி வளைத்த டாக்டர் கமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிரச்சினை எப்போது துவங்கியது தெரியுமா…? தப்பியோடிய பைத்தியங்கள் மொத்தம் 243 தான்! ஆனால் ரயில் பயணத்தின் மூலம் மருத்துவமனைக்கு திரும்பியவர்களோ 612 பேர். மீதிப் பைத்தியங்கள் எங்கிருந்து வந்தனர்? தெரியாது. அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் திகைத்தது. அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால், அந்த ரயிலில் எத்தனை நபர்கள் ஏறுவார்கள்?! உண்மை உரைகல்
1 week 4 days ago
அதெல்லாம் ஒரு காலம் இப்ப பண ஆசை பிடித்து பிணத்துக்கும் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் இலங்கை தீவு எங்கும் கூடி விட்டார்கள் . பகல் முழுதும் அரசாங்க வைத்திய சாலைகளில் பெயருக்கு வேலை .அதன் பின் தனியார் வைத்திய சாலைகளில் அடிமை வேலை அவர்களின் ஒரே நோக்கம் பணம் மட்டுமே மேல் சொன்ன அடி பாடுகள் வரும் காலத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாது போகும் .
1 week 4 days ago
https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express
1 week 4 days ago
இது ஒரு நொண்டிச்சாட்டு ஒரு வீதியை அகலப்படுத்துவதற்காக தனியார் காணியச் சுவீகரித்து அதில் இருக்கும் கட்டிடங்களை அகற்றும் அரசாங்கம் கண்ட கண்ட இடங்கள் எல்லாம் தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்று தாமே தாட்டு வைத்தை புத்தர் சிலைகளை எடுத்து புத்தசிலைகளை நிறுவும் வல்லமை வாய்ந்த தொல்லியல் துறை கேட்டும் தனியார் அனுமதிக்காதபடியால் பாதுகாக்க முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரின் அடையாளங்களை வேண்டுமென்றே அழிப்பதிலும் அழியவிடுவதிலும் சங்களவர்கள் காட்டும் அக்கறை நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்களும் இந்த அழிவுகளுக்கு துணைபேபவர்களே அதன் மதிப்பு த் தெரியாமல் கம்பியைக் களவாடிய கபோதிகளை என்ன வென்பது. கண்ணிரடும் சித்திரம் வாங்குவதில் தமழர்கள் வல்லவர்கள். எங்கள் கண்முன்னே நாங்கள் பாவித்த கலப்பை.மாட்டுவண்டிகள். உரல்உலக்கை எல்லாம் விறகுக்குப் போட்டுவிட்டு இப்போது அதுவும் வேண்டாம் என்று காஸ் அடுப்பில்சமைப்பவர்களதானே நம் இனம். இல்லையென்றால் தஞ்சைப் பெரிகோவிலைக்கட்டிய இராஜஇராஜ சோழனிற்கு சிறி கொட்டிலில் சமாதி என்ற பெயரில் ஒரு சிறிய கல்லை நட்டுவிட்டு சென்னைக் கடற்கரையைச் திராவிடச் சுடுகாடாக்கியவர்கள்தானே தமிழர்கள்.
1 week 4 days ago
1 week 4 days ago
சட்டி சுட்டதடா.... கை விட்டதடா.... புத்தி கெட்டதடா... நெஞ்சை தொட்டதடா.... 😂
1 week 4 days ago
இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்! 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447845
1 week 4 days ago
பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்த நேரத்தில் அவர் பலமுறை தனது பெயரை மாற்றிக்கொண்டார். கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தபோது, அவர் தேவக்கா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு அவர் வட்டி அடிமே என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தேவியின் கணவர் ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டர்தான். அவரது அனுபவங்கள் டஜன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேவி பற்றி மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாங்கள் அவர் ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் கமாண்டர் ஆனது மற்றும் சரணடைந்தது குறித்த கதையை அறிய விரும்பினோம். முதலில் தனது வாழ்க்கைக் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். இறுதியில், தனது கிராமத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றோம். தேவிக்கு இப்போது 50 வயது. நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் நீலபச்சை நிற புடவை அணிந்திருந்தார். வேலை செய்யும் போது அது ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காக அதை உயர்த்திக் கட்டியிருந்தார். எங்களுக்கு அவர் தேநீர் கூட தயாரித்துக் கொடுத்தார். எங்கள் உரையாடல் இடைவெளி விட்டுவிட்டு நடந்தது. இதற்கிடையில், அவர் அரிவாளை எடுத்துக்கொண்டு வயலில் வேலை செய்யவும் சென்றார். நாங்களும் அவரோடு சென்று பேசினோம். ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைதல் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளின் குழுவில் மிகக் குறைந்த பெண்களே இருந்த நேரத்தில், தேவி ஒரு சாதாரண கிராமப்புற குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு, கிளர்ச்சி அரசியல் மற்றும் 'கொரில்லாப் போர்' பாதையைத் தேர்ந்தெடுத்தார். "நாங்கள் நிலமற்றவர்கள். ஏழைகள், பெரும்பாலும் பட்டினியாக இருந்தோம். அடிப்படை சுகாதார சேவைகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் காட்டில் நிலத்தை உழ முயற்சிக்கும்போது, வனத்துறை அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். அவர்கள் போலீசாருடன் கைகோர்த்து செயல்பட்டனர்," என அவர் தெரிவித்தார். வன நிலத்தில் விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. கிராம மக்களைத் தடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சாதாரணமானது என்று உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது மீண்டும் கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். தனது 13வது வயதில் தனது தந்தை வனத்துறை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை பார்த்ததாக தேவி கூறுகிறார். அதன் பிறகு போலீசார் அவரது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவை அனைத்தையும் பார்த்த பிறகு, தேவி வீட்டை விட்டு வெளியேறி வன்முறைப் பாதையில் இறங்கினார். "எனது கருத்தை சொல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது – அது துப்பாக்கி முனையில் பேசுவதுதான்" என்று கூறுகிறார். கிராம மக்கள் ஏன் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது அவர், "போலீஸ் ஒருபோதும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, மாவோயிஸ்டுகள் வந்த பின்னரே வனத்துறை அதிகாரிகள் பின்வாங்கினர்" என்று கூறினார். மாவோயிசம் முடிவுக்கு வந்ததாக கூறிய அரசு 1988-ல் தேவி ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைந்தார். 2000-களில், மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தது. 10 மாநிலங்களில் பரவியிருந்த இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். அதன் வலிமை மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தொலைதூர காடுகளில் இருந்தது. இந்தியாவின் இந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சி சீனப் புரட்சியாளர் மா சே துங்கின், 'அரசாங்க அதிகாரத்திற்கு எதிரான மக்களின் போர்' என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. 1967-ல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதமேந்திய விவசாயிகள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனுடன் சேர்த்து இது நக்சலிச இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்த வன்முறைப் போராட்டத்தில் பல ஏற்ற இறக்கங்கள் வந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பலவீனமடைந்துள்ளது. மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் கொரில்லா முறைகளைப் பின்பற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள், ஏழைக் குழுக்களிடையே நிலத்தைப் பகிர்ந்தளிக்கவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை அகற்றி ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தை நிறுவவும் போராடுவதாகக் கூறுகின்றனர். இந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதிகளை அரசாங்கம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணித்து வருவதாகவும், காட்டு நிலங்களை பெரிய நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், இந்த கிராமப்புறக் குழுக்களுக்கு வன நிலத்தின் மீது உரிமை இல்லை என்று அரசு வாதிடுகிறது. அந்த நிலத்தை உழ முடியாது. மேலும், பெரிய தொழில்கள் மூலமாகவே வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சலிசத்தை "ஏழை பழங்குடி பகுதிகளுக்கு ஒரு பெரிய பேரிடர்" என்று விவரித்தார். இதனால் பழங்குடி மக்கள் "உணவு, மின்சாரம், கல்வி, வீட்டுவசதி, கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர்" என்று அவர் கூறினார். சரணடைய விரும்பாத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு இப்போது ஒரு "கடுமையான அணுகுமுறை" மற்றும் "சகித்துக்கொள்ளாத கொள்கை" ஆகியவற்றை பின்பற்றுகிறது. இதைச் செயல்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 2026 மார்ச் 31-க்குள் "இந்தியா நக்சல் இல்லாத நாடாகிவிடும்" என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். போராட்டத்தில் இறந்தவர்கள் 1980-களைப் பற்றிய தேவியின் கூற்றுக்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்துவது எங்களுக்குச் சாத்தியமில்லை. அவர் 30 பேர் கொண்ட படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி, ஒருபோதும் ஒரே இடத்தில் தங்கவில்லை என்று கூறுகிறார். பாதுகாப்புப் படைகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அவர், "நான் முதல் முறையாக மறைந்திருந்து தாக்கியது எனக்கு நினைவிருக்கிறது. நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள கண்ணிவெடியை அமைத்து ஒரு கண்ணிவெடியால் தகர்க்க முடியாத வாகனத்தை வெடிக்கச் செய்தேன். அதில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று கூறுகிறார். இத்தகைய தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதில் அவருக்குப் பெருமை உள்ளது. மேலும், இதில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது கைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நாங்கள் பலமுறை வற்புறுத்திக் கேள்வி கேட்டோம். பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, காட்டில் ஷம்பாலா தேவியின் புகைப்படம். காவல்துறையின் ஒற்றர்கள் என்று தவறாக நினைத்துத் தாங்கள் கொன்ற அல்லது பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறந்த பொதுமக்களின் மரணத்திற்காக அவர் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். அவர், " நாங்கள் எங்கள் சொந்த மக்களைக் கொன்றுவிட்டோம் என்பதால் இது தவறாகத் தோன்றியது. நான் அவர்களின் கிராமங்களுக்குச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டேன்," என்று கூறுகிறார். ஒருமுறை அவரது படைப்பிரிவு, பாதுகாப்புப் படையினர் மீது பதுங்கித் தாக்கியபோது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சாதாரண குடிமகனும் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அவரது தாய் மிகவும் கோபமாக இருந்தார், அழுதுகொண்டிருந்தார். படைப்பிரிவு ஏன் இரவில் தாக்குதல் நடத்தியது என்று கேட்டார் என்று அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் பொதுமக்களை அடையாளம் காண்பது கடினம். தேவியின் கூற்றுப்படி, இரவு நேரத் தாக்குதல்கள் மிகவும் பயனுள்ளவை. தாம் எத்தனை பேரைக் கொன்றோம் என்பது தனக்குத் தெரியாது என்று தேவி கூறுகிறார். ஆனால், பாதுகாப்புப் படைகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் 'குறைந்த தீவிரம் கொண்ட போர்' குறித்த மிகப்பெரிய தரவுத்தளமான 'தெற்கு ஆசிய தீவிரவாத தளம்' தரவுகள்படி, 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்த மோதலில் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 4,900 மாவோயிஸ்டுகள், 4,000 பொதுமக்களும் மற்றும் 2,700 பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வன்முறையை அனுபவித்த மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் கிராம மக்கள் பெரும்பாலும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்ததாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும் தேவி கூறுகிறார். பல பழங்குடி சமூகங்கள் மாவோயிஸ்டுகளைத் தங்கள் மீட்பர்களாகக் கருதினர் என்று அவர் கூறுகிறார். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அவர்கள் காட்டு நிலங்களை சாதாரண மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர். மேலும், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற அவர்களுக்கு உதவினர். இது தொடர்பாக நாங்கள் சில கிராம மக்களுடன் பேசினோம். அவர்களும் தேவியின் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தினர். சவால்களும் 'சுதந்திரமும்' முதலில், கொரில்லாப் போரின் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் தேவிக்கு புதியவையாக இருந்தன. அவர் அதற்கு முன்பு ஒருபோதும் பொதுவில் ஆண்களுடன் பேசியதில்லை. எனவே, அவர்களுக்குத் தலைமை தாங்குவதையும், அவர்களுக்குக் கட்டளையிடுவதையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக நிலத்தில் வேலை செய்த பிறகு அவர் இந்த நிலையை அடைந்ததால், ஆண்கள் அவரை மதித்தனர் என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, மாவோயிஸ்ட் அமைப்பில் தினமும் தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் பொறுப்பு. பாதுகாப்புப் படைகள் அங்குத் தேடுவதால், முகாம்கள் தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் படைப்பிரிவு தொடர்ந்து காடுகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. கடினமான மாதவிடாய் காலங்களில் கூட பெண்களுக்கு எந்த விடுப்பும் அளிக்கப்படவில்லை. ஆனால், தேவி ஒரு 'சுதந்திர' அனுபவத்தைப் பற்றியும் பேசுகிறார். தன்னை நிரூபிப்பதன் மூலமும், தனது அடையாளத்தை உருவாக்குவதன் மூலமும் இந்த 'சுதந்திரத்தை' அவர் உணர்ந்தார். "பழங்குடி சமூகத்தில் பெண்கள் செருப்புகளைப் போல் நடத்தப்பட்டனர். அவர்கள் யாருடைய மனைவியோ அல்லது தாயோ என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. ஆனால், மாவோயிஸ்ட் அமைப்பில், எங்கள் வேலை மூலம் நாங்கள் அடையாளம் காணப்பட்டோம் – அப்படி கமாண்டர் ஆனது எனது அடையாளம்," என்று அவர் கூறுகிறார். தான் தனது கிராமத்திலேயே இருந்திருந்தால், சிறு வயதிலேயே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பேன் என்று தேவி கூறுகிறார். மாவோயிஸ்டாக மாறிய பிறகு, அவர் தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிந்தது. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தேவியின் கணவர் ஷம்பாலா ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டராக இருந்தார். ஆனால், மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து, அதிக மக்கள் கொல்லப்பட்டபோது, தேவி தனது வாழ்க்கையைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். வாக்குறுதியளிக்கப்பட்ட புரட்சி எங்கும் காணப்படவில்லை என்று அவர் உணர்ந்தார். "ஒருபுறம், பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. மறுபுறம், நாங்களும் அதிக தாக்குதல்கள் மற்றும் கொலைகளைச் செய்து கொண்டிருந்தோம்" என்று அவர் கூறினார். அந்த வாழ்க்கையை விட்டு வெளியேற மற்றொரு காரணம், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு எலும்பு காசநோய் (bone TB) ஏற்பட்டது. சிகிச்சைக்காக அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மறைந்து மறைந்து செல்ல வேண்டியிருந்தது. "எந்தவொரு நிரந்தர மாற்றமும் நாடு தழுவிய விரிவாக்கத்தால் மட்டுமே வர முடியும். ஆனால், நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் செல்வாக்கு குறைந்துகொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் குறைந்துகொண்டிருந்தது," என்று தேவி கூறினார். தொலைதூரப் பகுதிகளில் வாழும் சமூகங்கள் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளிடம் உதவி பெற்றன. இப்போது அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. மொபைல் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் வெளி உலகத்துடன் சிறப்பாக இணைந்தனர். இதற்கிடையில், பாதுகாப்புப் படைகள் டிரோன்கள் போன்ற நவீன உபகரணங்களைக் கொண்டு ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளை கிராமங்களிலிருந்து தொலைவில் உள்ள காடுகளுக்குத் தள்ளினர். இது அவர்களை மேலும் தனிமைப்படுத்தியது. சரண் பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது அரசு கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்கிறார். 25 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அரசின் கொள்கையின் கீழ் தேவி ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்தக் கொள்கையின் கீழ், மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதங்களை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்து சரணடைகிறார்கள். அரசு அவர்களின் மறுவாழ்வுக்காக நிதி, நிலம் மற்றும் விலங்குகளை வழங்குகிறது. இப்போது தேவி, தான் ஓடி வந்த அதே கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சரணடைந்த பிறகு, தேவி மற்றும் அவரது கணவருக்கு அரசிடமிருந்து நிலம், ரொக்கப் பணம் மற்றும் குறைந்த விலையில் 21 செம்மறி ஆடுகள் கிடைத்தன. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தனது கணவர் ரவிந்தர் மற்றும் மகளுடன் ஷம்பாலா தேவி சரணடைதல் கொள்கை, மாவோயிஸ்டுகளின் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று வெளிப்படையாக கூறவில்லை. இதன் கீழ், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்த்து, ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். தங்களுக்கு எதிராக வன்முறை தொடர்பான சட்ட வழக்குகள் எதுவும் இப்போது இல்லை என்று இந்தத் தம்பதியர் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் அத்தகைய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 8,000 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மறுபுறம், எத்தனை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் எஞ்சியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் அவர்களின் உச்சத்தில் தீவிரமாக இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை. சரணடைந்த பிறகு, தேவி கிராம சபையில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர்கள் மக்களின் புகார்களை கிராமத் தலைவரிடம் எடுத்துச் சென்று, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவுகின்றனர். "அரசுடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாவோயிஸ்டுகளையும் ஒழித்துவிடுவோம் என்ற அரசின் அறிவிப்பு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாங்கள் தேவியிடம் கேட்டோம். படக்குறிப்பு, கிராம மக்களிடையே ஷம்பாலா தேவி மற்றும் அவரது கணவர் அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்து, "இறுதியில் இந்த இயக்கம் தோல்வியடைந்தாலும், அது ஒரு வரலாற்றை உருவாக்கிவிட்டது. உலகம் ஒரு பெரிய போராட்டத்தைக் கண்டுள்ளது. இது எங்கோ இருக்கும் ஒரு புதிய தலைமுறைக்கு தங்கள் உரிமைகளுக்காகப் போராட உத்வேகம் அளிக்கலாம்" என்று கூறினார். ஆனால், தனது எட்டு வயது மகளை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் அனுப்புவாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, அவரது பதில் தெளிவாக இருந்தது. "இல்லை, இங்குள்ள சமூகம் வாழும் வாழ்க்கையை நாங்கள் இப்போது வாழ்வோம்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n4yky4mdo
1 week 4 days ago
1 week 4 days ago
Published By: Vishnu 20 Sep, 2025 | 02:37 AM வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறுக்கே வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்றையதினம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது செட்டியார் மடம் சந்தியிலும் இவ்வாறு ஒரு வாகனம் மாடு ஒன்றின் கயிற்றில் சிக்கியது. அது பெரிய வாகனமாக இருந்ததால் ஆபத்துகள் ஏற்படவில்லை. இதுவே மோட்டார் சைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டியாக இருந்திருந்தால் அங்கே பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதுபோல கட்டாக்காலி நாய்கள் வீதியில் செல்வதாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/225553
1 week 4 days ago
ஆயுள் தண்டனை வழங்கப்படு முன் விசாரணை கைதியாக உள்ள போது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் நாய்களுக்கு வந்தால் பிணை வழங்கப்படுமா?
1 week 4 days ago
ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல் உள்ளது . ........தொடருங்கள் . ........! 😀
1 week 4 days ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ரெபேக்கா தார்ன் பிபிசி 19 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா? இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது. உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது. பட மூலாதாரம், Getty Images சிறுநீர் பாதை தொற்று ஏற்பட என்ன காரணம்? சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று. பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது. அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது. பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும். அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் திடீரென அல்லது வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை மேகமூட்டம் போல் தோன்றும் சிறுநீர் சிறுநீரில் ரத்தம் காணப்படுதல் கீழ் வயிற்றில் வலி, அல்லது முதுகில் (விலா எலும்புகளுக்குக் கீழே) வலி அதிக காய்ச்சல், அல்லது குளிர்ச்சி/வெப்பம், நடுக்கம் ஏற்படுதல் சோர்வு அல்லது பலவீனம் அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம். சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதன்மை முறையாகும் "சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா. நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது. மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது. மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள். "அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன். "எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார். குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீரகத் தொற்று பெண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று தொற்றக்கூடியதா? சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல. ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய சிறுநீரின் மாதிரியை வழங்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும். இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள். இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும். சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார். "நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா. நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீர் பாதை தொற்றை குணமாக்க க்ரான்பெரி சாறு உதவுமா இல்லையா என்பது குறித்து கலவையான கருத்துக்கள் உள்ளன குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது. க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன. சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்) - கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும். - பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள் - நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். - உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும் - உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும் - நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும். - பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள் பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன? மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம். ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர். "சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdjv23l369o
1 week 4 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர் வெள்ளை மாளிகை டேனியல் கேய் வணிக செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர். டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார். "ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக். நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் புதிய கோல்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறார் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக். 2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது. தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார். மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார். பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன். பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார். "சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ். ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது. ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார். "நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப். 2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது. அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg3jeyeklzo
1 week 4 days ago
மன்னரும் நானே மக்களும் நானே! மரம், செடி, கொடியும் நானே! சொன்னவன் பொலிசு, சொல்பவன் பொலிசு. துணிந்து நீ போதை ஏற்று.🤪 சிறீமாவோ காலத்தில் எட்டாம் வகுப்புடன் பொலிஸ் படையில் இணைக்கப்பட்டோரும், யெயவர்த்தன காலத்தில் இணைக்கப்பட்ட சிறைக் கைதிகளும் இன்னமும் சேவையில் இருக்கிறார்கள்போல் உள்ளது.🤔
1 week 4 days ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 week 4 days ago
goshan_che குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் படவேண்டும் என்று சொல்வார்கள். நான் யாழ்களத்தில், தங்கத்தால் மகுடமே சூட்டிவந்துள்ள வரும் உறவுகளில் ஒருவரின் பத்து விரல்களாலும் ஆசீர்வாதமே பெற்றுவிட்டேன்.🙌 🙌 🙏
1 week 4 days ago
செப்டம்பர் 24 ல் ஒருநாள் மந்திரி மனைக்கு மாலை நேரம் போனன் ..திடீரென ஒருவர் சயிக்கிளில் வந்து...விட்டார் சயிக்கிளை ..நிலத்தை கூட்டினார் ..படுக்கையை போட்டார் ...சுற்ற்ப்பார்த்த எங்களை ஏளனம் செய்தபடி தன்னுடையகாணீ ....வீடு என்று அட்டகாசம் செய்தார் ...கூடவந்தவை கனடாவில் பிறந்த பிள்ளைகள் ....அதுகள் ..இவர்தான் சங்கிலிய மன்னனின் மந்திரி எனகேட்கமுன்...ஆட்டோவில் ஏறி ... ரியோ கிறீம் கவுசுக்குப் போய்விட்டோம்..
1 week 4 days ago
லங்காசிறி ...வீரகேசரி புதினத்தாள்போல...தமிழரெண்டால் பெயர் போடுவினம்...மற்றவை என்றால் பெயர் வராது 4 hours ago, ரசோதரன் said: அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். எங்கெல்லாம் பூந்து விளையாடி ..கோர்த்து ..அழகாக கதை சொல்லுறியள்....நல்லாயிருக்கு..
Checked
Thu, 10/02/2025 - 01:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed