1 month 4 weeks ago
உண்மை தோழர் .. இல்லாத உறவு முறை கதைத்து கொண்டு இழவு வீட்டிலும் ஆட்டைய போட கடன்/பத்திரம் ஒரு குரூப் இருக்கு ..
1 month 4 weeks ago
1 month 4 weeks ago
சும்மா சும்மா சாவகச்சேரியை கிண்டலடிக்கக் கூடாது கண்டியளோ உறவுகளே! அங்குதான் அருச்சுனா இருக்கிறார் அவர் குறிவைச்சால் தப்பாது கவனம்.😲
1 month 4 weeks ago
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது! இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர். இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29, வரை மொத்தம் 122,913 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில், அதிகாரிகள் 928,787 கிலோ கிராம் ஹெராயின், 1,396,709 கிலோ கிராம் ஐஸ், 11,192,823 கிலோ கிராம் கஞ்சா, 27,836 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், ஜூலை 29 அன்று இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 6,695 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தக் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலதிமாக இந்த நடவடிக்கைகளின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. https://athavannews.com/2025/1441291
1 month 4 weeks ago
ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி - முழு விவரம் 30 ஜூலை 2025 ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து. நிலநடுக்கம் காரணமாக ரஷ்யாவின் கம்சட்கா க்ரே பகுதியில் கட்டடங்கள் குலுங்கின, கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சுனாமி அலைகள் புகுந்தன. நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கம்சாட்கா விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது. ரஷ்யாவின் ஏற்பட்ட நிலநடுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானின் ஹூக்கைடோ (Hokkaido) முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள், ஹவாய், குவாம் ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து ஹவாயின் நஹாலேயூ Naalehu பகுதியில் சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் கரையோரம் இருக்கும் கப்பல்கள் சுனாமி அலைகள் கடந்து செல்கிற வரை கடலுக்குள்ளே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடார், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் மூன்று மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன. இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து, டோங்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பிற இடங்களில் ஒரு மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கைக் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, கடைகள் அடைக்கப்பட்டன. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஜப்பானின் வடக்கு பகுதியில் 30 செண்டிமீட்டர் முதல் 40 செண்டி மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கின. இதுவரை எவ்வித பாதிப்போ உயிரிழப்போ ஏற்படவில்லை என ஜப்பானின் முதன்மை கேபினட் செயலாளர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் (Hawaii) சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr14py4541o
1 month 4 weeks ago
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். https://athavannews.com/2025/1441288
1 month 4 weeks ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து : அமைச்சரவைக்கு வரைவு சமர்ப்பிப்பு 30 JUL, 2025 | 11:22 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு நீதியமைச்சினால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும். அதன் பின்னர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும். https://www.virakesari.lk/article/221397
1 month 4 weeks ago
ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் திகதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ‘ஏர் இந்தியா போயிங் 787-8’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ‘ரன்’ நிலைமையில் இருந்து தானாகவே ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த DGCA, வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக: போயிங் 787 மற்றும் 777 வகை விமானங்களை இயக்கும் விமானிகள் போதுமான பயிற்சி இல்லாமல் செயல்பட்டு வருவது, போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவது, சவாலான விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதது, என்பவை குறிப்பிடத்தக்கவை. மேலும், அவசரகால உபகரணங்கள் சரிபார்க்கப்படாமலும், இயந்திரப் பாகங்கள் நேரத்தில் மாற்றப்படாமலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிழைகள் உள்ளதாகவும் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிலளிக்கப்படுமென என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441215
1 month 4 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 30 ஜூலை 2025 சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது. ''பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்'' என்கிறார் அவர். பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வு கட்டுரை வெளியானது. அதன்படி, நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதேசமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். (சித்தரிப்புப்படம்) இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரத்தத்தில் 10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7 நானோகிராமாக உள்ளது. கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படும் நிலையில், கிராமப்புறத்தில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவில்லை என்றாலும் கடுமையான குறைபாடு என்ற நிலை சற்று குறைவாகவே இருக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் என்ன நிலவரம்? சென்னையை சேர்ந்த கர்ப்பிணிகள் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 62% பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, 'பல்வேறு வகையான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கொண்ட நகர்ப்புற தென்னிந்தியர்களில் வைட்டமின் டி குறைபாடு' என்ற ஆய்வில் சென்னையை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு. அத்துடன் பஞ்சாப், திருப்பதி, புனே, அமராவதி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காட்டின. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி குறைபாடு கரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு காரணம் என்ன? வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது. இந்திய வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் அதே சமயம் சென்னை போன்ற வெப்ப மண்டல நகர்புறபகுதியில் ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன? வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருவதாகச் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகிறார். ''உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்'' என்கிறார் அவர். ''நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது'' என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவர் பீட்டர். சில நிமிடங்கள் வெளியே இருப்பதன் மூலம் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மாசுபாடு, உடைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல் தடுப்பு போன்றவை உங்கள் உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவதைத் தடுக்கின்றன என்கிறார் பீட்டர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி பற்றாக்குறை ஆபத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை? ஒரு இந்திய ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் வெளியில் நடக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்க சிறந்த நேரம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ''சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை'' என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பூமியின் வளிமண்டலம் சூரியன் கீழ்வானில் இருக்கும்போது UVB கதிர்களை தடுத்துவிடுகிறது. அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் மிகவும் குறைந்த (45 டிகிரிக்கு குறைவாக) கோணத்தில் இருப்பதால் UVB கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுகின்றன. வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். ''பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.'' என்கிறார் மருத்துவர் பீட்டர். வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருகிறது சமாளிப்பது எப்படி? வாசுகி போன்ற பெரும்பாலான நகர்ப்புறவாசிகளுக்குத் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்றது. ''உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்.'' என்கிறார் மருத்துவர் பீட்டர். வைட்டமின் டி குறைபாட்டை குணப்படுத்த சில சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் கூறுகிறார். ''என்னதான் பல சப்ளிமெண்ட்கள் கிடைத்தாலும் நேரம் கிடைக்கும்போது வெயிலில் நிற்பது போன்ற எளிமையான, செலவில்லாத மருந்துதான் சிறந்தது என தோன்றுகிறது'' என்கிறார் வாசுகி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly4ny450vpo
1 month 4 weeks ago
ஞாயிறு ஆனால் போதும் மனுசிமார் குசினி எந்த பக்கம் என்பதையே மறந்து விட்டினம்..
1 month 4 weeks ago
விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம். அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441284
1 month 4 weeks ago
நல்லா இருக்குற இட்லிய ஏன்டா இப்படி நாசம் பண்ணி வச்சிருக்கியள்..
1 month 4 weeks ago
அவர்கள் மப்டி பொலிஸ் அண்ணை!
1 month 4 weeks ago
அப்படியானால் அங்கே இருந்து தான் தலைவருக்கான அஞ்சலி தொடங்கி இருக்கவேண்டும். ஏன் இதுவரை எவருமே தாயகத்தில் அதை செய்யவில்லை...?
1 month 4 weeks ago
கான்டீன் காரர் அடிக்கிற கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டனும், நோயாளர் நலன்புரிச்சங்கம் என்ற பெயரில் எத்தனை பேரின் பாக்கெட் நிறைகிறதோ தெரியல. காலைல சுடுதண்ணி கேட்க போனால் சுடுதண்ணீர் தரமாட்டினம் தங்களின் டி வியாபாரம் படுத்திடுமாம் காலை ஆறு மணிக்கு போய் நின்றால் 6:30 பிறகே கூப்பிடுவார்கள் எந்த பொருளுக்கும் பில் இல்லை water dispenser (hot &கூல்) சிலவற்றை ஆங்காங்கே பொருத்திவிட்டால் புண்ணியமாக போகும் வைத்தியசாலையின் முன்னாடி உள்ள கழிவு வாய்க்கால் கழிவுகளால் நிரம்பி தூர் வாரப்படாமல் உள்ளது வைத்தியசாலை நிர்வாகம் மாநகரசபைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாதம் ஒரு தடவையாவது அதனை சீர்படுத்தி பராமரிக்கலாம் யாழ்நகரின் பிரதான பாதையும் கூட அது
1 month 4 weeks ago
புலிகளை இல்லாமல் அழித்து விட்டோம், நாட்டில் மக்கள் அச்சமில்லாமல் எந்தப்பகுதிக்கும் போய்வரலாம், அந்த சுதந்திரத்தை நாங்கள் பெற்றுக்கொடுத்தோம், இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று கூறி, விகாரைகளையும் இராணுவ முகாம்களையும் எழுப்பி வெற்றி விழா கொண்டாடியவர்கள் இப்போ, தாங்கள் அந்தப்பகுதிக்கு வரத்தயாரில்லை. புலிகள் இல்லை நாட்டில் எங்கும், வடக்கில் இருப்பது புலிகளை அழித்த இராணுவம் (என்று சொல்லிக்கொள்கிறார்கள்) சிங்கள அரசின் காவற்துறை நீதி சட்டம். இருந்தும் வரத் தயக்கமேன்? செய்த கொலைகள். முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம். லலித், குகனை கொன்றது இலங்கை புலனாய்வுப்படை கோத்தாவின் உத்தரவின் பேரில். அதன் அடுத்த கட்டம் குமார் குணரட்ணம் கடத்தல் நாடகம். அவரையும் போட்டுத்தள்ளி இருப்பார் கோத்தா அவுஸ்ரேலிய தூதரகம் நேரடியாகவே களத்தில் இறங்கி, கோத்தாவை தொடர்பு கொண்டதினால் குமார் தப்பினார். அப்போ சர்வதேச நாடுகளுக்கு தெரிந்திருந்தது, இலங்கையில் நடக்கும் கொலை கொள்ளை கூட்டத் தலைவன் கோத்தா, அதன் படைகள் இராணுவ காவற்துறை புலனாய்வாளர்கள் என்பது. நாட்டில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, காணாமல் போகச்செய்வது, தடயங்களை அழிப்பது, இந்த இராணுவ காவற்துறை அதிகாரிகள். இதற்கு சம்பள, பதவி உயர்வு, மக்களாணை பெற்ற அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு உயரதிகாரிகள் என்ற பட்டயம் வேறு. நாடு உருப்படுமா? நீதியை எதிர்பார்க்க முடியுமா? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் இவர்களுக்கே அமைச்சு பதவி சம்பளம் என்றால் அந்த துறை எப்படியானது என்று அதன் வண்டவாளங்கள் வரிசையாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாடே தாங்கமுடியாமல் தள்ளாடுது. அதை மறைக்க கொலைக்கு மேல் கொலை, திசை திருப்பும் குற்றச்சாட்டு. இந்தப்பிரச்சனை எங்கு போய் முடியுமென்று தெரியவில்லையே?
1 month 4 weeks ago
இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது. நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.
1 month 4 weeks ago
வணக்கம் சாத்திரியார்! மீண்டும் யாழ்களத்தில் கண்டதில் சந்தோசம். ஏன் முன்னரைப்போல் யாழ்களத்தில் எழுதுவதில்லை?
1 month 4 weeks ago
தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும். இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73. அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள். 2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார். இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.
1 month 4 weeks ago
வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக நிலையம் (ஏறாவூர்) பெற்றுக்கொள்ளலாம். இலங்கைக்கு புத்த பொதி சென்றடைய சிறிது காலமெடுக்கும் என்பதால் மேலே குறிப்பிட்ட நபர்களோடு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி.
Checked
Sun, 09/28/2025 - 18:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed