புதிய பதிவுகள்2

சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் - ஜனாதிபதி அநுர குமார

1 month 4 weeks ago
மாலைதீவைப் பிடிக்க புளட் படையை அனுப்பிப் பின்னால் அந்தத் தீவைப் பாதுகாக்க இந்தியப் படையை அனுப்பினார் இந்திரா காந்தி என்ற செய்தி அன்று. ஜனாதிபதியுடன் நாமலும் என்ற செய்தி இன்று. தீவுக்கு என்னாகுமோ? ஏதாகுமோ??🫣

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 4 weeks ago
அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது! எங்களுக்கு 30 - 16 = 14 எண்டுமட்டும்தான் நிறுவத்தெரியும். அதோட அவன் புலிகளால்தான் நாசமாய்ப்போனவன். ஆமிக்காரன் நல்லவிதமா புனர்வாழ்வு கொடுத்தபின்னும் புலிதான் வந்து இப்படி மாத்திப்போட்டாங்கள் என்று வன்னியில் மதக்கடியில இருந்து கதைச்சப்பொடியன்கள் சொன்னவங்கள் என்றும் கணித பௌதீக விஞ்ஞான முறையில் பகுத்தறிஞ்சு சொல்லத்தான் தெரியும். இதுகள் படிக்காத ஆட்களுக்கெல்லாம் விளங்காது கண்டியளோ!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!

1 month 4 weeks ago
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது. இதேவேளை, ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441007

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 4 weeks ago
வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : { ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா } (2) கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ......... ! --- ரோஜா ரோஜா ---

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
அந்த ரிக் ரொக் ஆசாமிக்கு.... இவவுடன் இன்னும், எத்தனை காதலிகள் இருக்கின்றார்கள் என்று உறுதியாக தெரியாமல் எப்படி கலியாணம் கட்டிக் கொடுப்பது. 😂

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
சும்மா விடுங்க . ......... காதலுக்கு கண் இல்லை எனும்போது பொன் எல்லாம் துச்சம் ........... ! 😀

செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து!

1 month 4 weeks ago
செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து! உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இதன்போது இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள் , வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் எலும்பு கூடுகள் அசாதாரணமாக சூழலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும் இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மனித புதைகுழிகள் கொக்குத்தொடுவாய் , மன்னார் , மாத்தளை , போன்று தெற்கிலும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் , அவை தொடர்பில் ஆய்வு செய்ய கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இன்னமும் இல்லாத நிலைமைகள் காணப்படுகின்றன எனவே சர்வதேச நிபுணத்துவ உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளை முறையாக பாதுகாப்பதற்கு கூட சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக கூறுகிறது. உண்மைகளை மறைத்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை கண்டறிய சர்வதேச நிபுணர்களை நாட்டுக்கு அழைத்து , அவர்களிடம் புதைகுழி விவகாரங்களை கையளித்து , எவ்வித தலையீடுகளும் இன்றி செயற்பட்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1441020

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.

1 month 4 weeks ago
இரு உயர்மட்ட கைதுகள் தொடர்பான அப்டேட்! குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதற்கிடையில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெல் பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவரை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://athavannews.com/2025/1441036

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு!

1 month 4 weeks ago
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு! தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார். ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில், கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441033

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
மோட்டுப் பெண் “நான் காதலனையே கல்யாணம் செய்யப் போகிறேன்” என்று அடம்பிடித்து இருந்தால் நகைகள் சீதனமாகவே வந்து சேர்ந்திருக்கவும் வாய்ப்பு வந்திருக்கலாம் அல்லவா??.

ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

1 month 4 weeks ago
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார். பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்று ரயில் சாரதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (28) ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1441000

நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது!

1 month 4 weeks ago
நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1440990

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

1 month 4 weeks ago
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 23 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 08 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் (28) 31 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440973
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed