புதிய பதிவுகள்2

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

1 month 4 weeks ago
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தவிட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றையதினம் மாணவியின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பாடசாலை வரவு தொடர்பான ஆவணம் மற்றும் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிபதற்காக பொலிஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440970

சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் - ஜனாதிபதி அநுர குமார

1 month 4 weeks ago
மாலைதீவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை முக்கியத்துவம் – ஜனாதிபதி அநுர மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஜனாதிபதி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன். இலங்கையின் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன். அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி – விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு, மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம். மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம். இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன், மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன். நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதிமேதகு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன். அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி – என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1440987

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

1 month 4 weeks ago
இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்! இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவில் இருந்து இந்திய விமானப்படைக்கு போர் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் இந்திய விமானப்படையுடனான ஆரம்ப ஒப்பந்தம் 35 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த குறித்த ஒப்பந்தம் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440896

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

1 month 4 weeks ago
நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா? 2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது. அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி போராளிகள் இரத்து செய்துள்ளதாக கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் திங்கட்கிழமை (28) அறிவித்தது. இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என்று அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கண்ட தகவல் வந்துள்ளது. நிமிஷாவின் மரணதண்டனை முதலில் ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கிராண்ட் முப்தி முஸ்லியார் ஏமன் அதிகாரிகளிடம் கருணை கோரி நேரடியாக முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்பு நிறுத்தப்பட்டது. குற்றப் பின்னணி எனன்? கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015 இல் அரசு செவிலியர் பணியை இராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16 ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது. சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு 8.6 கோடி இந்திய ரூபா குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441017

நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.

1 month 4 weeks ago
நியூயோர்க்கை உலுக்கிய துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் உயிரிழப்பு! பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்ட நியோர்க் நகரில் அமைந்துள்ள மிட் டவுன் மன்ஹாட்டன் வானளாவிய கட்டிடத்திற்குள் திங்கட்கிழமை (28) துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு குறித்த விவரங்களை பொலிஸார் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால், இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும், சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படும் ஏனைய மூன்று பேரும் பொதுமக்கள் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நியூயார்க் நகர காவல் துறை தனது சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்து விட்டதாகக் கூறியது. நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூட்டினால் பலர் காயமடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவையானது, குண்டு துளைக்காத ஆடையை அணிந்திருந்த ஒரு துப்பாக்கிதாரி, AR-ரக துப்பாக்கியை ஏந்தியபடி, பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நியூயார்க் நகர காவல் துறை அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், பின்னர் தன்னைத்தானே அவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டது. மேலும், ஆறு பேர் காயமடைந்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவை குறிப்பிட்டது. அதேநேரம், சிஎன்என் செய்திச் சேவை, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தவிர, பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என், நியூயோர்க் போஸ்ட் மற்றும் என்பிசி செய்திச் சேவை உள்ளிட்ட பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள், சந்தேக நபர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது நபர் என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறியுள்ளன. துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் துப்பாக்கியுடன் கட்டிடத்திற்குள் நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படத்தை, பல முக்கிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. சந்தேக நபரின் பின்னணி குறித்த முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடத்தக்க குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி அறிக்கை மேலும் கூறியது. நியோர்க் நகரின் 345 பார்க் அவென்யூவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பிளாக்ஸ்டோன் மற்றும் பன்னாட்டு தொழில்முறை சேவை வலையமைப்பான கேபிஎம்ஜி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. அதனுடன் அமெரிக்க தேசிய கால்பந்து லீக் தலைமையகமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440994

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 4 weeks ago
தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்! எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா “வேண்டுமென்றே” மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இது ஒரு நிலையற்ற தொடக்கமாக அமைந்துள்ளது. தாய்லாந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இன்று காலை வரை “பல இடங்களில்” கம்போடியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வந்தாக அது கூறுகிறது. அதேநேரம், நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே “எந்த ஆயுத மோதல்களும் இல்லை” என்று கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த உள்ளூர் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் ஒரு கம்போடிய சிப்பாய் மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக பதற்றங்கள் கடந்த வாரம் அதிகரித்தன. கடந்த வாரம் ஐந்து தாய் வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவை முழு அளவிலான மோதலாக மாறியது. தாய்லாந்து தனது எல்லையின் சில பகுதிகளை மூடி, கம்போடிய தூதரை வெளியேற்றி, புனோம் பென்னிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்தது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கம்போடியா தாய்லாந்தின் மீது பல ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாட்களில் இரு தரப்பினரிலும் அதிகமான பொதுமக்கள் இறந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். போர் நிறுத்தத்திற்கான காலக்கெடுவான திங்கட்கிழமை (28) நள்ளிரவு வரை இரு படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ந்தன. தாய்லாந்து கம்போடிய நிலைகள் மீது மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1441023

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
ரிக்ரொக் காதலனுக்காக… சொந்த வீட்டில் களவு எடுத்த இந்தப் முட்டாள் பெட்டையை பெத்த தாய் தகப்பன் தான் பாவம்.

சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் - ஜனாதிபதி அநுர குமார

1 month 4 weeks ago
சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன். இலங்கையின் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன். அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி - விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு, மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம். மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம். இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் 'Clean Sri Lanka' வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன், மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன். நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதிமேதகு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன். அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி. https://adaderanatamil.lk/news/cmdnyjpfh01s2qp4kk43d9ad6

மறையாத ஜூலைக் கலவர வடு

1 month 4 weeks ago
மறையாத ஜூலைக் கலவர வடு லக்ஸ்மன் இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சிகள் காணப்பட்டாலும் அவற்றினை எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி, கடந்து செல்கின்ற நிலைப்பாட்டினையே இலங்கை நாட்டின் அரசாங்கங்கள் கொண்டிருக்கின்றன. இதில் மாற்றத்தினை ஏற்படுத்திவிடலாம் என்று தமிழர் தரப்பு மேற்கொள்ளாத முயற்சியில்லை எனும் அளவிற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், ஆயுத யுத்தம் ஓய்ந்து 16 வருடங்களாகியும் அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் கனிந்ததாக இல்லை. இதற்கு புதிதாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல என்பதே காலம் உணர்த்தும் உண்மை. 1983 ஜூலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆரம்பித்து நாடு பூராகவும் பரவி பெரும் கொடுமையை நடத்திமுடித்த கலவரமானது வெறுமனே கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. அத்துடன், இந்தக் கலவரமானது தன்னிச்சையாக ஏற்பட்ட ஒரு கலவரம் அல்ல, மாறாக சிங்களப் பேரினவாத, அரசின் ஊக்குவிப்புடனேயே இனவெறியால் தூண்டப்பட்ட ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தாலும் இதுவரையில் ஜூலைப் படுகொலைக்கான சரியானதொரு நீதி கிடைக்காமை என்பது கவலையானது எனலாம். 1983 ஜூலை 24 அன்று, அரசு படைகளின் ஆதரவுடன் சிங்களக் கும்பல்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமான தீ வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கொலை சொத்துக்களைச் சேதப்படுத்தல், கொள்ளையிடுதல் ஆகியவற்றைத் தொடங்கின. அது ஒரு வார காலமும் தொடர்ந்தது. இக் கலவரத்தில், 3,000க்கும் அதிகமான தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் அத்கமானவர்கள் வீடுகளை இழந்தனர். 53 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேலும் பல மனித உரிமை அமைப்புகள் இக் கலவரம் தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளன. அத்துடன், வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்களின் புகைப்படங்கள் மற்றும் நேரடி ஒளிப்பதிவுகள் பல இதற்கான ஆதாரங்களாக உள்ளன. யூலைக் கலவரக் காலத்தில், அரசுப் படைகள் கலவரத்தினை நடத்திய கும்பல்களை வழிநடத்தின. டெய்லி நியூஸ் போன்ற சிங்கள செய்தித்தாள்கள் தமிழர்களுக்கு எதிரான தூண்டுதலான பிரச்சாரத்தை மேற்கொண்டன. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகள் கலவரங்களில் தீவிர பங்கு வகித்தன என்பவையெல்லாம் குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. இருந்தாலும் அதற்கான தண்டனையளிப்புகள், விசாரணைகள் போன்ற பலனைத் தரவில்லை என்பதே உண்மையாகும். இந்தக் கலவரமானது முழு தமிழ் மக்களையும் பயமுறுத்தவும் அழிக்கவும் என மேற்கொள்ளப்பட்ட 42 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இருந்தாலும், அதன் பிறகும், கறுப்பு ஜூலையின் வலி தமிழ் மக்களுடைய மனங்களிலிருந்து நீங்காதிருப்பதானது அக் கலவரத்தின் கொடூரத்தையே காட்டிநிற்கிறது. இக் கலவரம் குறித்து கருத்துப் பகர்கின்ற ஆய்வாளர்கள் இது வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் மட்டுமல்ல - இது முறையான அநீதிக்கு ஒரு உயிரோட்டமான சான்று மற்றும் நீடித்த பொறுப்புக்கூறலைக் கோரும் ஒரு அழைப்பு என்று குறிப்பிடுகின்றனர். கலவரங்களும், படுகொலைகளும் இனப்படுகொலையினை அடிப்படையாகக் கொண்டவை என்ற அடிப்படையில், 1948இல் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் கட்டமைப்பு ஒடுக்குமுறை மூலம் தமிழர்களை இலக்காக்கத் தொடங்கியது என்று பலரும் கருத்துப் பகர்வதுண்டு. இதற்கான அரசியல் நடவடிக்கை 1948ல் உருவாக்கப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் மூலமாக இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததில் இருந்து தொடங்கியது. அதேநேரம், 1956, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு சிங்களத்தை ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இலங்கை அரசு அறிவித்தது. அத்துடன், 1972 குடியரசு யாப்பில் பௌத்தம் இலங்கை அரசாங்கத்தின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது. இவற்றினை அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகளாகச் சொல்லலாம். அதே நேரத்தில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை 1977 தொடக்கம் 1983 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக சிந்திக்கத் தூண்டியது என்றே கூறலாம். அத்துடன் தமிழர்களை அடக்குவதற்கென்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் குற்ப்பிடப்பட வேண்டும். சுதந்திர இலங்கையின் தொடக்க காலம் அகிம்சைப் போராட்டமாக இருந்த போதிலும், இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழர்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். அவை அரசினதும் பேரினவாதிகளாலும் வன்முறைகளால் நசுக்கப்பட்டன. அதுவே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது எனலாம். பேரினவாதத் தரப்பின் வன்முறைகள் காரணமாகவும், ஒடுக்குமுறைகள் காரணமாகவும், நெருக்குதல்கள் காரணமாகவும் படிப்படியாகத் தமிழ் மக்களின் உளவியலில் ஏற்பட்ட மாற்றம் அவர்களையும் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியதன் வெளிப்பாடு கொடுமைகளையே கொண்டுவந்தது. ஆனால் தீர்வின்றியே அப்பயணம் தொடர்கிறது என்பது மாத்திரம் கவலைக்குரியது. இவ்வளவையும் கடந்த பின்னரும் அமைதியான சர்வதேசத்தின் பதில் இவற்றின் மீதான செயலற்ற தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசாங்கத்தின் சமாளிப்புகளையும் இராஜதந்திரத்தையும் நம்புகின்ற நிலைமை மோசமானதாகும். மிக மோசமான இனக் கலவரம், இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்து முடிந்து தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகம் போன்றவை இந்த இனப்படுகொலைகளைக் குற்றங்களாக அங்கீகரிக்கத் தவறி வருவது ஒரு உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும். இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் காலங்கடத்தல்களையும், தட்டிக்கழித்தல்களையும் நம்பி ஏமாறுவது சர்வதேச நீதி சார் அமைப்புக்களுக்கு ஏற்றதா என்பது இந்த இடத்தில் கேள்விதான். இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திம்பு பேச்சுமூலம் உள்ளே நுழைந்த இந்தியா, மாகாண சபை முறைமையை ஏற்படுத்தியதைத் தவிர, தமிழர்களைப் பாதுகாக்க எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது குற்றச்சாட்டாக வரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இப்போது தமிழ் அரசியல் தரப்பினர் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதில் எந்தப் பயனுமில்லை என்பதே வெளிப்படை. அந்தவகையில்தான், தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை அழிக்க இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் தமிழர்களை ஒரு ஒருமிப்புக்கு கொண்டுவந்திருந்தது. வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் ஒன்றுபட்டிருந்தனர். ஆனால், இப்போதும் அது தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.இப்போதும் தமிழர் தங்களுடைய உரிமைகளை அடைந்து கொள்வதற்காக அரசுக்கெதிரான போராட்டங்கள், கவனஈர்ப்புகள், சர்வதேச எதிர்ப்புப் போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என நடத்திக் கொண்டே காலங்கடத்துவதைத் தவிர வேறில்லை என்றாகிப் போயிருக்கிறது. தமிழ்த் தேசிய உணர்வு வலிமையானது, உறுதியானது மற்றும் உலகளவில் இணைக்கப்பட்டது என்றெல்லாம் பிரச்சாரப்படுத்திக் கொண்டு அநீதிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்கிறோம் என்று கொக்கரிப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற கவலையே பலருக்குத் தொற்றியிருக்கிறது. கறுப்பு ஜூலை ஒரு நினைவை மட்டும் மீட்டுக் கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுபடுத்திக் கொண்டு, படுகொலை நாட்களை நினைவுகூர்ந்து கொண்டு நகர்வதால் எத்தனை தலைமுறைகளைத் தமிழர்கள் அழித்துவிடப் போகிறார்களா என்பதுதான் இன்னமும் கேள்வியாக இருக்கிறது. இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கான அங்கீகாரம் மற்றும் நீதிக்கான கோரிக்கைக்கான தீர்ப்பு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், வெறும் கோரிக்கைகளாகத்தான் இருந்து வருகின்றன என்றால் இது யாருடைய தவறு என்று ஆராய வேண்டும். இந்த ஆராய்தலைத் தமிழர்கள் செய்தல் வேண்டும். ஆனால், கறுப்பு ஜூலை இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட, கண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழர்கள் ஜூலை கலவரத்தின் வடுவையேனும் மறப்பார்களா என்பதுதான் நிலைமை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மறையாத-ஜூலைக்-கலவர-வடு/91-361918

கறுப்பு ஜூலையை முன்னிட்டு நெல்லியடியில் தீப்பந்தப் போராட்டம்!

1 month 4 weeks ago
கறுப்பு ஜூலையை முன்னிட்டு நெல்லியடியில் தீப்பந்தப் போராட்டம்! கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். தமிழர்களின் இனப்படுகொலையை முன்னிறுத்துவதான கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடைபெற்று முடிந்து 42 வருடங்கள் ஆகின்றன. எனினும் 42 வருட காலமாக தமிழர்களின் நினைவில் அழியாமல் உள்ள இனப்படுகொலையையே கறுப்பு ஜூலை முன்னிறுத்துகின்றது. https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலையை_முன்னிட்டு_நெல்லியடியில்_தீப்பந்தப்_போராட்டம்!

மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்!

1 month 4 weeks ago
மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர். இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது. https://newuthayan.com/article/மீண்டும்_யாழ்_வரவுள்ள_அதிசொகுசு_கப்பல்!

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு!

1 month 4 weeks ago
அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு! adminJuly 29, 2025 வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218492/

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி காவல்துறையினா் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2025/218476/

நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.

1 month 4 weeks ago
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained a mystery. The shooting happened at 345 Park Ave. and 51st St. around 6:30 p.m., when police sources say a gunman entered the building with a rifle and started shooting, striking a cop and six civilians. The police officer, who was off-duty and working as a security guard, was taken to Weill Cornell Medical Center, where he died, police said. At least three of the civilians who were shot have also died, police said. The police officer, who was 36, was assigned to the 47th precinct in the Bronx, sources said. He has been a police officer since 2021. His name was not immediately released by authorities. As of 7:52 p.m. NYPD Commissioner Jessica Tisch posted on social media that “the scene has been contained and the lone shooter has been neutralized.” https://www.nydailynews.com/2025/07/28/nypd-officer-shot-near-park-ave-skyscraper-in-midtown-manhattan/

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.

1 month 4 weeks ago
சிங்கள அரச, நீதி, நிர்வாக, சேவை எல்லாமே கொலை கொள்ளை நிறைந்ததாக இருக்கிறது. அங்கே சட்டங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே கொலை கொள்ளை ஊழலை வளர்த்துக்கொண்டும் முண்டு கொடுத்துக்கொண்டும் இருந்திருக்கின்றன. நடவடிக்கை எடுக்கத்தொடங்கினால் ஒன்றுமே மிஞ்சாது. அனுராவின் கட்சியில் இருப்பவர்களில் அநேகர் கூட இதோடு தொடர்புடையவர்கள். எப்படி அனுரா சமாளிக்கப்போகிறார்? பலர் தாம் தப்புவதற்காக அரச சார்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். அப்போ, சில குற்றவாளிகள் தப்புவதற்கு ஏது காணப்படுகிறது. முன்பே நான் சொன்னேன், அடிமரத்தை சாய்க்க வேண்டுமானால் அதனை தாங்கி பிடிக்கும் கிளைகள், இலைகள் அகற்றப்படவேண்டும் அப்போதான் பலமான மரத்தை இலகுவாக சரிக்கலாம் என.இங்கு சிலர், இதற்கென்றே இருக்கின்றனர், எள்ளி நகையாடினர். இப்போ மரத்தை தனிமையாக்கும் செயல் நடைபெறுகிறது. மரம் சரியுமா சறுக்குமா? பலம் எந்தப்பக்கமென பொறுத்திருந்து பாப்போம்.

இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 4 weeks ago
"2012 இல் இருந்து இந்த விசாரணையை தாமதித்திருக்கிறார்கள் தமிழ் பிரதிநிதிகள்". 2020 இல் இருந்து பொன்னம்பலம் பிரதிநிதியாக இருக்கிறார். 2019 இல், றோகிங்கியாக்கள் பிரச்சினையை பிரிட்டனில் இருக்கும் ஒரு அமைப்பு ICC இடம் கொண்டு சென்றது. அதே நேரம், ஐ.நாவின் ICJ இடம் கம்பியா (Gambia) றோஹிங்கியாக்கள் பிரச்சினையைக் கொண்டு சென்றது. 2024 இல் மியன்மாரின் முக்கிய தலைவரைச் சந்தேக நபராக அறிவித்து ICC பிடிவிறாந்து பிறப்பித்திருக்கிறது👇. https://www.icc-cpi.int/victims/bangladesh-myanmar என் கேள்வி: இப்படி ICC இற்கு தமிழர் பிரச்சினையைக் கொண்டு செல்ல ஏன் தமிழரசுக் கட்சி தேவை? இங்கிலாந்தில் பரிஸ்ரரான பொன்னம்பலம் பா.உ 2020 இலேயே அங்கேயிருக்கும் அமைப்பு ஒன்றின் மூலம் முயன்றிருக்கலாமே? இப்போது கூட முயல என்ன தடை? என் ஊகம்: இவர்களுக்கும் இந்த விசாரணைகளில் அக்கறையில்லை. செயல்படும் ஊக்கமும் இல்லை, அல்லது எப்படிச் செய்வதென்றும் தெரியாது. தேர்தலில் வெல்வதற்கு காரணங்கள் தேவை, அதில் ஒன்று "அவையள் வரவில்லை, அதனால் சர்வதேச விசாரணை தடைப்படுகிறது". அடுத்த தேர்தலில் இருக்கும் ஒரு ஆசனமும் NPP இடம் பறி போகுமென நினைக்கிறேன்.

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 4 weeks ago
ஹா..ஹா! அவர் ஏளனமாக குத்திக் காட்டிய கணக்கு, அவரே இணைத்த செய்தியின் படி பிழைத்திருக்கிறது என்பதை நான் பகிடியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவு தான் விடயமென்றால் அதை நேரடியாக சொல்லி விட்டுப் போயிருக்கலாம் அல்லவா? இவ்வளவு நேரம் சுட்டிக்காட்டிய என்னை குழுவாகச் சேர்ந்து திட்டி, திட்டியவரை தட்டிக் கொடுத்து (வக்கிரம்?😎) திரியை நீட்டிய பிறகு தான் கல்குலேட்டரை எடுத்துக் கணக்குப் பார்த்திருக்கிறீங்கள் போல😂! இனியாவது ஒருவன் எழுதுவதை வாசித்து விட்டு கருத்தெழுத ஆரம்பியுங்கள்!

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 4 weeks ago
ஹா ஹா..... இப்படித்தான் சிலர் எதையோ எதிர்பார்த்து எழுதுவதும், மற்றவர்களை எடை போடுவதும் நடைபெறுகிறது. நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம். சிறியர் ஒன்றும் கணக்கு தெரியாத, படிப்பறிவு இல்லாதவரல்லர். சிங்களம் போடும், காட்டும் கணக்குகளை வைத்தே எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கிறன். அவரது முன்னைய பதிவுகள் கூட சிங்களத்தின் கணக்கு பிழைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏளனமாக குத்திக்காட்டியிருக்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என எனக்கு விளங்கவில்லை? உள்ளே உள்ள வக்கிரம் வெளிப்பட சமயம் பார்த்து காத்திருக்கிறது போலுள்ளது!
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed