1 month 4 weeks ago
யாழில்... காதலி களவெடுத்த காசில் வாங்கிய நவீன மோட்டார் சைக்கிளுக்கு, நல்லவன் மாதிரி சந்நிதியில் அர்ச்சனை!! மன்மதன் இவர்தானா? காதலி உட்பட 3 பேர் சிறைக்குள்!! NewJaffna
1 month 4 weeks ago
1 month 4 weeks ago
குருநாகல் பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய ஏழு பேர் அதிரடி கைது. 🙂 ஸ்ரீலங்கா.... சிங்கப்பூர் ஆகிற நாள் வெகு தொலைவில் இல்லை. பீடா, வெத்திலை, பாக்கு கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். எங்கடை அப்பு, ஆச்சிமார் பாவம்... 😂
1 month 4 weeks ago
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு!
1 month 4 weeks ago
எங்க ஊரில் குழந்தைகளுக்கு பம்பஸ் வாங்கிக் கட்டுவது குறைவு, எல்லாம் அங்குள்ள சூட்டுக்கு அவிஞ்சு சிவந்து போய்விடும், துண்டுதான் அதிகமாக கட்டுவார்கள். பழைய வேட்டி, சாரத்தை கிழித்துக் கட்டி அலம்பி அலம்பி காயவைத்துக் கட்டுவார்கள். செலவும் இருக்காது. பணம்படைத்தவர்கள் பகட்டுக்கு வாங்கிக் கட்டிவிட சூட்டில் எல்லாம் சிவந்து குழந்தை கத்திக் கதறும்.🫨
1 month 4 weeks ago
கள்ள மோட்டார் சைக்கிளுக்கு... கோவிலில் பூசையும் நடக்கின்றது. காணொளி: 👉 https://www.facebook.com/myjaffna/videos/1410267050249344 👈 களவு எடுத்த நகையை விற்று வாங்கிய புது மோட்டார் சைக்கிளுக்கு கோவிலில் வைத்து பூசை நடக்கின்றது. 😂 மோட்டார் சைக்கிளில் வெள்ளோட்டம் ஓடுபவர்தான்... அந்த, மச்சம் உள்ள காதலன். 🤣 ஐயர் மோட்டார் சைக்கிள் ரயரில் தேசிக்காய் வைத்து நசித்தும்... அந்த மோட்டார் சைக்கிள், ரோட்டில் ஓடாமல்... பொலிஸ் ஸ்ரேசனிலை நிற்க வேண்டி வந்திட்டுது. 😜
1 month 4 weeks ago
இல்லை. த வெ க வருகைக்கு பின், நா த க அதிகம் செய்தியில் இல்லை. கள்ளு இறக்கல், மாட்டுக்கு மாநாடு எண்டு ஏதோ சர்கஸ் மாரி போய்விட்டது நாதக - அதனால் அதிகம் பார்ப்பதில்லை. இதை போன மாதம் அமரிக்காவின் prohibition ஏன் பிழைத்தது என விளக்கி உங்களுக்கு ஒரு பதில் போட்டிருந்தேனே? அதுதான் நடக்கும்.
1 month 4 weeks ago
அப்ப அந்த 500 க்கு கொஞ்ச உடுப்புகள் மட்டும்தான் வாங்கலாம். அதற்குப் பிறகு வார செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால்... மேற்கொண்டு குழந்தை பெறுவதைப் பற்றி சீனர்கள் அக்கறை செலுத்துவார்கள். 😂
1 month 4 weeks ago
நெல்லை ஆணவக் கொலை; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு 30 JUL, 2025 | 12:59 PM திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட கவின் சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். எனவே இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவினின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கவின் செல்போன் பாஸ்வேர்டை பெறவும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியது. இதற்காக கவினின் சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர். மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கவின் மற்றும் அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடலை வாங்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆணையாளர் சந்தோஷ் துணை ஆணையர் பிரசன்ன குமார் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவின் உறவினரும் வழக்கறிஞருமான செல்வம் கூறுகையில் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்யலாம். ஆனால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுக்கிறது. அவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம். இதே நிலை தொடர்ந்தால் இந்த வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களிடமே அதற்கான ஆதாரங்களை காவல்துறை கேட்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் காதி மணி உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/221359
1 month 4 weeks ago
சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு; விசேட மாநாடு 06ஆம் திகதி Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 04:08 PM திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது கடந்த தவணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய இன்று புதன்கிழமை (30) அழைக்கப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து நீதிமன்ற அறிக்கையினை கோரியிருந்து. குறித்த அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த மனித எச்சங்கள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், அவற்றை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தி குறித்த எச்சங்கள் காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா, அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பிலும் குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடான மரணத்தின் மூலம் சம்பந்தப்பட்டவையா? என அறிய வேண்டி இருப்பதால் இதனை மேலும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று தொல்பொருளியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த பிரதேசத்தில் மயானம் இருந்ததாகவோ அல்லது மயானமாக பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக இருந்ததாகவோ எவ்வித துல்லியமான தகவல்கள் இல்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் குறித்த அறிக்கைகளின் பிரகாரம் குறித்த பிரதேசத்தில் அகழ்வுப்பணியை மேற்கொள்வதா, இல்லையா, என்பது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றின் மூலம் அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி புதன்கிமை வழக்கு மாநாடு ஒன்றை நடாத்துவதற்காக திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி குறித்த பகுதியை மூதூர் நீதிமன்ற நீதிபதி மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன்போது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/221381
1 month 4 weeks ago
30 JUL, 2025 | 03:31 PM லலித் என அழைக்கப்படும் லலித் வீரராஜ் மற்றும் குகன் என அழைக்கப்படும் குகன் முருகானந்தன் 2011 இல் காணாமல்போனமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்ல தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு உச்சநீதிமன்றத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார். கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க தயாராகயிருக்கின்றார் என தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கட்சிக்காரர் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய எந்த பகுதியிலும் சாட்சியமளிக்க தயார் என ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார். காணாமல்போன செயற்பாட்டாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை கோட்டாபயவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தரணி நுவான் போபகே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். ஆட்கொணர்வு மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஆஜராகவேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம் 2019 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த முன்னைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன. https://www.virakesari.lk/article/221374
1 month 4 weeks ago
1500 இல்லையாம் அண்ணை 500 டொலர் தானாம்!
1 month 4 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 03:51 PM வட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சிஐடி எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஓடிபியை குறுந்தகவல்கள் (SMS) ஊடாக அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடிக்காரர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் ஓடிபியை பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஓடிபியை பகிர்ந்தால், வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர். இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு சிஐடி வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/221370
1 month 4 weeks ago
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு 30 JUL, 2025 | 04:09 PM முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221382
1 month 4 weeks ago
8.8 magnitude earthquake off Russia's coast prompts tsunami warnings in Alaska, Hawaii Approximately 5,000 miles away, the earthquake was picked by a seismograph operated by the University of Pittsburgh at the Allegheny Observatory.
1 month 4 weeks ago
30 JUL, 2025 | 11:21 AM யாழ். நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221344
1 month 4 weeks ago
கலிபோர்னியாவில் சுனாமி அலைகள் 30 JUL, 2025 | 02:01 PM அமெரிக்க தேசிய வானிலை சேவையின்படி சுனாமி கலிபோர்னியாவின் கடற்கரையை அடைந்துள்ளது இது மாநிலத்தின் வடக்கே உள்ள அரினா கோவ் மற்றும் மான்டேரியில் தோன்றி மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது என்று அமெரிக்க தேசிய வானிலை சேவைதெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரிகான் எல்லைக்கு அருகிலுள்ள கிரசென்ட் நகரில், நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கலிபோர்னியா தனது முதல் சுனாமி அலைகளைக் காணத் தொடங்கியுள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, 1 அடிக்கு மேல் அலை காணப்பட்டுள்ளது, விரைவில் அதிக அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நகரம் வடக்கு கலிபோர்னியாவின் கடற்கரையின் 100 மைல் நீளத்தில் அமைந்துள்ளது, இது மிக உயர்ந்த எச்சரிக்கை மட்டமான சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளது. இந்த பகுதியின் தனித்துவமான நீருக்கடியில் புவியியல் "அலை ஆற்றலை புனலப்படுத்தும்" திறனைக் கொண்டிருப்பதால், இந்த பகுதி உயர்ந்த சுனாமி அபாயத்தில் உள்ளது என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221367 கலிபோர்னியாவில் வசிக்கும் நம்மகள உறவுகள் அவதானமாக இருங்கோ.
1 month 4 weeks ago
30 JUL, 2025 | 03:50 PM வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/221375
1 month 4 weeks ago
அவர் என்புமூட்டு சிகிச்சை நிபுணர். அவரின் கதைகளை நம்ம @நிழலி அண்ணை இணைக்கிறவர்.
1 month 4 weeks ago
இந்த 1500 டொலர், "பம்பர்ஸ்" வாங்கவே போதாதே. 😂
Checked
Sun, 09/28/2025 - 18:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed