1 day 22 hours ago
வேண்டுகோள் வெற்றியடைய வாழ்த்துக்கள். திலீபனின் எண்ணங்களே வந்து போகின்றன.
1 day 22 hours ago
உளவாளிகள் என்பதைவிட ஆசை வார்த்தை சொல்லி தனது ஆதரவாளர்களை உள்வாங்கியுள்ளார். ஒரு திறமைசாலி ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை? சிறிதரனை தலைவராகவே இருக்க விட்டிருந்தால் இரண்டு வருடபதவி இப்போது முடிந்திருக்கும். தனக்கு வேண்டியவரை ஏகமனதாகவே தலைவராக்கியுள்ளாராம்.
1 day 22 hours ago
ரம்பின் நகர்வைப் பார்த்தால் வெனிசூலா ஜனாதிபதியை தூக்கிய மாதிரி கொமெனியை தூக்குவதற்கு ஆயத்தம் நடக்குது போல.
1 day 22 hours ago
சமீபத்தில் கொழும்பின் ஒரு பிரபல பாடசாலையில் இடம்பெற்ற விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், வெறும் ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. ஒரு பாடசாலையின் 'தலைமை மாணவன்' மற்றும் 'ஆசிரியைகள்' சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம், நம் நாட்டு கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாரிய ஒழுக்கச் சீரழிவின் 'Tip of the iceberg’ மட்டுமே. இப்படியான சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. 90-களில் நாம் கல்வி கற்ற காலத்திலும் இவ்வாறான வக்கிரங்கள் அரங்கேறின. ஆனால், அவை பாடசாலை கௌரவம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டன. ஆசிரியை - மாணவன் துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவி துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவன் துஷபிரயோகம். ஆசிரியை - மாணவி துஷபிரயோகம். பாடசாலை பணியாளர்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள். இவை அனைத்தும் இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பிரித்தானியா (UK) போன்ற நாடுகளில், ஒரு ஆசிரியர் மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருப்பது 'Abuse of Position of Trust' (வழங்கப்பட்ட அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்) என்ற சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு 'சம்மதத்தோடுதான் நடந்தது” என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் பதவிக்கான பொறுப்பே முக்கியமானது. ஆனால் இலங்கையில், இவ்வாறான சம்பவங்களின் போது சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது, அவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆசிரியர்களைத் தங்களின் பிள்ளைகளுக்கு அடுத்த பெற்றோராகவே பார்க்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைத்து, பிள்ளைகளைத் தமது காமவலைக்குள் வீழ்த்தும் ஆசிரியர்கள், எதிர்காலச் சந்ததியையே அழிப்பவர்கள் ஆவர். இவர்கள் மீதான தண்டனை வெறுமனே பணியிட மாற்றமாகவோ அல்லது தற்காலிகப் பணிநீக்கமாகவோ இருக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாதபடி கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். மக்களாகிய நாம் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். Position of Trust' என்பதைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக விசேட கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை நிர்வாகத்தின் தலையீடு இல்லாத, மாணவர்களும் பெற்றோரும் அச்சமின்றிப் புகார் அளிக்கக்கூடிய ஒரு மத்திய முறைப்பாட்டுப் பிரிவு (Reporting Unit) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதியைத் தாண்டி, அவர்களின் மனநலம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கற்கை நெறிகள் அவசியமாக அறிமுகப்படுத்த வேண்டும். நாலந்தா கல்லூரிச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. கல்விக்கூடங்கள் காமக் கூடங்களாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, இந்த "நம்பிக்கை துரோகத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலச் சந்ததி எவரையும் நம்பத் துணியாத ஒரு சமூகமாக மாறிவிடும். Mukinthan Thurairajasingham
2 days ago
சொர்க்கலோகத்தில் இருந்து தந்தை செல்வா. Thava Arumugam
2 days ago
சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
2 days ago
திட்டமிட்ட இன அழிப்பின் மூலம் நிலையான அபிவிருத்தி சாத்தியமில்லை – தமிழர் மரபுரிமை பேரவை 29 Jan, 2026 | 04:07 PM இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழர் மரபுரிமைத் பேரவையின் இணைத்தலைவர் வண லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்ற திட்ட அறிக்கையின் படி கிவுல் ஓயா நீர்த்தேக்கமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரவில் உள்ள தமிழர்களின் புர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக வட கிழக்கு திசையாக மகாவலி அதிகார சபையினால் அமைக்கப்படவுள்ள மிகப்பாரிய நீர்த்தேக்கமாகும். மகாவலி அதிகாரசபை தனது திட்ட அறிக்கையில் வெளிப்படையாகவே இன் நீர்த்தேக்கத்தின் பயனாளிகள் 3203 சிங்க குடும்பங்கள் என தெரிவித்துள்ளது. 37 மீற்றர்கள் (121.37 அடிகள்) உயரமான அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந் நீரத்தேகத்தின் எல்லைகள் தற்பொழுது மகாவலி அதிகார சபையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்ட்டுள்ளன. இதன்படி பாரம்பரிய தமிழ் கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்புஸ்ரீவரசங்குளம் காஞ்சூரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. மேலும் 1921இல் வர்த்தமான அறிவித்தல் மூலம் ஒதுக்கு காடாக அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காட்டில் 4000 ஏக்கரும் இந் நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்து போவதுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளது என்பதனை மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்னையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந் நீர்த்தேக்கத்திற்கு மிக அண்மையாக உள்ள சைவ வழிபாட்டு இடமான வெடுக்குனாறிமலை பிரதேசத்தினை தொல்லியல் இடமெனக்கூறி தமிழ் மக்களின் வழிபாட்டினை தடைசெய்யும் தொல்லியல் நிணைக்களம் இந்த 47 தொல்லியல் பிரதேசங்களினையும் கிவுல் ஓயாவினுள் நீரினுள் மூழ்கிப்போவதற்கு தனது இசைவினை தெரிவித்துள்ளமை தமிழர் புரீர்வீக நிலங்களில் அமைந்துள்ள இத் தொல்லியல் சின்னங்கள் தமிழர் மரபுரிமை சார்ந்தவையாக அமைந்திருப்பதனாலேயே என சந்தேகிக்க ஏதுவாகின்றது. இத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள 3203 சிங்கள குடும்பங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தமிழர் புர்வீக பகுதிகளில் இராணுவ நடவடிக்கை மூலம் துரத்தியடித்து அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களினை வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவாக அறிவித்து அங்கு குடியேற்றப்பட்ட சிங்களமக்களேயாவர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் இன்றுவரை அவர்களுக்கு மீளவும் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதாரத்திற்காக தமது சொந்த நிலத்தினை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள மக்களிடம் நாட்கூலிகளாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கொக்குத் தொடுவாய் மத்தி, கொக்குதொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு. கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. துற்போது கிவுல் ஓயா திட்டத்தின்கீழ் இது மேலும் விஸ்தீரிக்கப்பட்டு கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப்பகுதியில் தமிழ் மக்களுக்கு மத்தியவகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1990 ஏக்கர் காணிகள் கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நில அபகரிப்பையும் வடபகுதியின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றுவதனை இலக்காக கொண்டு காலத்திற்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசுகள் காய்நகர்த்தி வருவது வெளிப்படையாகவே அவதானிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றினையும் மூடிமறைத்து மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று பொய் என கூறியிருப்பதை தமிழர் மரபுரிமை பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.இவரின் கூற்று அநுர அரசின் இரட்டை வேடத்தினை தோலுரித்துக்காட்டியுள்ளது. இவர்கள் வடக்கில் மக்களை அரவணைப்பது போல நாடகமாடி முதுகில் குத்தும் வேலையினை கச்சிதமாக செய்துவருகின்றார்கள். இன்றுவரை மகாவலி அதிகார சபையினால் எந்தவொரு வடமாகாண தமிழ் பொதுமகனும் பயனடையாதவகையில் இனவாத இயந்திரமாக்கப்பட்டுள்ள மகாவலலி அபிவிருத்தி அதிகார சபை தமிழ் மக்களின்தொடர்ச்சியான எதிர்ப்பினையும் மீறி தமதுதிட்டமிட்ட குடியேற்றத்தினை செய்வதற்காக முனைப்ப்புக்காட்டி கண்டிக்கின்றோம் வருவதனை. வன்மையாக இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/237345
2 days ago
பலன் கொடுக்காத ஷிவம் துபே அதிரடி: இந்தியா மேற்கொண்ட 3 சோதனை முயற்சிகளின் முடிவு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் டிம் செய்ஃபர்ட் (62 ரன்கள்), டெவன் கான்வே (44 ரன்கள்) ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கமும், டேரில் மிம்ட்செலின் அதிரடி ஃபினிஷிங்காலும் (18 பந்துகளில் 39 ரன்கள்) அந்த அணி அந்த ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மட்டுமே ஓரளவு போராடி 65 ரன்கள் எடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம். துபேவுக்கு ரிங்கு சிங் தவிர்த்து யாரும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஏற்கெனவே இந்தத் தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. அவற்றுள் எந்த முடிவுகள் கைகொடுத்தன? எவை கைகொடுக்காமல் போயின? ஒரு பேட்டர் குறைவு டாஸின் போதே இந்திய அணி சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை சொல்லாமல் சொன்னார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இஷான் கிஷன் சிறு காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். ஒரு பேட்டருக்குப் பதிலாக, ஒரு முழுநேர பௌலரைக் களமிறக்கியது இந்திய அணி. டி20 போட்டிகளில், கடினமான சூழ்நிலைகளில் கூட அதிரடி அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது இந்திய அணி. 7 பேட்டர்களுடன், எட்டாவதாக அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணா என பேட்டிங் செய்யக்கூடிய வீரர் ஒருவர் என்றுதான் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இப்படி பெரிய பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது, அது அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையை பேட்டர்களுக்குக் கொடுத்தது. சூழ்நிலை பற்றிய குழப்பங்கள் இல்லாமல் அவர்கள் அதைக் கையாண்டார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பேட்டர்களில் ஷிவம் துபே மட்டுமே நெருக்கடியை உணராமல் விளையாடி அரைசதம் அடித்தார் ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதாலும், உலகக் கோப்பைக்கு தயாராகவேண்டும் என்பதாலும், அந்த கூடுதல் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது அணி நிர்வாகம். அதனால், அர்ஷ்தீப்பைக் கொண்டுவந்து ஒரு பேட்டரைக் குறைத்திருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை உறுதி செய்தார். "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பேட்டர் குறைவாக விளையாடினோம். ஐந்து பௌலர்களோடு விளையாடி எங்களுக்கு சவால் ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு 180-200 என்ற இலக்கை எப்படி சேஸ் செய்கிறோம் என்று பார்க்க நினைத்தோம்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தியா ஏற்படுத்திக்கொண்ட சவாலை இந்தப் போட்டியில் அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்த போட்டியில் டாப் ஆர்டர் சீக்கிரமாக அவுட் ஆகிவிட்டபோது, மிடில் ஆர்டர் மீது சற்று கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்றைய சூழ்நிலையில் அது மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும் பாதித்தது. சாம்சன் அவுட் ஆனதற்கும், ரிங்கு சிங் அவுட் ஆனதற்கும் இடைப்பட்ட 3.5 ஓவர்களில் இந்தியா 27 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஏனெனில், ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியில் கவனம் அதிகம் செலுத்தவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய சேஸின்போது ஹர்ஷித் ராணா 11வது ஓவரிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த துபேவும் 15வது ஓவரிலேயே அவுட்டாக, ஒரு 200+ சேஸின் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் யாரும் களத்தில் இருக்கவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்தது 'விக்கெட் வீழ்ச்சி' பற்றி கவலைப்படாமல் ஆடிய இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இந்தப் போட்டி பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "(இந்தத் தொடரின்) முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி சரியான அணி என்று நினைக்கிறேன். பும்ரா, அர்ஷ்தீப், வருண் மற்றும் 8 பேட்டர்கள் ஆடுவது சரியாக இருக்கும்" என்று கூறினார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் இன்னொரு வீரர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரண்டாவது ஓவர் முடிந்ததுமே இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார் ரிங்கு சிங் பொதுவாகவே விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விழும்போது, விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணிக்கு நிலைத்தன்மையை கொடுக்கும் வகையில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த ரோலை குறிப்பிட்ட சில வீரர்கள் சரியாகச் செய்வார்கள். இந்திய அணிக்கு, விராட் கோலி அவர் இருந்த வரை அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார். இந்த அணியில் அக்ஷர் பட்டேல் அப்படியான சூழ்நிலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தார். இந்தப் போட்டியில் அவர் இல்லாததால், ரிங்கு சிங் கையில் அந்த வேலை கொடுக்கப்பட்டது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 9/2 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கினார் ரிங்கு சிங். மிகவும் நிதானமாகத் தொடங்கிய அவர், சரியான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களும் அடித்தார். ஆனால், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், அடிக்கக்கூடிய வகையில் வந்த பந்துகளை மட்டுமே டார்கெட் செய்தார். நன்கு அதிரடி காட்டி ஆட்டத்தை முடிக்கக்கூடியவர் என்பதால் ரிங்கு சிங் பெரும்பாலும் ஃபினிஷராகவே கருதப்படுகிறார். பல போட்டிகளில் அவர் தாமதமாகவே களமிறக்கவும் படுவார். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தையும் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒருசில முறை அந்த வேலையை செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல், ஷிவம் துபே இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபோக்ஸ், ஹென்றி போன்றவர்களின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்திருப்பதால், அவரை ஃபினிஷராகப் பயன்படுத்துவதற்கு அது அணியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் ரிங்கு சிங்கின் 'ரோல்' சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல பௌலிங் ஆப்ஷன்கள் இருந்தும், இந்தப் போட்டியில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியது அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்குவதன் மூலம் நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு எப்போதுமே இருந்தது. கேப்டன் சூர்யாவும் அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 5 முழுநேர பௌலர்களைக் களமிறக்கியதால், அவர்களை மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டார். முதல் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து 14 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்கள். அதில் அவர்கள் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களுக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. "உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று போட்டிக்குப் பின் சொல்லியிருந்தார் சூர்யா. ஒருவேளை உலகக் கோப்பைக்குள் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீளாதபட்சத்தில் அவருடைய இடத்தில் ரவி பிஷ்னாயை சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், நியூசிலாந்து பௌலர்கள் பிஷ்னாய் வீசிய 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் மற்றும் துபே ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் தன்மையையும் இந்தியா இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை. குறிப்பாக பவர்பிளேவில் ஹர்திக் நல்ல தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரை அங்கு பயன்படுத்தாமலேயே விட்டார் சூர்யா. நியூசிலாந்தின் முதல் விக்கெட் ஜோடியும் 8.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் எடுத்து இந்தியாவைப் பின்தங்கவைத்துவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4zr97lrro
2 days ago
'கனவுப் பாடசாலை' நோக்கிய பயணம் ஆரம்பம் Jan 29, 2026 - 11:50 AM இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார். இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkz2f2hn04kgo29ngonu78ld
2 days ago
19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: அரை இறுதிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா தகுதிபெற்றது Published By: Vishnu 29 Jan, 2026 | 03:51 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதியில் விளையாட முதலாவது மற்றும் தோல்வி அடையாத அணியாக நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா தகுதிபெற்றது. ஏ குழுவில் ஈட்டிய 4 வெற்றிப் புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸஸ் குழு 1இல் தென் ஆபிரிக்காவையும் இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சவாலுக்கு மத்தியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அணித் தலைவர் ஒலிவர் பீக் குவித்த அபார சதம், சார்ள்ஸ் லெச்மண்ட் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஒலிவர் பீக் 109 ஓட்டங்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல் 56 ஓட்டஙகளையும் வில் மலாஜ்சுக் 46 ஓட்டங்களையும் அலெக் லீ யங் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜக்கீம் பொலார்ட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆர்'ஜய் கிட்டன்ஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸக்காரி கார்ட்டர் 64 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஷுவா டோர்ன் 62 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் குணல் திலோகனி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெச்மண்ட் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆரியன் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹேடன் ஷில்லர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஒலிவர் பீக். https://www.virakesari.lk/article/237278
2 days 1 hour ago
'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம் பட மூலாதாரம்,Handout via Reuters படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் 29 ஜனவரி 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின. "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது. மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,Vahid Online படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்) இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது. "இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார். "போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார். மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார். டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, "இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார். "எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார். "செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார். பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன. மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன. டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது. "அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார். குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,Maxar Techn படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது. இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின. இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது. அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார். கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o
2 days 2 hours ago
ஜெர்மனியில் வாழ்க்கையை பரிபூரணமாக கொன்டு செல்வதற்கே வேலை செய்வதாக சொல்வார்கள். uk இல் வேலைசெய்வதற்கே வாழ்கை (எனவே சம்பளம் சராசரியாக குறைவு ) என்று ஜெர்மனியில் UK க்கு ஏளனமாக சொல்லப்படும் உரையாடல் அனல், uk (மற்ற ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து) அமெரிக்கா வேலை கலாசாரத்தை பின்பற்றி இருப்பதால் பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக, வேலை நேரமும் கூட (அமெரிக்கா போல் இல்லைத்தான்), அதனால் ஏற்கனவே குறைவாக இருந்த சம்பளம் மிகவும் இறங்கி விட்டது. அனால், இப்போதைய வறுமை பழமையாத கட்சி கொள்கையால் (அதன் தொடர்ச்சியால்) தூண்டப்பட்ட, உருவாக்கப்பட்ட செயற்கை வறுமை.
2 days 2 hours ago
2 days 2 hours ago
அரசியல் சம்பந்தமான காரணங்களை வைத்துத்தான் புகலிடக் கோரிக்கை வைக்கமுடியும் என்ற இலக்கியவாதிகளின் எண்ணத்தை வாத்தியார் கணக்கு மாற்றிப் போட்டிருக்கிறது. புலம்பெயர் இலக்கிய வாதிகளோடு ஷோபா சக்திக்கு என்ன பிரச்சினையோ? கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. வடமராட்சியில் பனைமுனை என்ற ஊரை எனக்குத் தெரியும். காடல்முனை அறியப்படாத ஊராக இருக்கிறது. எது எப்படியோ காடல்முனை ஆட்களை நம்பவே கூடாது.
2 days 2 hours ago
அவர் இரத்தம் மாற்றி தூய தமிழ் இரத்தம் பெற்று பாற்கடலில் நீத்தி செந்தமிழன் ஆகியது உங்களுக்கு தெரியாது போலும். அவர் மேடையில் பேசும் செந்தமிழை விட டெலிபோனில் தம்பிகளுடன் பேசும் செந்தமிழ் உயர்வானது.
2 days 2 hours ago
2 days 2 hours ago
தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா! புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை (29) தங்கம் அதன் அனல் பறக்கும் விலை ஏற்றத்தை நீடித்தது. அதன்படி, வியாழக்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,600 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது. திங்களன்று முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது, மேலும் இந்த வாரம் இதுவரை 10% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. வலுவான பாதுகாப்பான புகலிட தேவை, உறுதியான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல் மற்றும் பலவீனமான டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டில் 64% ஏற்றத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தங்கம் 27% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (29) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462139
2 days 2 hours ago
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார். அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியது. அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையில் ஒருவர். கேவலம் கெட்ட தேசியபபட்டியலில் ஒருவர். இன்னொரு ஆள் பெட்டி வாங்கி எல்லோரையும் உள்வாங்கி, எல்லோரும் உள்ளுக்கு வந்து இன்றைக்கு கட்சியை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு துணிவிருந்தால் இந்த மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்டுங்கள். நீங்களே தலைவராக வர முடியுமாக இருந்தால் பரீட்சித்துப் பாருங்கள் எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1462091
2 days 2 hours ago
2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு! 2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன. இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2026/1462121
2 days 2 hours ago
உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி. மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். https://athavannews.com/2026/1462120
Checked
Sat, 01/31/2026 - 10:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed