புதிய பதிவுகள்2

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி

2 weeks 2 days ago
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட, முஸ்லிம் பெரும்பான்மை நாட்டான பங்களாதேஷில், பல மாதங்களாக ஹசீனா ஆட்சிக்கு எதிரான கடும் அமைதியின்மை நிலவி வந்தது. இதனால் அன்றாட வாழ்க்கை மட்டுமன்றி, உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான ஆடைத் துறை உள்ளிட்ட முக்கிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் தீர்மானம் மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அண்மைய போராட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தலும் இதுவாகும். தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கணிப்புகளை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்களின்படி, அந்தக் கூட்டணி 300 உறுப்பினர்களைக் கொண்ட ஜாதியா சங்சத் (தேசிய சபை)யில் 209 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுதியாகியதும், கட்சி தலைமையகம் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் நலன் மற்றும் அமைதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/238534

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

2 weeks 2 days ago
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
அமெரிக்காவில் ICE செய்வதை டிரம்ப் கோஷ்டி நியாயயப்படுத்துவதுபோல் இங்கும் பாடம் எடுக்கிறார்! போலீஸ் நிறுத்தும்படி சொல்ல, நிறுத்தாமல் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமல்ல! வாகனத்தை நிறுத்த டயரை சுட்டாலே போதுமானது! ICE செய்வதுபோல் நெற்றியில் சுட வேண்டியதில்லை.

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

2 weeks 2 days ago
யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். Posted on February 12, 2026 by சமர்வீரன் 60 0 வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன. தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது. யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
வருணது கூக்ளி வழமையாக வீசப்படுவது போல மணிக்கட்டினை முழுமையாக திருப்பி போடப்படுவது போலல்லாமல், மோதிர விரலால் சுண்டி விடுதல் (பிலிக்), வருணது பந்து பிடி சேன் வோர்னது பிடி போன்றது சேன் வோனும் மணிக்கட்டினால் வீசினாலும் மோதிர விரலாலும் பந்தினை சுழற்றுவார். அத்துடன் வருணது பந்து விச்சு வேகமானது (முஜீப், ரஸீட் கான் ஆகியோரது போல) அதனால் கணிப்பது கடினம் அத்துடன் மணிக்கட்டுகூட அவர்களது ஆடை மறைக்கின்ற போது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
இதுகளை பார்ப்பதில்லை. சும்மா போட்டு வெளுக்கிறது. 😁 IPLல் பணம்தான் பிரதானம். மற்றவை எல்லாம் பின்னாடி என்று புரிந்தால், பிறகு கனக்க யோசிக்கத் தேவையில்லை. IPLக்கும், நாடுகளுக்கு இடையிலான போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசம். IPLல வைத்து இந்தப் போட்டிகளை எடைபோட முடியாது. கூடாது.

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

2 weeks 2 days ago
18 hours ago, கிருபன் said: வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். அனுர தொடக்கம் அமைச்சர்மார்வரை வடக்கில்தான் அசைலம் அடிக்க வேண்டிவரும் ...அப்படியான எதிரணிஅலை தெற்கில் வளர்கின்ற்து வடக்கு கிழக்குப் பிரிப்பு வழக்கு நடக்கும்போது நாங்கள் பேபி பாருங்கோ

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
சற்று முன் Star sports Tamil commentaryயில் இப்படி வர்ணனை செய்ததாக என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். .......................... "வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது" .................... வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ் செய்தி அனுப்பிய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
இன்றைய மச்சை ஜெய்சா நேரில் பார்த்தவரெல்லோ ....கொழும்பு பிச் நிச்சயமாக வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . இவர்தானே கார்டிக் பாண்டியாவிற்கு போட்டவர் ..அவருடைய பந்து எறிவு எவ்வளவு தூரத்தில் இருந்து என்பதை கவனித்தீர்களா..

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
டம்பர் எனக்கு கோல் பண்ணிட்டார் ..இன்று தன்னுடன் இருந்து மச் பார்க்காட்டாம்....முப்பது வருசம் அமெரிக்காவில் இருந்து என்னாத்தைக் கிழிச்சியள் ... சும்மாயாழில் தேவையில்லாத...அலட்டல்தானே ...

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை. டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார். வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

2 weeks 2 days ago
வடக்கு கிழ்க்கு பிரிவினைக்கு வழக்கு போடுவோம் ,சட்ட நடவடிக்கை எடுப்போம்...☹️

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அலிகான் 2 ஓவர் சிறப்பாக பந்து வீசினார். காயப்பட்டதினால் தொடர்ந்து அவரால் வீசமுடியவில்லை. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடமுடியவில்லை. இன்று பூரண குணமடைந்தால் விளையாட சந்தர்ப்பம் இருக்குது. பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

2 weeks 2 days ago
1948 இலயே உங்கன்ட தீவின் அடித்தளம் ஆட்டம் காணதொடங்கி விட்டது ...அதில் உங்கள் குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது ...இனி கட்டுரை எழுதி என்ன நடக்க போகின்றது

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

2 weeks 2 days ago
வட பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த .....வக்.....ஆனால் சர்வதேச பாதுகாப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கினம் ....

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks 2 days ago
இலங்கை தீவுக்கு ஒரு சட்டம்,வட பகுதியில் உள்ள தீவுகளுக்கு ஒர் சட்டம் நியாயமானதாக தெரியவில்லை....40 வருடங்களுக்கு முன்பு யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையில் நின்ற வயோதிபரை கொலை செய்து விட்டு பயங்கரவாதி என பிரச்சாரம் செய்த அரச கட்டமைப்பு இன்னும் தொடர்கின்றது ... பயங்கரவாதிகளை உருவாக்கும் இலங்கை தீவின் அரச முயற்சி தொடர்கின்றது ....
Checked
Sun, 03/01/2026 - 08:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed