புதிய பதிவுகள்2

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

19 hours 3 minutes ago
எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

19 hours 8 minutes ago
என்ன. மாற்றம். எற்ப்பட்டு. உள்ளது. ? நோட்டோ. என்பது. மேற்கு. நாடுகளின் பாதுகப்பு. கூட்டமைப்பு. நோட்டோ. வில. இணையவில்லை. மேற்கு. நாடுகள். பாதுகப்ப. உத்தரவாதம். தரவேண்டும். என்றால். என்ன ? அதாவது. நோட்டோ. பாதுகப்பு. தரவேண்டும். என்பது. தான். உறுப்பு. நாடுகளுக்கு. மட்டும். தான். நோட்டோ. பாதுகப்பு. வழங்கும் ஆகவே. பாதுகப்பு. வேண்டுமென்றால். நோட்டோ. இல். அங்கம். வகிக்க. வேண்டும்

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

19 hours 11 minutes ago
உள்ளுருக்குள் நடக்கும் மீனவர்களின் ஒன்று கூடல்களுக்கு போய் அடிவாங்க முடியாத அடிமை அரசியல்வாதிகள் எஜமானர்களிடம் ஓடிசென்று ஒப்பாரி வைக்க போகினம் போல் உள்ளது . அந்த மீனவர்கள் சொல்வது போல் யாழில் வேலை வெட்டி இல்லாமல் ஏன் இந்திய தூதரகம் இருக்கு ? போதைபொருள் கடத்தலை ஒழுங்கு பண்ணி யாழ் இளையோர்களுக்கு வழங்கலை செய்யவா?

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

19 hours 17 minutes ago
ஓம் தெரியும். ஆக நீங்கள் சொல்வது? புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர். சரியாக புரிந்துள்ளேந்தானே? தாங்காளும் போய் இருக்காயினம்🤦‍♂️ ஆதாரம் எங்கே?

போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.

20 hours 31 minutes ago
பலஸ்தீனப். பிரச்சனை. தீர்ந்தால். யூதர்கள். மட்டுமல்ல. உலகில். எவருமே. நிம்மதியாக. வாழ. முடியாது. அவர்கள். உலகை. நாங்கள். ஆளப் பிறந்தவர்கள். என்பார்கள். அல்காஹ். தான் ஒரே கடவுள். என்பார்கள் இப்போது. உலக நாடுகளில். எல்லாம். குண்டுகள். வெடிக்கச் செய்பவரகள். அவர்களின். எண்ணம் போல். பிரச்சனை. தீர்ந்தால். அமைதியாக இருப்பார்கள். என்பதற்க்கு. எந்தவித. உத்தரவாதம். உண்டு. இல்லை. அதன்பின்னர். பல. நாடுகள். ஒரு. அணியில். வரவும். உலகில் சக்தி வாய்ந்த. அமைப்பாக. மாறும். வாய்ப்புகள் நிறையவே. உண்டு. ஐப்பன். போல. உலக நாடுகள். உரத்து. சொல்ல வேண்டும்.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

21 hours 14 minutes ago
தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்தால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் என்ற ஈழதமிழரின் காதுல பூ சுத்தும் கதைகள் இன்னும் தொடருது என்றால் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவசரமா அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றே அர்த்தம். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் — வீரகத்தி தனபாலசிங்கம் —

21 hours 58 minutes ago
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் December 15, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர் இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரையில் அதை கூறியிருக்கிறார். இரண்டாவது தடவையாக பதவிக்கு வந்த பின்னரான 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியிருப்பதாக அவர் பெருமையுடன் உரிமை கோருகிறார். மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான இரு வருடகாலப் போர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர், ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான போர், எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையிலான போர், சேர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான போர் மற்றும் ஆபிரிக்க நாடுகளான ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையிலான போர் ஆகியவையே ட்ரம்ப் நிறுத்தியதாகக் கூறும் போர்களாகும். இந்த போர்களை பெரும்பாலும் வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அல்லது அதிகரிக்கப்போவதாக அச்சுறுத்தியதன் மூலமே நிறுத்தியதாகவும் கூறிய அவர் இந்த சர்வதேச மோதல்களை நிறுத்தி உலகில் சமாதானத்துக்காக பாடுபடுவதற்காக தனக்கு 2025 நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தானாகவே கேட்டார். அவருக்கு அந்த சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கு நியமனங்களை செய்வதற்கான காலஅவகாசம் கடந்த ஜனவரியில் முடிவடைந்த பிறகு சிபாரிசு செய்தவர்களில் போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பிறகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஒருவர். ஆனால், இறுதியில் ட்ரம்பினால் சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் சமாதானப்பரிசை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலக உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடைபெற்ற விமரிசையான நிகழ்வில் வைத்து வழங்கப்பட்ட அந்த பரிசும் கூட சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு சமாதானப் பரிசை வழங்கியதன் மூலம் அரசியல் நடுநிலை தொடர்பிலான சம்மேளனத்தின் ஆட்சிக்குழுவின் விதிமுறைகளை மீறியதாக அதன் தலைவர் கியானி இன்பான்ரினோ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு சம்மேளனத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. தன்னால் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறிய எந்தவொரு போரிலும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான பதற்றநிலை இன்னமும் தணிந்ததாக இல்லை. காசாவிலும் சூடானிலும் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், உக்ரெயின் மீது ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், கொங்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெறும் சண்டைகள், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், மியன்மார் இராணுவத்தின் விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் அமெரிக்காவில் அதிகரித்துவரும் அரசியல் வன்முறைகளை அலட்சியம் செய்தால் மாத்திரமே ட்ரம்ப் உலகில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியும். கடந்த ஜூலையில் இராணுவ மோதல்களை நிறுத்திய தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் மூண்டிருந்தன. ட்ரம்பின் உதவியுடன் பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் எந்தளவுக்கு சஞ்சலமானதாக இருக்கிறது என்பதை இந்த புதிய மோதல்கள் வெளிக்காட்டுகின்றன. இரு தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் சண்டை மூண்டிருப்பது குறித்து பென்சில்வேனியா உரையில் குறிப்பிட்ட ட்ரம்ப் மோதல்களை நிறுத்துவதற்கு அவற்றின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவிருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் போரை நிறுத்தப் போவதாக வேறு எவரினால் கூறமுடியும் என்றும் அவர் கேட்டார். தன்னைத் தவிர வேறு எவரினாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் மார்தட்டுகிறார். தனது முதலாவது பதவிக்காலத்தில் உலகின் எந்த பாகத்திலும் போருக்கு அமெரிக்கப்படைகளை அனுப்பவில்லை என்று பெருமையாகக் கூறிய ட்ரம்ப் தற்போது இரண்டாவது பதவிக்காலத்தில் தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மூலமாக பல பிராந்தியங்களில் பதற்றநிலை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதற்கும் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவதற்கும் படைகளை அனுப்புவதற்கான சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று முன்னர் கூறிய அவர், தற்போது எண்ணெய் வளமிக்க தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் இராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறார். போதைப் பொருளுக்கு எதிரான போரில் மெக்சிக்கோவிற்குள் தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு கரிபியன் மற்றும் பசுபிக் கடற்பிராந்தியங்களில் கடந்த சில வாரங்களாக தாக்குதல்களை நடத்துவதன் மூலமாக வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோ மீது அமெரிக்கா நெருக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டில் பனாமா ஆக்கிரமிப்பிற்கு பிறகு கரிபியன் கடற்பரப்பில் பெருமளவில் அமெரிக்கப் படைக்குவிப்பு தற்போதுதான் இடம்பெற்றிருக்கிறது. வெனிசூலாவின் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுவிட்டதாக கருதப்பட வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். கரிபியன் கடற்பரப்பில் வெனிசூலா மீது தாக்குதல் நடத்தக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்துநிற்கின்றன. போதைப்பொருளை கடத்திச்செல்வதாக கூறப்படும் படகுகள் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதல்களில் அண்மைய வாரங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டனால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றின் தலைவராக ஜனாதிபதி மடுரோ செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசாங்கம் அதற்கு திட்டவட்டமான சான்று எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. வெனிசூலாவுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் விரிவுபடுத்தியிருப்பதுடன் ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக குற்றஞ்சாட்டி வெனிசூலா கரையோரமாக கப்பல் ஒன்றை அமெரிக்கா டிசம்பர் 10 ஆம் திகதி கைப்பற்றியது. கரிபியனில் ‘கடற்கொள்ளை யுகம்’ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என்று மடுரோ குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மரியா கொரினா மச்சாடோ முழுமையாக ஆதரிக்கிறார். ஹியூகோ ஷாவேஸின் மறைவைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இருந்து வெனிசூலாவின் ஜனாதிபதியாக பதவியில் இருந்துவரும் (சோசலிசவாதி என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ) மடுரோ 2024 ஜனாதிபதி தேர்தலில் மோசடிகளைச் செய்து வெற்றிபெற்றதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. அவரது ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமான பின்னடைவைக் கண்டதையடுத்து இலட்சக்கணக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வெனிசூலாவின் இன்றைய நிலைமைக்கு மடுரோ பொறுப்பு என்ற போதிலும், வாஷிங்டன் விதித்திருக்கும் தடைகளும் அந்த நிலைமைக்கு பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. மடுரோவின் அரசாங்கத்தை மலினப்படுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தரான ஜுவான் குவாய்டோவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தன. மடுரோ ஜனநாயக விரோதமாக எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் துணிச்சலாக முன்னெடுக்கிறார் என்பதற்காகவே எதிர்க்கட்சி தலைவி மச்சாடோவுக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த அக்டோபரில் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்ட உடனடியாகவே அதை அமெரிக்க ஜனாதிபதிக்கு சமர்ப்பணம் செய்வதாக மச்சாடோ அறிவித்தார். மடுரோ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் போராட்ட இயக்கத்துக்கு ட்ரம்ப் தீர்க்கமான ஆதரவை வழங்கிவருவதற்காக அவருக்கு மச்சாடோ நன்றி தெரிவித்தார். கடந்த வருட தேர்தலுக்கு பிறகு மச்சாடோ தலைமறைவாக இருந்து வருகிறார். தனது மறைவிடத்தில் இருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக வெளியேறி நோர்வேக்குச் சென்று நோபல் சமாதானப் பரிசை தானே நேரடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற வைபவத்தில் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. உரிய நேரத்துக்கு மச்சாடோவினால் ஒஸ்லோவைச் சென்றடைய முடியவில்லை. அதனால் அவரின் மகளே பரிசைப் பெற்றுக்கொண்டார். ஆனால் காலந்தாழ்த்தியேனும் ஒஸ்லோ சென்ற மச்சாடோவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பாவுக்கு வருவதற்கு அமெரிக்கா செய்த உதவிக்காக அவர் நன்றிகூறினார். வெனிசூலாவுக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி மடுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ட்ரம்பின் திட்டத்துக்கு அமெரிக்க காங்கிரஸுக்குள் எதிர்ப்பு இருக்கிறது. கடந்த வாரம் எண்ணெய்க்கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் ட்ரம்ப் ‘நித்திரையில் போருக்குள் நடந்துசெல்கிறார்’ என்று வர்ணித்திருந்தார்கள். கரிபியன் கடற்பரப்பில் அமெரிக்கப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் குடிமக்கள் பலர் கொல்லப்படுவது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும். மடுரோவின் ஆட்சியில் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அவருக்கு எதிரான ட்ரம்ப் நிருவாகத்தின் அச்சுறுத்தல்கள் வெனிசூலாவின் சுயாதிபத்தியத்தின் மீதான தாக்குதல்களேயாகும். கடந்த காலத் தவறுகளில் இருந்து அமெரிக்கா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.” 9/ 11 தாக்குதல்களுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் படையெடுத்த அமெரிக்கா இருபது வருடக்களுக்கு பிறகு தலிபானகளுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்து வெளியேறுவதை தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. சதாம்ஹுசெயன் பேரழிவுதரும் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு இடம்பெற்றவை உலகில் இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான மனிதப் பேரவலங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் வெனிசூலாவில் அதே தவறைச் செய்வதற்கு தயாராகும் அபத்தத்தைக் காண்கிறோம். https://arangamnews.com/?p=12529

நெடுந்தீவில் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த சிறிதரன் எம்.பி

22 hours 3 minutes ago
நெடுந்தீவில் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த சிறிதரன் எம்.பி செவ்வாய், 16 டிசம்பர் 2025 05:18 AM டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவுகடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்தொழிலாளர் சங்க கட்டடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரால் , திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினருடன், கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள், தேவைகள் குறித்து கலந்துரையாடினர் அதன் போது, டித்வா புயலின் தாக்கத்தினால் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி தீர்வினை பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். https://jaffnazone.com/news/53261

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

22 hours 8 minutes ago
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன், ததேமமு செயலாளர் செகஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது, சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வளண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு, ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம். – என்று தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=352658

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

22 hours 8 minutes ago
ரஷியா இப்பிடி இருக்கு ..... அசோவ் (Azov) கடல் பகுதிக்குள் எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ரசியாவின் இலக்காக இருந்தது அதன் அனைத்து கரையோரங்களையும் கைப்பற்றி அதை பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளது. தவிர ரசிய கட்டுப்பாட்டுக்குள் வந்த போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் ரேர் மட்டேரியல் (Rare Material) கனிம வளம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அமெரிக்காவிற்கு இப்போ உக்ரைனில் சமாதானம் வருதோ இல்லையோ ரேர் மாற்றியலுக்கான மைனிங்கை தொடங்க வேண்டும் என்ற அவசரம்தான் அதிகம். மேற்கின் அனைத்து பேச்சும் இலக்கம் Goal இப்போ அதை நோக்கித்தான் உள்ளது ட்ரம் அதை வெளிப்படையாகவே பல தடவை சொல்லி உள்ளார் உக்ரைனை மீள கட்டும் செலவுக்கு ஈடாக கனிமவளங்கள் வேண்டும் என்று.

லட்சக் கணக்கான பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிவு

22 hours 21 minutes ago
லட்சக் கணக்கான பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிவு டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திருமதி. சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார். அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும், ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன. அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் க்ளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தில் நடமாடும் சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். https://www.samakalam.com/லட்சக்-கணக்கான-பிறப்பு-த/

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

22 hours 23 minutes ago
மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 01:29 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏ குழுவில் இடம்பெறும் வரவேற்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது. மலேசியாவுக்கு எதிராக துபாய் தி செவன்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் அயான் மிஸ்பா குவித்த அபார சதத்தின் உதவியுடன் ஐக்கிய அரபு இராச்சியம் 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். பாகிஸ்தான் வெற்றபெற்றால் அவ்வணி அரை இறுதிக்குள் நுழையும். சீரற்ற காலநிலையால் ஆரம்பம் தாமதித்ததால் அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது. அயான் மிஸ்பா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 163 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே அணித் தலைவர் யாயின் கிரான் ராயுடன் ஆரம்ப விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் முஹம்மத் ரயானுடன் 2ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களையும் ப்ரித்வி மதுவுடன் 4ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் அயான் மிஸ்பா பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். யாயின் கிரான் ராய் 44 ஓட்டங்களையும் முஹம்மத் ரயான் 48 ஓட்டங்களையும் ப்ரித்வி மது 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜாஷ்வின் கிரிஷ்ணமூர்த்தி 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மலேசியா ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 47 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இதில் முஹம்மத் ஆலிப் 54 ஓட்டங்களையும் மொஹம்மத் ஹைரில் 49 ஓட்டங்களையும் அணித் தலைவர் டியாஸ் பட்ரோ, ஹம்ஸா பங்கி ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் முஹம்மத் அக்ரம் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்தவீச்சில் முஹம்மத் பாஸில் ஆசிம் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி அஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/233400

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

22 hours 25 minutes ago
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்! 16 Dec, 2025 | 11:45 AM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருவதுடன், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன். இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவையான SBU அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது. தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது. துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233501

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

22 hours 29 minutes ago
அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை Published By: Digital Desk 1 16 Dec, 2025 | 11:35 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஜனவரி 26 திகதி, குறித்த வழக்கை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் கருத்து வெளியிட்டபோது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து குறித்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழுள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இந்தநிலையில் குறித்த வழக்கு கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார் இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார். இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை 15ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் ஆஜராகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகி; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று ஆஜராக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233493

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

22 hours 42 minutes ago
19இன் கீழ் ஆசிய கிண்ண லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 01:19 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 8 அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஏ குழு போட்டியில் கனிஷ்க் சௌஹானின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்து கொண்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது ஆரம்பப் போட்டியில் வெற்றிகொண்ட இந்தியா, 4 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானும் ஐக்கிய அரபு இராச்சியமும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்திய - பாகிஸ்தான் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா இலகுவாக 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 46.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இளம் அதிரடி நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி இப் போட்டியில் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆரோன் ஜோரஜ், அயுஷ் மாத்ரே (38) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். இதனைத் தொடர்ந்து 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (113 - 4 விக்.) எனினும் ஆரோன் ஜோர்ஜ், கனிஷ்க் சௌஹான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 60 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். ஆரோன் ஜோர்ஜ் 85 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அப்துல் ஷபிக் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சய்யாம் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நிக்காப் ஷபிக் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 41.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வி அடைந்தது. ஹுசெய்பா அஹ்சான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள் 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட அணித் தலைவர் பர்ஹான் ஸஹூர் (23), உஸ்மான் கான் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கனிஷ்க சௌஹான் https://www.virakesari.lk/article/233398

பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது!

22 hours 47 minutes ago
பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது! 16 Dec, 2025 | 11:02 AM பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள 'ஹவன்' சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சிலை சரிந்த பிறகு அப்பகுதியில் சிறிய குழப்பம் ஏற்பட்டதுடன், சிலை சரிவு உள்ளூர் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்த சிலை 1900 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சிலை இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது. https://www.virakesari.lk/article/233494

போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.

22 hours 52 minutes ago
துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்த ரியல் ஹீரோவை வைத்தியசாலைக்கு சென்று பாராட்டினார் அவுஸ்திரேலிய பிரதமர்..! Published By: Digital Desk 3 16 Dec, 2025 | 10:39 AM அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில், கடந்த 14 ஆம் திகதி மாலை யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 16 பேர் பலியாகினர்; சுமார் 42 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை, அஹ்மத் அல் அஹ்மத் (43) என்பவர் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார். அப்போது, மற்றொருவர் அஹ்மத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் நேரில் சந்தித்து பாராட்டினார்கள். அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அஹ்மத், நீங்கள் ஒரு அவுஸ்திரேலிய வீரர். மற்றவர்களை காப்பாற்ற உங்கள் உயிரை ஆபத்தில் இட்டீர்கள் — போண்டி கடற்கரையில் அபாயத்தை நோக்கி ஓடி, ஒரு பயங்கரவாதியை நிராயுதப்படுத்தினீர்கள். மிக மோசமான தருணங்களில்தான் அவுஸ்திரேலியர்களின் சிறந்த பண்புகள் வெளிப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவில் நாம் அதையே கண்டோம். ஒவ்வொரு அவுஸ்திரேலியரின் சார்பாகவும், உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கிறிஸ் தனது X தளத்தில், “அஹ்மத் ஒரு நிஜ நாயகன். அவர், தனது உயிருக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்தை பொருட்படுத்தாமல், ஒரு பயங்கரவாதியை நிராயுதபாணி ஆக்கியதன் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவருடன் நேரம் செலவிட்டதும், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களின் நன்றியை அவருக்கு தெரிவித்ததும் எனக்கு ஒரு பெருமையாக இருந்தது. அஹ்மத்தின் தன்னலமற்ற துணிச்சல் இல்லையென்றால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி அஹ்மத்” என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233486
Checked
Wed, 12/17/2025 - 01:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed