1 day 14 hours ago
கண்ணீர் அஞ்சலிகள்
1 day 14 hours ago
1 day 14 hours ago
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது. மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை. வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது. 1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது. இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது. இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி - ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும். அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு. உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை. சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை. எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் ஆகியோருடைய படங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மண்டைதீவில் நாட்டப்பட்டிருந்தது. திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன. ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை. ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது. மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை. இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு? யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு. கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம். ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம். இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா? மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு. பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம் மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு. ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா? வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான். ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, 'அரசியல் விடுதலை' என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா? இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர். அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு. மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படுகின்றமை பகிரங்கமாக தெரிகிறது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது வேறு. ஆனால் 13 இன் கீழ் உள்ள மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாணங்களின் அரைகுறை அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம். அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது. 1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்... https://www.koormai.com/pathivu.html?therivu=2610&vakai=5
1 day 14 hours ago
உள்ளே இருக்கும் பொன்னம்மா ....... எம் . என் .நம்பியார் & ராஜசுலோசனா ......... ! 😍
1 day 14 hours ago
வணக்கம் வாத்தியார் .........! இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே } (2) பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : { காதல் கொள்வது ஆனந்தமே ஜாடை சொல்வது பேரின்பமே } (2) பெண் : கண்ணில் உண்டு ஆசை நெஞ்சில் உண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : ஆணும் பெண்ணும் காணும் வண்ணம் வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே பெண் : { ஆட சொல்வது வாலிபமே தேடி கொள்வது பார்வைகளே } (2) பெண் : தொட்டு தொட்டு கை பின்னால் கொண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : நாளும் நாளும் அங்கும் இங்கும் கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன்........! --- நான் வணங்குகிறேன் ---
1 day 14 hours ago
ஆழ்ந்த இரங்கல்கள் .......!
1 day 15 hours ago
"நுணலும் தன் வாயாற் கெடும்." இப்போ மகிந்தவுக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்களும், அந்த செய்தியை வெளியிட்டவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அந்த சொத்துக்கள் யாருடையவை, எப்படி பெறப்பட்டவை என்பதும் விசாரித்து மஹிந்தவுக்கு பின்னால் அழுது புலம்பித்திரியும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். அதே போல் மற்றைய ஜனாதிபதிகளின் வசிப்பிடங்களும் ஆராயப்படவேண்டும். பாதாள, போதைக் கும்பல் பிடிபடும்போது நாமல் கதறுகிறார். ரணில் கைது செய்யப்படும்போது எல்லா அரசியல் கள்ளரும் தெருவில் இறங்கி குதிக்கின்றனர். அதற்குள் புலிகளை இழுத்து, இராணுவத்தினரை காட்டி, தமது ஊழலை கொலைகளை மறைக்கப் பாடுபடுகின்றனர். இப்போ அனுரா செய்ய வேண்டியது; இவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி மக்களை கூட்டுகின்றனரோ, அந்த ஆயுதத்தை பாவித்து இவர்களை விட்டு மக்களை விரட்ட வேண்டும். ஆதாரத்தோடு இவர்களின் குற்றங்களை இவர்களை சுற்றி மக்கள் கூடும்போது வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மக்கள் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். நாடே ஊழலால் நிறைந்திருந்திருக்கு. அபேய வர்தன யாப்பாவை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, யாரந்த வீடு வழங்கும் தொழிலதிபர் என்பதை அறிந்து விசாரிக்க தொடங்கவும். அத்தனையும் மஹிந்தவின், சிரந்தியின் பெயரில் பதியப்பட்டுள்ள வீடுகளாக இருக்கலாம். மக்களை என்ன ஆசை வார்த்தை கூறி, எதை கொடுத்து திரட்டுகின்றனர், அவர்களை திரட்டும் திருடர்கள் யார், அவர்களுக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவர்களது தொழில் என்ன என்பதையும் ஆராய வேண்டும். இப்போ குடும்பமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்க போகிறார்கள் போலுள்ளது.
1 day 16 hours ago
ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏
1 day 16 hours ago
கண்ணீர் அஞ்சலிகள்….!
1 day 16 hours ago
1 day 17 hours ago
வைத்தியகலாநிதி சுதர்சனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
1 day 18 hours ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப் பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல் முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள். அருண் தன் லண்டன் வாழ்வை சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின. அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது சாப்பிடுவோமா” என்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானே… பிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது. தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ... அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்! நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை ஈர்ப்பதற்காக வெளியே வந்து சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கி விட்டது. ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்! அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது. இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன் தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன் பறக்கும் பறவை நானோ .. விரியும் மலர்கள் நீயோ தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி! உன் கண்கள் அலைய என் மனம் அலைய நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன் என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்! அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல் உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர். அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள். அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில், அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31301211756194063/?
1 day 20 hours ago
தெய்வமும் மனித டாக்குத்தரும் ஒன்று என என் அம்மா சொல்லும். அந்த தெய்வங்களின் மீது எனக்கு என்றும் அதீத நம்பிக்கையும் மரியாதையும் உண்டு.பல உயிர்களை காப்பாற்றுபவர்கள். அந்த மனித வைத்தியர்களை எல்லா நாடுகளிலும் தெய்வங்களுக்கு இணையாகத்தான் பார்ப்பார்கள்.🛕🕌🕍 வைத்தியர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்களது சுகாதார வாழ்க்கையும் ,நடைமுறைகளும்,பழக்க வழக்கங்களும்,ஏனைய மனிதர்களுடனான அணுகு முறைகளும்,அவர்களது நோயற்ற வாழ்வும் முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் இன்று அவர்களுக்கே இளமையில் அகால மரணங்கள் வரும்போது சாதாரண/ என்னைப்போன்ற பாமர மக்கள் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியுள்ளது. இன்றைய காலங்களில் பல பிரபல்யங்களின் அகால மரணங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.பிரபல்யம் இல்லாதவர்களின் அகால மரணங்களும் அதிகரித்துள்ளைத என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏன் எப்படி என நான் விவாதிக்க வரவில்லை.என் சுற்றாடலில் வாழும் ஜேர்மனிய நண்பர்கள்,மக்கள் கொஞ்சம் நெருடலுடன் சுட்டு விரலை ரொய்லட் பேப்பருக்கு அடிபட்ட காலத்தை நோக்கி காட்டுகின்றார்கள். அதை நான் நம்பவில்லை. வைத்தியர் நிமல ரஞ்சனுக்கு என் அஞ்சலிகள்.🙏
1 day 21 hours ago
இவர் யாழ் மருத்துவபீடத்தில் கற்றவரா? உயர்தரம் எந்த ஆண்டு?
1 day 22 hours ago
ஓமோம்..... உலகத்திலையே முதல் முதலாய் ஒன்லைன்ல கட்சி நடத்தி முதலமைச்சராய் வந்த ஜாம்பவான் இவராய்த்தான் இருக்கும்.😂 எங்கடை ஈழத்து மருமோன்ர தில்ல பாத்தீங்களோ சார்? பணம் என்னடா பணம். நான் பாக்காத பணமா? எங்கட மருமோன்ர சிந்தனை எல்லாம் மக்கள் சேவை...மக்கள் சேவை....மக்கள் சேவை...மக்கள் சேவை அதை தவிர வேறொன்றுமில்லை.மற்ற காசுக்காரர் எல்லாம் என் கால் தூசுக்கு சமம் பீலிங்யா 😃 வருங்கால அம்மா ஜெயலலிதாவும் ரெடியாம்🤪 ஈழத்து பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டவர் எண்டபடியாலதான் கச்சதீவை சீதனமாய் கேக்கிறாரோ? 🤣 யாவும் கற்பனை.
1 day 22 hours ago
தொடர்ந்து வைத்தியர்களை இழப்பது கஸ்டமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்.
1 day 22 hours ago
”இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல் தான் மை டியர் சிஎம் சார்” – விஜய் பேச்சு! 13 Sep 2025, 11:30 PM ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான் என விஜய் விமர்சித்துள்ளார். திருச்சியை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 13) இரவு அரியலூர் மக்களை சந்தித்து தனது பரப்புரையை மேற்கொண்டார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். ரீல் அறுந்து போய்விட்டது! அவர் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான் ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா? கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்’ என கதை விடுகிறீர்களே My Dear CM Sir… உங்களுக்குதான் ஆசையா, பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டுதே My Dear CM Sir…” என மதுரை மாநாட்டில் தான் அங்கிள் ஸ்டாலின் என பேசியது விமர்சனத்துக்கு உள்ளானதை சூசகமாக சுட்டிக்காட்டினார் விஜய். ”ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என நீங்களே சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது. அப்படி அறுந்து போனது எவையெல்லாம் தெரியுமா? எனக் கூறி திமுக-வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார் விஜய். அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.1000, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள், மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் மானியம், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தம் போன்ற திமுக வாக்குறுதிகளை கூறி செய்தீர்களா என அரசை நோக்கி கேள்விகளை அடுக்கினார் விஜய். அதற்கு இல்லை என்றனர் அங்கிருந்த தொண்டர்கள். அரியலூருக்கு செய்தது என்ன? தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்டம் குறித்து பேசுகையில், “வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர். சிமெண்ட் உற்பத்தி, முந்திரி தொழில், பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை என்னவானது? இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன்?” என விஜய் கேள்வி எழுப்பினார். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்! அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தால், தனது வாக்குறுதியாக, “ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி; மனசாட்சி உள்ள மக்களாட்சி… இதுதான் நமக்கு வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்!” எனக்கூறி விஜய் தன் பேச்சை முடித்தார். https://minnambalam.com/all-you-are-releasing-today-is-a-reel-my-dear-cm-sir-vijay/
1 day 22 hours ago
ஹாட்லியின் மைந்தன். எங்களுக்கு சீனியர். சத்திர சிகிச்சை நிபுணர் நிமலரஞ்சனின் இழப்பினால் துயரில் இருக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
1 day 23 hours ago
மருத்துவ தொழில் ஒரு உன்னதமானது . நாட்டுக்கும் அவர் குடும்பத்திற்குபேரிழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
1 day 23 hours ago
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்! கல்முனை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்ந்த இவரது இழப்பு அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அன்னாரின் இழப்புக்கு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.
Checked
Mon, 09/15/2025 - 19:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed