2 weeks 1 day ago
"எருதோடு பொருத முடியாதவர்கள் மேழியோடுதான் பொருதுவார்கள்." சுமந்திரன், ஒருவர் மேல் அழுக்காறு கொண்டால் எந்த நிலைக்கும் தாழ்ந்து போவார். அப்படி யாராலும் இறங்கிப்போக முடியாது, சுமந்திரனோடு யாராலும் இணைந்து செயற்படவும் முடியாது. ஆனால் சிறிதரன் புத்திசாலி. தானாக கட்சியிலிருந்து விலகாமல் எல்லா குடைச்சலையும் தாங்கி, சமாளித்து தேர்தலில் வென்று, வலுக்கட்டாயமாக சுமந்திரனாலேயே கட்சியிலிருந்து நீக்கப்படுள்ளார். சுமந்திரன் ஒரு குழப்பி, அழுக்காறு கொண்டவர். தான் அடுத்தவர்க்கு வெட்டிய குழியில் விரைவாகவே விழுவார். அப்போ இவருக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், தமிழருக்கும் அவர்தம் கட்சிக்கும் குழி பறிக்கவே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர் சுமந்திரன். எல்லா ஜனாதிபதியையும் வரவேற்றவர் அனுராவை மட்டும் மிரட்டுகிறார், சவால் விடுகிறார், ஏனென்றால் இவரை அழைத்து பதவி வழங்காதவர் அனுரா மட்டுமே. சுமந்திரனோடு சேர்ந்து இயங்குபவர்கள் சுமந்திரனைப்போலவே உண்மைக்கு வெகு தூரமானவர்கள். அவர்களை திரட்டி எதை சாதிக்க முடியும்? அவர்கள் பதவியும் பொறுப்பும் எத்தனை நாளைக்கு? மக்கள் வாக்களித்தால் மட்டுமே இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியும். மக்களே தீர்ப்பளிப்பவர்கள்
2 weeks 1 day ago
ENG 82 / 3 = 10 over .....!
2 weeks 1 day ago
இல்லை. இன்னும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள், உங்களைத்தொடர்ந்துதான். இதிலிருந்து நீங்கள் கருத்துக்களை சரியாக வாசிப்பதில்லை என புரிகிறது. இங்கு என்னை விமர்ச்சிக்கும் பல பெயர்கள் உண்டு எனவும் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் மட்டுந்தான் என நீங்கள் சொல்வதன் பொருள் என்ன?
2 weeks 1 day ago
உங்களை நான் கட்டாயபடுத்தவில்லை. உங்கள் இஸ்டபடி எழுதுங்கள். அது உங்கள் உரிமை. காவடி ஆடினால் எதிர்வினை ஆற்றுவது என் உரிமை. விசாரணை இலங்கை பொலிஸ் எப்படி நடத்தும் என மறந்து போச்சா? தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் செய்த கொலை பற்றி அதன் தலைமையில் இருக்கும் அனுரவுக்கு கூடுதல் பொறுப்பு கூறல் உண்டு. இன்னும் ஒரு வரி பேசவில்லை. சம்பந்த பட்ட பொலிசார் அத்தனை பேரையும் கட்டாய லீவில் அனுப்பி இருக்க முடியாதா?
2 weeks 1 day ago
அவர் தலைவராக தேர்ந்தெடுத்த கட்டிசியிலே கூட அவர் தனிமைபடுத்த பட்டுள்ளார்… இவருக்கெலாம் எதுக்கு அரசியல்? இவர் எப்படி மக்கள் உரிமையை வென்றெடுப்பார்? சுமந்திரனை வெட்டி ஆட முடியாதவரா சிங்களவரை வெட்டி ஆட போகிறார்?
2 weeks 1 day ago
விசாரணை செய்யாமலா விடப்போகிறார்? எதுக்கய்யா எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டிக்கொண்டு காவடியாடுகிறீர்கள்? கோசானுக்காகவா கருத்தெழுதுகிறீர்கள் என்று கேள்வி வேறு என்னை கேட்க்கிறீர்கள்? நான் யாருக்கோ, எதுக்கோ எழுதும் கருத்துக்கெல்லாம் என்னை வசை பாடுகிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லையே? நான் பந்திப்பந்தியாக எழுதினால் நீங்கள் கடந்து போங்கள், உங்களை வாசிக்கும்படி நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லையே அல்லது சுருக்கமாக எழுதுங்கள் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நான் எப்படி எழுதவேண்டுமென யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் முடியாது, அதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.
2 weeks 1 day ago
உங்களை இங்கே அனுரகாவடி என விமர்சிப்பவன் நான் மட்டுமே. அனுரகாவடி என விமர்சிப்பவர் புலிக்காசை அடித்தார் எனவும் என்னை சொன்னார் என நீங்கள் எழுதியதால் அப்படி விளங்கி கொள்ளப்பட்டது. கீழே நான் குவோட் பண்ணியுள்ள, நீங்கள் குறிப்பிட்ட பதங்கள் அனைத்தும் நான் மட்டுமே பாவிப்பவை. குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுதினால் நல்லம். நீங்க புளொட்😂
2 weeks 1 day ago
ஏனய்யா எல்லாத்தொப்பியையும் தூக்கி உங்கள் தலையில் மாட்டுகிறீர்கள்? நீங்கள் மட்டுந்தான் இங்கு கருத்து எழுதுகிறீர்களா? எதற்கெடுத்தாலும் எனக்காக கருத்தெழுதுகிறீர்கள், என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று வில்லங்கத்திற்கு விதண்டாவாதம் செய்கிறீர்கள். அப்படியென்றால் யார் யாருக்காக கருத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒன்று சொன்னால் அதை பலர் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இங்கு தவறு செய்பவர் தன் தவறை மற்றவர் மேல் போட்டு விட்டு நீதான் நீதான் என்று திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடுமென நினைக்கிறார்கள். அது, தங்களை காப்பாற்ற தாங்கள் சொல்லிக்கொள்ளும் சமாதானம், போடும் வேஷம்.
2 weeks 1 day ago
தமிழ் போல தொனிக்கும் இந்த மொழி யாதோ?😂
2 weeks 1 day ago
கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை? இனவழிப்பு செய்த சிங்களக்கட்சியில் இருந்து வந்து புகுந்த சாணக்கியனுக்கு ஏன் இந்த பதவி உயர்வு? தமிழர் நிலத்தில் புத்தர் சிலை வைத்ததை நிஞாயப்படுத்தி தமிழரை கொச்சைப்படுத்தி பேசிய சஜித்துக்கு வாக்களிக்கச்சொன்ன சுமந்திரன் ஏன் இன்னும் தமிழரசுக்கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறார்? வேறொரு கட்சியை உருவாக்கி வென்று காட்டட்டும் பாப்போம் முடிந்தால். சி .வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து விலத்துவதற்காக சுமந்திரன் செய்த செயல்கள் பேச்சுக்கள் அநாகரீகமானவை. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை, அதை எல்லோரும் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். அதற்கு சுமந்திரன் பாவித்த ஆள் மாவையர், மாவையரை வீழ்த்த சிறிதரனை பாவித்தார், இனி சிவஞானம், அடுத்து யார்? சுமந்திரனுக்கும் ஒரு சுழியோடி வருவார் அல்லது அதற்கு தேவையில்லாமல் கட்சியே இல்லாமற் போகலாம். விதி வலியது. அன்று தேவையில்லாமல் அழுக்காறு கொண்டு விக்கினேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள், அதன் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். சிவனே என்று இருந்த ஒருவரை வலிய தேடிச்சென்று கொண்டுவந்து சேர்த்து தங்கள் வேலை முடிந்தவுடன் சேறடித்து அனுப்பினார்கள். தமிழரசுக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கென்ன என்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு மௌனம் காக்காதீர்கள். மக்கள் மனம் வைத்தாலே உங்களுக்கு பதவி.
2 weeks 1 day ago
உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.
2 weeks 1 day ago
England 13-2
2 weeks 1 day ago
ஓமாம் என்ன தான் தங்கட நாட்டில் காசை கொட்டி நிறைய போட்டிகளை நடத்தினாலும் அவர்களிடம் நல்ல வீரர்கள் கிடையாது.............. அவர்கள் இடம் பிடித்த குருப்பில் ஓமானின் விளையாட்டு படு கோவலம் ஓமான் நாட்டு வீரர்களின் பந்து வீச்சை நம்ப முடியாது...........................
2 weeks 1 day ago
பெரியப்பு இன்னும் போட்டி முடியல............இன்னும் ஒரு கிழமை இருக்கு ஆரம்ப சுற்று போட்டி முடிய அதுக்குள் இந்தியா பெரிய ஸ்கோர் அடிச்சால் புள்ளி சூப்பர்8க்குள் அடிக்க முடியாது........................
2 weeks 1 day ago
அண்ணனுக்கு டிரைவராக வீட்டிலேயே தங்கி இருந்த தம்பியை அண்ணன் துரத்தி விட்டாராமே? உண்மையா?
2 weeks 1 day ago
அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
2 weeks 1 day ago
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.
2 weeks 1 day ago
ஒவ்வொருநாளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பல பேராட்டங்களை நடத்துகிறார். காவல்துறையால்கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மாநாட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இதுவெல்லாம் ஒடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு அத்தி பூத்தாற்போல பனையூர்தலைவர் வெளியே எப்போ வருவார் என்று கமராக்களுடன் பனையூரில் அடைகாத்து இருக்கிறார்கள். தனித்துக்களமாடி 8வீத வாக்குகளுக்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட் கட்சியை இந்த ஊடகங்கள் இன்னும் மற்றவர்கள் என்று வகைக்குள் திணித்து இருட்டடிப்புச் செய்கிறார்கள். போதததுக்கு விஜையின் வருகையால் நாதகவின் வாக்கு வங்கு சரியப் போகிறது என்று திடடமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். வரும் தேர்தலில் இருக்கின்ற 8 சதவீதத்தை நாதக தக்க வைத்துக் கொண்டால் அதற்கு நல்ல எதிர்காலம்இருக்கும். ஆனால் விஜை இந்தத்தேர்தலோடு நடிக்கப் போய்விடுவார்.அவரை நம்பி யாரும் கூட்டணி சேரவரவில்லை. கூட்டணிக்காக தவம் கிடந்து இப்போது வேறு வழியில்லாமல் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார். எல்லாம் சினிமாத்தனமாக இருக்கிறது.இருந்தாலும் விஜையின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். இன்னொரு கமலகாசனாக மாறமல் இருந்தால்சரி.இன்று கட்சிக்கான புதிய தொலைக்காட்சியை எங்கள்தேசம் தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.இங்குள்ள சீமான் எதிர்ப்பாளர்களும் அவரைப்பற்றிய எதிர்மறையான செய்திகளை பதிவிடுவது தமிழ்நாட்டு ஊடகஙகளின் போக்குக்கு ஒத்திசைவாகவே இருக்கிறது https://www.youtube.com/live/7HUexq_r_nA?si=mD0pvXkLR7cI4CyK
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
இந்த அயர்லாந்து ஓமானை கோமாவுக்கே அனுப்பி விட்டது ........! 😂
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed