புதிய பதிவுகள்2

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?

1 month 4 weeks ago
யாழ்.கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - தவிசாளர் திராகராஜா பிரகாஸ் 31 JUL, 2025 | 12:08 PM யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை (30) சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவிசாளர் அவர் மேலும் தெரிவிக்கையால், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221429

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 4 weeks ago
ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கம்பீர்–ஓவல் மைதான பராமரிப்பாளர் மோதல், ஸ்டோக்ஸ் விலகல் என ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. பெரும்பான்மை வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதும், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில், 4 இந்திய வீரர்கள் உள்ளனர். அதிக விக்கெட்கள் கைப்பற்றவர்கள் பட்டியலில், முதல் 5 இடங்களில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியும், சில தவறான முடிவுகள், விவாதத்துக்குரிய அணித் தேர்வுகள் காரணமாக தொடரில் பின்தங்கியுள்ளது. 304 ரன்கள், 17 விக்கெட்கள் உடன் இருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்ற கேப்டன் ஸ்டோக்ஸ், தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேலைப்பளு மேலாண்மையை கருத்தில்கொண்டு, அணி நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வளித்திருப்பது, இந்திய அணியின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவுடன் கை குலுக்குகிறார். பென் ஸ்டோக்ஸ் காயம் மான்செஸ்டர் டெஸ்டில் வலியை பொருட்படுத்தாமல் ஸ்டோக்ஸ் உயிரைக் கொடுத்து பந்துவீசியதே, காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த இரு டெஸ்ட்களில் 531 பந்துகளை வீசி, சோர்ந்துபோயிருக்கும் ஆர்ச்சருக்கும் சரியான லெங்த்தில் பந்தை தொடர்ச்சியாக வீசமுடியாமல் தடுமாறிய கார்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது; மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் டங், ஓவர்டன், அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டும் விளையாடியுள்ளனர். ஓவல் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்பதால் டாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெத்தேல் அணியில் இணைந்துள்ளார். ரூட்டுடன் சேர்ந்து பெத்தேல் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம். பும்ரா இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு முகமது சிராஜின் தோள்களில் இறங்கியுள்ளது. இந்த தொடரில் ஓய்வின்றி 4 டெஸ்ட்கள் விளையாடி, ஒட்டுமொத்தமாக 834 பந்துகள் வீசி, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார் அவர். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஆகாஷ் தீப், நல்ல பவுன்ஸ் கொண்ட ஓவல் மைதானத்தில் சாதிப்பார் என நம்பலாம். அறிமுக டெஸ்டில் திணறிய கம்போஜ் நீக்கப்பட்டு, ரன்களை வாரி இறைத்ததால் நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் போர்வையில், கடந்த டெஸ்டில் அணியில் இடம்பெற்று 11 ஓவர்கள் மட்டுமே வீசிய, ஷார்துல் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வழிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை கம்பீர்–கில் கூட்டணி வழக்கம் போல, நீண்ட பேட்டிங் வரிசைக்கு முன்னுரிமை கொடுக்குமானால், ஷார்துல் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார். கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 41 முக்கிய ரன்களை ஷார்துல் குவித்தது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் சதத்தை நெருங்கிய போது டிரா கேட்ட ஸ்டோக்ஸ் - ஜடேஜா அளித்த பதில் என்ன? தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? மான்செஸ்டரில் வெற்றியே இல்லை – இந்தியா வரலாற்றை மாற்றி எழுதுமா? இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை இந்தமுறையும் 'சைனாமேன்' குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ரிஷப் பந்த் விலகியதால், ஐந்தாவதாக இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை சுந்தருக்கு கிடைக்கவுள்ளது. இங்கிலாந்து அணியில் வோக்ஸ் தவிர மற்ற மூவரும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் இந்திய பேட்டர்களுக்கு பெரியளவுக்கு நெருக்கடி இருக்காது. காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வோக்ஸும் இந்த டெஸ்ட் தொடரில், எதிர்பார்த்தளவுக்கு இங்கிலாந்து அணிக்கு பங்களிக்கவில்லை. 4 டெஸ்ட்களில் 52.80 என்ற மோசமான சராசரியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றுள்ளார். இடைக்கால கேப்டன் ஆலி போப், ஒரு முக்கியமான கட்டத்தில் அணிக்கு தலைமையேற்கவுள்ளார் . கிராலி–டக்கெட் இருவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் புரூக் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. கேஎல் ராகுல் தொடங்கி ஜடேஜா வரை பிரமாதமான ஃபார்மில் உள்ளனர். 4 சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ள கேப்டன் கில்லுக்கு, டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் (974) குவித்த பிராட்மேனின் சாதனையை முறியடிக்க 252 ரன்கள் தேவைப்படுகிறது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அசத்திய சாய் சுதர்சன், மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டரில் கைகொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருவேளை பேட்டிங் வரிசையை பலப்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டால், ஷார்துல் நீக்கப்பட்டு அவரிடத்தில் கருண் நாயர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உளவியல் ரீதியாக உற்சாகம் இன்றும் கடைசி இரண்டு நாள்களிலும் ஓவல் மைதானத்தில் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணி, மழையையும் மனதில் வைத்து வியூகம் வகுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஓவல் மைதானத்தில் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 இல் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக 2021 சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, 2023 WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்பதால் டாஸ் வெல்லும் அணி, பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்பதிகம். தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ள இந்திய அணி, கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. வெற்றி பெறுவோம் என்ற மமதையில் களத்தில் லட்சுமண ரேகையை தாண்டிய இங்கிலாந்து அணி, தலைவன் இல்லாத நிலையில் உத்வேகத்தை தொலைத்துவிட்டு நிற்கிறது. பாய்காட் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான்களே ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியின் போலித்தனத்தை விமர்சித்துள்ள நிலையில், உளவியல்ரீதியாக இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் கைகுலுக்க மறுத்த ஜடேஜா, சுந்தரை இங்கிலாந்து அணி நடத்திய விதம், உலகம் முழுக்க இந்திய அணிக்கு ஆதரவு வட்டத்தை அதிகரித்துள்ளது. எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கம்பீர்–மைதான பராமரிப்பாளர் இடையிலான வாய்த்தகராறு, டெஸ்ட் தொடரின் முடிவு மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, ஜூலை 27ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம். இந்த தொடரின் முடிவு எப்படி அமைந்தாலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும். அணித் தேர்வு, ஆட்ட வியூகம் தொடர்பில் விமர்சனங்கள் உள்ள போதும், கடினமான சூழல்களில் அணியை முன்னின்று வழிநடத்திய விதம், இளம் கேப்டன் கில்லின் தலைமைத்துவத்தை பறைசாற்றுகிறது. ஒன்றுக்கொன்று விஞ்சும் விதமாக ஒவ்வொரு டெஸ்டும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடரின் கிளைமாக்ஸ் டெஸ்ட் அட்டகாசமான ஒன்றாக அமைந்து, ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரை முழுமை பெற வைக்குமா? அதற்கு வானிலை ஒத்துழைக்குமா? இங்கிலாந்தின் தடித்தனத்துக்கு இந்திய இளம் படை சரியான பாடம் புகட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce839788r9wo

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 4 weeks ago
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றயும் ஆரம்பிப்பது இல்லை. தமிழ் அரசியல் செய்பவர்கள் ஒன்ற தொடங்கினால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள்

அதிசயக்குதிரை

1 month 4 weeks ago
PRAY UNTIL SOMETHING HAPPENS! [PUSH]! WITH BIBLE STUDY & CHRISTIAN CONTENT! · Juliet Egbe ·Sodsrotpnej1ef0lh2u00192h4l:g9g71,um4i l622i fm2458663tl9ug2 · Two islands incredibly close to each other, separated by only 5 km of sea, and in winter, you can walk through the frozen water to get from one to the other. Imagine that you start your journey at 10:00 in the morning, and expect to arrive in about an hour. When you arrive, the clock shows an illogical time. The islands are located on both sides of the International Date Line, with a time difference of 22 hours. Walking the distance takes you practically to a different day. These wonderful islands are located between America and Russia. They are called Yesterday's Little Diomede Island and Tomorrow's Big Diomede Island...... !

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 4 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான் ஆண் : தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான் ஆண் : மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் ஆண் : கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லையே மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு ஆண் : பணம் காசு இல்லை பெரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும் ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம் ஆண் : தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ........... ! --- ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு ---

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
ரகசியக் காவலர்களையும் எதற்காகப் பரகசியப் படுத்துகிறார்கள் ......... அவ்வளவு படத்துக்கு முகம் காட்டும் ஆசையா ....... ! 😀

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 4 weeks ago
இவர்களை நம்ப முடியா எல்லோருக்கும் தெரிந்த விடயம் , AUG -2 நினைவுநாள் கொண்டாட வேண்டிய தேவை என்ன அப்பிடி என்ன அவசரம் மற்ற கோஷ்டியினருக்கு இப்போதும் இந்த அறிக்கைகளினை இவர்களின் பேரில் வெளியிடுவார் அந்த பத்திரிகையாளர் தானா

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

1 month 4 weeks ago
1.3 மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை! இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்களின் எண்ணிக்கை 274,919 ஆகும். மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வழங்கிய தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் கடந்த 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். https://athavannews.com/2025/1441310

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?

1 month 4 weeks ago
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ? adminJuly 31, 2025 யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்திருந்தனர். அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218594/

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் - பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

1 month 4 weeks ago
செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். Published By: RAJEEBAN 31 JUL, 2025 | 10:54 AM இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டுக்கான உரிமையை வலியுறுத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பல அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 40,000 என்கின்றன என தெரிவித்துள்ள அவர்கள் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும் என தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளுதல், சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், சித்திரவதை மற்றும் போதிய மருத்துவ உணவு வசதியின்றி தமிழர்களை இடைத்தங்கள் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது என பல ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றமையும் 80 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்தும் அங்கு அமைதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் நீதியை கோரி நிற்கின்ற போதும், இதுவரை சுயாதீன விசாரணையெதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செய்திக்குறிப்பில் இலங்கையின் வடக்குகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை பட்டியலிட்டுள்ளதுடன், இது இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விலக்களித்து வருவதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் நம்பகதன்மை மிக்க நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன என பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் வசிக்கும் 220,000 தமிழ் வம்சாவளி மக்கள், அவர்களில் பெரும்பாலோர் 1980 களில் போரிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற தமிழ் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு அவசரமாகத் தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டுப் பிரகடனத்தில் LFI-NFP கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (வால் டி'ஓய்ஸ்), எரிக் கோக்வெரல், அலி டியோரா மற்றும் தாமஸ் போர்டெஸ் (சீன்-செயிண்ட்-டெனிஸ்), பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் (ரீயூனியன்) ஆகியோர் கையெழுத்திட்டனர். https://www.virakesari.lk/article/221420
Checked
Sun, 09/28/2025 - 18:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed