புதிய பதிவுகள்2

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

4 hours 30 minutes ago
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் இலஞ்ச விவகாரத்தில் சிக்குபட்டார்...📍 இடத்திற்கான உரிமத்தை பெற்றுதருவதாகக் கூறி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தை பெற்ற சந்தர்ப்பத்தில், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் இன்று (31) முற்பகல் குச்சவெளி பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Lanka Truth தமிழ் ·

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

4 hours 48 minutes ago
யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிப்பு..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர். பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Sakthi FM

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

5 hours ago
பொலிஸ் முஸ்தீபு - தமிழை கொல்கிறார்கள். நூறாண்டு கால பாரம்பரியம் உள்ள வீரகேசரி எழுதும் தலையங்கம் இந்த கேவலத்தில் உள்ளது.

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

5 hours 8 minutes ago
31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk

நெடுந்தீவு கடல் பகுதியில் 41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

5 hours 18 minutes ago
31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, வியாழக்கிழமை (30) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு பைகளில் 85 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

5 hours 19 minutes ago
முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் Published By: Digital Desk 1 31 Oct, 2025 | 04:07 PM வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இன்று முதல் இலவசமாக பொலித்தீ பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீ பைகளின் விலையும் இன்று முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை (நவ. 01) முதல் பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என ஏற்கனவே வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளையதினம் முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229133

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

5 hours 22 minutes ago
Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 11:42 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. https://www.virakesari.lk/article/229118

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

5 hours 26 minutes ago
31 Oct, 2025 | 04:03 PM தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும். "மகரஜோதி" தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும். இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில், மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும். பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால், பக்தி மார்க்கத்தில், தமது நேர்த்திக்கடன், பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல. இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/229152

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

5 hours 27 minutes ago
அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

5 hours 37 minutes ago
எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

5 hours 38 minutes ago
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmheoaqth01b3o29nqg3z56h8

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

5 hours 50 minutes ago
மிகவும் காத்திரமான கருத்து. நான் அவர்களின் வலியை இல்லை என சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய சேர்க்கையை கொண்டு வருவதுதான்…. இவர்களின் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் இதை பெருபித்து காட்டவிளைகிறார்களோ என எண்ண வைக்கிறது.

கடலில் தொலைந்த அலைச்சறுக்கு பலகை: 2,400 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

5 hours 53 minutes ago
2400 கி . மீ . பயணித்து இருக்கிறது ........ கடலும் கடல் நீரோடடமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது ...........! 🙂

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

6 hours 7 minutes ago
இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு! இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது. புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். எனவே பயணிகள் அக்டோபர் 15 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451655

கடலில் தொலைந்த அலைச்சறுக்கு பலகை: 2,400 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

6 hours 18 minutes ago
பட மூலாதாரம், Alvaro Bon படக்குறிப்பு, அல்வரோ போன் கட்டுரை தகவல் லானா லாம் சிட்னி 30 அக்டோபர் 2025 சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஒரு படகிலிருந்து தவறி விழுந்த, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்ப்ஃபோர்டு (அலைச்சறுக்கு பலகை), கடலில் சுமார் 2,400 கிமீ (1,490 மைல்கள்) தூரம் மிதந்து சென்று, நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்குத் தீவில் உள்ள ராக்லான் துறைமுகத்தில் கைட்சர்ஃபிங் (kitesurfing) செய்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்வரோ போன் என்பவர், கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார். அவர் தான் கண்டுபிடித்தது குறித்துப் பல ஆன்லைன் சர்ஃபிங் குழுக்களில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பலகையின் உரிமையாளரின் நண்பர் அதைக் கண்டு, இருவரையும் இணைத்து வைத்தார். இந்தப் பலகை இந்த வாரம் அதன் ஆஸ்திரேலிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். அந்த உரிமையாளர், லியாம் என்று மட்டுமே அறியப்படுகிறார். மே 2024-இல் இந்தப் பலகை படகில் இருந்து காற்றில் பறந்து சென்றது. "அவரால் நம்பவே முடியவில்லை," என்று போன் பிபிசியிடம் கூறினார். அதன் வடிவமைப்பாளர் தற்போது சர்ஃப் போர்டுகளைத் தயாரிப்பதில்லை என்பதால், அந்தப் பலகைக்கு மாற்று இல்லை என அவர் மேலும் கூறினார். சுமார் பத்து ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வரும் 30 வயதான போன், ராக்லானில் தினசரி கைட்சர்ஃபிங் செய்கிறார். பலகையைக் கண்ட நாளன்று வலுவான நீரோட்டங்கள் காரணமாகத் தன் காற்றாடிச் சறுக்குக் கயிற்றை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். கடலில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொள்வதை விட தனது பட்டத்தை இழப்பது மேல் என்ற என சட்டென அவர் முடிவெடுத்தார். அவர் துறைமுகத்தின் தொலைதூரப் பகுதிக்கு சென்றபோது புகுந்தபோது, கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த ஆனால் பெரிதாக எந்தச் சேதமும் இல்லாத, கிரீம் நிறத்தில் இருந்த 7 அடி 6 அங்குல (229 செமீ) பலகையைக் கண்டார். அவர் அதை மணல் மேடுகளில் மறைத்து வைத்து, சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து, அதை துறைமுகத்துக்கு எடுத்துச் சென்றார். பலகையைச் சுத்தம் செய்த பிறகு, அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். பலகையின் வடிவமைப்பாளரின் தனித்துவமான கையொப்பத்தைக் காட்டும் படங்களை அவர் பதிவிட்டார். "நிச்சயமாக இது தினமும் பயன்படுத்தப்படும் பலகை அல்ல... இது கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மிதந்து வந்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன்?" என்று அவர் எழுதினார். "அந்த செய்தியில் நான் அந்தப் படங்களையும் பதிவிட்டேன். பின்னர் நான் ராக்லானில் மீண்டும் அலைச்சறுக்குச் சாகசத்துக்குச் சென்றேன் என்று நினைக்கிறேன்," என்று போன் கூறினார். திரும்பி வந்தபோது, மர்மமான பலகை பற்றிய பதில்களால் அவரது தொலைபேசி நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், இந்த அசாதாரண கண்டுபிடிப்பு குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். லியாமின் நண்பர் பலகையைக் கண்ட பிறகு, லியாம் அதன் உரிமையாளர் என்பதைக் நிரூபிக்கப் பலகையின் படங்களை போனுக்கு அனுப்பினார். மேலும், ஒரு குடும்ப நண்பரைத் தொடர்புகொண்டு அதை எடுத்து வர ஏற்பாடு செய்தார். தனது விதியினால் ஏற்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு குறித்துப் போன் தத்துவார்த்தமாகப் பேசினார். "ஒவ்வொரு கதைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது... நான் சர்ஃப் போர்டைக் கண்டுபிடித்த அதே நேரத்தில், என் காற்றாடிச் சறுக்கை இழந்தேன்," என்று அவர் கூறினார். "ஒருவேளை அதுதான் அர்த்தமாக இருக்கலாம்... சில சமயங்களில் நீங்கள் சிறந்தவற்றைக் கண்டுபிடிக்கச் சில விஷயங்களை விட்டுவிட வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7nd17v4nxo

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

6 hours 23 minutes ago
மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது. ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது. தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம். ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும். ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல் டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல் எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல். இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம். ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள். மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம். அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார். அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை. இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது. விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள். ஜெமினி இப்படி சொல்கிறது. Countries with no extradition treaty Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. Countries that do not extradite their own citizens to the UK China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது. பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம். கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது. இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம். நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம். ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂. ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம். இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

6 hours 23 minutes ago
31 Oct, 2025 | 03:36 PM “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிஸ்டல் ரக துப்பாக்கியை மறைத்து வைப்பதற்கு ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி கடவத்தை பிரதேசத்தில் வைத்து ஒக்டோபர் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்டபுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக கம்பஹா நீதிமன்றில் 5 வழக்குகள் காணப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் கைதுசெய்யப்பட்ட போது இந்த பெண் சட்டத்தரணி, அந்நாட்டுக்குச் சென்று குடு சலிந்துக்காக வாதிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருடன் வாட்ஸ்அப் ஊடாக தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “தருன்” என்பவர் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229148

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

6 hours 34 minutes ago
"என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை" - ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு ஜெமிமா கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார். கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் " மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது." இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய சொற்கள் இவை. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை விவரிக்க இதைவிட சிறந்த சொற்கள் இருக்க முடியாது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த அற்புதமான சதமும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீருடன் நிறைந்த 89 ரன்களும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன. அமன்ஜோத் வெற்றிகரமான ஷாட்டை அடித்ததும், ஜெமிமா ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தார். அதே நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, தன்னைச் சுற்றியிருந்த வீராங்கனைகளை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்கினார். ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின. அவர்களின் கூட்டணி, பல சாதனைகளை முறியடித்து, இந்தியாவை மூன்றாவது முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. அதுவும், முந்தைய 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவர்கள் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியிலும், ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் இணைந்து விளையாடத் தொடங்கும் வரை ஆஸ்திரேலியா தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அகாடமியில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 339 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இது மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த ஸ்கோராகக் கருதப்படுகிறது. பின்னர் ஆஸ்திரேலியா இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவை 9.2 ஓவர்களில் 59 ரன்களுக்கு வெளியேற்றியது. அதனால், ஒரு கட்டத்தில் இந்தியா போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியதாகவே தோன்றியது. மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யப்போவது குறித்து தெரியாது- ஜெமிமா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டார். அப்போது தான் போட்டியின் சூழலே மாறத் தொடங்கியது. ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் தொடர்ந்து வேகமாக ரன்கள் குவித்து, ரன் விகிதத்தின் அழுத்தத்தை சமாளித்தனர். கடினமான சூழ்நிலையிலும், ஜெமிமா 56 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டியதும், இன்னும் வேகமாக விளையாடத் தொடங்கினார். சதம் அடிக்க முடியாவிட்டாலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தனர். இது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் சிறந்த மூன்றாவது விக்கெட் கூட்டணியாக அமைந்தது. ஜெமிமா மிகுந்த மன உறுதியுடன் களத்தில் நின்றதால், போட்டிக்குப் பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவரைப் பற்றி பெருமையாகப் பேசியார். "ஜெமிமா முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டது போல இருந்தது. நாங்கள் இருவரும் பேட்டிங் செய்தபோது, ஒருவரையொருவர் ஊக்குவித்தோம். ஜெமிமா அழுத்தத்தை அதிகரிக்க விடாமல், என்னை எளிமையாக விளையாடச் செய்தார். அவருடன் பேட்டிங் செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர், தான் ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் தொடர்ந்து ரன்கள் எடுக்கத் தூண்டினார். எல்லா பாராட்டுக்களும் அவருக்கே சொந்தம்"என போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய ஜெமிமாவுக்கு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டியது குறித்த தகவல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் கிடைத்தது. "நான் சாதாரணமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மூன்றாவது இடத்துக்கும் அனுப்பப்படுவேன். இந்த முறை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்"என போட்டிக்குப் பிறகு அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர். "நான் அணி வெற்றி பெற உதவ விரும்பினேன்" ஆனால் ஜெமிமா களமிறங்கிய தருணத்திலிருந்தே, இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் கொண்டு செல்லாமல் பெவிலியனுக்குத் திரும்பமாட்டேன் என்ற உறுதியுடன் விளையாடியதை போல தோன்றியது. அதனால்தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி போன்ற பெரிய மேடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்த பிறகும் அவர் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. இந்தியா வெற்றியடையும் வரை காத்திருந்தார். போட்டி முடிந்ததும் அவர் ஆட்ட நாயகர் பட்டத்தைப் பெற்றபோது, 127 ரன்கள் கொண்ட அவரது அற்புத இன்னிங்ஸின் கதையைச் சொல்ல எந்த வார்த்தைகளும் தேவைப்படவில்லை. அவர் சிந்திய கண்ணீரே அந்தக் கதையைச் சொன்னது. "நான் ஒரே ஒரு விஷயத்தை தான் நினைத்தேன். அணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். இன்று அது எனது 50 அல்லது 100 ரன்களைப் பற்றியது அல்ல. இந்தியா வெற்றி பெறுவதே முக்கியம்"என்று ஜெமிமா கூறினார். இந்த வெற்றியின் அடித்தளம் என, ஹர்மன்ப்ரீத் கவுருடன் இருந்த தனது கூட்டணியை அவர் விவரித்தார். "கடைசி வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் கிரீஸுக்கு வந்ததும், நாங்கள் நல்ல கூட்டணியை உருவாக்குவது பற்றிப் பேசினோம். தொடர்ந்து ரன்கள் எடுக்க முடிவு செய்தோம்," என்று ஜெமிமா கூறினார். ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் கூட்டணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு அணி நாக்அவுட் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டுவதில் வெற்றி பெற்றது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார். ஜெமிமாவின் கடினமான பயணம் உலகக் கோப்பையின் அரையிறுதிக்குச் செல்வது எவ்வளவு கடினமான பயணமாக இருந்தது என்பதை ஜெமிமா போட்டிக்குப் பிறகு பகிர்ந்தார். "கடந்த நான்கு மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் நான் என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாங்கள் முக்கியமான தருணங்களில் வெற்றியை இழந்துவிட்டதால், இந்த முறை அணியை வெற்றியடையச் செய்வதே என் ஒரே இலக்கு"என அவர் கூறினார். 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமிமா, அவற்றில் மூன்று சதங்களை அடித்துள்ளார், மேலும் அந்த மூன்று சதங்களும் இந்த ஆண்டில் அவர் பெற்ற வெற்றிகள். அதே நேரத்தில், 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதில் ஏற்பட்ட தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "கடந்த முறை நான் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த முறை நான் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்தேன்," என்று ஜெமிமா கூறினார். "ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதேன். மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் இருந்தேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு சவால் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது"என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். சிரமங்களை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கண்ணீருடன் காணப்பட்டார். ஜெமிமாவைப் போலவே, ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இந்த உலகக் கோப்பை ஒரு கடினமான பயணமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில், இந்தியா அரையிறுதிக்கு செல்ல முடியாது என தோன்றியது. ஆனால் ஆறாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஹர்மன்ப்ரீத் கவுரின் அணி வலுவாக மீண்டு வந்தது. அத்துடன், இந்த முறை வரலாற்றை உருவாக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியது. அரையிறுதிக்கு முன் சிறந்த ஃபார்மில் விளையாடி வந்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ஏற்பட்ட காயம், இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. உலகக் கோப்பையின் போது ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி, அணியின் பீல்டிங் குறைபாடுகள், எதிர்பார்த்த ரன்கள் கிடைக்காதது போன்றவை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் இந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒரு இன்னிங்ஸிலேயே அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பதிலளித்ததாகத் தோன்றியது. இப்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையிலான இந்திய அணி, நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn09xvkxzk0o
Checked
Fri, 10/31/2025 - 17:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed