புதிய பதிவுகள்2

அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை

21 hours 59 minutes ago
மதத்தினை தமது வக்கிரங்களுக்காக பாவிப்பவர்கள், இதில் அனைத்து மதங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இதுதான். பின் தங்கிய நாடுகளில் அதிகாரங்கள் பக்க சார்பாக இருப்பதால் இந்த கொடுமைகள் தொடர்கதையாகிறது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

22 hours 14 minutes ago
நான் எப்படி இந்தியாவினை தெரிவு செய்துள்ளேன் என தெரியவில்லை! அடுத்த போட்டியில் சந்திப்போம் (எங்களுக்கு போட்டி முடிவடைந்து விட்டது) இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எனது நிபந்தனை அற்ற ஆதரவு, என்னுடன் அவுஸ்ரேலியா வெல்லும் என தெரிவு செய்த அனைவரும் தென்னாபிரிக்காவிற்கு தமது ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிற்கும் ஐ சி சி போட்டிகளுக்கும் எட்டா பொருத்தம், இந்தியா இறுதி போட்டியில் தோற்றால் இந்தியாவினை தெரிவு செயாத அனைவருக்கும் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கா?🤣

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

23 hours 4 minutes ago
இந்தியா ம‌க‌ளிர் 2017ம் ஆண்டு 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் பின‌லில் பிட்ட‌ பிழைய‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் விட‌ மாட்டின‌ம் என‌ ந‌ம்புகிறேன்.................................

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

23 hours 7 minutes ago
இங்கு புலிகள் செய்த செயல்களுக்கு தமிழர்கள் பொறுப்பேற்க முடியாது. அதே போல இலங்கை இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்பட்ட முஸ்லீம் ஊர்காவற்படை செய்த செயலுக்கு முஸ்லீம் மக்களும் பொறுப்பேற்க முடியாது. செய்தியில் கூட பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் என்று தான் கூறப்பட்டிருகிறதே தவிர தமிழர்கள் எடுத்த தவறான முடிவால் என்றோ, தமிழர்கள் தான் இதற்கு பொறுப்பு என்றோ கூறப்படவில்லை. எனவே, இது போன்ற விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இந்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வாழும் தமிழ் மக்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

23 hours 13 minutes ago
நான் இந்தியா இறுதிப் போட்டிக்கு போய், அங்கே ஆஸ்திரேலியாவிடம் தோற்கும் என்று தெரிவு செய்திருந்தேன்.............ஆனால் நாலு பேர்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கே போகாது என்று தெரிவு செய்திருக்கின்றார்கள்.............. இந்த உலகத்தில் எப்போதும் நாலு பேர்கள் நம்மள விட கஷ்டமான நிலையில் இருக்கின்றார்கள் போல.................😜.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

23 hours 29 minutes ago
வினா 33) இறுதி போட்டிக்கு இந்தியா தெரிவாகுமென 11 போட்டியாளர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்கள். 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் 2) ஏராளன் - 61 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 61 புள்ளிகள் 4) ரசோதரன் - 59 புள்ளிகள் 5) சுவி - 57 புள்ளிகள் 6) கிருபன் - 57 புள்ளிகள் 7) புலவர் - 57 புள்ளிகள் 8) வீரப்பையன் - 56 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 55 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 11) வாதவூரான் - 53 புள்ளிகள் 12) வசி - 51 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 14) கறுப்பி - 50 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 75).

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

23 hours 37 minutes ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது } (2) ஆண் : { புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது } (2) ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ஆண் : { அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : உள்ளம் ஒன்று பறந்து வந்தது { உறவு கொள்ள பிறந்து வந்தது } (2) ஆண் : { தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : தர்மம் ஒன்று மயங்குகின்றது { தன்னை எண்ணி கலங்குகின்றது } (2) ஆண் : புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ........! --- மெழுகுவர்த்தி எரிகின்றது ---

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

23 hours 44 minutes ago
என‌க்கு இந்த‌ ம‌க‌ளிரை பிடிக்கும் இவாக்கு கிரிக்கே ம‌ற்றும் ந‌ட‌ன‌ம் ம‌ற்றும் இசை பிடிக்கும் நான் பார்த்த‌ ம‌ட்டில்🙏🥰..........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

23 hours 45 minutes ago
🤣............... 🤣............... நான் இப்பொழுது எவருடனும் பேசும் மனநிலையில் இல்லை. சிறுவயதில், பெரும் வயதில் என்று நான் வழியே வழியே தோற்ற ஆயிரக்கணக்கான போட்டிகள் என் ஞாபகத்தில் இப்பொழுது வந்துவிட்டன. சில நாட்களின் பின் ஒரு வீடியோவை வெளியிடுவதாக உள்ளேன்......................🤣.

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்

23 hours 46 minutes ago
வைகோவும் சீமானும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிபிடித்து கொண்டனர் என்ற செய்தியை படித்து நானும் யோசித்து கொண்டிருக்க இப்படியும் ஒரு செய்தி.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

23 hours 47 minutes ago
சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Ranjini Kanna ·oeSosndtpr5t2o:09ict1c88gfbaml5gc529m1 911fi ta8251ag,rchoet · ஒரு நாள் பயணம்... கணவர் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்களை மட்டும் எழுப்பினார் பெர்த்தா. மூவருமாகச் சேர்ந்து, ஓசை எழுப்பாமல் ஷெட்டிலிருந்து காரைத் தள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் தனது அன்னை வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார் பெர்த்தா. கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்குப் போகும் சாதாரணப் பயணம் அல்ல அது. பிறகு? ஜெர்மெனியில் வளமான குடும்பத்தில் பிறந்தார் பெர்த்தா. கார்ல் பென்ஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கார்ல் பென்ஸ் திறமையான பொறியியலாளர். குதிரைகள் இல்லாமல், எந்திரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார். அதுதான் காப்புரிமை பெறப்பட்ட முதல் பென்ஸ் மோட்டார் கார். ஆனால் அந்த பென்ஸ் மோட்டார் காரை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. குதிரை வண்டிகள்தான் வசதியானவை என மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. மோட்டார் கார் குறித்து பகடிகளும் எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. கார்ல் பென்ஸால் இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறையப் பணத்தை முதலீடு செய்து, பெரிய கனவுகளுடன் உருவாக்கிய மோட்டார் கார் தோல்வி அடைந்ததாக எண்ணிக் கலங்கிப் போனார். ஆனால் பெர்த்தா அதைத் தோல்வியாகக் கருதவில்லை. பிரச்சனை மோட்டர் காரில் இல்லை, மார்க்கெட்டிங்கில்தான் இருக்கிறது. முறையாக மக்களிடம் அறிமுகப்படுத்தினால், வெற்றிபெறக் கூடிய வாகனம்தான் என்று உறுதியாக நம்பினார். நம்பிக்கையை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல் செயலில் காட்ட முடிவெடுத்தார். காரை எடுத்துச் செல்கிறேன் என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். மூன்று சக்கரங்களைக் கொண்டு ரிக்ஷா வடிவிலிருந்த காரைத் தானே கிளப்பினார். தனது இரு மகன்களையும் ஏற்றிக் கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பெற்றோர் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினார். முறையான சாலைகள் அப்போது இல்லை. திசைகளைச் சுட்டும் பதாகைகளும் இல்லை. முழுப் பயணத்துக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி அந்தக் காரில் இல்லை. அத்தனை தூரம் அதற்கு முன்னர் யாரும் ஓட்டியதும் இல்லை. எல்லா இல்லைகளையும் துணிச்சலை மட்டுமே கொண்டு இட்டு நிரப்பினார் பெர்த்தா. வழியில் மருந்துக் கடையில் நிறுத்தி, அங்கிருந்த மொத்த லிகோரினையும் வாங்கிக் கொண்டார். பெட்ரோலியக் கரைப்பானான லிகோரின்தான் காரின் எரிபொருள். அந்த மருந்துக் கடைதான் உலகின் முதல் பெட்ரோல் ஸ்டேஷன். (அந்தக் கட்டடம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் இருக்கிறது) காருடைய சிறிய இன்ஜின் அடிக்கடி சூடானது. அதைத் தணிக்க வழியில் கண்ட ஆறுகள், நீரோடைகளில் காரை நிறுத்தி, இன்ஜின்மேல் தண்ணீர் ஊற்றினார். மேடுகளில் மூவருமாக இறங்கி வண்டியைத் தள்ளினர். அப்படியும் கார் பாதி வழியில் நின்று போனது. பெர்த்தா பதட்டப்படவில்லை. என்ன கோளாறு என்று ஆராய்ந்தார். எரிபொருள் செல்லும் குழாயில் தூசி அடைத்துக்கொண்டிருந்தது. தொப்பியில் சொருகியிருந்த ஊசியை வைத்து அடைப்பை நீக்கினார். இக்னிஷன் ஒயர் சூடானபோது, தான் அணிந்திருந்த பெல்ட்டினைக் கழற்றி ஒயரில் சுற்றி விட்டார். கோளாறுகள் இத்தோடு நிற்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் இணைப்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. சிறுவர்கள் இருவரும் கொல்லரைத் தேடி அழைத்து வந்தனர். இரும்பைப் பற்றவைத்து இணைத்தபின் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக மரத்தால் செய்யப்பட்ட பிரேக் கட்டைகள் உடைந்து போயின. செருப்புத் தைப்பவரை அழைத்து பிரேக் கட்டைகளில் லெதர் வைத்துத் தைக்கச் சொன்னார். நூற்று ஆறு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று மாலை அன்னை வீட்டை அடைந்தார் பெர்த்தா. தனது பயணம் வெற்றிகரமாக நிறைவடந்ததைக் கணவருக்கு தந்தியடித்துச் சொன்னார். மெக்கானிக்குகளை உடன் வைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பெர்த்தாவின் நெடுந்தூரப் பயணம், மக்களிடத்தில் ஓர் ஆர்வத்தையும், இந்தக் காரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தையும், பென்ஸ் கார் குறித்த பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது. தானே ‘டெஸ்ட் டிரைவ்’ செய்திருந்ததால், அந்த அனுபவத்திலிருந்து பல பயனுள்ள குறிப்புகளைச் சொன்னார். மேடுகளில் ஏறுவதற்கு எனத் தனி கியர், பிரேக் கட்டைகளில் லெதர் லைனிங் என அவர் முன்வைத்த யோசனைகள் இன்றுவரை கார்களில் பொருத்தப்படும் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. பெர்த்தா குறிப்பிட்ட வசதிகளைச் சேர்த்தார் கார்ல். புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் பென்ஸ் கார் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடைந்த பெருவெற்றிக்கும், மோட்டார் கார்களின் பரவலான ஏற்புக்கும், பெர்த்தா துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த ஒரு நாள் பயணமே அஸ்திவாரமாக அமைந்தது. இன்று நாம் செல்லும் நீண்ட சாலைப் பயணங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த முன்னோடியாக அறியப்படுகிறார் பெர்த்தா பெனஸ். Voir la traduction

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்

23 hours 52 minutes ago
இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂
Checked
Fri, 10/31/2025 - 17:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed