2 weeks ago
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! adminFebruary 14, 2026 உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு பகுதியாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது. உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வாங் யீ-யிடம் ஆண்ட்ரி சிபிஹா விளக்கமளித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர்காலச் சூழலில், மின் தடையால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சீனாவின் இந்த உதவி பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Global Tamil Newsஉக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவி...உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்…
2 weeks ago
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. adminFebruary 14, 2026 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229059/
2 weeks ago
ஓமான் அடிச்ச ரன்ஸ்ச தாண்டி விட்டினம் இதுவரை குறைந்த ரன்ஸ் 103கூடின ரன்ஸ் 235........................
2 weeks ago
குறைந்த ரன்ஸ் அடிக்கும் அணி என்ர இடத்தை நேபால் பிடிக்குமா ஹா ஹா.................
2 weeks ago
எதையும் தாங்கும் இதையம் தாங்கி நிற்கிறது ...
2 weeks ago
10 ஓவரில் 42/4
2 weeks ago
நேபாளம் நல்லாத்தானே விளையாடினார்கள்... என்ன நடக்குது
2 weeks ago
6.3 ஓவர் முடிவில் நேபாளம் 23 - 4 . தொடரின் குறைந்த ஒட்டம் எடுக்குமா?
2 weeks ago
எங்கு தவறு செய்தோமோ அங்கேயுள்ள நீதிமன்றுக்குத் தான் போக வேண்டும். அதனாலேயே பலர் அப்பவே ஏதோ கொடுத்துவிட்டு போவோம் என்கிறார்கள். இது வான் சாரதிகள் மூலமாக தெரிந்து கொண்டது.
2 weeks ago
நன்றி நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன். இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.
2 weeks ago
எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது😂 (அறிஞர் அண்ணாவின் கல்லறை வாசகம்).
2 weeks ago
ஓ… அப்போ அந்த படமும், பெயரும் உங்களது இல்லை போலும்👍.
2 weeks ago
கள்ளனுக்கு ஒரு பாவம்… களவு கொடுத்தவனுக்கு (பலரை சந்தேகிப்பதால்) பல பாவம் என்பார்கள்… பல உண்மையான செயல்பாட்டாளர்கள் 2009 வரை, குறிப்பாக கீழ் அடுக்கில், உண்மையாக இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை. இனத்துக்காக நேரம், வலுவை கொடுத்தவர்களுக்கு ஆதாரம் இல்லாமல் கள்ளபட்டம் கட்ட கூடாது என்பது உண்மை. ஆனால் இதை வைத்தே பல கள்ளரும் தப்புகிறாகள் என்பதும் உண்மை.
2 weeks ago
மனமார்ந்த நன்றிகள் புலவர் ஐயா..
2 weeks ago
2009 மே 19 ற்கு முன் காவியமான அனைவரையும் மாவீரர் என அழைப்பது சாலப்பொருதமானதே என்பதே என் கருத்தும். ஆனால் நான் அறிந்த வகையில் வீரவேங்கை - 1ம் லெப்டினெண்ட்- 2ம் லெப்டினெண்ட்- கப்டன் - மேஜர், லெப்டினெண்ட் கேணல் - கேணல் - பிரிகேடியர் என்பதுதான் புலிகளின் தரநிலை அடுக்கு. அத்தோடு அதுவரை மாவீரர் ஆன பின் தரநிலை அறிவித்த இயக்கம், சமாதான காலத்தில் தளபதிகளை மட்டும், வாழும் போதே கேணல் என அறிவித்தது என நினைக்கிறேன். இங்கே தான் தளபதி சொர்ணம் போன்றோரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் வருகிறது. அவருக்கு வாழும்போதே இயக்கம் கொடுத்த தரம் கேணல். ஆனால் அவர் பெப்ரவரி மாதம் அளவில் மாவீரர் ஆகி இருந்தால் நிச்சயம் இயக்கம் அவரை பிரிகேடியர் ஆக்கி இருக்கும். இப்போ அவரை கேணல் என்பதா, பிரிகேடியர் என்பதா? வீரவேங்கை என்ற பதத்தை அவருக்கு பாவிக்க முடியாது என நினைக்கிறேன் (தவறு எனில் திருத்தவும்). ஆகவே மாவீரர் தளபதி சொர்ணம் என மட்டுமே நான் அவரை விளிக்கிறேன். எரிய சுணங்கினால்… நீங்கள் இருக்கிறியள்😂
2 weeks ago
பார்ப்போம். பகலவன் அண்ணா என்று ஒருவர் முள்ளிவாய்க்காலில் நிண்டு வந்தவர் முன்னர் யாழில் எழுதினார். அவர் கண்ணில் பட்டால் தகவல் சொல்ல கூடும்.
2 weeks ago
ஓம்… 1992 உலக கிண்ணத்தில் சிம்பாப்வே 314 அடிக்க அதை இலங்கை திரத்தி, அர்ஜுன ரணதுங்க, சம்பக்க இராமநாயக்க கடைசியாக நிண்டு 315 அடித்ததெல்லாம் வேறலெவல் கிரிகெட். அப்போ டேவிட் ஹொட்டன் அவர்களின் கேப்டன். அப்போதும் எவன்ஸ் எண்டு ஒரு வேக பந்து வீச்சாளர் இருந்தார். கோழி பண்ணை வைத்திருந்தார். ஹென்றி ஒலங்கோ. வினோதமான சிகை கொண்ட கறுப்பின வீரர். அவர்களின் முதல் முழு கறுப்பின வீரரும் என நினைக்கிறேன். 1999 உலக கோப்பை நேரம், முகாபேயின் அடாவடியை எதிர்த்து இவரும் அண்டி பிளவரும் குரல் கொடுத்தனர். அத்தோடு கேரியர் ஓவர். அண்டி பிளவர் பின்னாளில் இங்கிலாந்து கோச் ஆகினார். அப்போ இங்கிலாந்துக்கு விளையாடிய க்ரேம் ஹிக், ரொபின் குக் கூட சிம்பாப்வே அடி உள்ளோரே. அதேபோல்தான் இப்போ சாம் கரன் மற்றும் சகோதரர்களும்.
2 weeks ago
ஜேர்மனியில் சட்டத்தரணி / நொத்தாரிசு மூலம் உயில் எழுதப்படல் வேண்டும் என நினைக்கின்றேன். Dolmetscher மூலம் மொழிபெயர்ப்பு செய்து கை எழுத்து வைக்கப் பட்ட உயில்…… பிற்காலத்தில் பிள்ளைகள் மூலம் ஒரு பிரச்சினை வந்தால்? நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியாது.
2 weeks ago
போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
2 weeks ago
இந்த திரியை நான் இணைத்ததன் காரணம் இதில் சொல்லப் படுவவை பெருவாரியானவை நிஜம். இதில் சொல்லப்பட்டுள்ள முதல் இரண்டு படிகளில் நான் இருந்து இருக்கிறேன். மற்றும் பெரிய நிதிப்பங்களிப்பாளன். பிரெஞ்சு பொறுப்பாளரிடம் ஒப்படைத்ததும் எமது கடமை மற்றும் பொறுப்பு நிறைவு பெறும். அதற்கு அடுத்த கட்டம் எமக்கு தெரியாது தெரியவும் முடியாது. இதில் மூன்றாவது நிலை பொறுப்பாளர். பிரெஞ்சு பொறுப்பாளர் எவரும் வாழ்க்கை தரத்தில் மிகவும் கடினமான நிலையிலேயே இன்றும் உள்ளனர். எனவே பிரான்ஸை பொறுத்தவரை அவர்களும் இதற்குள் அடங்கமாட்டார்கள். எனவே அதற்கு அடுத்த படிமுறைகளிலையே தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பிரான்ஸை பொறுத்தவரை தலைவர் எப்பொழுதும் பணத்தை விட்டு வைக்கவில்லை. ஒரு மில்லியன் சேர்க்க முடியும் என்றால் இரண்டு மில்லியன் கேட்பார். அதனால் எப்பொழுதும் கடனும் பொறுப்புக்கூறலும் தான் சுமையாக இருக்கும். இதை நான் இங்கே சொல்வது உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே. செயற்பாட்டாளர்களை கள்ளர்களாக அல்லது தலைவருடன் நின்றவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்த தலைகீழாக நிற்பவர்களுக்கானது அல்ல.
Checked
Sun, 03/01/2026 - 14:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed