1 month 4 weeks ago
பட மூலாதாரம், REUTERS 30 ஜூலை 2025, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது. "கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார். "இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். "பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது. சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள் ஹவாய் குவாம் ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do
1 month 4 weeks ago
பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்! பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். https://athavannews.com/2025/1441081 #################### ######################### பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி! பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது. பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார். இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று, கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கிரேன் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1440915
1 month 4 weeks ago
யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441104
1 month 4 weeks ago
இறந்தவரின் சகோதரி பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலம் ஒரே சொதப்பலாக உள்ளதால், சீக்கிரம் அம்பிட்டு விட்டார். 😂 🤣 இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார்க்களாம், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை... அவர்கள் உள்ளே வந்து தன்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்று விட்டார்களாம், பின்னர் அதிகாலை 3 மணியளவில் தான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாக காணப்பட்டாராம், மாரடைப்பால் இறந்தவரை... கொலை என்று ஏன் சொன்னார்? 😂 தனது நகையை... இவரே என் ஒளித்து வைத்தார்...? என்று, துப்புத் துலக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கும் போலை இருக்கு. 🤣
1 month 4 weeks ago
காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை 30 JUL, 2025 | 06:50 AM காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார். யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். காசாவில் காணப்படும் சகிக்கமுடியாத நிலைமை காரணமாகவும்,இரண்டுதேசத்திற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என்ற கரிசனை காரணமாகவும் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221330
1 month 4 weeks ago
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் - அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல் 30 JUL, 2025 | 02:10 AM (நா.தனுஜா) புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபைத் தயாரிப்பதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அண்மையில் வேண்டுகோள்விடுத்திருந்தது. அதற்கமைய அம்பிகா சற்குணநாதனால் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9 ஆவது பிரிவானது குறித்தவொரு நபரைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது. குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். எனவே உயிரிழப்பையோ அல்லது படுகாயத்தையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அரச பயங்கரவாதத்தைத் தூண்டுதல், குறித்தவொரு சமூகப்பிரிவினரை ஒடுக்குதல் அல்லது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பொன்றையோ கட்டாயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சர்வதேச பிரகடனங்களில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகிய மூன்று விடயங்களும் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தில் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு அவ்வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும். அதேவேளை இவ்வரைவிலக்கணம் 'தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு' அல்லது 'ஒடுக்குமுறை வன்முறை' அல்லது 'அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு' போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும். சட்ட அமுலாக்கத்தில் இராணுவமயமாக்கல் பயங்கரவாதக்குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சரத்துக்கள் புதிய வரைபில் உள்வாங்கப்படக்கூடாது. பொலிஸ் காவல் கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நபர், கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். சட்ட உதவி மற்றும் குடும்பத்தாருடனான தொடர்பாடல் பயங்கரவாதக்குற்றத்துக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சட்ட உதவியை நாடுவதற்கான உரிமை கட்டாயம் உறுதிசெய்யப்படவேண்டும். ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நபரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவரிடம் சட்டத்துக்கு முரணான வகையில் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும், குடும்பத்தினர் தமது உறவினர் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றி அறிந்துகொள்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவரை பார்வையிடல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையேனும் முன்கூட்டிய அறிவிப்பின்றி நீதிவான் சென்று பார்வையிடல் மற்றும் கண்காணித்தல் எனும் சரத்தின் செயற்திறனை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும். ஜனாதிபதிக்கான மட்டுமீறிய அதிகாரங்கள் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் நீதிமன்ற அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது https://www.virakesari.lk/article/221322
1 month 4 weeks ago
ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017
1 month 4 weeks ago
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும் பல மாகாணங்கள் சில வகையான கொடுப்பனவுகளை முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளன. 2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சீனாவில் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை குடியிருப்பாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது. பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது. சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது, உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு – இந்தியாவிற்குப் பின்னர்- வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. சீனாவில் திருமண விகிதங்களும் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன. குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு மற்றும் தொழில் கவலைகள் காரணமாக இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கையை ஒழித்த பின்னரும், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441086
1 month 4 weeks ago
யாழில் சகோதரியுடன் வசித்த சகோதரன் உயிரிழப்பு - வெளியான தகவல்! யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார். பின்னர் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குறித்த நபரின் சகோதரியான பெண் தான் கூறியது பொய் என்றும், நகையை மறைத்து வைத்ததாக தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். https://newuthayan.com/article/யாழில்_சகோதரியுடன்_வசித்த_சகோதரன்_உயிரிழப்பு_-_வெளியான_தகவல்!
1 month 4 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 4 weeks ago
ஆவணிக்குப் பின் அமெரிக்காவைப் பிடிக்கவே முடியாது. சகல நாடுகளும் வரி வரி என்று பெரும் பணத்தை கட்டப் போகிறார்கள். எனது நண்பரின் கருத்துப்படி(ரம்பின் ஆதரவாளர்) வெளிநாடுகளில் இருந்த தொழிற்சாலைகள் இப்போது அமெரிக்காவுக்குள் வந்து கொண்டிருக்கின்றன. வேலைக்கு நிறைய ஆட்கள் தேவை என்கிறார்.
1 month 4 weeks ago
மனித உருவில் வலம்வந்த இந்த மிருகங்கள் செய்தவை என்னவென்று தெரிந்தும், அவர்களுக்கு வாக்களித்து அபிவிருத்தியொன்றே போதும் எமக்கு, உரிமையும் வேண்டாம், நாடும் வேண்டாம் என்று ஒரு பகுதியினர் சில காலங்களுக்கு முன்னர் ஆர்ப்பரித்து வந்தனர். இன்று இந்த மிருகங்களின் உண்மையான ரூபம் தெரிகிறது. அன்று பிரதேசவாதம் கண்களை மறைக்க கொலையாளிகளுக்கு வாக்களித்து, மகுடமும் சூட்டி அழகுபார்த்தவர்கள் என்று என்ன சொல்வார்கள் என்று கேட்க ஆவல்.
1 month 4 weeks ago
GDP பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் அலகு, இங்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி குறிப்பிடப்படுகிறது, அபிவிருத்தி பற்றியல்ல இரண்டும் வெவ்வேறானவை, அபிவிருத்திக்கு GDP பயன்படுத்தப்படுவதில்லை மாறாக தலாவருமானம் பயன்படுத்தப்படுகிறது, இந்த விடயங்கள் இடைநிலை பள்ளி சமூக கல்வி பாடத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1 month 4 weeks ago
கடந்த ஆண்டு 25 பில்லியன் டொலர் பெறுமதியான இரஸ்சிய எரிபொருளை பெற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் 2021 இல் 108 பில்லியன் இரஸ்ய எரிபொருளிற்காக செலவு செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 250 பில்லியன் பெறுமதியான எரிபொருளை பெற்றுக்கொள்ள ட்ரம்புடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளார்கள், இது தவிர போக்குவரத்து மற்றும் காப்புறுதிக்கட்டணம் என்பன மேலதிகமாக அதன் செலவுடன் சேரும், பலமடங்கு விலையில் அமெரிக்க எரிபொருளிற்கு வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி அமெரிக்காவிற்கு மிக சாதகமான ஒரு வியாபார ஒப்பந்தத்தினை ட்ரம்ப் முடித்துள்ளார், அத்துடன் நிற்காமல் 600 பில்லியன் முதலீடுகளையும் அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார்(1.3 டிரில்லியன்). இதே போல ஜப்பானிடமும் 550 பில்லியனுக்கு முதலீட்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
1 month 4 weeks ago
நிருபர் சுப்பம்மா:- பொன்னம்மா அவர்களே நீங்கள் எப்போது சந்தோசமாக இருப்பதாக உணர்வீர்கள்? பொன்னம்மா:-அயல் அட்டை சுற்றம் சூழல் கஷ்டப்படுவதை பார்த்தால் எனக்கு சந்தோசமும் உற்சாகமாயும் இருக்கும்.....நோர்மலாய் எனக்கு மற்றவையள் சந்தோசமாய் இருந்தால் துண்டற பிடிக்காது.
1 month 4 weeks ago
உலகில் எல்லா நாடுகளிலும் மது பானங்களுக்கு தடை செய்தால் என்ன நடக்கும்?
1 month 4 weeks ago
இதுவொரு அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்.வாழ்க்கை எனும் தத்துவத்தை மனிதம் மறந்ததினால் தான் உலகில் இன்றைய கலவரங்கள் என நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு. நான் பல காணொளிகளை இணைத்தும் நேரடியாக வேலை செய்யவில்லை☹.நான் இணைத்த அதே இணைய காணொளி முகவரியை நீங்கள் இணைத்ததும் நேரடியாக வேலை செய்கின்றது. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.🤣 உங்கள் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி சிறித்தம்பி...🙏 ஐயனே! நீங்கள் நினைப்பது உண்மைதான். தலைப்பிற்கும் அதன் கீழ் ஊர்ந்து செல்லும் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லைத்தான். இருந்தாலும் மனித வாழ்க்கை எப்படிப்பட்டது அதில் உள்ள ஆசா பாசங்கள், திட்டமிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்கள் அதன் முன்னேற்பாடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்து விட்டு எனது மரணச்சடங்கு எப்படியிருக்க வேண்டும் என சொல்ல நினைக்கின்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் சரியானது.இருப்பினும் நாம் இறந்த பின் எமது மரணச்சடங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை உயிர் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள்.எனவே அந்த தீர்மானத்தை எம் உயிர் உள்ள போதே நாம் நிர்வகித்து உயில் எழுதி விடவேண்டும். நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன். எனது உயில் பாகங்களில் இதுவும் ஒன்று.இதை நான் ஏற்கனவே செய்து விட்டேன்.
1 month 4 weeks ago
காளிஅம்மாவின் இடத்தை பிடிப்பதற்காக வித்யாவிற்கும் போட்டியாக தலைவியாக வருவதற்கு கள்ளு அடிக்கும் கார்த்திகா என்று ஒருவர் முயற்ச்சிக்கின்றாராம் அவாவின் பேச்சை கேட்டுள்ளீர்களா
1 month 4 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 14 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 14 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முத்தசிவா அல்லது மூத்தசிவா' மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவரையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழரினதும் வருகையை செயற்கையாக, புத்தரின் மரணத்துடன் ஒத்து போக சரி செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் தெரிகிறது.[The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்குப் பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் முத்தசிவ அல்லது மூத்தசிவா [Mutasiva] பண்டுகவின் மகன் (மகாவம்சத்தின்படி பண்டுகாபயா) என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years from BC 307 to BC 247] , இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டு அபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய ராஜ்யத்தை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதே போல முத்த சிவனும், 37 அகவையில் ஆட்சிக்கு வந்த தந்தையின் 70 ஆண்டு ஆட்சியின் பின் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றால், அவன் ஏறத்தாழ 130 / 140 அகவைக்கு மேல் வாழ்ந்து இருக்க வேண்டும். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. முத்தசிவனின் நீண்ட அறுபது ஆண்டுகால ஆட்சியைப் பற்றி இரண்டு முதன்மை வரலாற்று நூல்களும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. பெயர் தமிழில் ஒலிக்கிறது, ஒரு காரணமாக் கூட இருக்கலாம்? அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் [பண்டுகாபய] தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், மூத்தசிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். எது என்னவென்றாலும், முத்தசிவா என்ற பெயர் தமிழில் இருந்தாலும் ஒரு கண்டுப்பிடிக்கப்பட்ட மன்னராகத்தான் அதிகமாகத் இருக்க வேண்டும். முத்தசிவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன் அல்லது திஸ்ஸ, மற்றும் கிரா என பத்து மகன்கள் இருந்தனர். அவருக்கு அனுலா மற்றும் சிவாலி அல்லது சிவால என்ற இரு மகள்களும் இருந்தனர் [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala.]. Part: 14 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Mutasiva' Mutasiva is the son of Panduka (Pandukabhaya as per the Mahavamsa) and he ruled for sixty years. Both the chronicles have nothing much to say about the long sixty year rule of Mutasiva. The name is sounding Tamil, and that might be the reason for the briefness. Pandukabhaya met his wife, Mutasiva’s mother, when he was just past the age of sixteen. If Mutasiva was born when Panduka was thirty years of age, then Mutasiva would have lived to a very old age of one hundred and thirty seven [(107-30)+60, to the age of 137.] Mutasiva must therefore be an invented king even though the name sounds Tamil. Mutasiva had ten sons, Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 15 தொடரும் / Will Follow படங்கள் எதுவும் இங்கு பதியமுடியாமல் இருப்பதால், என் வலைத்தளத்தில் பதிவிட்டதின் லிங்க் கீழே தருகிறேன் , முழுமையாக பொருத்தமான படங்களுடன் பார்க்க, நன்றி "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English https://www.facebook.com/groups/978753388866632/posts/30595874916727754/?
1 month 4 weeks ago
பொதுவாக பெண்ணின் அண்ணன்மார், அப்பா, மாமாமார் போன்றோர்தான் காதலனை வெட்டுவார்கள் கொலை செய்வார்கள் என இந்திய செய்திகள் வரும். இங்கே பெண்ணின் தம்பிக்கு உரு ஏறிவிட்டது.
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed