6 hours 39 minutes ago
      Published By: Priyatharshan 31 Oct, 2025 | 03:52 PM  ( வீ.பிரியதர்சன் ) வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.  2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் முகாமைத்துவக் கழகம் மற்றும் அதன் யாழ்ப்பாணக் கிளை இணைந்து வடக்கில் முதலீடு செய்யுங்கள் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ளன. இந்த “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ” வடக்கு மாகாணத்தை போட்டித்திறனுள்ள முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான ஒரு மூலோபய தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை முன்னுரிமைத் துறைகளில் உள்ள வணிக வாய்ப்புக்களுடன் இணைக்கும். இரு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாடு  அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறைநிர்வாகிகள், முதலீட்டாளர்கள், தூதர்கள், தொழில்முனைவோர், படைப்பாளிகள், புதுமையானவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒரே மேடையில் இணைக்க உதவும். இந்த மாநாடு  பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது, இதில் முக்கிய உரைகள், துறைகளுக்கேற்ப குழு விவாதங்கள், திட்டக் கண்காட்சிகள், சந்திப்புகள், அமர்வுகள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுப் பேச்சுகள் ஆகியன இடம்பெறும்.  பலதுறைகளில் முதலீடுகளை இந்த மாநாடு வெளிப்படுத்தக்கூடியதாக அமைகின்றது. குறிப்பாக வேளாண்மை மீன்பிடி, மற்றும் விலங்கு வேளாண்மை, பாரம்பரியம், சுற்றுலாத்துறை தொழில்கள், சுகாதாரம் சித்தமருத்துவம், கல்வி, தகவல்தொழில்நுட்பம், ஆகியவற்றை குறிப்பிடலாம். அத்துடன், இணைப்பு மதிப்பூட்டல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியனவும் இதில் அடங்கும்.  இதேவேளை, வடக்கிற்காக 3 புதிய தொழில்துறை மண்டலங்களை உருவாக்கும் இலங்கை முதலீட்டு சபைத் திட்டங்கள் மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் அடங்கும். முகாமைத்துவக் கழகம் இந்த முயற்சியை ஒரு நிகழ்வாக அல்லாமல் நீடித்த முயற்சியாக்கும் வருடாந்த வடக்கு முதலீட்டு அமைப்பாக நடத்தப்படும். நிரந்தர வடக்கு முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும். வடக்கு பிராந்திய முதலீட்டு வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக்கிளையின் தலைவர் அநுராகவன்,   Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna “ இலங்கையை உலகத்திற்கு எவ்வாறு மாற்றமுடியும். இதற்கு முன்னர் நாம் அதனை செய்துள்ளோமா ? ஆம் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானங்களுக்குள் ஒரு இளம் அணி நுழைந்த போது, அது வலுவிழந்த அணியாக இருந்தது. அதற்கு பல தடைகள் காணப்பட்டன. ஆனால் நாம் அனைவரையும் தோற்கடித்து, சவால்களையும் எதிர்கொண்டு வென்றோம். இலங்கையை உலகெங்கிலும் உள்ள அனைத்து பின்தங்கிய அணிகளின் விருப்பமான அணியாக மாற்றினோம். அது எவ்வாறு நடந்தது. நல்லதொரு தலைவர் இருந்தமையாலா ? அல்லது எங்களிடம் நல்ல யுக்தி காணப்பட்டதாலா ? அல்லது எங்களிடம் அர்ப்பணிப்புள்ள அணியின் உறுப்பினர்கள் காணப்பட்டமையாலா? அதற்கு அப்பால் சிறந்ததொரு இணைவு காணப்பட்டமையே அதற்கான பதிலாகும். அதேபோல் இலங்கையை உலகிற்கு முன்மாதிரியாக காண்பிப்பதற்கு எம்மிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான உபாயத்துடன் பணியாற்றி வருகின்றோம். இருப்பினும் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கையை வெற்றியான நாடாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த மாநாட்டின் ஊடாக அனைத்து பிரஜைகளும் தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பங்களிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய முன்வர வேண்டும்” என்றார். இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் திட்ட தலைவர் இந்திரா கே. ராஜபக்ஷ,  “இலங்கை முகாமைத்துவக் கழகம் மற்றும் எங்கள் கிளையான யாழ்ப்பாணக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெறுமனே மாநாடு மாத்திரமல்ல, இது ஒரு மாற்றத்திற்கான தருணமாகும் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு, புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்கும் முயற்சியும் கொண்ட தருணமே இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட முகாமைத்துவக் கழகம் முகாமையாளர்களுக்கிடையில் சிறியதொரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாணம் நீண்டகாலமாக ஏராளமான இயற்கை வளங்கள், படித்த இளைஞர்கள் துடிப்பான தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் உண்மையான ஆற்றல் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கவும் பார்வையை யதார்த்தமாகவும் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவதற்கு நாங்கள் ஒன்று கூடுகின்றோம்.” என்றார்.   முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, கைத்தொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட அரச தனியார் வலையமைப்பால் அனுசரணை வழங்கப்படும் இந்தமாநாடு, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கல்வியியலாளர்கள் தொழில் முனைவோர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  Left to Right: 1. Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna 2. Professor A. Atputharaja, Vice Chancellor, University of Vauniya 3. Dr. Prasad Jayasuriya, Director - Tourism Planning, Development and Investor Relations, Sri Lanka Tourism Development Authority 4. Mr. M. Piiratheepan, Government Agent – Jaffna 5. Mr. Indhra K Rajapaksa, Project Chair The Management Club (TMC) 6. Mr. Fayaz Saleem, Founder Emeritus -The Management Club (TMC) 7. Mr. Roger Talayaratna, President, The Management Club (TMC) 8. Mr. Damith Pallewatte, Managing Director / CEO- Hatton National Bank (HNB) 9. Ms. Renuka Weerakone, Director General- Board of Investment of Sri Lanka (BOI) 10. Mrs. Shanthi Bhagirathan, Vice President - Admin BOM and Project Co-Chair- The Management Club 11. Mr. Murali Prakash, Advisory BOM- The Management Club (TMC) 12 .Mr. Nasser Majeed, Advisory BOM- The Management Club (TMC) 13. Mr. Chandima Hulangamuwa, Vice President – Finance / BOM - The Management Club (TMC) https://www.virakesari.lk/article/229154
  
      
    
  
            
      
            6 hours 44 minutes ago
      அததெரண கருத்துப் படங்கள்.
  
      
    
  
            
      
            8 hours 5 minutes ago
      
  
      
    
  
            
      
            8 hours 17 minutes ago
      
  
      
    
  
            
      
            8 hours 20 minutes ago
      
  
      
    
  
            
      
            9 hours 23 minutes ago
      உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு October 31, 2025  — ராஜ் சிவநாதன் — சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, அநுரகுமார திசநாயக்க தெளிவாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை மறுபடியும் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் உரையாற்றும் போதும், “மாகாண சபை அமைப்பு தமிழர்களின் இரத்தத்தால் பெற்றது” என்றும் தெரிவித்தார். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று ஒலிகளாக மாறிவிட்டன.  1987ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசும் போல, மாற்றத்தின் பெயரில் மறைமுகமான அரசியல் மந்தநிலை மீண்டும் தோன்றியுள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், NPP நிர்வாகம் அவற்றை அமைதியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. தவிர்ப்பின் முறைமை: ஜனாதிபதி மற்றும் அவரது அரசு உண்மையில் தமிழ் பிரச்சினையைத் தீர்க்க விரும்பியிருந்தால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சட்ட வடிவம் உள்ளது, முன்னுதாரணங்கள் உள்ளன, தேவையும் மிகுந்தது. ஆனால் பதவியேற்று பதினைந்து மாதங்கள் ஆன பிறகும், அரசு காரணங்களையே கூறுகிறது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு மாகாண சபைகளை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு இருந்தபோதும், “வரையறைச் சிக்கல்கள்” மற்றும் “அமைவுச் சட்ட திருத்தம்” போன்ற காரணங்களின் பெயரில் தப்பித்துக் கொண்டது. இதன்மூலம் மைய அரசு, புறநிலப் பகுதிகளுடன் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. மாகாண மட்டத்தில் அதிகாரத்தை வழங்கியிருந்தால், அது ஜனநாயகப் பங்குபற்றலை உண்மையில் ஊக்குவித்திருக்கும். ஆனால் தாமதம், NPPயின் அரசியல் நடைமுறை முன்னோடிகளிடமிருந்து வேறுபடவில்லை என்பதையே நிரூபித்துள்ளது. மறைந்திருக்கும் அமைவுச் சட்ட நோக்கம்: அரசின் தயக்கத்திற்குப் பின்னால் இன்னொரு காரணம் மறைந்திருக்கலாம். NPP மற்றும் JVP வட்டாரங்களில் புதிய அமைவுச் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த அமைவுச் சட்டம் 13ஆம் திருத்தத்தை நீக்கவோ அல்லது அதன் அதிகாரங்களை குறைக்கவோ வாய்ப்புள்ளது. அதன் அரசியல் தர்க்கம் எளிமையானது, ஆனால் சூழ்ச்சியானது: தற்போதைய 13A சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அந்த அமைப்பு சட்டபூர்வமாக வலுப்பெறும்; பின்னர் அதை ரத்து செய்வது கடினமாகிவிடும். ஆகையால் தேர்தல்களை தவிர்ப்பது அரசின் திட்டமிட்ட அரசியல் உத்தி. 13A அமைப்பை செயலிழந்த நிலையிலேயே வைத்திருந்து, புதிய அமைவுச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை கொழும்பில் மையப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது. இதன்மூலம் NPP, “பகுத்தறிவான நிர்வாக முறைமை” என்ற பெயரில் அதிகாரப் பகிர்வை குறைக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது.  JVPயின் நெறி சுமை: இந்த முரண்பாடு JVPயின் அரசியல் வளர்ச்சியின் மையத்தையே வெளிப்படுத்துகிறது. ஒருகாலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர். இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும். தெற்கு மாகாணங்கள் மாகாண சபை அமைப்பை நிராகரிக்க விரும்பினாலும், வடக்கு மற்றும் கிழக்கில் அந்த அமைப்பு செயல்படுவதற்கான அரசியல் மற்றும் நெறி பொறுப்பு JVPக்கு உண்டு. உண்மையான சமரசம் சமநிலையற்ற முடிவுகளை வேண்டுகிறது — அரசியல் சுகமான இடங்களில் அல்ல, மிகத் தேவையான இடங்களில் சுயாட்சியை வழங்கும் தைரியம் தேவை. ஒருமைப்பாட்டுக்கான தவறவிட்ட வாய்ப்பு: அதிகாரப் பகிர்வு என்ற கருத்து இலங்கைக்கே புதிதல்ல. உலகின் பல ஜனநாயக நாடுகளில், ஐரோப்பாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தொடங்கி, உள்ளூராட்சி நிர்வாகமே திறம்பட செயல்படும் ஆட்சியின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இலங்கை, ஒவ்வொரு முடிவையும் மையத்திலிருந்து கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் செயற்திறனையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. NPPக்கு அந்த கதைநடையை மாற்றும் வாய்ப்பு இருந்தது, இடதுசாரி அரசு கூட பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டப் பூர்வ வாக்குறுதிகளை மதிக்கும் ஆட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க. ஆனால் அது சீர்திருத்தத்தின் சவாலை விட கட்டுப்பாட்டின் வசதியையே தேர்ந்தெடுத்தது. முடிவுரை: தமிழ் சமூகமும் அரசும் இடையிலான நம்பிக்கையின் சிதைவு ஒரே இரவில் நிகழவில்லை. அது பல தசாப்தங்களாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீறலாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் உருவானது. இப்போது NPP அதே பட்டியலில் தன்னைச் சேர்த்துக் கொள்வதற்கான அபாயத்தில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்து, 13ஆம் திருத்தத்தை குறைக்கும் புதிய அமைவுச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், அரசு ஆட்சியை நவீனப்படுத்துவது அல்ல, நம்பிக்கையின்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது. உண்மையான தலைமையேனும் கடந்த வாக்குறுதிகளை மதித்து, நிலவும் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்தி, உரையாடலின் வழியே ஒருங்கிணைந்த நிர்வாகத்தை உருவாக்குவதாக இருக்கும். அது நிகழும்வரை, “புதிய அரசியல் பண்பாடு” என்ற வாக்குறுதி இலங்கையின் நிறைவேறாத சீர்திருத்த வரலாற்றில் இன்னொரு வெற்று கோஷமாகவே இருக்கும். https://arangamnews.com/?p=12407
  
      
    
  
            
      
            9 hours 29 minutes ago
      யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM  யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன.  இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார்.  அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமையப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும் எனவே மைதானம் அமைக்கப்பட கூடாது என இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்  அந்த நிலையில் நேற்றைய தினம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், யாழ். மாவட்ட மேலதிக செயலர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் , வேலணை பிரதேச செயலாளர் , தவிசாளர், இலங்கை துடுப்பாட்ட சபை இணைப்பாளர் ,கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வள சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்,  வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர்  உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.  https://jaffnazone.com/news/51780
  
      
    
  
            
      
            9 hours 30 minutes ago
      யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது வெள்ளி, 31 அக்டோபர் 2025 05:05 AM  யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி  முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒரு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடம். ஆனால் அண்மையில் அதனை தற்செயலாக பார்த்தபோது அது மாநகர சபையினுடைய சொத்து என்ற நிலையில் இல்லாமல் வேறு பலர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தது. அதை ஆராய்ந்த பொழுது அந்த சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. அந்தக் கட்டடத்தின் மேல் பகுதியிலேயே தான் பொது நூலக ஸ்தாபகர் செல்லப்பா பொது நூலகத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஆதாரமாக யாழ் மாநகர சபையின் வெள்ளி விழா மலரை குறிப்பிடலாம். அந்த மலர் வெளியிடும் போது யாழ் மாநகர சபையில் கணக்காளராக நான் இருந்தேன். குறித்த காணி தனியாரின் காணியாக இருந்தது. யாழ் மாநகர சபை, நகர சபையாக இருந்த காலத்தில் அந்த கட்டிடம் தேவை கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தகத்திலே கொள்வனவு செய்த கட்டிடங்கள் என்று பட்டியலில் களஞ்சியசாலை வசதிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி மாநகர சபை ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இது தொடர்பிலான நடவடிக்கைக்கு வலியுறுத்தி இருக்கிறேன். இந்த விடயத்தை வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தான் இந்த இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அது பற்றை  வளர்ந்து மாநகர சபை சொத்தாகவே பார்க்கப்படவில்லை. தற்போது அங்கு தற்காலிக வியாபார நிலையம் ஒன்று இயங்குகிறது. அது குத்தகைக்கு கொடுத்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக அதனை மீளப்பெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகர முதல்வருக்கும் கடிதத்தின் பிரதியை அனுப்பி இருக்கிறேன். குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மோசடிக்கு யார் யார்  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும். மாநகர சபையின் சொத்தை மாநகர சபையின் பதிவேட்டிலேயே மாற்ற முடியும் என்று சொன்னால் எந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. உடனடியாக இந்த விடயத்தில் ஆணையாளர், ஆளுநருடன் கதைத்து புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸாரின் விசேட பிரிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலேயே இந்த விடயத்தை முறைப்பாட்டை செய்ய வேண்டும். இந்த மோசடிக்கு துணை போனவர்களை அம்பலப்படுத்த வேண்டும் - என்றார். https://jaffnazone.com/news/51784
  
      
    
  
            
      
            10 hours 37 minutes ago
      மாவட்ட ரீதியிலான சனத்தொகைப் பரம்பல் யாழ்ப்பாணம் - 584,000    இன ரீதியிலான சனத்தொகைப் பரம்பல்  சிங்களவர் - 74.9% இலங்கைத் தமிழர் - 11.1% மலையகத் தமிழர் - 4.1% முஸ்லிம் - 9.3% ஏனையோர் - 0.5%   சமய ரீதியிலான பரம்பல் பெளத்தர் - 70.1% இந்து - 12.6% இஸ்லாம் - 9.7% கத்தோலிக்கர் - 6.2% பிற கிறீஸ்தவர் - 1.4%  https://www.statistics.gov.lk//Resource/en/Population/CPH_2024/Population_Preliminary_Report.pdf
  
      
    
  
            
      
            10 hours 46 minutes ago
      
  
      
    
  
            
      
            11 hours 4 minutes ago
      இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம் October 31, 2025 8:38 am  இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது. ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, நாடுபூராகவும் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது. 2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர். இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது. மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர். மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர். https://oruvan.com/sri-lankas-population-reaches-21-million-males-make-up-48-3/
  
      
    
  
            
      
            11 hours 7 minutes ago
      சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am  தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான ஒப்பந்தம். எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/us-reduces-import-tariffs-on-china-by-10-percent/
  
      
    
  
            
      
            11 hours 8 minutes ago
      பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am  சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  https://oruvan.com/sri-lankan-found-dead-on-belarus-latvia-border/
  
      
    
  
            
      
            11 hours 13 minutes ago
      அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார். https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/
  
      
    
  
            
      
            11 hours 19 minutes ago
      கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம். எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம். யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார். https://www.ilakku.org/chief-ministerial-candidate-from-within-the-party-tamil-nadu-partys-manifesto/
  
      
    
  
            
      
            11 hours 23 minutes ago
      சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025  சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார். https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/
  
      
    
  
            
      
            11 hours 28 minutes ago
      மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை  பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது.  விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை  50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒக்டோபர் 02 ஆம் திகதி முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/229119
  
      
    
  
            
      
            11 hours 30 minutes ago
      இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை 31 Oct, 2025 | 11:01 AM  (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். 2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர். இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும். இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229112#google_vignette
  
      
    
  
            
      
            11 hours 34 minutes ago
      தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025  தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.  Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும்.  அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2024' சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது.  தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது.  இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.  இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது.  மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/428276/sri-lanka-named-south-asias-most-expensive-country-do-you-know-how-many-places
  
      
    
  
            
      
            11 hours 37 minutes ago
      நானும் தான்.அதேட செய்தி இணைத்தவரின் பங்கும் பிரமாதம்.😀
  
    Checked
              Fri, 10/31/2025 - 17:25
           
கருத்துக்களம் - All Activity
  
  Subscribe to புதிய பதிவுகள்2 feed