1 month 4 weeks ago
அது ஒரு ஆதாரம் என்பதிலிருந்து தொடங்கலாமே தவிர அதனூடான கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சாட்சியங்கள் இதுவரை இல்லை இனியும் கிடைக்கப்போவதுமில்லை. ஆகையால் இப்போது தொடங்கப்பட்டவை அனைத்தும் இனி பைலை மூடுவோம் என்பதற்கானது மட்டுமே. என்னைப் பொறுத்தவரை மூடுவதாலோ மூடாமல் விடுவதாலோ எதுவும் மாறப் போவதில்லை. கடவுளாக்கி மக்கள் தொழுவது தொடரும். அதில் நானும் ஒருவன். இத்தனைக்கும் தனது உடலை மக்கள் பார்க்கவேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தவனான போதும்.
1 month 4 weeks ago
ஊரில் உள்ள முன்னாள் போராளிகள் எல்லோரும் வீரச்சாவை உறுதிசெய்கின்றனர். ஆனால்இறுதி நேரத்தில் தலைவரை விட்டு வந்த விட்டோடிகள்மட்டும் வயிறு வளர்க்க பல முயற்சிகளில்.....
1 month 4 weeks ago
பாரதூரமான சேதங்கள் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டு விட்டது.
1 month 4 weeks ago
பிரான்ஸின் மானத்தையே வாங்கி விட்டு கதை வேற. இந்திய இராணுவத்தின் வலிமையைப் பற்றிஈழத்தமிழர்களைத்தவிர யாருக்கும் புளுகலாம்.
1 month 4 weeks ago
நான் கூற வந்த விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன். உதாரணத்திற்காக நீங்கள் வீடு வாங்க முடிவு செய்து சந்தை விலையில் வாங்குவதனை விட மலிவாக வாங்குவதற்காக ஒரு வாங்கும் முகவரை அணுகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் (இரண்டு வகை முகவர்கள் உள்ளார்கள் பொதுவாக விற்கும் முகவர்களே அனைவருக்கும் தெரியும், விற்கும் முகவர்கள் விற்பவர்களின் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்கள்). உங்களுக்கு பிடித்த வீட்டினை சந்தை விலையில் 3 மடங்கு அதிக விலையில் விற்க முனைகிறார், அதற்கு அவர் கூறும் காரணம் பொதுநலம் என கூறி உங்களை வாங்குமாறு கூறினால் அவர் கூறிய மாதிரியே 3 மடங்கு விலையில் வீட்டை வாங்குவீர்களா அல்லது முகவரை மாற்றுவீர்களா?
1 month 4 weeks ago
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
1 month 4 weeks ago
இப்படியான நடைமுறை திட்டங்கள் தமிழ்தேசிய கோட்பாட்டிற்கு எதிரானவை அல்லவா
1 month 4 weeks ago
👍 கள்ளு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை சாப்பிட கூடிய உணவு பொருள், போதை பொருள் இல்லை என்று சமுதாயத்திற்கு தீங்கு விதைக்கின்ற கூட்டத்தின் பேச்சுகளை பார்க்காமல் இருப்பது நல்தொரு செயல்.
1 month 4 weeks ago
😂 "மக்கள் ஒருவரைத் தெரிவு செய்தால் அவர் செய்வது மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கும்" என்ற மூட நம்பிக்கையை ட்ரம்ப், பிறேசிலின் பொல்சனாரோ, ஹங்கேரியின் ஓர்பான் இவர்களைக் கண்ட பின்னும் நாம் வைத்திருக்கிறோம் என்பது அதிசயம். மக்களின் தெரிவு வெறுப்புணர்வு, கடைந்தெடுத்த சுய நலம் என்பன சார்ந்ததாகவும் இருக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஜேர்மனியின் கிழக்குப் பாதி பெருவாரியாக நவநாசிகளான AfD இற்கு வாக்களித்தமை. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று firewall மூலமாக அந்த மக்கள் முடிவை நிராகரித்தமை தான் ஜேர்மனியில் மீண்டும் நாசிகள் கையோங்காமல் தடுத்தது!
1 month 4 weeks ago
பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.
1 month 4 weeks ago
Facebook55K views · 698 reactions | நினைவில் கொள்வோம். | Delft Pa...நினைவில் கொள்வோம்..மைக்கல் ஜக்சனுடன் நடனமாடிய யமுனா சங்கரசிவம். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
1 month 4 weeks ago
இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
1 month 4 weeks ago
மக்களால் தெரிவு செய்யப்படாத ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதோ ஒரு நிகழ்ச்சி நிரலிற்காக செயற்படுகிறார்களோ என முன்பு கூறிய விடயம் மீண்டும் உறுதிப்படுத்துவது போன்ற நிகழ்வு இது. அதிகரித்த உற்பத்தி செலவினால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்ல போகின்றன, வெறும் 30 பில்லியன் வாகன சந்தைக்காக ஜேர்மனி இதனை ஆதரிப்பதாக கருத்தில் எடுத்தாலும் நடைமுறையில் அதிகரித்தவிலையினால் மறைமுகமாக அந்த வாய்ப்பினை கூட இழக்கின்ற நிலைதான். ஒரு புறம் திறமையான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலும் மறுபுறம் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் செயற்பட்டு அமெரிக்காவினை மோசமான மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ள நிலையில் அரச கடனுக்காகவும் தற்காலிக பங்கு சந்தை உயர்விற்காகவும் மத்திய வங்கி ஆளுநருடன் வட்டி விகிதத்தினை குறைக்க சண்டை இடும் ட்ரம்ப் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தினை புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டார்.
1 month 4 weeks ago
வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.
1 month 4 weeks ago
குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்! செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441266
1 month 4 weeks ago
ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...
1 month 4 weeks ago
சில செத்த வீடுகளில்... குறிப்பிட்ட சிலர், பழைய பிரச்சினைகளை கிளறி ரணகளம் ஆக்க என்றே வருவார்கள். அவர்களில் தொழிலே இதுதான். அதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இருப்பார்கள். அந்த வாய் சண்டையை பார்க்க சுவராசியமாக இருக்கும். 😂
1 month 4 weeks ago
அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய கட்டுரைகள் பல நம்பத்தகுந்த ஊடகங்களில் வந்திருந்தன. சில நாட்களாக வேறு சில வேலைகளில் கவனம் இருந்ததால் எதையும் வாசிக்க நேரம் இருக்கவில்லை. இந்த வாரம் வாசிக்கவேண்டும். அதிபர் ட்ரம்ப் விரைவில் ஒரு சமநிலைக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது நிலைமை பரவாயில்லாமல் அவரது முடிவுகளில் ஓரளவிற்கு ஒரு ஸ்திரத்தன்மை தெரிகின்றது. அமெரிக்க பங்குச்சந்தையின் போக்கும் அதையொட்டியே இருக்கின்றது.
1 month 4 weeks ago
கைதடிக்காரர் @Kandiah57 அடிக்கடி களத்துக்கு வருவதை கண்டுள்ளேன். ஆனால்... கருத்து எழுதாமல் இருக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை. தினமும் களத்திற்கு வந்து எல்லோருடனும் இனிமையாக பழகும் ஒருவர், திடீரென்று வராமல் இருக்கும் போது... மனதிற்கு சங்கடமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல்... சிலவேளை கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போலுள்ளது.
1 month 4 weeks ago
ஏன் கனதூரம் போவான்? தமிழ் நாட்டில் கூடுதலான இடங்களில் மரணச்சடங்கு ஆட்டம் பாட்டம் தண்ணி என பெரிய அமர்களமாக நடக்குமாம். இலங்கையில் நடக்கும் செத்தவீடுகளில் சாராயம் தங்கு தடையின்றி பாயும். கவலைக்குடி😂
Checked
Sun, 09/28/2025 - 18:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed