புதிய பதிவுகள்2

நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

1 month 4 weeks ago
எதுக்கும் பழைய புளொட் இயக்க ஆட்களை விசாரிக்க வேண்டும். நாமலுடன் போய், மாலைதீவை பிடிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயச் சென்றவர்களா என அறிய.😁

நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

1 month 4 weeks ago
நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை! மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணை வழங்கியுள்ளார். நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். https://athavannews.com/2025/1441084

ஒஸ்கார் விருதுபெற்ற திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூத குடியேற்றவாசியால் சுட்டுக்கொலை

1 month 4 weeks ago
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூத குடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார். ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது. நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர். இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர் அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூத குடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார். ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர். https://www.virakesari.lk/article/221243

லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்; - லலித்தின் தந்தை

1 month 4 weeks ago
லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் ; இவர்களாவது நீதியை பெற்றுதருவார்கள் என நம்புகின்றேன் - லலித்தின் தந்தை Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 03:55 PM லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித் குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம். இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு உள்ளது வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம். லலித் குகன் மாத்திரமல்ல பதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர். அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும். லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும், இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கவேண்டும். எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தால் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன். https://www.virakesari.lk/article/221282

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் மக்கள் பதற்றம்!

1 month 4 weeks ago
29 JUL, 2025 | 11:35 AM நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை. இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினரின் வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இராணுவத்தின் அத்துமீறல் இன்னமும் தொடர்கிறதா என பெருமளவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221249

ஒரே ஒரு பாஸ்வேர்ட் 150 ஆண்டு பழைய நிறுவனத்தை அழித்தது எப்படி?

1 month 4 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒன்றாகும். கட்டுரை தகவல் ரிச்சர்ட் பில்டன் பிபிசி பனோரமா 35 நிமிடங்களுக்கு முன்னர் சைபர் ஹேக்கிங் கும்பல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரிட்டன் நிறுவனத்தை, இந்த ஹேக்கர் கும்பல் அழித்த சிறிது நேரத்திலேயே, அந்த நிறுவனத்தின் 700 ஊழியர்களும் தங்களது வேலைகளை இழந்தனர். இந்த சம்பவம், ஒரே ஒரு பலவீனமான பாஸ்வோர்டால் தொடங்கியது. சைபர் ஹேக்கிங் கும்பல் (இணையவழியில் தரவுகளைத் திருடும் கும்பல்), அந்த 'பலவீனமான பாஸ்வோர்டைக் 'கைப்பற்றி, நிறுவனத்தின் கணினி அமைப்புகளை முடக்கியது. இது தான் அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் நிறுவனங்களில் ஒன்றாகும். எம்&எஸ், கோ-ஆப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சமீபத்திய மாதங்களில் இத்தகைய சைபர் தாக்குதல்களால் (இணையவழி தாக்குதலால்)பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் , கோ-ஆப் நிறுவனத்தைச் சேர்ந்த 65 லட்சம் உறுப்பினர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருந்தார். கேஎன்பி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஹேக்கர்கள் முதலில் ஒரு ஊழியரின் பாஸ்வோர்டை யூகித்து, பின்னர் நிறுவனத்தின் கணினி அமைப்பிற்குள் நுழைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் அவர்கள் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து அதன் உள் அமைப்புகளை முடக்கியுள்ளனர். ஒரு பணியாளரின் பலவீனமான பாஸ்வோர்ட், நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அந்த பணியாளரிடம் சொல்லவில்லை என்று கேஎன்பி இயக்குனர் பால் அபோட் கூறுகிறார். "நிறுவனங்களும் அமைப்புகளும், தங்கள் கணினி அமைப்புகளை பாதுகாக்க, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் (NCSC) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். சர்வதேச சைபர் ஹேக்கிங் கும்பல்களுடன் போராடும் குழுவைச் சந்திக்க, பிபிசி பனோரமா குழுவிற்கு தேசிய சைபர் பாதுகாப்பு மையம் அனுமதி வழங்கியது. 'ஒரு சிறிய தவறு எங்களை பாதித்துவிட்டது' படக்குறிப்பு,பால் அபோட்டின் நிறுவனம் கேஎன்பி சைபர்தாக்குதலுக்கு ஆளானது. 2023 ஆம் ஆண்டில், கேஎன்பி நிறுவனம் 500 லாரிகளை இயக்கியது. அதில் பெரும்பாலானவை 'Knights of Old' என்ற பிராண்டின் கீழ் இயங்கின. தொழில்துறையின் தரநிலைகளை, தனது நிறுவனத்தின் ஐடி துறை பின்பற்றுவதாகக் கூறும் அந்த நிறுவனம், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக காப்பீட்டுக் கொள்கையும் எடுத்துள்ளது. ஆனால், 'அகிரா' என்ற ஹேக்கர் குழு, அந்த அமைப்பை உடைத்து, வணிகத்தை இயக்கத் தேவையான முக்கியமான தரவுகளை ஊழியர்கள் அணுக முடியாதபடி தடுத்தது. தரவை திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று ஹேக்கர்கள் கூறியுள்ளனர். "நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தின் உள் கட்டமைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துவிட்டது என்று அர்த்தம். கண்ணீரையும் கோபத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மறையான உரையாடலை நடத்த முயற்சி செய்யுங்கள்" என்று நிறுவனத்தை மீட்க வேண்டுமென்றால் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்று கூறிய ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், இத்தகைய வழக்குகளை கையாளும் நிபுணர்கள், அது மில்லியன் கணக்கான பவுண்டுகளாக இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். தங்கள் அமைப்பு ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொள்வதாக, NCSC - தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (National Cyber Security Centre) கூறுகிறது. தேசிய சைபர் பாதுகாப்பு மையம் என்பது GCHQ (Government Communications Headquarters) என்ற பிரிட்டனின் மூன்று முக்கிய பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று. MI5 மற்றும் MI6 ஆகியவை அதன் மற்ற இரண்டு அமைப்புகளாக உள்ளன. தினசரி நிகழும் சைபர் தாக்குதல்களைக் கையாளும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் குழுவை சாம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழிநடத்துகிறார். "ஹேக்கர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை," என்கிறார் சாம். அவர்கள் வெறுமனே ஒரு பலவீனமான இணைப்பைத் தேடுவதாகக் கூறும் அவர், "அவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படக்கூடிய நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது அவர்களை குறிவைத்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்" என்றும் பிபிசி பனோரமாவிடம் குறிப்பிடுகிறார். 'தாக்குதல் நடத்துபவர்கள் மிக அதிகம், அவர்களைத் தடுக்கக் கூடியவர்கள் மிகக் குறைவு' படக்குறிப்பு,நிறுவனங்கள் தங்கள் சைபர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறார் பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன். தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை அடையாளம் காண உளவுத்துறை ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் கணினி அமைப்பிலிருந்து ஹேக்கர்களை அகற்றி அவர்களுடைய மென்பொருளை நிறுவ முயற்சிக்கின்றனர். ஜாக் (அவரது உண்மையான பெயர் மாற்றபட்டுள்ளது) சமீபத்திய சம்பவத்தின் போது இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஹேக்கர்களின் தாக்குதலை முறியடித்துள்ளார். "தாக்குதல் எப்படியானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே சேதத்தை முடிந்தவரை குறைக்க விரும்புவீர்கள். குறிப்பாக நீங்கள் வெற்றி பெற்றால் அது உற்சாகமாக இருக்கும்" என்கிறார் ஜாக் . தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (National Cyber Security Centre) பாதுகாப்பு அடுக்கை மட்டுமே வழங்க முடியும் என்று கூறுகிறது. இந்த மென்பொருள் கடத்தல் முறை என்பது வேகமாக வளர்ந்து வரும், லாபம் நிறைந்த ஒரு சைபர் குற்றம் (இணையவழியில் நடக்கும் குற்றம்) என்பது அனைவருக்கும் தெரியும். "இதில் ஈடுபடுபவர்கள் அதிகமாக இருப்பதும், எங்களைப் போன்றவர்கள் மிகக் குறைவாக இருப்பதும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரு காரணம்" என்று சாம் கூறுகிறார். நிறுவனங்கள் தாக்குதல்களை அல்லது அவர்கள் கேட்கும் தொகைகள் குறித்து புகாரளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததால், எத்தனை நிறுவனங்கள் ஹேக்கர்களுக்கு மீட்புத் தொகையை செலுத்துகின்றன என்பதற்கான தரவு கிடைப்பது கடினம். ஆனால், அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு பிரிட்டனில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது இதுபோன்ற 19,000 தாக்குதல்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகிறது. பிரிட்டனில் வழக்கமாக சுமார் 4 மில்லியன் யூரோவை அவர்கள் மீட்புத் தொகையாக கேட்கிறார்கள் என்று தொழில்துறை ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களால் மட்டுமே அதை செலுத்த முடிகின்றது. "கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் நடந்த சைபர் தாக்குதல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்," என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். குற்றவாளிகள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை மறுக்கும் அவர், நிறுவனங்கள் தங்களது சைபர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஆனால் தடுப்பு நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை என்றால், தேசிய குற்றவியல் நிறுவனத்தின் (NCA) இரண்டாவது குழு குற்றவாளிகளைப் பிடிக்க முயல்கிறது. ஹேக்கிங் என்பது ஒரு குற்றமாக இருப்பினும், அதில் நிறைய பணம் சம்பாதிக்க முடிவதால், இது அதிகரித்து வருகிறது என்கிறார் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் தலைவரான சுசான் கிரிம்மர். அவரது பிரிவு, எம்&எஸ் நிறுவனத்தின் ஹேக்கிங் சம்பவம் குறித்து ஆரம்பகட்ட மதிப்பாய்வை நடத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பிரிவுக்குப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு வாரமும் சுமார் 35 முதல் 40 ஹேக் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக கிரிம்மர் கூறுகிறார். "இந்தப் போக்கு தொடர்ந்தால், பிரிட்டனின் மென்பொருள் கட்டமைப்புத் தாக்குதல்களுக்கு இதுவே மிக மோசமான ஆண்டாக இருக்கும் என்று நான் கணித்துள்ளேன்," என்றும் அவர் பகிர்ந்துகொண்டார். 'ஹேக்கிங் எளிதாகி வருகிறது' படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள தேசிய குற்றவியல் அமைப்பின் குழுத் தலைவரான சுசான் கிரிம்மர், ஹேக்கிங் மூலம் அதிகமான பணம் கிடைப்பதால் அது அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். இப்போது ஹேக்கிங் செய்வது மிகவும் எளிதாகி வருகிறது. சில உத்திகளில் கணினியே தேவைப்படுவதில்லை. உதாரணமாக, ஐடி உதவி மையங்களுக்கு அழைப்பு விடுத்து, தாக்குதலைத் தொடங்கும் வழியும் உள்ளது. "இது தாக்குதல்களுக்கான தடைகளைக் குறைத்துள்ளது," எனும் கிரிம்மர், "இப்போது குற்றவாளிகள், எந்தவொரு தொழில்நுட்ப திறனும் இல்லாமல், தாக்குதலுக்குத் தேவையான கருவிகள் மற்றும் சேவைகளை எளிதாக அணுகுகிறார்கள்" என்றும் தெரிவித்தார். 'எம்&எஸ்' நிறுவனத்தின் கணினி அமைப்புக்குள் ஹேக்கர்கள் ஊடுருவி, மோசடி வழியாக, அவர்கள் உள் அமைப்புகளை அணுகும் அனுமதியைப் பெற்றனர். இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன, விநியோகங்கள் தாமதமானது, அலமாரிகள் காலியாக இருந்தன, வாடிக்கையாளர் தரவுகளும் திருடப்பட்டன. இன்றைய இளைய தலைமுறை ஹேக்கர்கள், "கேமிங் வழியாக சைபர் குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்." இது அவர்களின் ஒரு புதிய சிறப்பியல்பாக பார்க்கப்படுகிறது என்கிறார் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் பாபேஜ். இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனத்தை மீட்பதற்கான தொகையை செலுத்த வேண்டுமா? படக்குறிப்பு, "இப்போது குற்றவாளிகள், எந்தவொரு தொழில்நுட்ப திறனும் இல்லாமல், தாக்குதலுக்குத் தேவையான கருவிகள் மற்றும் சேவைகளை எளிதாக அணுகுகிறார்கள்" "மென் திறன்கள்" (soft skills) மூலம் உதவி மையங்களை ஏமாற்ற முடியும் என்பதை இளைய தலைமுறை ஹேக்கர்கள் உணர்ந்துள்ளார்கள்" என்று கூறும் ஜேம்ஸ் பாபேஜ், "இது நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் நுழைய அவர்களுக்கு உதவுகிறது" என்று விளக்குகிறார். அமைப்புக்குள் நுழைந்த பிறகு, ஹேக்கர்கள் டார்க் நெட்டிலிருந்து வாங்கிய மென்பொருளைப் பயன்படுத்தி, தரவை திருடி, கணினி அமைப்புகளை முடக்குகிறார்கள் . "ரான்சம்வேர் என்பது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சைபர் குற்ற அச்சுறுத்தலாகும். இது பிரிட்டன் உட்பட உலகம் முழுவதற்கும், மேலும் தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்தாக இருக்கிறது" என்கிறார் ஜேம்ஸ் பாபேஜ். இதே கருத்தைத் தான் மற்றவர்களும் முன்வைக்கின்றனர். டிசம்பர் 2023 இல், பிரிட்டன் தேசிய பாதுகாப்பு உத்தி குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழு, "எந்த நேரத்திலும் பேரழிவு தரும் ரான்சம்வேர் தாக்குதல் நடப்பதற்கு அதிக ஆபத்து" இருப்பதாக எச்சரித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டனின் தேசிய தணிக்கை அலுவலகம் (NAO), பிரிட்டனில் சைபர் அச்சுறுத்தல் தீவிரமானது என்றும், வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. நிறுவனங்கள், "அவை முன்னெடுக்கும் அனைத்து முடிவுகளிலும் சைபர் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். இந்த சைபர் ஹேகிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிறுவனத்தை மீட்க, ஹேக்கர்கள் கேட்கும் தொகையை செலுத்துவதை, தான் ஊக்குவிப்பதில்லை என்று ஜேம்ஸ் பாபேஜ் கூறுகிறார். "இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மீட்கும் தொகையை செலுத்துவது இந்த குற்றங்களை மேலும் ஊக்குவிக்கிறது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். அரசாங்கம், அதன் நிறுவனங்கள் மீட்கும் பணத்தை செலுத்துவதை தடுக்கும் ஒரு விதியை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேபோல், இப்போது ரான்சம்வேர் தாக்குதல்கள் நிகழ்ந்தால், தனியார் நிறுவனங்கள் அவற்றைக் குறித்துப் புகாரளிக்க வேண்டும், மேலும் மீட்கும் தொகையை செலுத்துவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி நிறுவனத்தின் இயக்குனர் பால் அபோட், சைபர் அச்சுறுத்தல்களின் ஆபத்துகள் குறித்து மற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். நிறுவனங்கள் இப்போது தங்களிடம் அதிநவீன ஐடி பாதுகாப்பு, அதாவது ஒரு வகையான 'சைபர் எம்ஓடி' இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். "குற்றச் செயல்களுக்கு எதிராக, வலுவான நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்கும் சட்டங்கள் இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார். பல நிறுவனங்கள், இத்தகைய சைபர் குற்றங்களைப் புகாரளிக்காமல், மௌனமாக குற்றவாளிகளுக்குப் பணத்தையும் செலுத்துகின்றன என்று கூறுகிறார் கேஎன்பி நிறுவனத்துக்காக பணியமர்த்தப்பட்ட சைபர் நிபுணர் பால் காஷ்மோர். நிறுவனங்கள் அனைத்தையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும்போது, அவை அந்தக் கும்பல்களுக்கு அடிபணிகின்றன. "இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். குற்றவாளிகளைப் பிடிக்க, மிகக் குறைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறார் பால் காஷ்மோர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14e40jr2j4o

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!

1 month 4 weeks ago
🔴யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா - கொடியேற்றம் - 29.07.2025">யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா - கொடியேற்றம் - 29.07.2025

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி பதவிவகிப்பதால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ

1 month 4 weeks ago
Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 11:21 AM பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 'இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொலிஸாரும் சிஐடியினருமே விசாரணைகளை கையாள்கின்றனர் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ஆனால் அவர் பிரதியமைச்சராக பதவி வகிக்கின்றார், இதனால் விசாரரணைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும், உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பிரதியமைச்சராக பதவி வகிப்பதால் மக்கள் இயல்பாகவே விசாரணைகள் மீது அவர் செல்வாக்கு செலுத்தலாம் என கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக விசாரணைகளின் நம்பகதன்மை குறித்த கேள்வி எழும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிற்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ கிழக்கு மாகாணத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றியவேளை ஜயசேகரவிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக அவருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்ததா? இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அவர் சிஐடியினருக்கு வாக்குமூலம் தெரிவித்தது எனக்கு நினைவில் இருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விசாரணைகளிற்கு பின்னரே அவருக்கு தொடர்புள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221248

கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது

1 month 4 weeks ago
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம்; வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் துமிந்த திசாநாயக்க 29 JUL, 2025 | 12:12 PM முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் வழக்கிலிருந்து விடுதலை செய்து கல்கிஸ்ஸை நீதவான் சத்துரிக்கா டி சில்வா இன்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் சந்தேக நபராக குறிப்பிடப்படும் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே மாதம் 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221258

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள் - வைரல் புகைப்படத்தின் உண்மையான பின்னணி

1 month 4 weeks ago
பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்லது 'ஜாஜ்டா' என்று அழைக்கப்படும் இந்த வகைத் திருமணம், சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் பாரம்பரியம் ஆகும். சிர்மௌர் மாவட்டம் டிரான்ஸ் கிரி பகுதியில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனம் என திருமணம் களைகட்டியிருந்தது. கலாசார பாரம்பரியத்திற்கான உதாரணமாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இந்த திருமணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்து தம்பதியினரின் குடும்பத்தினரிடம் பேச பிபிசி பலமுறை முயன்றது, ஆனால் அவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, மாநில அரசின் ஜல் சக்தி துறையில் பிரதீப் நேகி பணிபுரிகிறார், கபில் நேகி வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார் பழமையான பாரம்பரிய சடங்கு ஜோடிதாரா சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் மணமகள். மணமகன்கள் இருவரும் குன்ஹாட் கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷிலாய் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி மாநில தலைநகர் சிம்லாவிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டு குடும்பங்களும் ஹாடி சமூகத்தைச் சேர்ந்தவை. இந்த சமூகத்தினர், சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியிலும், உத்தரகண்டின் ஜெளன்சர்-பாவர் மற்றும் ரவாய்-ஜெளன்பூர் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரிடைய பல கணவர் மணம் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இந்த 'ஜோடிதாரா' நடைமுறை குடும்பத்திற்குள் ஒற்றுமையைப் பேணுவதற்காகவும், பரம்பரையாக வரும் சொத்து பிரியாமல் ஒன்றாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக ஹாடி சமூகத்தினர் நம்புகின்றனர். ஒரு பெண், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களை மணந்து கொள்வது இயல்பானது. திருமணமானவுடன், வீட்டுப் பொறுப்புகளை பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்வதற்கு இந்தத் திருமண நடைமுறை உதவுவதாக நம்பப்படுகிறது. சிர்மௌரைத் தவிர, சிம்லா, கின்னௌர் மற்றும் லாஹெளல் ஸ்பிதியின் சில பகுதிகளிலும் இந்த பாரம்பரியம் காணப்படுகிறது. "ஜோடிதாரா பாரம்பரியம் எங்களது அடையாளம். இது, நிலம் உட்பட சொத்துக்கள் பிரிவதைத் தடுக்கவும், வரதட்சணை முறையைத் தவிர்க்கவும், சகோதரர்களிடையே ஒற்றுமையைப் பேணவும், குழந்தைகளை வளர்க்கவும் உதவுகிறது" என உள்ளூர்வாசியான கபில் செளகான் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஷிலாயி பகுதியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும், நான்கு முதல் ஆறு குடும்பங்கள் இந்த நடைமுறையை இன்றும் பின்பற்றுகின்றன. அண்மையில் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி கபில் செளகானிடம் கேட்டோம். "இதுபோன்ற திருமணங்கள் நீண்ட காலமாகவே நடைபெறுகின்றன. இதுபற்றி எனக்கு தெரியும். இது புதுமாதிரியான திருமணம் இல்லை. இது ஒரு வழக்கமான பாரம்பரியம். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம், மணமகள், மணமகன் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டால், மற்றவர்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். "இந்த திருமண முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், திருமணம் செய்துக் கொள்ளாமலே ஒன்றாக வாழும் 'லிவ்-இன்' உறவுகளிலும் மக்கள் வசதியாக இருக்கிறார்கள்." பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்த திருமணம் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகும் கலாசார பெருமை ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் ஒரு பெண் ஒரே மணமேடையில் இருவரைத் திருமணம் செய்துக் கொண்டது மட்டுமல்ல. மணமகள் மற்றும் அவரது கணவர்கள் இருவரும் படித்தவர்கள். மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி ஹிமாச்சல் பிரதேச மாநில அரசின் ஜல் சக்தி துறையில் பணிபுரிகிறார், கபில் நேகி வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார். இந்தத் திருமணம் குறித்து பிபிசியிடம் பேசிய சுனிதா செளகான், "இந்தத் திருமணம் என்னுடைய சொந்த முடிவு. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், தெரிந்துதான் அதை ஏற்றுக்கொண்டேன்" என்று கூறினார். மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி, "எங்கள் கலாசாரத்தில், இது நம்பிக்கை, அக்கறை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கான உறவு" என்று சொல்கிறார் . மணமகன்களில் மற்றொருவரான கபில் நேகி, "நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இந்த உறவை நான் மதிக்கிறேன். என் மனைவிக்கு நம்பிக்கையையும் அன்பையும் கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார். இந்த திருமணம் பாரம்பரிய ரமல்சார் பூஜை முறைப்படி நடந்தது. இந்த முறையில், சப்தபதி முறையில் தீயை வலம் வருவதற்கு பதிலாக, 'சின்ஜ்' எனப்படும் சத்தியப் பிரமாணம் செய்யப்படுகிறது. நெருப்பின் முன் நின்று மணமக்கள் ஒன்றாக வாழ்வதாக சத்தியம் செய்கின்றனர். வழக்கமான திருமணங்களில் மணமகன் ஊர்வலமாக மணமகளின் வீட்டிற்கு செல்வார். ஆனால், ஜோடிதாரா பாரம்பரியத்தில், மணமகள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஊர்வலமாக மணமகன் வீட்டிற்குச் செல்வார்கள். இந்த வகையிலும், ஜோடிதாரா பாரம்பரியம் பிற இந்திய திருமண மரபுகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, உத்தரகண்டில் உள்ள ஹாடி சமூகத்தினர் ஜெளன்சாரி சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் அவர்களுக்கு இது போன்ற மரபுகள் உள்ளன வாஜிப்-உல்-அர்ஸ் மற்றும் சட்ட அங்கீகாரம் ஹிமாச்சல் பிரதேசத்தில், ஜோடிதாராவின் நடைமுறை 'வாஜிப் உல் அர்ஸ்' எனப்படும் காலனித்துவ கால வருவாய் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம், கிராமங்களின் சமூக மற்றும் பொருளாதார நடைமுறைகளைப் பதிவுசெய்து ஜோடிதாராவைத் ஹாடி சமூகத்தின் பாரம்பரியமாக அங்கீகரிக்கிறது. விவசாய நிலங்கள் பிரிந்துபோவதைத் தடுப்பதும், குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதும் இந்த நடைமுறையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஒருதார மணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று இந்து திருமணச் சட்டம் கூறுவதால் தான், இத்தகைய திருமணங்களின் சட்டப்பூர்வ நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. "இரண்டு திருமணங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால், 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS) பிரிவு 32 ஆகியவை பொருந்தாது" என்று ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுஷில் கௌதம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலாசாரம் மற்றும் வரலாற்று பின்னணி ஜோடிதாரா பாரம்பரியத்தின் வேர்கள், டிரான்ஸ் கிரி பகுதியில் ஆழமாக வேரூன்றியிருப்பதாக நம்பப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியுடன் கதையுடன் பாரம்பரிய வேர்கள் இணைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் பலர் இதை 'திரௌபதி பிரதா' என்றும் அழைக்கிறார்கள். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டாக்டர் ஒய்.எஸ். பர்மார், ஜோடிதாரா பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ள சமூக மற்றும் பொருளாதார காரணங்களை 'Polyandry in the Himalayas' என்ற தனது புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, 'மலைப்பாங்கான பகுதிகளின் கடினமான சூழ்நிலைகளில் இந்த நடைமுறை வளர்ந்தது, அங்கு விவசாய நிலங்களை ஒன்றாக வைத்திருப்பது அவசியம்.' "இந்த நடைமுறை, சமூக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதுடன் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் மரபுகளை பிரதிபலிக்கிறது. இது சமூக மதிப்புகளைப் பாதுகாப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று ஹாடி சமூகத்தைச் சேர்ந்த அறிஞரும் சமூக ஆர்வலருமான அமிசந்த் ஹாடி கூறுகிறார். மத்திய ஹாடி குழுவின் பொதுச் செயலாளர் குந்தன் சிங் சாஸ்திரி கூறுகையில், இந்த பாரம்பரியம் மிகவும் பழமையானது என்றும், குடும்ப ஒற்றுமையைப் பேணுவதே இதன் நோக்கம் என்றும் கூறுகிறார். 'பல கணவர் மணம்' தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் இந்தத் திருமணத்திற்குப் பிறகு, சமூக மற்றும் தார்மீக ரீதியிலான விவாதங்களும் தொடங்கிவிட்டன. பல கணவர் மணம் என்பதை, ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் விஷயமாகக் கருதுகின்றனர். இருந்தபோதிலும், இதுபோன்ற திருமணங்கள், பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறுகின்றன. "ஜோடிதாரா நடைமுறை பெண்களை சுரண்டுவதை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது" என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தவாலே கூறினார். இது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் டாக்டர் ஓம்கார் ஷாத் கூறினார். ஹிமாச்சல் பிரதேச அரசின் தொழில்துறை அமைச்சரும் ஷிலாயி எம்எல்ஏவுமான ஹர்ஷ்வர்தன் செளகான், "இது ஷிலாயி-இன் பழைய பாரம்பரியம். பிரதீப்பும் கபிலும் இந்த பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருப்பதன் மூலம் தங்கள் கலாசார பாரம்பரியத்தை மதித்துள்ளனர்" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, சிர்மௌரின் கிரிபார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஹாடி சமூகத்தைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் ஹாடி சமூகத்தின் பிற திருமண பழக்கவழக்கங்கள் ஜோதிதாராவைத் தவிர, ஹாடி சமூகத்தில் மேலும் நான்கு பாரம்பரிய திருமண பழக்கவழக்கங்கள் வழக்கத்தில் உள்ளன. குழந்தை திருமணம்: தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே குழந்தையின் திருமணம் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும், குழந்தை வளர்ந்து தனது சம்மதத்தை அளித்த பின்னரே திருமணச் சடங்குகள் நடைபெறும். ஜாஜ்டா திருமணம்: இந்த வகை திருமணத்தில், மணமகன் தரப்பினர் திருமணத்தை முன்மொழிவார்கள். பெண் வீட்டாரின் சம்மதம் பெற்ற பிறகு, திருமணச் சடங்குகள் நடைபெறும். இந்த மரபிலும், 'சின்ஜ்' எனப்படும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு மணமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். கிதையோ திருமணம்: திருமணமான பெண் தனது கணவன் வீட்டாருடனான உறவை முறித்துக் கொண்டு வேறொருவரை மணப்பதை கிதையோ திருமணம் என்று அழைக்கின்றனர். ஹார் திருமணம்: ஒரு பெண் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆணைத் திருமணம் செய்தால் அதை ஹார் திருமணம் என்று அழைக்கின்றனர். பட மூலாதாரம், PUNEET BARNALA/BBC காலத்திற்கு ஏற்ப மாறும் மரபு ஜோடிதாரா வகை திருமணங்கள் தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர். "இந்த வழக்கம் தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணப்படுகிறது, பெரும்பாலான திருமணங்கள் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெறுகின்றன" என்று சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டா கூறுகிறார். இருப்பினும், இந்த சமீபத்திய திருமணம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் ஹாடி சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டியல் பழங்குடி அந்தஸ்து காரணமாகவும் இது அதிகரித்துள்ளது. ஹாடி சமூகத்தின் மொத்த மக்கள் தொகை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லை. ஆனால், இந்த சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 2.5 முதல் 3 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டது. இதில் சிர்மௌரின் டிரான்ஸ் கிரி பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பேர் வரை என்று கூறப்பட்டது. ஹாடி சமூகத்தினரின் பின்னணி சிர்மௌர் மாவட்டம் கிரிபார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பகுதியில் நிரந்தர சந்தை இல்லை, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வந்த சமூகத்தினர், பொருட்களை விற்பதற்காக தற்காலிக சந்தைகளை அமைத்தனர். இப்படி சந்தை அமைத்த இந்த சமூகம் காலப்போக்கில், ஹாடி என்று அறியப்பட்டது. ஹாடி என்றால் சந்தை என்று பொருள் ஆகும். ஹாடி என்ற பெயர், உள்ளூர் ஹாட் பஜாரில் வீட்டுப் பொருட்களை விற்கும் பழைய பாரம்பரியத்துடன் தொடர்புடையது என சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டாவின் கூறுகிறார். உத்தரகண்டில் உள்ள ஹாட்டி சமூகத்தினர் ஜெளன்சாரி சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள், இந்த இரு சமூகத்தினரின் மரபுகள் மிகவும் ஒத்தவை. ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹாடி சமூகத்திற்கு மத்திய அரசு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கியது. இருப்பினும், 2024 ஜனவரியில், 'கிரிபார் பட்டியல் சாதி பாதுகாப்புக் குழு' தாக்கல் செய்த மனுவின் பேரில் ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த முடிவை நிறுத்தி வைத்தது. ஹாடி சமூகத்திற்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவது தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையைப் பாதிக்கலாம் மற்றும் பட்டியல் சாதியினரின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று குழு கூறுகிறது. இந்த சமூகம் பட்டியலின பழங்குடி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், அதற்கான வசதிகளைப் பெறுவதில்லை. உத்தரகண்ட் (அன்றைய ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசம்) மாநிலத்தின் ஹாடி சமூகத்தினர் 1967ஆம் ஆண்டிலேயே பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4ge4j32736o

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த 54 வயது சகோதரன் படுகொலை!

1 month 4 weeks ago
Published By: DIGITAL DESK 2 29 JUL, 2025 | 12:35 PM யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார். இருப்பினும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/221261

"கடல் மீன்களில் நச்சு உலோகங்கள்" : இலங்கை அருகே 2021-ல் மூழ்கிய கப்பலால் ஏற்பட்ட பின் விளைவுகள் என்ன?

1 month 4 weeks ago
பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, எக்ஸ்-பிரஸ் கப்பல் விபத்துக்குப் பிறகு கொழும்பு கடற்கரையில் பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) மற்றும் பிற குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை வீரர்கள் பணியாற்றினர். புகைப்படம்: மே 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லியானா ஹோசியா & சரோஜ் பதிரானா நீர்கொழும்பு, இலங்கை 28 ஜூலை 2025 நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சரக்குக் கப்பல் விபத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கசிவுக்கு பிறகு, இன்னும் இலங்கை கடற்கரைகளின் மணலில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை (நர்டுல்ஸ்-nurdles) தன்னார்வலர்கள் பிரித்தெடுத்து வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்), டன் கணக்கில் எரிபொருள், அமிலம், காஸ்டிக் சோடா, ஈயம், செப்புக் கழிவு, லித்தியம் பேட்டரிகள், எபோக்சி பிசின் ஆகியவை கடலுக்குள் சிதறியதாகக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை. அந்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் உடனடியாகத் தெரிந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கடற்கரையை வெண்மையாக மாற்றின. இறந்த ஆமைகள், டால்பின்கள், மீன்கள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. ஆனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முன்பு நினைத்ததைவிட, மிக நீண்ட காலம் நீடிக்கலாம் என விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கின்றனர். அதிகரிக்கும் நச்சுத்தன்மை இதுவரை கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால், மணலில் ஆழமாக மறைந்திருக்கும் பயறு அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடிப்பது இப்போது மிகவும் கடினமாக உள்ளது. மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் துகள்கள் இன்னும் அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறுவதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது. "அவை கடலின் மாசுபாட்டை உறிஞ்சும் ஒரு பெரிய ரசாயன ஸ்பாஞ் போல இருக்கின்றன," என்று மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் டேவிட் மெக்சன் கூறுகிறார். நர்டில்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க உருக்கப்படும் மூலப்பொருட்கள். உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகத்தில் இவற்றைப் பெரிய அளவில் கொண்டு செல்வது, வழக்கமான ஒன்று தான். துபாய் துறைமுகத்திலிருந்து மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்குப் பயணிக்கும்போது, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரிக் அமிலம் கொண்ட ஒரு கொள்கலன் கசிந்து உலோகப் பெட்டியை அரிப்பதாக குழுவினர் கண்டனர். ஆனால், புகையை வெளியிடுகின்ற , கசியும் கொள்கலனை நிறுத்த கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. 2021ம் ஆண்டு,மே 19ம் தேதி இரவு , அக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழையும்போது, அதில் உள்ள கொள்கலன் எட்டு நாட்களாக மணிக்கு ஒரு லிட்டர் வீதம் அமிலம் கசிந்து கொண்டிருந்தது. பின்னர் அக்கப்பல் அவசரமாக துறைமுகத்தில் நிறுத்தப்பட அனுமதி கோரியது, ஆனால் காலையில் சிங்கப்பூர் கொடியுடைய அந்தக் கப்பல் தீப்பிடித்தது. அந்தக் கப்பலின் குழுவினர், இலங்கை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் தீயணைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், தீ முழுக் கப்பலுக்கும் பரவியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கப்பல் மூழ்கியது. அதன் சரக்குகள் மற்றும் எரிபொருள், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து, ஒன்பது கடல் மைல் தொலைவில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கே நீர்கொழும்புக்கும் இடையில் கடலில் சிந்தியது. படக்குறிப்பு, இலங்கையின் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்களை முதித கட்டுவாலா காட்டுகிறார். "போர் திரைப்படத்தைப் போல இருந்தது" "அடுத்து நடந்தது ஒரு போர் திரைப்படத்தைப் போல இருந்தது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், பேர்ல் ப்ரொடெக்டர்ஸ் என்ற உள்ளூர் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான முதித கட்டுவாலா கூறினார். இந்த அமைப்பு, இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திய, கப்பல் உரிமையாளர்களின் நிதியுதவியுடன் இயங்கிய துப்புரவுப் பணியில் தன்னார்வமாக பங்கேற்றது. "அதே மாதிரியான பாதிப்புகளுடன் ஆமைகள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. அவற்றின் தோலில் இருந்த தீக்காயங்கள் உரிந்து கொண்டிருந்தது. அவற்றின் மூக்கும் கண்களும் சிவந்து வீங்கி இருந்தன. டால்பின்களும் கரை ஒதுங்கின. அவற்றின் தோலும் சிவந்து உரிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம்" என்றார் முதித கட்டுவாலா. கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் , "பனி போல" இருந்தன. "அதைப் பார்க்கவே பயமாக இருந்தது," என்றும் அவர் கூறினார். அதனை சுத்தம் செய்யும் பணி தீவிரமாகத் தொடங்கியது. தொடக்கத்தில், கட்டுவாலாவும் அவரது சக தன்னார்வலர்களும் சேர்ந்து, ஒவ்வொரு நாளும் "300–400 கிலோ நுண்துகள்களை" சேகரித்தனர். காலப்போக்கில், துப்புரவுப் பணியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகளின் (நர்டுல்ஸ்) அளவு இரண்டு மணி நேரத்தில் 3-4 கிலோவாகக் குறைந்தது. "பிளாஸ்டிக் உருண்டைகள் சிதறிக் கொண்டிருந்தன. மணலில் புதைந்து போனதால் அவற்றைப் பார்ப்பதே கடினமாக இருந்தது," என்று அவர் குறிப்பிடுகிறார். தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது இனி பயனளிக்காது என முடிவு செய்யப்பட்டது. எனவே, அவர்களின் பணி நிறுத்தப்பட்டு, அரசு ஏற்பாடு செய்த உள்ளூர் துப்புரவுக் குழுக்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில், பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) விலங்குகளுக்கு ஏற்கனவே தீங்கு விளைவிப்பதோடு, கசிவு அல்லது வேறு மாசு மூலங்களால் இன்னும் அதிகமான நச்சுத்தன்மை பெற்று மாசடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து, காலப்போக்கில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய முயன்றனர். படக்குறிப்பு, தீயில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகள் தான் மிகவும் அதிகமாக மாசுபட்டவை என்று தடயவியல் வேதியியலாளர்கள் கூறுகின்றனர். பிபிசி நடத்திய புலனாய்வு 2024 நவம்பரில், பிபிசி மற்றும் வாட்டர்ஷெட் புலனாய்வுகள் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் வேதியியலாளர்கள் குழுவிற்கு அனுப்பின. தீயில் எரிந்த பிளாஸ்டிக் உருண்டைகள் மிகவும் மாசுபட்டிருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். அவை ஆர்சனிக், ஈயம், காட்மியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் போன்ற நச்சுத்தன்மையுள்ள உலோகங்களை வெளியிடுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை. "இன்னும் சுற்றி வரும் துகள்கள் சுற்றுச்சூழலில் இருந்து மாசுபாட்டை உறிஞ்சி, மேலும் நச்சுத்தன்மையுடையதாக மாறுகின்றன" என்றும், "அவற்றை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்ளும் போது, மாசுபாட்டை அவற்றுக்குள் பரப்பும்"என்றும் மெக்சன் கூறுகிறார். பேரழிவை ஏற்படுத்திய கப்பல் விபத்து நடந்த இடம் மற்றும் அதற்கு அருகிலுள்ள நீர்கொழும்பு தடாகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில், கப்பலின் சரக்குகளிலும், பிளாஸ்டிக் உருண்டைகளிலும் இருந்த அதே மாசுபாடுகள் கண்டறியப்பட்டன. அதேபோல் அந்த விபத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரமான உலோகங்கள் சிலவும் மீன்களில் காணப்பட்டன. அவை பாதுகாப்பான வரம்பை மீறியிருந்தன. இந்தப் பேரழிவு மாசுபாட்டின் மூலமாக இருக்கலாம். ஆனால் அதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால், மீன்கள் பிளாஸ்டிக் உருண்டைகளை உண்டனவா, எத்தனை உருண்டைகளை உண்டன, அல்லது மாசுபாடு வேறு மூலங்களில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஆனால் அந்த கடல் சூழலில் ஏற்கனவே உள்ள மாசுபாட்டுடன் சேரும்போது, இது சுற்றுச்சூழலுக்கும், அந்த கடலில் வாழும் உயிரினங்களை உணவுக்கான ஆதாரமாக நம்பியிருக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று மெக்சன் கூறுகிறார். உள்ளூர் மீனவர்கள் கூறுவது என்ன? உள்ளூர் மீனவர்கள் இந்த பேரழிவிற்கும், மீன்களின் எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறார்கள். "எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து இங்கு வரைக்கும், புதிய இளம் மீன்கள் கிடைப்பதே இல்லை," என்று மீனவர் ஜூட் சுலந்தா கூறுகிறார். ஆனால், கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் குப்பைகளை அகற்ற 130 மில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டோம் என கப்பலின் உரிமையாளரான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் லிமிடெட் கூறுகிறது. மேலும் கடற்கரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காகவும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அது கூறுகிறது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்றும், அந்த செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், பிரிட்டன் கடல்சார் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் வரம்பிடப்பட்ட, கப்பல் உரிமையாளர் செலுத்திய தொகை நீண்டகால சேதத்தை ஈடுசெய்யப் போதாது. எனவே, அந்த வரம்பை நீக்கவும், இன்னும் அதிகமான இழப்பீடு பெறவும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று , இலங்கை உச்ச நீதிமன்றம், பேரழிவால் நாடு அனுபவித்த நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுக்கு ஆரம்பகால இழப்பீடாக 1 பில்லியன் டாலர்களை நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு வரம்பு உள்ளது. ஏனெனில், எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள சிங்கப்பூர் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. மறுபுறம், இந்தத் தீர்ப்பால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடுவதற்காக தங்கள் சட்ட ஆலோசகர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது. கப்பல் நிறுவனம் கூறுவது என்ன? வனவிலங்குகளின் இழப்பு, சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கப்பல் எரிந்தபோது வெளியான நச்சுப் புகையால் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரழிவின் மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று சேதத்தை மதிப்பிடுவதற்கான விஞ்ஞானிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரசாந்தி குணீர்தேனா கூறுகிறார். "வளிமண்டலத்தில் டையாக்ஸின் மற்றும் ஃபுரான்" என்ற புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "இவை சுமார் 70 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் குணீர்தேனா. ஆனால் கப்பல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை நிராகரிக்கிறது. கடலில் ஏற்பட்ட கசிவுகளை மதிப்பீடு செய்யும், கப்பல் துறையால் நிதியளிக்கப்படும் அமைப்பான சர்வதேச டேங்கர் உரிமையாளர்கள் மாசுபாடு கூட்டமைப்பை (ITOPF) இந்த விவகாரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, "இந்த அறிக்கை தெளிவாக இல்லை, அதில் சரியான தகவல்களும் இல்லை. நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரமின்றி உள்ளது" என தெரிவித்துள்ளது. தானும், அதன் குழுவினரும் "அமில கசிவை கையாள்வதில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும், அதே நேரத்தில் அனைத்து பாதுகாப்பு மற்றும் அவசரகால நெறிமுறைகளையும் பின்பற்றியதாகவும்" கப்பல் உரிமையாளர் கூறியுள்ளார். மறுபுறம், கப்பல் தங்கள் கடற்பரப்பை வந்தடையும் வரை, அதன் பிரச்னைகள் குறித்து தெரியாது எனவும், தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் கொழும்பு துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, பல உள்ளூர் மீனவர்கள் இப்போது தங்கள் படகுகளை விற்று வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதாக ஜூட் சுலந்தா கூறுகிறார். இலங்கை எனும் தீவு தேசத்தின் உயிர்நாடியாக இருப்பது கடல். அதன் அழகிய தங்க நிறக் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன, மேலும் பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழில் அந்நாட்டிற்கு உணவளித்து வருகிறது. ஆனால், தனது தொழிலுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கவலைப்படுகிறார் மீனவர் சுலந்தா. "பலர் தங்கள் படகுகளை விற்று வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள். பலர் சோர்வடைந்துவிட்டனர். உண்மையில், என் மகன் தான் தற்போது என்னுடன் வேலை செய்கிறார். அவனும் ஒரு மீனவர்"என்று கூறும் சுலந்தா, "ஆனால் அவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும் என்றால், இந்நேரம் கிடைத்திருக்கும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewy1y1kpepo

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

1 month 4 weeks ago
பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் 28 JUL, 2025 | 05:25 PM புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவையில் பேசிய அவர் “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன. ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும் மே 10 2025 அன்றுஇ அதிகாலை 1.30 மணியளவில் பாகிஸ்தான் ஏவுகணைகள் ட்ரோன்கள் ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. நமது எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. மே 10 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்துகுக்கு முன்வந்தது. அப்போது இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால் இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் என்பது பிரதேசத்தைக் கைப்பற்றவோ அல்லது போரை தூண்டவோ தொடங்கப்படவில்லை மாறாக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கவும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம். எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை” என்றார் மேலும் “எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும். இந்தியா எதிரிகளின் பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றால் பதில் ஆம் என்பதுதான். நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாக இருந்தால் இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதுதான். இதற்கான பதில் இல்லை என்பதுதான். நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்றார். https://www.virakesari.lk/article/221188

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 4 weeks ago
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா ! தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல். இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது அது தாய்லாந்து கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமாக மாறியது. இந்த சர்ச்சைக்குரிய கோவிலின் ஒரு சிறிய வரலாறு குறித்து பார்ப்போம். 11ஆம் நூற்றாண்டில் ப்ரே விஹார் கோவிலின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது. தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது. இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மத தலம். இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா. நீதிமன்ற அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன. பின்னர் இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தீர்ப்பு வழங்கியது . அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 1904ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே கோயில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றிருந்தால், தவறான புரிதலில் அது நடந்திருக்கும் என்றும் தாய்லாந்து வாதிட்டது. ஆனால், தாய்லாந்து உண்மையில் வரைபடத்தை முன்னர் ஏற்றுக்கொண்டதை கண்டறிந்த நீதிமன்றம், கோயில் கம்போடிய பகுதிக்குள் அமைந்துள்ளது என தீர்ப்பளித்தது. அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பி தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. இந்நிலையில்தான் எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தாய்லாந்து-கம்போடியா இடையில் மோதல் ஆரம்பமானது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் தலைமையில் கோலாலம்பூரில் இரு நாட்டு பிரதமர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441056

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

1 month 4 weeks ago
கலவரம் என்ற போர்வையில் இலங்கை அரசுகளால் வகை தொகையின்றித் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட வருடங்கள். 1958 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கை இனக் கலவரம், 1958 58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6] 1977 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7] 1983 கலவரம் முதன்மைக் கட்டுரை: கறுப்பு ஜூலை Tamil youth who attacked by the Sinhalese mobs, stripped naked on Colombo, 23 July 1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3] 2000 கலவரங்கள்பிந்துனுவெவை கலவரம் முதன்மைக் கட்டுரை: பிந்துனுவேவா படுகொலைகள் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4] தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11] 2001 மாவனல்லை கலவரம் 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13] 2006 கலவரங்கள்திருகோணமலை

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
இந்த யுவதி.... திருடிய நகையின் மதிப்பு 48 லட்சம் ரூபாய் என்றும், இவர் தனது சொந்த வீட்டில் திருடவில்லை என்றும், பிறிதொரு வீட்டில் வேலை செய்வதாகவும்... அந்த வீட்டிலேயே நகையை ஆட்டையை போட்டதாகவும் முகநூலில் செய்தி உலாவுகின்றது. அந்த வீட்டு உரிமையாளர்கள் நகைகளை காணவில்லை என்றவுடன்... சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து... அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது. நம்ம யாழ்ப்பாணம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 4 weeks ago
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்? இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், தேவையான சாரதி அனுதிப் பத்திரம் அல்லது சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இலங்கையில் வாகனங்களை செலுத்துவதை சுற்றுலா பயணிகள் தவிரக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தவுடன் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு வசதியாக இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வசதிகளை அறிமுகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1441072
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed