புதிய பதிவுகள்2
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்! நேபாளத்தில் எதிர்கொள்ளப்படும் அரசியல் கலரவ சூழ்நிலையின் பின்னணியில் அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை 10977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் 99 இலங்கையர்கள் உள்ளனர், அதில் தூதரக ஊழியர்கள் உட்பட 22 மாணவர்கள் உள்ளனர். அதே நேரம் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டத்தினால் இலங்கையர்கள் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நேபாளத்தில்_உள்ள_இலங்கையர்களுக்கு_விசேட_அறிவித்தல்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க! - உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க! உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து இலங்கையில் தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அறிக்கைமீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது, தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புகளின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் பாராட்டுகின்றோம். இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார் என்று ஜப்பான் தெரிவித்தது. நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டுகின்றோம். மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அந்தச் சட்டம் நீக்கப்படாமை அதிருப்தி தருகின்றது என்று பிரிட்டன் தெரிவித்தது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும். நிலை மாறுகால நீதியை உறுதி செய்வதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார். நபர்களைத் தன்னிச்சையாகக் கைது செய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கர வாதத்தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்தது. நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும். சட்டத்தின் ஆட்சிநிலை நாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின. https://newuthayan.com/article/பயங்கரவாதத்_தடைச்சட்டத்தை_நீக்கி_தனிநபர்_பாதுகாப்பை_உறுதிசெய்க!
சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!
சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து! கடல் அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் அவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலங்களில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து தெரிவித்து வந்தார். தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சீன நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் கடல் அட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற் பரப்பில் பாரம்பரிய மீன் பிடியை நம்பி பல கடற்றொழில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடல் அட்ட பண்ணைகளை மீள ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல் தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளளதாக கூறப்படுகிறது. https://newuthayan.com/article/சர்ச்சையை_கிளப்பிய_கடற்றொழில்_அமைச்சரின்_கடல்_அட்டைப்_பண்ணை_கருத்து!
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
அதனை நடைமுறைப்படுத்தினால் அதில் மாற்றுக்கருத்து இல்லை, போரில் உள்ள ஒரு நாட்டினால் இப்படியான சமூக செலவினை செய்யும் போது ஏன் வளர்ந்த நாடுகள் அதனை பின்பற்றக்கூடாது?
கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!
கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்! கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதவேளை இந்த நிகழ்வில் பேசிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சேவைக்குள் நீதியான அதிகாரிகள் குழுவை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று கூறினார். https://athavannews.com/2025/1446603
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!
ஏற்கனவே அதிக விலை கொடுத்து எரிபொருளை வாங்குகிறார்கள், தற்போது மலிவான உற்பத்தி பொருளுக்கும் தடையினை போட்டு தமது தலையில் தாமே மண்ணை போடுங்கள் என ட்ரம்ப் கூறுகிறார், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இதற்கும் உடன்படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.🤣
வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்!
வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பத்து பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் கிராம மக்கள் அடைத்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வனத்துறை அதிகாரிகளை மீட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வனப்பகுதியில் கடினமான சூழலில் பணிபுரியும் வனத்துறையினர் மீதான இந்த செயல், அவர்களது மன உறுதி, பணி சூழலை பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446606
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றது. இந்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தர இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் குறிப்பாக சீனாவுக்கு 100% வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446609
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
கட்டாரில் ஹமாஷ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்; ட்ரம்ப் அதிருப்தி! செவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது. தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள வொஷிங்டன், இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை முன்னேற்றாத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்று விவரித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், புதன்கிழமை (10) இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை வெளியிடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸைத் தாக்குவது ஒரு தகுதியான இலக்காகக் கருதுவதாக ட்ரம்ப் கூறினார். ஆனால் இந்தத் தாக்குதல் வளைகுடா அரபு நாட்டில் நடந்ததைக் கண்டு அவர் வருத்தப்பட்டார். கட்டார் வொஷிங்டனின் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாகும், பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நீண்ட காலமாக அதன் அரசியல் தளத்தை அங்கு கொண்டுள்ளது. இதனிடையே தாக்குதல் குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான், வான்வழித் தாக்குதல்கள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கட்டார் மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்யும் என்று கூறினார். இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும், கிட்டத்தட்ட இரண்டு வருட கால மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ட்ரம்பின் முயற்சியையும் இது தடம் புரளச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்காளியாகும். மேலும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை நடத்துகிறது. காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்தராகச் செயல்பட்டது. ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட காசா தலைவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல்-ஹய்யாவின் மகன் உட்பட, தனது ஐந்து உறுப்பினர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது. தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு அமெரிக்க இராணுவத்திடமிருந்து தாக்குதல் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எனினும், அமெரிக்க இராணுவத்திற்குத் தெரிவித்தது இஸ்ரேல்தானா என்று அவர் கூறவில்லை. https://athavannews.com/2025/1446590
ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
டிராகி இருந்தபோதிலும், ஐரோப்பாவின் எரிசக்தி விலை நெருக்கடி எங்கும் செல்லவில்லை. மைல்கல் போட்டித்தன்மை அறிக்கையின் ஆண்டு நிறைவில், புதிய தரவுகள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இன்னும் வாய்ப்புகளை மீறிச் செலுத்துவதைக் காட்டுகின்றன. கேளுங்கள் பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆற்றல் ஓட்டங்களை ஆயுதமயமாக்குதல், காலநிலை மாற்றம் மற்றும் அமைப்பு நம்பகத்தன்மை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மையை விட, மலிவு விலை என்பது இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி மீள்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. | ஜென்ஸ் பட்னர்/பட கூட்டணி, கெட்டி இமேஜஸ் வழியாக செப்டம்பர் 9, 2025 காலை 4:15 CET ஹேன் கோகலேர் மற்றும் கேப்ரியல் கேவின் ஆகியோரால் ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்கா அல்லது சீனாவை விட எரிசக்திக்கு இன்னும் அதிக விலை கொடுத்து வருகின்றன என்று ஒரு புதிய பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது , ஒரு மைல்கல் அறிக்கை செயலற்ற தன்மை கண்டத்தை பொருளாதார தேக்க நிலைக்குத் தள்ளும் என்று எச்சரித்த ஒரு வருடம் கழித்து. முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ டிராகியின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்டுபிடிப்புகள் வந்துள்ளன . அந்த அறிக்கை, விலையுயர்ந்த மின்சாரம் மற்றும் எரிவாயுவின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாகவும், சர்வதேச அளவில் நிறுவனங்களின் போட்டித்தன்மையைத் தடுப்பதாகவும் கண்டறிந்துள்ளது. வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள செல்வாக்குமிக்க ஜனநாயக ஆய்வு மைய சிந்தனைக் குழுவின் புதிய கண்டுபிடிப்புகளின்படி, ஐரோப்பிய நாடுகள் எரிசக்தி விலை அதிர்ச்சிகளுக்கு ஆளாகியுள்ளன, கடந்த மூன்று ஆண்டுகளில் குறிகாட்டிகள் ஐந்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்த கட்டுரை பொலிடிகோ இணைய இதழில் வந்துள்ளது, கடைசியாக ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியின் முன்னால் தலைவரும் ஒத்துக்கொண்டுவிட்டார், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடை கடைசியில் நீங்கள் கூறுவது போல இரஸ்சியாவிற்கல்ல அந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்குத்தான்.
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
மேலுள்ள கட்டுரையில் கூட இது ஒரு Therapeutic vaccine என கூறப்படவில்லை அதனால் பொதுவாக எல்லோருக்கும் குழப்பம் நிலவியிருந்தது, ஆனால் ஆரம்பத்திலேயே இது வழமையான Prophylactic vaccine இல்லை என கூறியதாக நினைவுள்ளது. அதனால் சாதாரண தடுப்பூசி போல இதனை அனைவரும் போட முடியாது, நோய் ஏற்பட்டவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. அதனாலேயே இந்த தடுப்பூசிகள் மிக விலை அதிகமாக உள்ளது பொதுவாக கோவிட் தடுப்பூசி போல பெருமளவில் ஒரே தொழில்னுட்பத்தில் பெருமளவில் விலை குறைவாக இதனை தயாரிக்க முடியாது. மொர்டேனாவின் தடுப்புசியும் இரஸ்சியாவின் இந்த தடுப்பூசியும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவை என கூறப்படுகிறது, மனித ஆராய்ச்சியில் மொர்டேனா இரண்டாம் கட்டத்தினை முடித்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த இரு தடுப்பூசிகளிலும் இரஸ்சியா கூறும் உற்பத்தி செலவுதான் பெருமளவான சர்ச்சையினை கிளப்பியுள்ளதாக கருதுகிறேன், 3000 யூரோவிற்கு இதனை தயாரிக்க முடியாது, மொர்டேனா தடுப்பூசி ஒரு நோயாளருக்கு 50000 -100000 டொலர் வரை உற்பத்தி செலவாகலாம் எனவும், மொர்டேனா ஒரு வர்த்தக நிறுவனம் என்பதால் ஒரு நோயாளியின் தடுப்பூசி 150000 வரை செல்லலாம் என கருதுகிறேன். சில நிறுவனங்கள் இதன் உற்பத்தி செலவினை குறைப்பதற்கு வேறுபட்ட பிளட்போர்மினை பயன்படுத்துவதில் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என கருதுகிறேன். இவ்வாறு விலை அதிகமான ஒரு தடுப்பூசியினை இலவசமாக கொடுத்தால் யார்தான் வரவேற்கமாட்டார்கள்?
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
என்னதான் நடக்குது இங்கை. போன மதம் தானே US இக்கு ஒரு Air Force 1 குடுத்து நல்லுறவு வளர்த்தங்கள். இப்ப அவனே கை விட்டுடான? அவனை தான் நம்பி உக்கிரேன் பக்கத்துவீட்டோடை மல்லு கட்டினான்.
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
ரசியா கண்டுபிடிக்கிறது எல்லாம் இரண்டாம் பட்ஷம் மண் ஓடடாது எங்கள் மீசையை பாதுகாக்கணும் ........ மனிதர்களுக்கு எவ்வளவு பிரச்சனை ?
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
Doha blasts: Israel carried out an attack against Hamas leadershipin the capital of Qatar, which has been a key mediator in Gaza ceasefire talks. • Hamas says negotiators targeted: Hamas said the strike killed five members but failed to assassinate the negotiating delegation. • Official responses: Qatar’s prime minister was visibly angry as he described the strike as “state terrorism” while Israel’s Prime Minister Benjamin Netanyahu said the attack “can open the door to an end of the war in Gaza.” • Trump weighs in: US President Donald Trump sought to distance himself from the attack, saying that by the time his administration learned of it and told the Qataris, there was little he could do to stop it. தோஹா குண்டுவெடிப்பு: காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வரும் கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைமைக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. • பேச்சுவார்த்தையாளர்கள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது: இந்த தாக்குதலில் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை குழுவை படுகொலை செய்யத் தவறியதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. • அதிகாரப்பூர்வ பதில்கள்: கத்தார் பிரதமர் தாக்குதலை "அரசு பயங்கரவாதம்" என்று விவரித்தபோது கோபமாக இருந்தார், அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் "காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று கூறினார். • டிரம்ப் இதில் கவனம் செலுத்துகிறார்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்குதலில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார், அவரது நிர்வாகம் இதைப் பற்றி அறிந்து கத்தார் மக்களுக்குத் தெரிவிக்கும் நேரத்தில், அதைத் தடுக்க அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். https://www.cnn.com/world/live-news/israel-qatar-attack-09-09-25 I’m not thrilled about the whole situation," Trump says about the Israeli attack in Doha. US President Donald Trump said he was not happy about how Israel’s attack on Hamas leadership inside Qatar transpired today, potentially putting Gaza ceasefire talks on uncertain ground. “I’m not thrilled about the whole situation. It’s not a good situation. But I will say this, we want the hostages back, but we are not thrilled about the way that went down,” Trump told reporters Tuesday evening. “I’ll be giving a full statement tomorrow, but I will tell you this — I was very unhappy about every aspect,” he added. The day’s events underscored the fragile nature of Trump’s attempts to broker peace in Gaza, his often-frustrating relationship with Prime Minister Benjamin Netanyahu and his efforts to maintain strong ties with the US allies in the Gulf. Some of Trump’s advisers are also angry over Israel’s decision to strike inside Doha, with many particularly frustrated that they weren’t able to weigh in or warn the Qataris. Trump was informed of the strike only shortly before it began — and not by Israel itself, but by Chairman of the Joint Staff Gen. Dan Caine, according to a US official. He immediately told White House special envoy Steve Witkoff to brief them, according to another US official. Witkoff has a longstanding relationship with the Qataris. However, by the time Witkoff was able to reach them, it was too late, a US official told CNN. Adding to the ire, Witkoff had met Monday with one of Netanyahu’s top advisers, Ron Dermer, but was not alerted of the impending strikes during those talks. https://www.cnn.com/world/live-news/israel-qatar-attack-09-09-25 ரம்பின் விலாங்கு விளையாட்டு அமெரிக்காவுக்கு பெரு நஸ்டமாக போகிறது. அண்மையில்த் தான் அரபு நாடுகளுக்கு போய் பலவிதமான வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொண்டு வந்தார். எல்லாவற்றையும் காற்றிலே பறக்கவிடப் போகிறார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !
உண்மை.அனேக இடங்களில் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டவும் முடியாத நிலை வந்து கொண்டு இருக்கிறது.
மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!
நினைவஞ்சலிகள் எம் உறவுகளிற்கு
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !
பாவம்!
யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை
நான் ஊரில் இருக்கும் போது வாய்க்கால்,குளங்கள் என தூர்வாரும் பணிகளில் சிரமதானமாக முறையில் ஈடுபட்டுள்ளேன். ஒரு குளத்திற்கு நான்கு பக்கமும் சீமேந்து அணைகள் இருக்குமேயானால் தூர்வார வேண்டிய அவசியம் வராது. தனியே அதனை சுத்தம் செய்வதாகவும் கழிவுகளை அகற்றுவதாகவே அமையும். ஆனால் தூர் வாருவது என்பது வெளி மண் குளத்திலோ குட்டையிலோ மழை வெள்ளங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் வந்து நிரம்புவதை வெளியேறுவதை தான் சொல்வது... அதை விட.... சில வருடங்களிற்கு முன்னர் யாழ்களத்தில் தூர்வார்வது பற்றிய திரியில்....எப்படித்தான் குளங்களை தூர்வாரினாலும் நன்னீருக்குள் கடல் உப்பு நீர் உட்புக நூறுவீதம் சாத்தியம் உள்ளது ஒரு இணைப்பும் இணைக்கப்பட்டது.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed