புதிய பதிவுகள்2

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

2 weeks 4 days ago
நெருங்கிய ரெத்த உறவு ஊரில் தான் தனது கட்டை வேகனும் என்று ஊரில் அவரின் விருப்ப படி அமைதியாகி விட்டார் தவிர்க்க முடியாமல் ஊர் செல்ல வேண்டி வந்தது சாரமும் சைக்கிளுமாய் திரிய ஊரில் காண்பவர்களுக்கு குழப்பம் மற்றும் படி தமிழ்வின் எனக்கு பிடிக்காத செய்தி தளம் ஆரம்பத்தில் யாழில் தடை செய்யப்பட்ட செய்தி தளம் . சாரமும் சைக்கிளும் நிறைய அனுபவங்களை பெற்று தந்தது முக்கியமாய் ஒரு கரண்டி சீனி போட்டு பிளேன் டி கேட்டால் கட்டாயம் 7 கரண்டி சீனி யுடன் கறுப்பு தேநீர் வரும் அது பல இடங்களில் எழுதபடாத விதியாக கடை பிடித்தார்கள் . அங்கு செல்லும் கொடுப்பினை இம்முறை கிடைக்க வில்லை .

லயம் – கொ. தினேஸ்.

2 weeks 4 days ago
லயம் – கொ. தினேஸ். written by admin September 11, 2025 லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி. ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர். 10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும். உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன. லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு. லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும். ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை. அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின் கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும். இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை. Global Tamil Newsலயம் - கொ. தினேஸ். - Global Tamil Newsலயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள்…

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

2 weeks 4 days ago
இவர் சாமி கும்பிடக்கூடிய ஆள் போல் தெரியவில்லையே சிறியர். நல்லூர் சுற்றாடல் பகுதியில் முளைத்துள்ள அசைவ உணவகத்திற்கு சென்றார் போலும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

2 weeks 4 days ago
எனக்கு அண்மையில் யூரியூப் வழங்கும் பரிந்துரை காணொளிகளில் கரி ஆனந்தசங்கரி பற்றிய ஒரு காணொளி காண்பித்தது. குளோபல் மெயில் எனும் கனேடிய ஊடகம் கரி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் செய்திகளை வெளிவிட்டு வருகின்றது. கரி அவர்களின் தொலைபேசி இலக்கம் விடுதலை புலிகள் சம்மந்தப்பட்ட கனேடிய அமைப்பு ஒன்றின் ஆவணத்தில் உள்ளதாகவும், கரி அவர்கள் கனேடிய மக்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் எனும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு கரி அவர்கள் எப்படி தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து தக்கவைப்பார் என்பது தெரியவில்லை.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 4 days ago
மைனர் குஞ்சு சீமான், டெல்லி உச்ச நீதிமன்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்ய தருணம் 👇

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

2 weeks 4 days ago
@பெருமாள் அவர்களை முன்புபோல் அடிக்கடி இங்கு காண்பதில்லை. தமிழ்வின் தளத்தில் முழுநேர செய்தியாளராகி விட்டீர்களோ?

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 4 days ago
இன்னும் 7 மாசம்தான்…🤣 #பந்தயம் அதே நீதிதுறையைத்தான் டெல்லியில் பாஜக முதன்மை வக்கீலை வைத்து வளைத்து, தனது செல்வாக்கால் - பாலியல் வன்முறை, கட்டயா கருக்கலைப்பு வழக்கை, வெறும் மன்னிப்போடு முடித்து வைத்துள்ளார் சீமான். ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர். இன்றைய திமுகவின் அதிகார மையங்களில் ஒருவர், திரைமறைவு நகர்வுகளில் முதன்மை வகிபாகம் உள்ளவர். 👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக. #வாடகை வாய்

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

2 weeks 4 days ago
ஏன் இரண்டு கிழமைகளுக்கு மட்டும்? பரீட்சார்த்த முயற்சியோ? நிரந்தரமாக அணிய வைத்தால் கையூட்டல் தவிர வேறு பல குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடிக்கலாம். விமான நிலையத்தில் குடிவரவு துறையில் பணிபுரிபவர்கள் நெஞ்சிலும் கமெரா மாட்டுவிக்க வேண்டும்.

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 weeks 4 days ago
எல்லோருக்கும் விசாரணை, கைது என்ற பயம் வந்தவுடன்… நோயும் தொற்றிக் கொண்டு குளிரூட்டப் பட்ட வைத்தியசாலைகளில் இருக்க திட்டம் போடுகின்றார்கள். வருடக் கணக்கில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்காத சுமந்திரனும் சிங்கள அரசியல்வாதிகள் கைது என்றவுடன் முந்திரிக் கொட்டை மாதிரி சட்ட நுணுக்கம் பேசும் சிங்களப் பாசத்தை என்னவென்று சொல்வது. இந்த சீத்துவத்தில்…. சுமந்திரனுக்கு வட மாகாண முதலமைச்சர் கனவும் இருக்குது. பிய்ந்த செருப்பை… சாணியில் முக்கி எடுத்து… முதுகில் நாலு சாத்து, சாத்த… மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள். 😂 ஹ்ம்ம்… புத்த பிக்குகளை வழிக்கு கொண்டு வர “அரகலய” மாதிரி, அண்மையில் நேபாளத்தில் வெற்றியளித்த ஒரு புரட்சி மாதிரி ஏதாவது ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டால்தான் உண்டு. ஆனால் அதுகளையும் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி திசை திருப்ப…. இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பின் புலத்தில் பல மறை கரங்கள் உண்டு.

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 weeks 4 days ago
ம்ம்ம் சந்திரிகாவும் நடக்க முடியாமல் இருக்கிறாவாம். 2 மாதம் தவணை கேட்கிறா. எப்படி வசதி? சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம். புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?

இரசித்த.... புகைப்படங்கள்.

2 weeks 4 days ago
ஊர் பேர் தெரியாதவர் மாட்டுடன் போகும் படத்தை கண்டதும் தான் மருமகனின் நினைப்பு வந்தது. அவர் வாழ்க்கையில் மாட்டுடன் பழகியதில்லை. இருந்தும் தானே விரும்பிக் கேட்டார்.

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 weeks 4 days ago
ஶ்ரீலங்காவில்… முன்னாள் ஜனாதிபதி ரணிலை விளக்கமறியலில் வைத்தால் இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி ஆஸ்பத்திரியில் போய் படுக்கின்றார். மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றார்கள். மக்களும் நீதிமன்றம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். போதாக்குறைக்கு… சுத்துமாத்து சுமந்திரனும் தனது நண்பர் ரணிலை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவிக்கின்றார். ரணில் வெளியில் வந்தவுடன் வருத்தம் எல்லாம் பறந்து பழைய மாதிரி அரசியல் செய்கின்றார். மகிந்தவின்…. அரச வீட்டை சட்டப்படி காலி செய்யச் சொன்னவுடன்…. ஏதோ சொத்து சுகம் இல்லாதவன் பிளாட்பாரத்தில் படுப்பது மாதிரி… புலம்பி அரசை மிரட்டுகின்றார்கள். இவர்கள் செய்த கொலை, கொள்ளைகள், பாதாள உலக நடவடிக்கைகளை மக்கள் மறந்து புனிதர் பட்டம் கொடுக்க முனைகிறார்கள். இப்படிப்படிப் பட்ட…. உணர்ச்சி அரசியலில் ஈடுபடும் முட்டாள் மக்களும், புத்த பிக்குகளும் உள்ள நாட்டில் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்ப்பது சிரமம் போலுள்ளது.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 4 days ago
சபரீசன் என்பவர் யார்? இதுவரை அவரை பற்றி நான் யாழ்களத்தில் படிக்கவில்லை.

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

2 weeks 4 days ago
[ தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர்.] நொச்சி அய்யா இப்படி சொல்வதை பார்த்தால் சீமான் தமிழ்நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாத நல்லாட்சி ஒன்றை அமைக்க தான் அரசியல் கட்சி ஒன்று நடத்தி வருகின்றார் என்று அவர் உண்மையாக நம்பிவிட்டார் என்றே தோன்றுகின்றது . என்னத்தை சொல்வது 😭

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 weeks 4 days ago
சிங்கம் அல்ல சிங்களம் எப்போதும் இப்படித்தான்......

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 4 days ago
இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நீதிபதிகள் எவ்வாறு செயற்படுவார்கள்... யார் யார் எல்லாம் நீதித்துறைக்குள் தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள்... ஒவ்வொரு முறையும் மாநில அரசு மாறிய பின்னர் யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.... தண்டனை பெறறார்கள் ( அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் ) என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும். சீமான் திராவிடத்திற்கும் மதச் சார்பான பா ஜ க விற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கையில் அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யார் யார் எல்லாம் எப்படி யோசிப்பார்கள் என்பது எங்களுக்கும் விளங்கும் உங்கள் டிஸ்கி மூலம் உங்களின் ஏக்கம் புரிகின்றது
Checked
Wed, 10/01/2025 - 13:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed