புதிய பதிவுகள்2

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

2 weeks 5 days ago
காப்பெற்று ரோட் என்று கழிவு ரயர் எல்லாவற்றையும் கொண்டுவந்து இலங்கையில் கொட்டியாயிற்று...இந்த துணிகளும் எதை உருக்கிச் செய்ததோ தெரியாது...இவையும் உக்காத பிளாஸ்டிக் வகையோ தெரியாது... அய்யா நான் ...விஞ்ஞானி அல்ல...அங்கினைக்கை இங்கினக்கை வாசிச்ச செய்தியில் இர்ந்து புடுங்கினதுதான் ..இது.. அதைவிட இன்னுமொன்று வீடு மாறும் மகிந்தவையும் போய் சந்தித்தவர்...இந்த தூதுவர்..ஜே.வி.பி சீனா போய் சந்திக்குது ...இங்கை தூதுவர் பால் காய்ச்சப் போறவரை வீடு தேடிப்போய் சந்திக்கிறார்..

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக பொலிஸார் தகவல்

2 weeks 5 days ago
12 Sep, 2025 | 10:08 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224874

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

2 weeks 5 days ago
நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இப்போது வருந்துவது ஏன் - கள ஆய்வு 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது – கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 17 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது. ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம். இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன. முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர். என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், "ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக" என்றார். செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள் 'ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது. இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது. 2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர். நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார். காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இடைக்கால அரசாங்கம் குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம் சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர். அப்போது தீபக் ஆங்கிலத்தில்,'தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி' என்று கூறினார். அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர். தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது. "இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்" என்று தீபக் கூறினார். இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது. காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டிடமும் எரிந்து நாசமானது. தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம் நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர். ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். 'ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்'? என்று கேட்டபோது, "அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்" என்றார் தமங். கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார். "ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை," என்று கிஷன் கூறினார். ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள். திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது. இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நேபாள மாவட்ட அலுவலகம். அங்கிருந்து இன்னும் புகை எழுகிறது. நேபாள அரசியலின் திருப்புமுனை நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர். மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார். "அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார். அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள். ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது. பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது. இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர். ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார். காத்மாண்டுவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு சர்மா. இவர், 'ஜென் z ' போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள். இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள். நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை. வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை. அடுத்து என்ன? 239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9ndqqyengo

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

2 weeks 5 days ago
இந்தியாவில் 'இந்துத்வா' வும் தமிழகத்தில் 'சாதி' அரசியலும் உள்ளவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழா? மாற்றத்திற்காகவேணும் வாக்குப் புரட்சியைக்கூடத் துணிந்து செய்யமுடியாத மனநிலைகொண்டோராகத் தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் மனநிலை நுகர்வு மனநிலையாகிவிட்ட காலத்தில் யாராண்டால் என்ன என்ற எண்ணப்போக்கு, வாக்களித்த மக்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்படும் ஏமாற்றம், சிறிய கட்சிகளால் என்னத்தை செய்துவிடமுடியும் என்ற பார்வை எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சீனா சுயபொருண்மியத்தில் முன்னேறிய நாடு. ஆனால் சுற்றியிருக்கும் மற்ற நாடுகள் இந்த இருநாடுகளிடமும் கையேந்தும் நிலையானபடியால் நிம்மதி வராது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 weeks 5 days ago
ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார். சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல், “இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..” இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல : பெரியோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் பிரதமர் ஹரிணி

2 weeks 5 days ago
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 09:52 AM ( வீ. பிரியதர்சன் ) பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224872

குட்டிக் கதைகள்.

2 weeks 5 days ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·oensrdptSoicu6tc1919um111m5a3l03u3h0 c0704i000485ggghm4ct908 · ஒரு இந்தியன் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான். அவன் அருகே சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும் ஏமாற்றி பணம் பறித்து விடவேண்டும் என எண்ணினான். இந்தியனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.. சீனன்: ”அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது. நமக்குள் போட்டி வைத்து நேரத்தை கடத்துவோமா..?” இந்தியன்: “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது...” சீனன்: “அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய் நீங்கள் எனக்கு தரவேண்டும்.. போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்: “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னேனே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்.. சீனன்: (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று நான் தோற்றால் 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..? இந்தியன்: “சரி..சம்மதம்...” சீனன்: ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..? இந்தியன்: ”தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..” சீனன்: “மகிழ்ச்சி நண்பரே..” இந்தியன்: “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?” சீனன்: “கேளுங்கள்..” இந்தியன்: “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும். அது என்ன விலங்கு..? சீனன்: ( அதிர்ச்சியானான், நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை.. 500 ரூபாயை பிடியுங்கள்..” இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்.. சீனன்: “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்: எனக்கும் தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்.. யாருகிட்ட இந்தியன்டா.......! Voir la traduction

அதிசயக்குதிரை

2 weeks 5 days ago
Murukaiya Thamilselvan rnoteSspodhf6i08i8ch168gu0l96i747 1830tmf7hmgama8lt2g6cm4011 · ரணிலின் கைதுக்கு பின்னர் வாகனங்களை காணமுடியவில்லை ********************************************************************** வழமை போன்று மகளை ஏற்றுவதற்கு பாடசாலைக்கு சென்றிருந்தேன். அருகில் வந்த நண்பன் ஒருவன் கேட்டான் மச்சான் ஒன்றை அவதானிச்சியே என்றான். என்ன என்றேன். அடேய்..... ரணிலின் கைதுக்கு முன்னர் பிள்ளைகளை ஏற்ற நாங்கள் வார இந்த நேரத்தில் பல அரச திணைக்கள வாகனங்களும் பிள்ளைகளை ஏற்ற வந்து நிற்கும். ஆனால் அவரின் கைதுக்கு பின்னர் ஒரு திணைக்கள வாகனத்தையும் காண முடியவில்லை. இதுவொரு நல்ல மாற்றம். என்றான். அதன் பின்னர்தான் நானும் அவதானித்தேன். உண்மைதான். முன்னர் ஒரு சில திணைக்கள வாகனங்களை பாடசாலை முடிகின்ற நேரத்தில் காணமுடியும்.ஆனால் இப்ப அந்த பக்கமும் இல்லை. பாடசாலை விடுகின்ற நேரம் அந்த பாதையால் கூட போவதனை காணமுடியவில்லை. எதோ நல்ல மாற்றங்கள் நடந்தால் நல்லதே.......!

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 5 days ago
அடப்பாவிகளா அது நீங்கள்தானா . ...... நீங்கள் பிடித்துக் குடுத்த என்ர மாடுகளை விதானைக்கு காசும் குடுத்து போத்திலும் குடுத்து அவிழ்த்துக் கொண்டுவந்த அப்பாவி நான்தான் ..........! 😂

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 5 days ago
உங்க காலத்தில் கட்டுபடியாகி இருக்கிறது இப்ப அதிவிசேடம் குவாட்டர் 9௦௦ ஆயிரமாம் 6௦௦வெகுமதி கட்டுபடியாகதாம் என்று போனுக்குள்ளால் அழுகிறார்கள் . முக்கிய குறிப்பு அந்த குவாட்டரையும் தண்ணி கலக்காமல் வெறுமனே வயித்துக்குள் விடுவதை நேரில் பார்த்து சித்தம் கலங்கியது வேறு கதை . நாயின் காது பக்கமாய் அடையாளம் போட்டு விடுகிறார்கள் என்கிறார்கள் நான் சரியாக கவனிக்கவில்லை .

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 5 days ago
வணக்கம் வாத்தியார் .........! யுவனின் அற்புதமான பாடல்களில் ஒன்று, எனக்கு மிகவும் பிடிக்கும் . ........! படம் : புதுப்பேட்டை .....! இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது…. மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்….. அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும் ஆண் : ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு…. ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்…. ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ….. ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் ஆண் : தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ஆண் : ஹோ ஒவ் வோவ் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஹோ ஒவ் வோவ் இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே ஹோ ஒவ் வோவ் மனம் வெட்டவெளியிலே அலைகிறதே ஹோ ஒவ் வோவ் அந்த கடவுளை கண்டால்… ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ….. யெஹ் எஹ்…எஹ்….எஹ் லாரா ரர ராரா…..ராரி ரர ஆண் : அது உனக்கு இது எனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் ஆண் : பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம் ஆண் : ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. மறுபிறவி வேண்டுமா…. ஆண் : ஆஹ்ஹ லாரா லாரா லாலல்ல லாரலா லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ் ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ…ஹோ ஓஒ….. ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ….வாவ் வாவு வாவ் யெஹ் எஹ் எஹ்…….! --- ஒரு நாளில் வாழ்க்கை ---

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 5 days ago
ஆண் நாய்களை பிடிப்பதென்றால் ஈசி நாலு பெட்டைகளை வளர்த்தால் நம்ம கேற்றுக்க காவல் படுப்பாங்கள் என்ற மோட்டார் சைக்கிள் முழுதும் மூத்திர நாத்தம் சைக் இப்ப என்னைக்கண்டால் நூறு அடி ஓடுறாங்கள் கல் எறியைப் போல ஒரு கருவி இல்லையப்பா

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 weeks 5 days ago
எங்கடதுகள் கல்யாணம் நாலைஞ்சு தலைமுறையை தோண்டி எடுத்து அங்க ஆர் ஆரை இழுத்துட்டு ஓடினது சாதி மாறி கட்டினது அந்த குடும்பத்தில என்ன பிரச்சினை நடந்த என்று நோண்டுரத்தில கல்யாணம் கட்டி குடும்பம் நடத்துன மாதிரிதான் ஆனால் எங்க ஊரும் விதி விலக்கல்ல கல்யாணம் பேச்சு வரும் போது இது மாறுமா என்று தெரியாது ஆனால் மாறாது இருக்கும் வருடக்கணக்கில் 😒😒 பள்ளிக்க இருந்து தட்டச்சு செய்வதால் ஐ யம் எஸ் கேப் சிறி அண்ணை 😊😊😊 அநேகமாக மனிசி பார்க்காது யாழ் இணையம் என்றதால தப்பிச்சுருவன் தல ஆனால் இந்த முக நூல்ல யாரும் போட்டு ரக் பண்ணி விட்டாங்கள் நமக்கு திண்ணையும் பழங்கஞ்சியும் தான் தனிக்காட்டு ராஜா என்றா மனிசிக்கு தெரியும் முதலில் யாழ் கள நண்பர்களை முகநூலில் விலத்து தோழிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும் 😎😎😎 ம்ம் இப்படித்தான் இருக்கணும் மைண் வாய்ஸ் சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கப்போறாங்கள் சைக் 😜😜😜 hahahahaha நேரம் கிடைக்கும் போது வந்து எட்டிப்பார்ப்பேன் அண்ணா😃😃😃
Checked
Wed, 10/01/2025 - 13:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed